அடிமைப்படுத்திய
வளர்ப்பு நாய்களுக்கு
ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம்.
டாமி, டோனி செல்லமாய் அழைத்தோம்.
வாலாட்ட மறக்கவில்லை நாய்கள்!
இன்றும் ஆங்கிலேயத்திற்கு வாலாட்டும்
மனிதர்களுக்கு என்ன பெயர் வைப்பதோ?
தயவு செய்து பெயரை
தமிழில் வைத்துக்கொள்ளாதீர்கள்
தமிழ்த் தாய் வேதனைப்படுவாள்!
ஆங்கிலேய தொரையிடம்
ஆசி வாங்கி பெயர் சூடிக் கொள்ளுங்கள்.
ஆங்கில பெயரே பொருத்தமாக இருக்கும்!
வினோத் கன்னியாகுமரி
URI: http://tamilnanbargal.com/node/42332
கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)