இந்தியாவில் சின்னத்திரையில் இரவு 11 மணிக்கு மேல் 18+ (A/R தரச்சான்று உடைய) திரைப்படங்களை ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய சமூகத்தில் எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?
இந்த மாதிரி படங்கள் பல திரையரங்களிலும் தற்போது இணையத்திலும் கிடைத்து வந்தாலும் வீட்டறையில் இந்த மாதிரி படங்களை ஒளிபரப்ப அனுமதிப்பது தனிமையில் இருக்கும் சிறார்களை கெடுக்கும் மேலும் பாலியல் குற்றங்களை செய்விக்கத்தூண்டும் என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து அதற்கு கடுமையான தண்டனையும் வழங்க சட்டம் கொண்டுவரும் நிலையில் இம்மாதிரி பாலியல் எண்ணங்களை தூண்டும் படியான செயல் அவசியம் தானா?
பாடசாலையிலேயே வளரும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி அவசியம் என்பது விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் ஆனால் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிடும் படங்களை வீட்டறையில் இருந்தே சிலர் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவது அவசியமா?
விவாதிக்கலாம் வாங்க
கேட்டுக்கோங்க: எதிலும் குறை காண ஆரம்பித்தால் குறை மட்டுமே கண்ணுக்கு தெரியும்.
(கேட்டிச்சி)