இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

1 view
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Aug 20, 2012, 1:54:21 AM8/20/12
to வினோத்-VINOTH

இணையதளம் பரிசு! தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

வணக்கம் நண்பர்களே,

தமிழ் நண்பர்கள் இணைய தளத்தின் பதிவுப்போட்டிகள் கடந்த சித்திரை மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

பரிசு இலவச இணைய தளம்

  1. ஒவ்வொரு மாதமும் முதலிடம் பிடிக்கும் மூன்று பதிவுகள் தெரிவு செய்யப்படும்.
  2. மூன்று பதிவுகளில் முதலிடம் பிடிக்கும் எழுத்தாளருக்கு இலவச இணையதளம் (Free website) சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
  3. மற்ற இருவரின் பெயரும் நிலுவையில் வைக்கப்படும். அவர்கள் அடுத்து வரும் போட்டிகளில் மறுபடியும் வெற்றி பெறும் போது (முதல் மூன்று பதிவுகளில் ஏதேனும் ஒன்றில்) இலவச இணையதளம் பரிசாக கிடைக்கும்.
  4. ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே இணையதளம் பரிசாக கிடைக்கும். ஆனால் ஒருமுறை வெற்றி பெற்று இணையதளத்தை வென்றவரே மீண்டும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் தடவை தவிர்த்து ஒவ்வொரு இரண்டாவது வெற்றிக்கும் அவரது இணையதளத்தின் பெயர் (Domain name) ஒருவருடத்திற்கு இலவசமாக புதுப்பித்தல் (Renewal) செய்து தரப்படும்.
  5. இணையதளம்: இணைய தளம் என்பது Domain name, Hosting, Database, Web design இவற்றை உள்ளடக்கியதாகும்.
  6. வெற்றி பெற்றவருக்கு ஏற்கெனவே இணைய தளம் இருந்து அதற்கு வெற்றி பெற்ற அடிப்படையில் பெயர் புதுப்பித்தல் (Renewal) மட்டும் போதும் என்றாலும் அவை பரிசீலிக்கப்படும்.
  7. வெற்றி பெற்றவர் ஏற்கெனவை வலை தளம் வைத்திருந்து அதற்கான இணைய தள பெயர் மட்டும் போதும் என்றால் அவை பரிசீலிக்கப்படும்.
  8. ஒவ்வொரு வருடமும் கடைசியில் இணைய தளம் பெறாத ஆனால் நிலுவையில் இருக்கும் வெற்றியாளர்களுக்கு தமிழ் நூல்கள் பரிசாக தரப்படும்.

பதிவுகளை பதிவது எப்படி, விதிமுறைகள் போன்றவற்றை http://tamilnanbargal.com/contest  என்ற முகவரியில் காணலாம்.

"நண்பர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுகிறோம்", அல்லது இதை தங்கள் நண்பர்களிடமும், வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.

நன்றியுடன்
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com


Reply all
Reply to author
Forward
0 new messages