பல விதமான அரபி குர்‍ஆன்கள்

0 views
Skip to first unread message

உண்மையடியான்

unread,
Nov 4, 2008, 4:39:15 AM11/4/08
to இஸ்லாமின் உண்மைகள்


(THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN)

(இக்கட்டுரையின் முந்தைய பெயர் "குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்")

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்


நான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி
மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக
முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில்
உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical)
என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது,
மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள்
பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று
சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின்
தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று
காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும்.
ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய
பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... அல்லாவின் இந்த
புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு
நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன
எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின்
வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம்
காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல
பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப்
பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi,
UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian
Foundation, 1996, p. 4, bold added)

மேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது
இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில்
"எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of
text can be found". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும்
முன்வைக்கிறார் "இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல
பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப்
பாருங்கள், சோதித்துப்பாருங்கள் ". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த
சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக
இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.

தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக
பிரித்து பார்க்கப் போகிறோம்:

முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப்
பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை
ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின்
ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant
Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.
நம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை
மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள்
மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர்
எழுதுகிறார்:

"... முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து
வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது
உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை
படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக
கருதப்படுகிறது".

... owing to the fact that the kufic script in which the Koran was
originally written contained no indication of vowels or diacritical
points, variant readings are recognized by Muslims as of equal
authority. (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books,
1983, p. 10, bold added)

இந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம்
(Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக
படிப்பது என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு
முன்பாக, குர்‍ஆன் நமக்கு "ஓதுபவர்கள்– The Readers" என்ற மனிதர்கள்
மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள்
இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள்
(Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த "குர்‍ஆனை
ஓதுபவர்கள் " ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை
எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் “செய்தியை
கடத்துபவர்கள் (Transmitters)” என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி
தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a
"transmission" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான "குர்‍ஆன்
ஓதுபவரும்" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள்
ஒவ்வொன்றும், ஒவ்வொரு "குர்‍ஆன் ஓதுபவரின்" முறைப்படி உருவாக்கப்பட்டு
இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த "ஓதும் முறைப்படித்தான்"
நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு
"ஓதும் முறையிலும்" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற
சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான
சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு.
நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம்
என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான "குர்‍ஆன் ஓதும் முறையை"
பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு
இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:

குர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது
தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த
பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று
பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து
இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள
வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில்
குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. ... நான்காவது
இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி,
பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின்
அடிப்படையில்("readers" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை
பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters
(rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும்
முறையை(al-qira'at as-sab', "the seven readings") அடிப்படையாகக் கொண்டு,
இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை
ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள்
வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும்
இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது... அதிகார
பூர்வமாக "குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது".

நஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)
இபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)
அபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)
இபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)
ஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)
அல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)
அபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)

(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco:
Harper & Row, 1989, p. 324, bold added)

மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers)
மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters)
இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters
பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது
என்பதை விளக்குகிறது.

The Reader
The Transmitter
Current Area of Use

"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை"

நஃபி
வர்ஷ்
அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும்
சூடான்.

கலுன்
லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்.

இபின் கதிர்
அல் பஜ்ஜி

குன்புல்

அபூ அமர் அல்-அலா
அல்துரி
சூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.

அல்சுரி

இபின் அமிர்
ஹிஷம்
யெமன் நாட்டின் சில பகுதிகள்

இபின் தக்வான்

ஹம்ஜா
கலஃப்

கல்லத்

அல்கிசய்
அல்துரி

அபுல் ஹரித்

அபூ பக்கர் அசிம்
ஹஃப்ஸ்
உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்

இபின் அய்யஷ்

"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை"

அபூ ஜப்பர்
இபின் வர்தன்

இபின் ஜமஜ்

யாகூப் அல்- ஹஸிமி
ருவய்ஸ்

ரவ்

கலஃப் அல்- பஜ்ஜர்
இஷாக்

இத்ரிஷ் அல் ஹட்டட்

Abu Ammaar Yasir Qadhi, An Introduction to the Sciences of the
Qur'aan, United Kingdom: Al-Hidaayah, 1999, p. 199.


மேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின்
பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை
விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும்
பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக
கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில்
மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல
இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று
மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து
குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை
மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது
குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக
இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம்
தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது
உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன்
பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம்
ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை
பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும்
வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை
பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌
ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது "Hafs Transmission"
ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில்
இருக்கும் குர்‍ஆன் “Warsh Transmission” வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில்
வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில்
ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.

இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும்
ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த
இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.


1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter
differences)

2. வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical
differences)

3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)இந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக் காட்டுக்களைக்
காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும்
ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும்
சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும்
வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால்,
மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது,
வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.

அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER
DIFFERENCES: இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில்
வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான்
அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was
these letters that Uthman standardized in his recension of the Qur'an
[1]).

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:132 (wawassaa)

சூரா 2:131 (wa'awsaa)


சூரா 91:15 (wa laa yakhaafu)

சூரா 91:15 (fa laa yakhaafu)


சூரா 2:132 (himu)

சூரா 2:131 (hiimu)


சூரா 3:133 (wasaari'uu)

சூரா 3:133 (saari'uu)


சூரா 5:54 (yartadda)

சூரா 5:56 (yartadid)


மேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை
எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.

வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical
differences): அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த
வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை
உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை
ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த
எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும்
சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள்
வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:

baa', taa', thaa', nuun, yaa'.

இருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில்
ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள்
குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி
மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது.
ஆக, உத்மான் அவர்களின் "அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்" இருக்கும்
குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு
எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை.
எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும்,
மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள்
குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும்
புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில்
இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும்
இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று
தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த
பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர்,
அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில்
வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு
வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே
இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த
இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில்
புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக
உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள்
கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:140 (taquluna)

சூரா 2:139 (yaquluna)


சூரா 3:81 (ataytukum)

சூரா 3:80 (ataynakum)


சூரா 2:259 (nunshizuhaa)

சூரா 2:258 (nunshiruhaa)


மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல
புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம்
பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition)
வெவ்வேறாக இருக்கிறது.

உயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில்
நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு
சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும்
கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots)
இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட
வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள்
அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில்
இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர்
எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு
இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு
ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன.
இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள்
உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS
இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:214 (yaquula)

சூரா 2:212 (yaquulu)


சூரா 2:10 (yakdhibuuna)

சூரா 2:9 (yukadhdhibuuna)


சூரா 2:184 (ta'aamu miskiinin)

சூரா 2:183 (ta'aami masakiina)


சூரா 28:48 (sihraani)

சூரா 28:48 (saahiraani)


சில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின்
மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள்
என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல,
அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது,
"அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted
variants" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை
ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி
பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை.
அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு "அதிகார பூர்வமான ஒரு பதிப்பு
இல்லை" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை
மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த
வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது
என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று
மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது
பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே
பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த
வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும்
உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள்
மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/
அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.

இந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு
செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு
குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார்
என்பதை கருத்தில் கொள்ளவும்.

இந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும்
வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில்
இருக்கின்ற‌து. ... (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ
வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்)
அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும்
இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக
ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை
மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட
இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு
முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை
கொடுத்து விடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184)
வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக் கூடியதாக இருக்கிறது-One difference
(Q. 2/184) has an effect on the meaning that might conceivably be
argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of
the Hafs and Warsh transmissions for the Textual History of the
Qur'an', Approaches to the History of the Interpretation of the
Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37,
bold added)

நாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம்.
ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன்
டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை
கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத்
தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான
வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/
Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.Translation

Making Easy the Readings of What Has Been Sent Down

Author
Muhammad Fahd Khaaruun
The Collector of the 10 Readings
From al-Shaatebeiah and al-Dorraah and al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar al-Beirut


இந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது

Copyright is for the publisher.
First Print
1420 - 1999

Can be acquired from Daar al-Beirut Bookshop.
Halabouny, Damascus, Ph: 221 3966
PO Box 25414


(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக
வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக
கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)

இந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான
வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers)
கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில்
ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌
ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌
புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே
ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌
புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான
குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக்
கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின்
ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த
பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில்
கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு
பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds
of the ayat (verses) of the Qur'an have some type of variant).எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில்
இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும்
வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள்.
ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை.
இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ்
என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].

1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.

3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா,
இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில்
இருக்கும் வித்தியாசங்கள்.

4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில்
இருக்கும் வித்தியாசங்கள்.

5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள
வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான
ஒழுங்கில் அமைப்பது உள்ளது.

6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல்
மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.

7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள
வித்தியாசங்கள்.

மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச்
சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில்
இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

முடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட
வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... இந்த அல்லாவின்
புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு
நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன
எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின்
வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம்
காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல
பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப்
பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi,
UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian
Foundation, 1996, p. 4, bold added)

நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள்
சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக
இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய
இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது
எனபது நிரூபனமாகி விட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும்
ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய
வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும்
புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில்
சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில்
குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும்
உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை
என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி
அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில்
பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால்,
குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.--------------------------------------------------------------------------------

பின் குறிப்புக்கள்:
[1] How and Why Uthman Standardized the Qur'an.
[2] The Origin of the Different Readings of the Qur'an.
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-
`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.


--------------------------------------------------------------------------------

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள்:

மூல குர்‍ஆன் சமர்கண்ட வுடன், இன்றைய அரபிக் குர்‍ஆன் ஒரு ஒப்பீடு -
பாகம் 1
Grammatical errors in the Hafs transmission of the Qur'an.
Sunan Abu-Dawud Book 30: Dialects and Readings of the Qur'an


http://www.answering-islam.org/tamil/authors/green/seven.html
Reply all
Reply to author
Forward
0 new messages