---------- Forwarded message ----------
From:
Rafeek Zakaria <naj...@gmail.com>
Date: 2012/8/15
Subject: முத்துப்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் ''தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி''
To: Hidayath muduvai <
muduvai...@gmail.com>
முத்துப்பேட்டை நகர ஒன்றியம் கிளை
இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் ''தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி''
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - முத்துப்பேட்டை நகர ஒன்றியம் கிளை சார்பாக 15.8.12 காலை 9 மணியளவில் இந்தியாவின் 66 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர ஒன்றியம் கிளை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு சுதந்திர தினத்தினை மற்றும் குடியரசு தினத்தினை வெகு விமர்சையாக இந்த கிளை செய்து வருகிறது.
தேசிய கொடியினை ஜனாப். H. ஹாஜகான் - நகர துணை செயலாளர் அவர்கள் ஏற்ற, தலைமையினை ஜனாப். ஹாஜி. K. முகைதீன் அடுமை - மாவட்ட செயலாளர் அவர்கள் ஏற்க, வரவேற்புரையினை S. அபு ஹனீபா - நகர செயலாளர் அவர்கள் ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஹாஜி M. முகம்மது அலி, ஹாஜி. M. இமாமுதீன் - நகர துணை தலைவர், ஹாஜா முகம்மது உசேன் - நகர துணை தலைவர், ஹாஜி. A.S.N முகம்மது இப்ராஹிம் - நகர பொருளாளர், A. ஷேக் கமால் மைதீன் (செட்டியப்பா) - இளைஞரணி அமைப்பாளர், S. ஹாஸ் பாவா - நகர தொழிலாளர் துணை அமைப்பாளர் மற்றும் முத்துப்பேட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர ஒன்றியம் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
செய்தி மற்றும் புகைப்படம் : அபு ஆஃப்ரின்