சித்திரை சிறப்பு தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்
வணக்கம் தமிழ் நண்பர்களே
கடந்த 10 மாதங்களாக தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள் நமது தளத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருட கடைசிப்போட்டியாகவும் சித்திரை மாதப்பெயரில் சிறப்பு போட்டியாகவும் அறிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் பரிசு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆறுதல் பரிசாக ஒரு சிறு அன்பளிப்பு 15 நபர்களுக்கு தமிழ் நூல்கள் வழங்கப்படும்.
விதிமுறைகள்
- தமிழ் நண்பர்கள் தளத்தில் பதியப்படும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
- பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்
-
கவிதைகள், கட்டுரைகள், கதைகள், உடல்நலப்பதிவுகள், சமையல் போன்ற பதிவுகளில் இருந்து பரிசிற்கான பதிவு தெரிவு செய்யப்படும்
- பதிவுகள்
- இதுவரை வேறெங்கும் பதியப்படாததாக இருக்க வேண்டும்
-
பதிவுகள் உங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
பரிசு விபரம்
- முதற்பரிசு ஒரு சிறிய அன்பளிப்பாக ரூபாய் ஆயிரம் மதிப்பிலான தமிழ் நூல்கள்
- இரண்டாம் பரிசு ஒரு சிறிய அன்பளிப்பாக ரூபாய் ஐநூறு மதிப்பிலான தமிழ் நூல்கள்
- ஆறுதல் பரிசாக பதினைந்து நபர்களுக்கு ரூபாய் 200 மதிப்பிலான தமிழ் நூல்கள்
அனைவரும் கலந்து தங்கள் பதிவுகளை பதிந்து போட்டியை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
--
வினோத் கன்னியாகுமரி
tamilnanbargal.com/friends/vinoth
கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)