ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!

3 views
Skip to first unread message

Velmurugan

unread,
Sep 18, 2010, 3:51:30 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

 

"பிறகு” “பிறகுஎன்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள்நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள்.
 
பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்திவைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும்வேண்டாம். ‎

தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபைஒத்திவைக்கப்பட்டது என்றும்,
உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியஉணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடிபத்திரிகைகளில் படிக்கிறோம்.
ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. ‎முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும்கசப்பான நிகழ்ச்சி.
அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்கவேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.‎

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர்அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார்.
கடிகாரம் கப்.. சிப். வாய்மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை.
அவரதுமுன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையைவிட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை.
தமது தோல்வியைவிட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார். இன்னும்கொஞ்ச நேரம் தூங்கலாமேபிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்திவைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.‎

நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாகஅதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம்தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமேமுழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்

‎“
பிறகு படித்துக் கொள்ளலாம்அப்புறம் வேலை பார்க்கலாம்கடைசியாகச்செய்து விடலாம்என்று பேசுகிறவர்கள்நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். ‎சொந்த விரோதிகள். காரணம்நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்துகொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பதுஅதிசயமான உண்மை. ‎

நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதேஇல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்திவிடுவார்கள். நிறைய நேரம்நிறைய வாய்ப்புகள்என்று நிரம்பிவழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள். ‎

கொஞ்சம்தான் நேரம்கொஞ்சம்தான் வாய்ப்புகொஞ்சம்தான் பணம்… ‎கொஞ்சம்தான் ஆயுள்என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள்நிச்சயம் ஜெயிக்கிறார்கள். நாளைநாளை என்று நாளை ஒத்திப்போடுகிறவர்களே நாளை நாள் நமது நாளா? யார் அறிவார். எனவேஒத்திப்போடாமல் இன்றேஇப்போதேஇந்த கணமே கிடைக்கும்வாய்ப்புகளை பயன்படுத்த ஆரம்பிப்போம்.‎

இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர்விஞ்ஞானத்தில்இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்குவிண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டுஉடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்றுசனிக்கிழமைநாள் நன்றாக இல்லைதிங்கட்கிழமை சேருவோம்என்றுஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். ‎மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.‎

பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போதுவிஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ‎ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்புஎன்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரிமுதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரைமுதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார். ‎

ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டுஇருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. ‎பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்திவைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம்.

 

__._,_.___

With Regards,

 

Velmurugan.S

Condition Monitoring Technician

Reliability Dept

GSM: 00 968 98920377

Off   : 00 968 23218933

E-Mail: muru...@salalahmethanol.co.om

cid:image001.jpg@01C9CE36.C26A44F0 mvs.vel...@gmail.com

 velmuru...@hotmail.com

 Salalah Methanol Company, L.L.C. (SFZ)

 Mailing Address:  P.O. Box 316, P.C. 217, Al Awqadain, Salalah, Sultanate of Oman

 Location Address:    Salalah Free Zone Area, Raysut, Salalah, Sultanate of Oman

P Please consider the environment before printing this e-mail.

 

 



This email, including any attachments, is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient you are not allowed to use, copy, disseminate, disclose or use any part of it. If you have received this email in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Internet communications cannot be guaranteed to be timely secure, error or virus-free.Salalah Methanol Company LLC. (SFZ). accepts no responsibility or liability for any harm to the recipient’s, or any party's, system or data caused by this e-mail or its attachments or any viruses or similar contained in it.

Reply all
Reply to author
Forward
0 new messages