மகளிர் சிறப்பு: புரட்டாசி மாத தமிழ் நண்பர்கள் பதிவுப்போட்டிகள்

3 views
Skip to first unread message

வினோத்-VINOTH

unread,
Sep 16, 2012, 11:56:43 PM9/16/12
to
நண்பர்களுக்கு,

தமிழ் நண்பர்களின் பதிவுப்போட்டி வரிசையில் புரட்டாசி மாதம் மகளிர் சிறப்பு பதிவுப்போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதம் (Mon, 17/09/2012 - Tue, 16/10/2012) பதியப்படும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
Wed, 31/10/2012 அன்று வரை பதிவுகளுக்கு கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் பரிசுக்கான பதிவு தெரிவு செய்யப்படும்.

புரட்டாசி மாத போட்டியாளர்கள் கவனத்திற்கு:

  • பெண்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • சமையல் மற்றும் உடல்நலம் சார்ந்த பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • மகளிருக்கு/பெண் போட்டியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


பரிசு இலவச இணையதளம் அல்லது தமிழ் நூல்கள் (வெற்றி பெற்றவர்கள் விருப்பப்படி)

பதிவுகளை அனுப்பும் முறை

  1. போட்டியில் பங்கேற்ற பதிவுகளை எங்களுக்கு தனியாக அனுப்பி வைக்க வேண்டிய தேவை இல்லை.
  2. தங்கள் பதிவுகளை தமிழ் நண்பர்கள் தளத்திலேயே நீங்கள் பதிவு செய்தால் போதுமானது.
  3. போட்டிக்கான பதிவை பதியும் போது பதிவு படிவத்தில் "போட்டியில் சேர்க்க வேண்டும்" என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

போட்டி விதிமுறைகள்

  1. பதிவுகள் உங்களின் சொந்த பதிவாக இருக்க வேண்டும்.
  2. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். முக்கியமாக தேவைப்படும் இடங்களில் மட்டும் மற்ற மொழிகளை பயன்படுத்தலாம்
  3. நீங்களே உங்கள் பதிவிற்கு தரநிர்ணயம் கொடுக்க உரிமை உண்டு. ஆனால் நீங்கள் வேறு பல அங்கத்துவத்தில் வந்து தரநிர்ணயம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டால் பதிவு போட்டியில் இருந்து நீக்கப்படும்.
  4. போட்டிக்கான பதிவுகள் வேறெங்கும் இதற்கு முன் பதியப்பட்டிருக்கக்கூடாது. ஒவ்வொரு மாதமும் பரிசுகள் அறிவிக்கப்பட்ட பின் போட்டிக்கான பதிவை உங்கள் வலைதளத்திலோ வேறு இடங்களிலோ பதியலாம். தமிழ் நண்பர்கள் தளத்தில் "முதன் முதலில் பதிவுகளை இங்கே தான் பதியவேண்டும் என்ற விதிமுறை" இல்லாததால் நீங்கள் உங்கள் சொந்த பதிவுகளை வேறெங்கும் பதிந்திருந்தாலும் வழக்கம் போல இங்கும் பதியலாம். ஆனால் அவை போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
  5. இப்போட்டிகள் இந்ந நந்தன வருடம் (ஆங்கில வருடம் 2012) தமிழ் மாதம் சித்திரை முதல் ஒவ்வொரு மாதமும் அடுத்த வருடம் (ஆங்கில வருடம் 2013) பங்குனி வரை நடைபெறும். அதற்கடுத்த வருட போட்டிகள் மற்றும் அதன் மாற்றங்கள் இருந்தால் அவை பின்னர் அறிவிக்கப்படும்.
  6. பதிவுகள் அனைத்தும் தமிழ் நண்பர்கள் தளத்தின் இயல்பான விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பரிசு இணையதளம்
  1. இணைய தளம் என்பது Domain name, Hosting, Database, Web design இவற்றை உள்ளடக்கியதாகும்.
  2. வெற்றி பெற்றவர் விருப்பப்படி இணையதளத்தின் பெயர்(Domain name) பதிவு செய்யப்படும்.
  3. இணைய தளத்தின் வடிவமைப்பு இலவசமாக செய்து தரப்படும்.

போட்டி பற்றிய விபரங்களை http://tamilnanbargal.com/contest முகவரியில் காணலாம்.

போட்டியில் பங்கேற்று வெற்றிபெற வாழ்த்துகள், இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.



--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

கேட்டுக்கோங்க: அன்பும் பண்பும் அடிமனதிலிருந்து தானாக வருவதே நிலைக்கும்.
(கேட்டிச்சி)


Reply all
Reply to author
Forward
0 new messages