`அகில இந்திய முஸ்லிம் யூத் லீக்’ மாநாட்டை வரும் ஜூலை 14, 15 சனி, ஞாயிறு அன்று தமிழ்நாட்டில் நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் முடிவு செய்தது.

1 view
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Apr 18, 2012, 7:50:36 AM4/18/12
to

From: Indian Union Muslim League Tamil Nadu 


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலு வலக மான சென்னை காயிதெமில்லத் மன்ஸி லில் தேசியத் தலைவர் மத்திய வெளியுறவு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இ. அஹமது சாஹிப் தலை மையில் நடைபெற்ற இக் கூட்டம் இம் முடிவை மேற் கொண்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம்  தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப் தலைமை யில் தேசியத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் இன்று காலை 11மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற் றது. 
தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இக் கூட்டத்தின் நோக்கம் பற்றி குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
தேசியப் பொருளாளர் கர்நாடகத்தின் தஸ்தகீர் இப்ரா ஹீம் ஆகா, தேசிய துணைத் தலைவர் ராஜஸ்தானின் இக் பால் அஹமது, தேசியச் செயலாளர்கள் டெல்லி குர்ரம் அனீஸ் உமர், மேற்குவங்கத் தின் ஷாஹின்ஷா ஜஹாங்கீர், 
தமிழக பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், கேரள மாநில பொதுச் செய லாளர் கே.பி.ஏ. மஜீத், உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் மவ்லானா கவுஸர் ஹயாத்கான் மற்றும் மும்பை சி.எச். அப்துல் ரஹ்மான், பெங்களூர் சிராஜ் இப்ராஹீம் சேட், பெங்களூர் சிராஜ், இப்ராஹீம் சேட், முஹம்மது குட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, கவுரவ ஆலோசகர் கோவை எல்.எம். அப்துல் ஜலீல், மாநிலச் செயலா ளர்கள்  காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் சத்தார், ஆம்பூர் அப்துல் பாஸித், வெ. ஜீவகிரி தரன், கேரள மாநில இளைஞர் அணி தலைவர் சையத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள், தமிழ்நாடு மாநில இளைஞர் அணி செயலாளர் எம்.கே.எஸ். யூனூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இ.அஹமது  பேச்சு
இக்  கூட்டத்தில் உரையாற் றிய தேசியத் தலைவர் இ.அஹமது சாஹிப், இந்திய தேர்தல் ஆணையம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை அங்கீகரித்ததன் மூலம் அகில இந்திய அளவில் நமக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்துள் ளது. 
இந்த அங்கீகாரம் எளிதாக கிடைத்துவிடவில்லை.  சங்கி லித் தொடராக பல்வேறு நடவ டிக்கைகள் நடைபெற்றன.  ஏராளமான ஆதாரங்களை சமர்ப்பித்தோம்.  
அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கு பதில் அளித் தோம்.  இந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அபரிமிதமான தைரியத்துடன் முடிவெடுத்தது.  அடிமட்ட பிரைமரி முதல் மாநில நிர்வாகி கள் வரை `அபிடவிட்’ தாக்கல் செய்தனர். இதன்பின்னர்தான் நமக்கு அங்கீகாரமும் - `ஏணி சின்னமும்’ கிடைத்தது. இனி நடைபெறும் தேர்தல் களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் `ஏணி’ சின்னத் திலேயே போட்டியிடும்.  இந்திய அரசியலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முக்கியத்துவம் வாய்ந்த அங்கம் என்பது அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜனநாயக மதச்சார்பற்ற, மத சகிப்புத்தன்மை கொண்ட - மதநல்லிணக்கத்திற்கு பாடு படக்கூடிய ஒரு ஸ்தாபனமாகும்.  காயிதெ மில்லத் முதற் கொண்டு சி.எச். முஹம்மது கோயா, செய்யது முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் உள்ளிட்டோர் இந்த தியாகத்திற்கு வழிகாட்டி யிருக்கின்றனர்.இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்று விடாமல் மார்க்கப் பற்றோடும்,  தேச உணர்வோடும், அவர்களை முஸ்லிம் லீகில் இணைத்து வழிகாட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
கேரளாவைப் பொருத்த வரையில் முஸ்லிம் மாணவர் களையும் - இளைஞர்களையும் முஸ்லிம் லீக் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.  தமிழ்நாட்டில் வளர்ந்து வரு கிறது. மற்ற மாநிலங்களில் இதுபோன்ற நிலைமையை உருவாக்க வேண்டும்.
இளைஞர்களின் நியாய மான தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களை ஆக்கப் பூர்வமான காரியங்களுக்கு பயன்படுத்தவும் அகில இந்திய அளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். அந்த வகையில், இளைஞர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கோடு தேசிய அளவில் `முஸ்லிம் யூத் லீக்’ மாநாட்டை நாம் நடத்த உள்ளோம். அதற்கான தேதி யையும், இடத்தையும் முடிவு செய்வதே இக் கூட்டத்தின் நோக்கம்.நிர்வாகக் குழு உறுப்பி னர்கள் இதுதொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு இ.அஹமது சாஹிப் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் `யூத் லீக் தேசிய மாநாடு’
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாக குழு உறுப்பி னர்களின் கருத்துக்களின் அடிப்படையில், எதிர்வரும் ஜூலை 14, 15 சனி, ஞாயிறு தேதிகளில் தமிழ்நாட்டில் அகில இந்திய  `முஸ்லிம் யூத் லீக்’ மாநாட்டை நடத்துவது என்று இக் கூட்டம் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில குழு கூடி  இடத்தை முடிவு செய்து அறிவிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
நிறைவாக சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் துஆ ஓதினார்.
தங்கள் அன்புள்ள,

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
    தேசிய பொதுச் செயலாளர் 



--

IUML press.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages