டன் கணக்கில் அரிசி, கோதுமை வீணடிக்கப்படும் அவலம்

3 views
Skip to first unread message

Velmurugan

unread,
Sep 18, 2010, 12:43:58 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

 

 

 

ம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பசியால் வாடுவதாக புள்ளி விவரங்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கின்றன. நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் 46 சதவீத குழந்தைகள், போதிய ஊட்டச் சத்தின்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, போனஸ் அதிர்ச்சி தகவல்பீகார், .பி., போன்ற மாநிலங்களில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் காப்பக நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ளோரின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருட்கள் வேண்டிஉருக்கமான கோரிக்கை விடுகின்றனர். நடைபாதை, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் போன்ற இடங்களில்  வசிப்போரின் எண்ணிக்கையை கணக்கிட்டால், கோடிகளைத் தொடும். இவர்களுக்கும் ஒருவேளை உணவுக்கு கூட உத்தரவாதம் இல்லை.



குப்பையான உணவு : ஆனால், சேமித்து வைக்க போதிய இடவசதியின்றி, 13 லட்சம் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அழுகி, வீணாகி விட்டதாகவும், அவற்றை எலிகள் வேட்டையாடி வருவதாகவும் பகீர் தகவல்கள் மீடியாக்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. .பி., பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்குகளின் வெளியில் நூற்றுக்கணக்கான டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், குப்பையைப் போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தியா போன்ற பரந்து விரிந்த நிலப் பரப்பு கொண்ட ஒரு நாட்டில், அத்தியாவசியப் பொருளான உணவுப் பொருட்கள் டன் கணக்கில் வீணடிக்கப்படுவது, மனிதாபிமானம் உள்ள ஒவ்வொருவரின் நெஞ்சையும் னக்கச் செய்துள்ளது.



சுப்ரீம் கோர்ட் குட்டு : உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படும் விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவிட்டிருந்தது. அதில்,"உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலை தருகின்றன. சேமித்து வைக்க இடமில்லாமல், உணவுப் பொருட்கள் கெட்டுப் போவதை அனுமதிப்பதற்கு பதிலாக, அவற்றை வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.



அலட்சியம் : இருந்தாலும், இந்த விவகாரத்தை மத்திய அரசு அலட்சியமாகவே கையாண்டது. இதுகுறித்து பார்லிமென்டில் பேசிய மத்திய விவசாய மற்றும் உணவுத் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில்,"ஏழை மக்களுக்காக, ஏற்கனவே சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, சுப்ரீம் கோர்ட் கூறியது போல், அளவுக்கு அதிகமான உணவுப் பொருட்களை ஏழை மக்களுக்க இலவசமாக வழங்குவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை' என, சர்வ சாதாரணமாக தெரிவித்தார்.



கண்டிப்பு : இது சுப்ரீம் கோர்ட்டுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு, கடந்த வாரம் கண்டிப்பான ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில்"உணவுப் பொருட்கள் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வீணாக்குவதற்கு பதிலாக, அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என, நாங்கள் ஏற்கனவே கூறியது உத்தரவு தானே தவிர, ஆலோசனை அல்ல. இதை உங்கள் அமைச்சருக்கு தெரியப்படுத்துங்கள்' என, அதிரடியாக அறிவித்தது.



பார்லியில் அமளி : சுப்ரீம் கோர்ட்டின் இந்த கண்டிப்பான உத்தரவு, லோக்சபாவில் கடந்த வாரம் புயலை கிளப்பியது. பா.., ஐக்கிய ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு அடுக்கடுக்கான, கேள்விகளை எழுப்பின. இதுகுறித்து மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், சபையில் விளக்கம் அளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக, ாஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ்,"என் சொந்த மாநிலமான பீகாரில் ஏராளமான மக்கள் பசியால் வாடுகின்றனர். இந்திய உணவுக் கழக கிடங்குகளில் வீணாகும் உணவுப் பொருட்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குங்கள்' என, கெஞ்சலாகவே கேட்டார்.



அசரவில்லை பவார் : இருந்தாலும, இந்த விவகாரத்தில் பவார் அசைந்து கொடுக்கவில்லை. அவர் கூறுகையில், "சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை மத்திய அரசு மதிக்கிறது. கோர்ட்டின் உத்தரவுகளை அரசு செயல்படுத்தும். அதேநேரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் இறுதி நகல் கிடைத்த பின்னரே, இந்த விஷயம் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க முடியும்'என, கூறிவிட்டு, இந்த பிரச்னையை தற்போதைக்கு கைகழுவி விட்டார்.



நிபுணர்கள் கவலை : மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டாலும், சமூக ஆர்வலர்களும், விவசாய துறை வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர். பிரபல விவசாய அறிவியல் வல்லுனர்கள் கூறியதாவது:உணவுப் பொருட்கள் வீணாவதாக கூறப்படுவது வெட்கக்கேடான விஷயம். உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியாத அரசு, உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டம் குறித்து பேச முடியாது. உணவுப் பொருட்களை வினியோகிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். காமன்வெல்த் ோட்டி, விமான நிலையம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, உணவுப் பொருள் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவுப் பொருட்கள் வீணடிக்கப்பட்ட விவகாரம் குறித்து, பார்லிமென்ட்  குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு  வல்லுனர்கள்  தெரிவித்துள்ளனர.



உணவுக் கழக கிடங்குகளில் என்ன பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டே கண்டிக்கும் அளவுக்கு இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததற்கு "இந்திய உணவுக் கழக கிடங்குகளில், உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்கு போதிய இட வசதி இல்லை' என, அரசு கூறுவது தான் முக்கிய காரணம். நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் அளவுக்கு அதிகமாக உள்ளன. ஆனால், இந்திய உணவுக் கழக கிடங்குகளில் இவற்றை சேமித்து வைக்கும் அளவுக்கு இட வசதிகள் இல்லை. இதனால், கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது போக, ற்றவை, உணவுக் கழக கிடங்குகளின் வெளியில் குப்பையைப் போல் குவித்து வைக்கப்பட்டு, வீணாகின்றன. நாளடைவில் மழை, வெயில் போன்ற பிரச்னைகளால், இந்த உணவுப் பொருட்கள் அழுகி, யாரும் பயன்படுத்த முடியாதபடி வீணாகின்றன.கடந்த 2006-07ல், குறைவான விளைச்சல் காரணமாக, இந்திய உணவுக் கழகம், மிகவும் குறைவான உணவுப் பொருட்களையே கொள்முதல் செய்தது. இதன் காரணமாக, ஏற்கனவே இயங்கி வந்த பல கிடங்குகள் மூடப்பட்டு விட்டன. இதனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் விளைச்சல் அதிகரித்து, அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்குகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் 40 ஆண்டு பழமையானது என்றும் கூறப்படுகிறது.



மிகைப்படுத்தப்பட்ட தகவலா? : ஏராளமான உணவுப் பொருட்கள் வீணாவதாக தகவல் வெளியானாலும், இந்திய உணவுக் கழகம் அதை மறுத்துள்ளது. உணவுக் கழக அதிகாரிகள் கூறுகையில் இதுகுறித்து "வீணாகிய உணவுப் பொருட்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்த கொள்முதலில் வெறும் 0.4 சதவீத அளவிலான உணவுப் பொருட்களே வீணாகியுள்ளன. சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருட்களை ஒப்பிட்டால், இது மிகவும் குறைவான அளவே'என்கின்றனர்.



தீர்வு என்ன? உணவுப் பொருட்கள் வீணாவதை தவிர்க்க, அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தினாலே, உணவுப் பொருள் வீணாகும் பிரச்னையை எளிதில் சமாளித்து விடலாம்.விளைச்சல் அதிகம் உள்ள பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் இந்திய உணவுக் கழக கிடங்குகளின் சேமிப்பு வசதியை அதிகரிக்க வேண்டும். சேமிப்பு கிடங்குகளில் பின்பற்றப்படும் பழமையான நடைமுறைகளை மாற்றி, தற்காலத்துக்கு ஏற்ற புதிய முறைகளை செயல்படுத்த வேண்டும். இதற்கு உள்ள இடையூறுகள் நீக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியவில்லை என்றால், இந்த பணிகளில் தனியார் துறையையும் அனுமதிப்பதில் தவறு எதுவும் இல்லை. முழுக்க, முழுக்க தனியார் வசம் இந்த பொறுப்புகளை ஒப்படைக்காமல், அரசும், தனியாரும் சேர்ந்து, கூட்டாக இந்த பணிகளை கவனிக்கலாம்.வட்டிக்கு கடன் வாங்கி, வயல்வெளிகளிலும், வரப்பு மேடுகளிலும் பாடுபட்டு வியர்வை சிந்திய இந்திய விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுவது சரியா. ஒட்டிய யிறுடனும், வறண்டுபோன நாவுடனும், பசியால் முடங்கிக் கிடக்கும், அப்பாவி மக்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளத்தில் இறங்குமா அரசு?



இந்திய உணவுக் கழகம் (எப்.சி..,) : இந்திய உணவுக் கழகம், இந்திய உணவுக் கழக சட்டத்தின் கீழ், கடந்த 1964ல் ஏற்படுத்தப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வது, அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது, கொள்முதல் செய்த உணவுப் பொருட்களை சேமித்து வைப்பது, அவற்றை பொது வினியோக திட்டங்களுக்கு வினியோகிப்பது உள்ளிட்ட மத்திய அரசின் உணவுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவது இந்திய உணவுக் கழகம் தான். நாடு முழுவதும் இதற்கு ஐந்து மண்டல அலுவலகங்களும், 26 பிராந்திய அலுவலகங்களும் செயல்படுகின்றன. இவற்றில் 38 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை அலுவலகம் டில்லியில் உள்ளது. ஆண்டு தோறும் மொத்த விளைச்சலில் 15 முதல் 20 சதவீதம் வரையிலான கோதுமையையும், 12 முதல் 15 சதவீதம் வரையிலான அரிசியையும் விவசாயிகளிடம் இருந்து, இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழக சேமிப்பு கிடங்குகளில் 256.64 லட்சம் டன் உணவுப் பெருட்களை சேமித்து வைக்கும் வசதி உள்ளது. அதிக அளவாக வடக்கு மண்டலத்தில் மட்டும் 127.48 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க முடியும்.



இது எப்படி இருக்கு? உணவுப் பொருள் வீணாகிய விவகாரம் குறித்து பா.., தலைவர் நிதின் கட்காரி, சமீபத்தில் ஒரு யோசனை தெரிவித்திருந்தார். அவர் கூறியதாவது:
அளவுக்கு அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை, வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக வழங்க, அரசுக்கு விருப்பம் இல்லை என்றால், அவற்றை மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம். குறிப்பிட்ட சில மதுபானங்கள், உணவுப் பொருட்களின் ான் தயாராகின்றன. எனவே, அரசு இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான கிடங்குகளுக்கு எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆய்வு செய்து, வீணாகிய உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்தனர். அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை மீடியாக்களிடம் காட்டுவதற்காக டில்லிக்கு எடுத்துவர திட்டமிட்டோம். ஆனால், அவற்றில் இருந்து வந்த மிக மோசமான வீச்சம் காரணமாக, அதிகாரிகள் விமானத்தில் அதை எடுத்து வர அனுமதி மறுத்து விட்டனர்.இவ்வாறு நிதின் கட்காரி கூறியுள்ளார்.



வீணாவது எவ்வளவு? *கடந்த பத்தாண்டுகளில் மட்டும், 13 லட்சம் டன் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள், சேமித்து வைக்க இடவசதியின்றி வீணடிக்கப்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
*
வீணாகிய இந்த உணவுப் பொருட்களை கொண்டு, ஒரு கோடி பேருக்கு, ஒரு ஆண்டு முழுவதற்கும் மூன்று வேளைக்கும் உணவளிக்க முடியும்.
*
உணவுப் பொருள் விளைச்சல் அதிகம் உள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களில் மட்டும், 61 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் வீணடிக்கப் பட்டுள்ளன.
*
இந்த உணவுப் பொருட்களை கொண்டு, 1.2 ோடி பேருக்கு, ஒரு மாதத்துக்கு உணவளிக்க முடியும்.
*
கடந்த 1997-2007 முதல், வட மாநிலங்களில் மட்டும் 1.83 லட்சம் டன் கோதுமை, 3.93, லட்சம் டன் அரிசி, 22 ஆயிரம் டன் நெல், 110 டன் சோளம் ஆகியவை, சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாமல், சேதமாகியுள்ளதாக இந்திய உணவுக் ழகமே தெரிவித்துள்ளது.
*
நாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களிலும் இதே அளவு உணவுப் பொருட்கள் சேதமாகியுள்ளன.
*
சேதமான உணவுப் பொருட்களை அகற்றுவதற்கு, அல்லது அப்புறப்படுத்துவதற்காக மட்டும், 2.59 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
*
ஒரு டன் கோதுமையை கொள்முதல் செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் இந்திய உணவுக் கழகம் சார்பில் 15ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறதுஇந்திய 
உணவுக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஒரு  பத்து லட்சம் டன் கோதுமை சேதமடைந்தால், இதனால் அரசுக்கு 1,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
*
ஒரு டன் அரிசியை கொள்முதல் செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் இந்திய உணவுக் கழகம் சார்பில் 19 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது.

 

__._,_.___

With Regards,

 

Velmurugan.S

Condition Monitoring Technician

Reliability Dept

GSM: 00 968 98920377

Off   : 00 968 23218933

E-Mail: muru...@salalahmethanol.co.om

cid:image001.jpg@01C9CE36.C26A44F0 mvs.vel...@gmail.com

 velmuru...@hotmail.com

 Salalah Methanol Company, L.L.C. (SFZ)

 Mailing Address:  P.O. Box 316, P.C. 217, Al Awqadain, Salalah, Sultanate of Oman

 Location Address:    Salalah Free Zone Area, Raysut, Salalah, Sultanate of Oman

P Please consider the environment before printing this e-mail.

 

 



This email, including any attachments, is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient you are not allowed to use, copy, disseminate, disclose or use any part of it. If you have received this email in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Internet communications cannot be guaranteed to be timely secure, error or virus-free.Salalah Methanol Company LLC. (SFZ). accepts no responsibility or liability for any harm to the recipient’s, or any party's, system or data caused by this e-mail or its attachments or any viruses or similar contained in it.

Reply all
Reply to author
Forward
0 new messages