நீ என்னை கடந்து போகும் போது
எனை வசீகரித்து இழுப்பது எது?
போட்டி போட்டு நிற்கிறது
உன் தலை சூடிய மல்லிகையும்!
உன் நெற்றியின் சந்தண தீற்றலும்!
உன் காந்த கண்களும்!
கோவில் மணி அடித்து நீ
கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
அழகை இரசிக்கத்தான்
தலைகீழாக தவம் செய்கிறதோ
கோவில் மணி?
நீ சாமி கும்பிடும் அழகில்
நானும் ஒரு சிலையாகி விட்டேன்!
நீ அழகா சிலை அழகா
உனைத்தான் கும்பிட தோன்றுகிறது!
தெய்வீக வாசம் வாங்கி
கோவில் பிரகாரத்தை
அடிஅடியாய் வைத்து சுற்றுகிறாய்
உன் நடை அழகில் நானும்
சுற்றி வருகிறேன் உனை!
நீ தீபத்தை தொட்டு வணங்கி விட்டு
எனை பார்க்கிறாய்
நானும் அதை வணங்கிவிட்டு
நம் காதலக்கு அக்னி சாட்சியானதாக
கற்பனை செய்து கொள்கிறேன்!
மோதிர விரலால் சந்தணம் தொட்டு
யாரோ ஒரு குழந்தைக்கு
நெற்றியில் போட்டு விடுகிறாய் நீ
எனக்கும் எனக்கும் என
என் மனமும் கெஞ்சுகிறது
ஒரு குழந்தை போல!
நான் கோவிலுள் நுழையும் போது
நீ கோவில் பிரசாதம் வாங்கிவிட்டு
படிகளில் இறங்கி வருகிறாய்
என் கால்கள் கோவிலுக்குள் செல்ல மறுக்கிறது
நான் தேவியை தரிசித்து விட்டேன்!
(இந்த கவிதையும் காதலும் கற்பனையே)
வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/42111
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)