எழுதியது யார்? யாருக்கும்
தெரியுமா?
பாட்டு - சக்கரை நிலவே
படம் - யூத்
மனதுக்குள் அடிக்கடி
அலையடிக்கும் வரிகள் :
நவம்பர் மாத மழையில் நான்
நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைந்தால்
மிக பிடிக்கும் என்றாய்
மொட்டை மாடி நிலவில் நான்
குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் மிக
பிடிக்கும் என்றாய்
சுகமான குரல் யார் என்றால்
சுசீலாவின் குரல் என்பேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ
மயக்கம் என்று நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது
பிடிக்கும் என்றேன்
தயக்கம் எனபது சிரிதும்
இன்றி
அது எனக்கும் எனக்கும்
தான் பிடிக்கும் என்றாய்
அடி உனக்கும் உனக்கும்
எல்லாம் பிடிக்க
என்னை ஏன்
பிடிக்காதென்றாய்...
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு
தாங்குமா?
சக்கரை நிலவே..
------------------------------------
எத்தனை எதார்த்தம், எத்தனை
எளிமை, எத்தனை வலிமை! வாவ்!
- கற்பகம் இளங்கோவன்.
சேதுக்கரசி
தொடர்பு கொண்டாரா, என்ன? தனிமடலில் தெரிவிக்கவும்.
அன்புடன்
~அண்ணி~
கவிஞர் வைரமுத்துவின்
பாடல்வரிகளுக்குள்
என்னைத் தொலைப்பது
வழக்கம். அப்படியான ஒரு மிக
அருமையான பாடலை உதாரணமாகத்
தெரிவு
செய்திருக்கிறீர்கள் .
நிச்சயமாகவே ரசித்து
கேட்கக்கூடிய இனிமையான ,
அதேநேரம் எளிமையான வரிகள்
அன்புடன்
சத்தி சக்திதாசன்
அவர் வரிகளில் கனம், உச்சம்
இருக்கும்.
நிலவை இழுத்து
ஆடையாக்குவதும், வானம்
போர்வையாகுவதும்... அது
மாதிரி.
இப்ப நிறைய புது technology
வார்த்தைகள் -
ரம்பைகள் காதில் ரிங் டோன்
ரெமோ... : )
ஹார்மோன் நதியில் வெள்ளப்
பெருக்கு : )
("உன் குறைகள் நான்
அறியவில்லை..
நான் அறிந்தால் சூரியனில்
சுத்தமில்லை!.." சூப்பர்
இல்ல?)
சமீபத்தில் ரசிச்சது...
உன்ன நாக்கடியில்
கற்கண்டாக ஒளிச்சேன்.
எப்படி உருவாகுது இந்த
மாதிரி கவிதை?
பதில் -
"ஆரம்பிக்கறதுதான்
தெரியும்... என்னை மிக மிக
களைப்பாக்கிவிட்டு கவிதை
தன்னைத்தானே எழுதிக்குது."
But cinema writing trains a poet very well.
For example, இந்தப் பாடலின்
இரண்டாவது வரி.
நிம்மதி எல்லை..
ஏன் இல்லை...
நீ இல்லையே.
இதை சாதாரணமா
எழுதியிருந்தா
"நீ இல்லை.. நிம்மதி இல்லை"
ன்னு எழுதுவோம். இல்லையா.
இசைக்குள்ள வார்த்தைகளை
உட்கார வெச்சு உட்கார
வெச்சு,
இசைலயத்துடன் கூடிய
கவிதைகள் தன்னைப்போல
வந்துரும்னு நெனைக்கறேன்.
அந்தி மழை பொழிகிறது பாடலை
முதன் முதலில்..
"திராட்சை ரசம் பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன்
முகம் தெரிகிறது" என்று
எழுதியிருந்தாராம்.
கமலஹாசன் - அந்தி மழை என்று
மாற்றச்சொன்னாராம்.
"மவுனத்தின் சப்தங்கள்"
என்ற புத்தகத்தில் தனது
சுவையான சினிமா அனுபவங்களை
எழுதியிருக்கிறார் கவிஞர்.
பொன்மணி அம்மாவுடன்
பேசும்போது இன்னும் நிறைய
சுவையான விசயங்கள்
சொல்லுவாங்க. எனக்கு ஒரே
வருத்தம், அற்புதமான
கவிதாயினிகள் தாய்மைக்கு
முக்கியத்துவம் கொடுத்து,
கவிதாயினிங்கறத
கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்ல
வாங்கின பட்டம் மாதிரி
விட்டுடறாங்க.
"கவலைப்படாதே, வெற்றிகரமாக
இரண்டு உயிர்க்கவிதைகளை
எழுதியிருக்கிறாயே"
என்று என்னைத் தேற்றியது,
அதே உயர் கவியோட
துணைக்கவிதாயினி தாங்க. : )
சந்திப்போம்.
For example, இந்தப் பாடலின்
இரண்டாவது வரி.
நிம்மதி எல்லை..
ஏன் இல்லை...
நீ இல்லையே.
இதை சாதாரணமா
எழுதியிருந்தா
"நீ இல்லை.. நிம்மதி இல்லை"
ன்னு எழுதுவோம். இல்லையா.
- கற்பகம் இளங்கோவன்.
சிவா.
சுட்டும் விழிச் சுடரே...
கஜினி advertise பண்ணும்போது
ஒலிக்குது.
ஆனா, புதுமையான இசைக்குள்ள
பாரதியோட வார்த்தை சூப்பரா
ஒட்டிக்கிச்சு.
பாக்கி பாடல் வரிகளை
எழுதுங்கள். ப்ளீஸ்.
பாடல் ஏதேனும் link'l இருக்கா?