வானம் -கோட்டை விட்ட சிம்பு..!சவாலில் தோற்ற பரிதாபம்!!

5 views
Skip to first unread message

Senthil Kumar

unread,
May 9, 2011, 1:54:45 AM5/9/11
to undergrou...@googlegroups.com
சிம்பு-இவர் சாதாரண நடிகர் அல்ல....ரஜினி,விஜய் இடத்தை பிடிக்க துடிக்கும் இளம்புயல்.இவருக்கு போட்டி தனுஷ் அல்ல.விஜய் அல்லது ரஜினி..ரஜினி படத்தின் வசூல் விஜய்யே மிரள வைக்கும் போது ,இவருக்கு போட்டி விஜய் ஆகிவிடுவார்..அவரை கடுப்படிக்க,தல அஜீத் உதவியை நாடுவார்..ஒரு படத்தில் பில்லா அஜித் கெட்டப்புடன் சீன் காட்டி நம்மையெல்லாம் பயமுறுத்தியது நினைவிருக்கும்.ஏன்னு கேட்டா நான் தல ரசிகன் என்பார்.


நான் ரஜினி ரசிகன் என சின்னப்பையனா இருக்கும் போது பேட்டியெல்லாம் கொடுத்தார்..விஜய் கொடுத்தது போலவே.அப்புறம் வாயில் நுழையாத ஹாலிவுட் நடிகர் பெயரையெல்லாம் சொல்லி அவர் ரசிகன் என்கிறார், இப்போது.விஜய்யும் அப்படித்தான்.

கோ படத்தில் சிம்புவைத்தான் ஹீரோவாக்கினார், அதன் இயக்குனர்...அப்புறம் நம்ம சிம்புதான் வம்புக்காரர் ஆச்சே..கதையை இப்படி மாத்து அப்படி மாத்து..எனக்கு ஜோடியா அனுஷ்காவை போடு.டூயட்டுக்கு திரிஷா வை போடு.கனவு பாட்டுக்கு பிரீதி ஜிந்தா வேணும் என அடம்பிடித்திருக்கிறார்.அதெல்லாம் உனக்கு அக்கா மாதிரி தம்பி..சொன்னாக்கேளு என இயக்குனர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தாராம்...பயபுள்ள ஓவரா டகுல் பாட்சா காட்டியிருக்கு.


தம்பி நீ ஆட்டைக்கு வேனாம்னு சொல்லிட்டார்.இயக்குனர்...இந்த அதிரடியை தாங்க முடியாமல்,உடனே கெட்டவன்னு ஒரு படம் ஆரம்பிக்கிறேன்...இது ஹாலிவுட் வசூலை மிஞ்சும்..ஹாலிவுட் இயக்குனர்களே மிரளுவானுக..என தன் தந்தை பாணியில் சவால் விட்டு,தினத்தனிதியில் அரை பக்க விளம்பரம் கொடுத்து ஒரு இளிச்சவாய் தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைத்தார்...

கெட்டவன் படத்தோட கதை என்னன்னா,ஒரு நல்லவன் காதலிக்கிறான்..அவன் காதலிக்கு அவன் கெட்டவனாகவே தெரியறானாம்..எங்கியோ கேள்விப்பட்ட கதை மாதிரி இல்ல..இவர் நடிச்ச மன்மதன் படத்தோட ரீமேக் கதைதான் இது.அடப்பாவி.உன் படத்தை நீயே ரீமேக் பண்றியா நான் செத்தேன் அவ்வ்வ்வ்..என அழுகிறாராம்...அந்த தயாரிப்பாளர்.

இப்ப,கோ படம் பிச்சுகிட்டு ஓடுது...அடம் பிடித்து அனுஷ்கா ஹீரோயினா நடிச்சா போதும்..கோ படம் ரிலீஸ் ஆகுற டைம்ல இதையும் ரிலீஸ் செஞ்சி அந்த டைரக்டர் முகத்துல கரியை பூசணும்னு சிம்பு சவால் விட்டு,நடிச்சஅரைகுறை படம்தான் வானம்.

அந்தோ பரிதாபம்..வானம் ஊத்திக்கொள்ள,கோ பிச்சிகிட்டு ஓடுது...
    
நீ இன்னும் வளரணும் தம்பி....!!

டிஸ்கி;இதுல இன்னொரு கொடுமை என்னனா சிம்பு எனும் தன் பெயரை எஸ்.டி.ஆர்னு மாத்திகிட்டாராம்.

Thanks to Sathis777


Everyday Free Politics News for you

 

CLICK TO JOIN Undergroundpolitics GROUPS

Click Here


Reply all
Reply to author
Forward
0 new messages