காதலனான சில மணித்துளிகளில்! - சில கனவுகள்

2 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Aug 3, 2012, 4:27:03 AM8/3/12
to

காதலனான சில மணித்துளிகளில்! - சில கனவுகள்

URI: http://tamilnanbargal.com/node/41700


பதிந்தது vinoth நாள் வெள்ளி, 20/07/2012 - 1:33pm

உன் மடி மீது என் தலை சாய்த்து தூங்காத
உன் நினைவுகளால் நீ தாலாட்டும் போது
நான் அதில் துயில நினைக்கிறேன் ஒரு யுகம்!

heart

கண்மூடி துயில் கொள்ளும் போது
தூங்காத உன் நினைவுகள் மட்டுமே
விழித்திருக்கிறது என் கனவுகளாக!

heart

நீ சண்டையிட்டு பேசாது போன தருணங்களை
நினைவூட்ட விரும்பாமல் கண்களையே பார்க்கிறேன்
நீ கண்களில் சிக்கி சிவந்து நெஞ்சில் ஒரு விரலால் கோலமிடுகிறாய்
நீ சண்டையிட்டது என் கனவில் என்பது புரிந்தது!

heart

உனைப் பார்த்த முதல் நொடி கிடைத்த
உன்னுடன் வாழப்போகும் இன்பம் மறுபடி எனக்குள்
கனவில் ஒரு யுகம் வாழ்ந்துவிட்டு
காலையில் நீ முத்தமிட்டு எழுப்பும் போது!

heart

நீ முத்தமிட்டு எழுப்பினாய், நான் விழித்துப்பார்க்க
நீ இன்னும் அழகாக தூங்குகிறாய்...
உன் கனவில் நான் முத்தமிட்டு எழுப்பும் வரை
உன் தூங்கும் அழகை இரசிக்கிறேன் நான் விழித்தபடி!

heart

வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/41700



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages