Fwd: டெல்லி விமான நிலைய மஸ்ஜித்

0 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 28, 2013, 2:40:08 AM10/28/13
to
From: Abdul Rahman <lalpet...@gmail.com>


கடந்த சனிக்கிழமை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 
மிக நேர்த்தியாக 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கும் விமான நிலையங்களில் உலகின் எட்டாவது இடத்தை பிடித்து விளங்கும் டெல்லி விமான நிலையம் பார்க்க ரசிக்க சுற்றி வர என அனைத்து அம்சங்களோடும் அமைக்கப்பட்டிருக்கிறது.துபாய் விமான நிலையத்திற்கு கூட முதல் பத்து பட்டியலில் இடம் இல்லையாம்.

மிக பிரம்மாண்டமான அந்த விமான நிலையத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதில் தொழக்கூடிய வாய்ப்பும் கிடைத்தது.அல்ஹம்துலில்லாஹ்!
லுஹர் தொழுகையை நிறைவேற்றலாம் என்று உள்ளே சென்ற எனக்கு மகிழ்ச்சி கலந்த வியப்பு.
ஆம்! பல்வேறு நாடுகளைச் சார்ந்த பயணிகளும் அந்த அறையை நோக்கி வந்து கொண்டே இருப்பது தான்.
சுமார் 40 பேர் வரை ஒரே நேரத்தில் தொழக்கூடிய அளவிற்கு வசதி கொண்ட அந்த இடத்தோடு பெண்களுக்காகவும் அதே அளவில் இடம் அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.

மஸ்ஜிதிற்கு எதிரில் ஒளு செய்வதற்காக தனியாக பைப் வசதியும் செய்து மிக அருமையாக ஒரு குட்டி பள்ளிவாசலாக அமையப்பெற்றிருக்கும் இந்த விமான நிலையத்தில் காலம் காலத்திற்கும் அல்லாஹ்வின் அடியார்கள் அவனை குறித்த நேரத்திற்கு வணங்கி வழிபட வழிவகை செய்து தந்த தாய்ச்சபையின் நம்பிக்கை நட்சத்திரம் காயிதேமில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளார் மரியாதைக்குரிய எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.அவர்களின் நலமான வளமான நல்வாழ்விற்கும்,அவரின் நீடித்த சமுதாய சேவைக்கும் இறைவனிடத்தில் துஆச் செய்து கொண்டேன்.அவரின் தொடர் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி நிறைவேற்றித் தந்த மத்திய அரசுக்கும்,இந்திய விமான நிலைய இயக்குனரக அதிகாரிகளும் நன்றிக்குரியவர்கள்.

சென்னை விமான நிலையத்திலும் இப்படி ஒரு தொழுகை இடம் அமைய முயற்சி மேற்கொண்டிருக்கும் நமது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் அப்துல் ரஹ்மான் அவர்களின் முயற்சி வெற்றியடைய துஆ செய்யுங்கள்.

குறிப்பு:அங்கு மூன்று குர்ஆன் ஷரீப் மற்றும் சில யாசீன் கிதாபுகள் மட்டுமே உள்ளது.டெல்லி விமான நிலையம் செல்லும் வாய்ப்பு உங்களில் யாருக்காவது கிடைத்தால் குர்ஆன் ஷரீப் வாங்கி சென்று அந்த பள்ளியில் வைக்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் அப்துல் ரஹ்மான்.
அபுதாபி.



2013-10-19 18.02.44.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages