மாபெரும் சாதனையாளர் தலைவர் பேராசிரியரை விட ‘மணிச்சுடர்’ நாளிதழை நடத்திட பொறுத்தமானவர் யாருமில்லை சிராஜுல் மில்லத் மூத்த புதல்வர் அப்துல் ஹமீது பாகவி வாழ்த்து

4 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 5, 2012, 3:50:41 PM10/5/12
to
From: Anbudan Usman <usman...@gmail.com>

 

மிகச்சிறந்த கல்வி மானும், மாபெரும் சாத னையாளருமான  தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை விட மணிச்சுடர் நாளி தழை நடத்த வேரு எவர் பொருத்தமானவராக இரு க்கும் என சிராஜுல் மில் லத் அப்துஸ் ஸமது சாஹிப் மூத்த புதல்வர் அப்துல் ஹமீது பாகவி குறிப் பிட்டுள்ளார்.
மணிச்சுடர் வெள்ளி விழாவிற்கு சிங்கப்பூரி லிருந்து அவர் அனுப் பியுள்ள வாழ்த்துச் செய்தி யில் கூறியிருப்ப தாவது:
`மணிச்சுடர்’ 25-வது ஆண்டு விழாவுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நிறை வான நல்வாழ்த்துக்க ளைத் தெரிவித் துக் கொள்கிறேன்.
`மணிச்சுடர்’, அதன் துவக்கம் முதல் இன்று வரை, ஒரு தெளிவான இலட்சியத் தில் பயணிக்கிறது; இது, வர்த்தக நோக்கத்தில் வெளி வரும் பத்திரிகை அல்ல.
சமுதாய மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கவோ, துவேஷத்தை வளர்க்கவோ, செய்திகளை உணர்ச்சித் தீபங்களாக்கி விடக் கூடாது என்பது இந்த ஏட்டின் கொள் கை யாகும்.
முஸ்லிம் லீகின் நடவடிக் கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இந்த நாளிதழ், சமுதாயத்திற்குள் எந்தவொரு சிராய்ப்புகூட ஏற்பட்டு விடக்கூடாது என்னும் நோக்கில் தனக் கென ஒரு சுயகட்டுப் பாட்டினை விதித்துக் கொ ண்டு சென்று கொண்டிருக் கிறது. இன்னொரு வகையில் சொல்வதானால், வியாபார ரீதியில் வெற்றிபெற இயலாத அனைத்து அம்சங்களும் மணிச்சுடருக்கு இருக்கிறது.
இத்தகைய சூழ்நிலை களிலும் இந்த ஏடு 25 ஆண்டு காலமாக நடக்கிறது; இனியும் பன்னூற்றாண்டுகள் தொட ரும்.
சிராஜுல் மில்லத் அவர் கள், இயக்கத்தில் விசு வாசமிகுந்தவர் களிடத்தில் அசையாத நல்லெண்ணம் வைத்தே இந்த ஏட்டைத் துவக்கினார்கள்.
இந்த கண்ணியமான நாளி தழை நடத்துவதில் அவர் எதிர்கொண்ட அறை கூவல்கள் ஏராளம்; ஏற்றுக் கொண்ட துன்பங்களும், நிதிநெருக்கடிகளும் பலப்பல; இருப்பினும், இந்தப் பத்தி ரிகையின் இலட்சியத்தை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. மணிச்சுடர் முஸ்லிம் லீகின் விழி; அதன் மனம்; அதன் இதயம்!
வயதான நிலையிலும், உடம்பு தளர்ந்த சூழ்நிலை யிலும், சிராஜுல் மில்லத் அவர்கள், இயக்கத்தையும், பத்திரிகையையும் நடத்துவதில் பெரும் சோத னையை உணர்ந்தார்கள். அப்பொழுது திருச்சிராப்பள் ளியிலிருந்து ஒரு கல்வி மானாகிய பேராசிரியர் வந் தார்; மூன்றே மாதங்கள் மட்டுமே  பரிச்சார்த்தமாக முயற்சிப்பதாகப் பணி துவக் கினார். அந்தப் பேராசிரியர், அதன்பிறகு ஊர் திரும்பவே இல்லை! நாளிதழை மீண்டும் நடக்கச்செய்தது மட்டுமின்றி, இயக்கத்தையும் அதன் அடிவேரி லிருந்து புனரமைக்கும் சவாலை ஏற்றார்; முஸ்லிம் லீகை ஒரு கலங்கரை விளக்கமாக்கு வதில் வெற்றி பெற்றுள் ளார். சிராஜுல் மில்லத் அவர்க ளுக்குப் பிறகு, இவரைத்தான் நாம் தற்பொழுது முனீருல் மில்லத் என்றழைக்கிறோம். 
மேல்எழுந்தவாரியாகப் பார்க்கும் போது, சிராஜுல் மில்லத் அவர்களுக்கும், முனீருல் மில்லத்துக்கும் உள்ள ஒற்றுமைகளில் இவற் றைக் கூறலாம்.
சிராஜுல் மில்லத் அவர் களின் பாட்டானார் பெயர் காதர் மொகிதீன். இவ்விரு வரும் திருச்சி ராப்பள்ளி யில்தான் வளர்ந்தி ருக்கிறார் கள். சிராஜுல் மில்லத் இஸ்லாமிய வரலாற்று மாண வராகத் திகழ்ந்தவர்; முனீருல் மில்லத், இஸ்லாமிய வரலாற் றுப் பேராசிரியர். சிராஜுல் மில்லத் அவர்கள், தமது அருமைத் தந்தையாருக்கு, திருக்குர்ஆனைத் தமிழில் பெயர்த்தெழுதுவதற்கு உதவியாக இருந்தார்கள்; முனீருல் மில்லத், தாருல் குர்ஆன் பத்திரிகை நடத்தி, அதில் திருக்குர்ஆன் மற்றும் அதன் திருவசனங்கள் பற்றிய ஆய்வுகளைத் தந்து வந்து ள்ளார்.
இயக்கத்தை நடத்தும் தத்துவத்தைப் பொருத்த மட்டிலும் சிராஜுல் மில்லத் அவர்கள் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் இயக் கத்தின் இயற்கையான ஆதர வாளர் என்று கருதி; எண்ணி க்கையைப் பற்றி கவலைப் படாமல் தகுதியை அடிப்படை யாகக் கொண்டு இயக்க த்தை நடத்தி வந்தார்கள். முனீருல் மில்லத், இயக்க த்தை முறைப்படுத்துவதை முக்கியமாகக் கொண்டு, சமுதாயத்தில் உள்ள ஒவ் வொருவரையும், இயக்கத் தின் அங்கத்தினராக்குவதில் உறுதியாக உள்ளவர்; இதில் அவர் விடாமுயற்சி கொண்டி ருக்கிறார்; எதையும் நிறை வாகச்  செய்ய வேண் டும் என்பதில் அவர் எப்பொழுதும் நிறைவாகவே இருக்கிறார்.
மணிச்சுடரை, இன்று நல்லபடி தொடர்ந்து நடக்கச் செய்துள்ள முனீருல் மில்லத், காயிதெ மில்லத் காலந் தொட்டு இருந்து வரும். முஸ்லிம் லீக் அலுவலகத்தை, இன்றைக்குக் கவின்மிகுந்த கட்டடமாக எழும்பச் செய்து, இயக்கத்தின் நடவடிக் கைகள் சிறப்பாக நடைபெற பூதாகரமாகப் பாடுபட்டுள் ளார்.
கேரள முஸ்லிம் லீகையும், மற்ற மாநிலங்களில் உள்ள முஸ்லிம் லீக் அமைப்பு களையும் ஒரே குடையின் கீழ் ஒன்றுசேர்த்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்னும் ஒரே பெயரு டையதாக ஆக்கு வதற்கு அவர் செய்த சேவை மகத் தானதாகும். தேர்தல் ஆணை யத்தில் பல்வேறு சட்டச் சிக்கல் களை எல்லாம் சந்தித்து இறுதியில் இயக்கத்துக்கு `ஏணி’ சின்னம் பெற்றுத் தந்ததற்கு  அவரின் உழைப்பு அரிதானது. இத்தகைய சாதனையாளர், ஒரு கல்வி மான், எடுத்ததை முடித்துக் காட்டி வரும் ஒரு தலைவர், இவரை விட இந்த மாபெரும் நாளிதழை நடத்திட வேறெவர் பொருத்தமானவராக இருக்க முடியும்?
மணிச்சுடர் நாளேட்டின் அங்கமாக எங்கள் குடும்பம் இருக்கிறது. இந்த இதழை வெளியிடுவதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனத் துக்கு முதல் பங்களிப்பை நானும் என் இளைய சகோ தரன் வகாபும் செய்துள்ளோம் என்பதை எண்ணிப் பெருமை ப்படுகிறோம். நிறுவனத்தின் சட்டத் திட்டங்களையும் நாளி தழ் நடத்தும் சங்கத்தின் விதிமுறைகளையும் வரைவு செய்து கொடுத்தவன் என்ற முறையில் எனக்குப் பெருமை யாக இருக்கிறது. என் இளைய சகோதரர் அப்துல் ஹக்கீம், சிராஜுல் மில்லத் அவர்களுடன் இந்தப் பத்திரிகை நடத்துவதற்கு தனது உடற்சுகமான காலத் தையே செலவழித்திருக் கிறார்.
எங்களின் இதயப் பூர்வ மான நன்றிகளைக் கூற வேண்டியவர் கள் பலர் உள்ளனர்; அவர்களில் ஒரு சிலர் இவர்கள்: 
மர்ஹும் ஆகிவிட்ட ஏ.எஸ். காஜா மொஹிதீன் ஹாஜியார் தலைமை யிலான பாசமிக்க ஆப்பனூர் சகோத ரர்கள் ஆரம்ப காலத்து உதவியாளர்கள்;
மறைந்த தேவிபட்டணம் எஸ்.எம்.பி. பாரூக் ஹாஜியார்; கீழக்கரையைச் சேர்ந்த ஆற் றல் மிகுந்த நூருதீன் ஹாஜியார் மற்று அவரின் சகோதரர்கள்; முதலில் அமைந்த ஆசிரியர் குழுவி னரான டாயல், வில்லியம்ஸ், ரசூல்கான் மற்றும் இராம தாஸ்; மறைந்த பலராமன் தலைமையிலான தொழில் நுட்பப் பணியாளர்கள்; பத்திரி கையைப் பதிவு செய்வதற்குப் பெரிதும் உதவிய கனி சிஸ்தி அண்ணன் அவர்கள், மணிச் சுடரின் மாபெரும் பாரம்பரி யத்தைத் தொடரசெய்து வரும் இன்றைய ஆசிரியர் குழுவின ருக்கு எங்களின் இதய வாழ்த்துக்கள்.
மேலும், முனீருல் மில்லத் இல்லையெனில் இந்தப் பத்தி ரிகை இன்றைக்கு வரலாற்றுப் பாடமாகி விட்டிருக்கும் முனீ ருல் மில்லத்துக்கு! உங்களுக் கும் உங்கள் தியாகத்துக்கும் எங்கள் இதயமார்ந்த மரியாi தகள்!
இவ்வாறு அப்துல் ஹமீது பாகவி கூறியுள்ளார்.



















--

                      Best Regards

             A.Muhammed Usman
    State Head Quarters Office In-charge
  Indian Union Muslim League - Tamilnadu
           +91 994 000 9737
 






--

Reply all
Reply to author
Forward
0 new messages