முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையின் அறங்காவ லர்கள் கூட்டம் சென்னை ஹோட்டல் அபு பேலசில் பிப்ரவரி 25 சனிக்கிழமை பகல் 11.30 முதல் 2.30 உரை நடைbற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ இறைமறை ஓதினார்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அறக்கட்டளை பொருளாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. கூட்டத்திற் கான நோக்கத்தை விளக் கிப்பேசினார்.
பங்கேற்ற அறங்காவலர்கள், சமுதாயப் புரவலர்கள், முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துரை யாடல் நடைபெற்றது. பின்னர், தலைவர் பேராசிரியர்கே.எம். காதர் மொகிதீன் நிறைவுரை யாற்றினார்.
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளையின் நோக்கம், செயல்பாடுகள், எதிர்காலத்திட் டங்கள் குறித்து இக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதிர், மெஜஸ்டிக் அல்தாப் ஹுசைன், நாகூர் ஆலியா n.ஷக் தாவூத் மரைக்காயர், குவைத் லக்கி சுலைமான் பாட்ஷா, எஸ்.டி. கூரியர் நவாஸ்கனி, விருதுநகர் ஹோட்டல் அதிபர் இப்ராஹீம் ஷா, எம்.ஏ.எம். கல்லூரிகளின் தாளாளர் நிஜாம், ஈரோடு ஜி. தாஜ் முகைதீன்,
தென்காசி வி.டி.எஸ்.ஆர். இஸ்மாயில், சென்னை காபத் துல்லா, மாநிலப் பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், நெல்லை மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்சா, மாநிலச் செயலாளர்கள் கமுதி பஷீர், ஆம்பூர் எம். அப்துல்பாஸித், வெ. ஜீவகிரிதரன், எஸ்.டி.யு மாநில அமைப்பாளர் கே. நிஜாமுதீன், வழக்கறிஞர் எஸ்.ஏ. அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் திருப்பூர் எம்.ஏ. சத்தார் துஆ ஓதினார்.