பயம்......பயம்.......பயம்.......

7 views
Skip to first unread message

Velmurugan

unread,
Sep 18, 2010, 4:00:30 AM9/18/10
to tuticorin...@googlegroups.com

பயம்

நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. உதாரணமாக, பள்ளி மாணவனுக்கு ஆசிரியரைக் கண்டால் பயம். பலகோடி ரூபாய் மூதலீட்டில் தொழில் செய்பவருக்கு வருங்காலத்தில் தொழிலின் முன்னேற்றம் குறித்து பயம். ஆக, பயம் உருவாகின்ற விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவரின் மனதிலும் பயம் என்ற ஒன்று ஆழமாக குடிகொண்டு உள்ளது.

 

உதாரணமாக, இங்கு இராமசாமி என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளலாம். இவனது வயது 18. பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். எங்கெல்லாம் உறவினர்கள், பெற்றோர்கள் தேடுவார்கள் என்று அறிந்து வேறொரு திசையில் நடக்க ஆரம்பித்தான். நன்றாக இருட்டிய நிலையில் ஓர் ஊரைக் கடந்து சென்றான். அந்த இடம் நிறைய மரங்கள் நிறைந்த வெட்ட வெளியாக இருந்தது. அங்கே சென்று பெரிய மரத்தின் கீழ் இழைப்பாறினான். மரத்தின் பக்கத்தில் பூங்காக்களில் இருக்கும் நாற்காலி மேடையில் நன்றாக தூங்கிவிட்டான்.

 

மறுநாள் காலையில் சூரிய ஒளி கண்ணில்படும்போது தான் எழுந்தான். சுற்றியுள்ள இடத்தைப் பார்த்ததும் தூக்கிவாரிப்போட்டது. அது ஒரு ‘சுடுகாடு’. இராமசாமிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடியும். இந்த விஷயம் முந்தைய நாள் இரவு தெரிந்திருந்தால் அந்த இடத்தில் தங்கியிருப்பானா… வேறு வழியே இல்லாமல் தங்கியிருந்தாலும் உறங்கியிருக்க முடியுமா?

 

அதற்குக் காரணம் சுடுகாடு என்றவுடன் மனதில் இருக்கும் பதிவுகள், அனுஷ்ய சக்திகள், பேய், தொல்லை போன்றவைதான். இந்தப் பதிவுகள் எப்போது சம்மந்தப்பட்டவரைப் பாதிக்கும் என்றால், ‘பயம்’ என்பது அடையாளப்படுத்தப்படும் போதுதான், பயப்படக் காரணம் இருக்கிறது என்பதை உணரும்போது தான்.

 

நாம் பயத்தை வெற்றி கொள்ள வேண்டுமானால் ‘நான் தைரியமாக இருப்பேன், பயப்படமாட்டேன்’ என்று ஆயிரம் முறை சொல்லிக் கொள்வதால் பயம் விலகிவிடாது. பயப்படுவதற்குக் காரணமான எண்ணங்களை, மனப்பதிவுகளை மையப்படுத்தி அவற்றை மானசீகமாக மனத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

 

பயங்களில் பலவிதம் இருக்கின்றன:

இன்னும் ஒரு சில பயங்கள்:

இது போதாதென்று அன்றாடம் நாம் கேள்விப்படும் தகவல்கள், செய்திகள் மற்றும் வதந்திகள் போன்றவையும் பயத்தை உண்டாக்குகின்றன.

 

இவை அனைத்தையும் தனித்தனியாய் பார்த்தால், கேள்விப்பட்ட செய்திகள், தகவல்கள், எதிர்கொள்ள வேண்டிய நபர்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றைவிட ‘நம்மால் சமாளிக்க முடியாதே, என்ன செய்யப் போகிறோம்?’ என்ற நினைப்பும், ஒரு வேளை பயப்படுவது நடந்து விட்டால் என்ன செய்வது! என்ன செய்வது!! என்ற சிந்தனையும் பயத்தின் காரணங்களாக இருக்கும்.



‘பயம்’ நாம் அஞ்சி நடுங்கும் விஷயங்களில் சூழ்நிலைகளில் இல்லை. அது பற்றிய நமது மனப்பதிவுகளின் நம்பிக்கைகள், சிந்தனைகள், எண்ணங்கள் தான் பயத்தை உருவாக்கக் கூடியவைகளாக இருக்கும்.

 

 

ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் மேலாளராக ஒருவர் இருந்து வந்தார். திறமைசாலி; அனுபவம் உள்ளவர்; ஒத்துழைக்கும் சுபாவம் உடையவர்; எல்லோராலும் விரும்பப்பட்டவர்; முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர். திடீரென்று அவருக்கு ஒரு பயம் (எதிர்மறையான சிந்தனை) ஏற்பட்டது.  “வேலை போய்விட்டால் என்ன செய்வது? என்ற பயம், எதிர்மறை சிந்தனை. அவரை வாழ்வின் இறுதிக்கே அழைத்துச் சென்றது”. அவர் இவ்வாறு நினைத்தார். தமது தனிப்பட்ட தகுதிகளுக்கு ஏற்ற உத்தியோகம் இந்த ஊரில் கிடையாது. மனைவியின் கதி என்ன ஆகும்? மூன்று குழந்தைகளும் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? ஏற்கனவே சேமித்து வைத்திருக்கின்ற பணம் வீட்டின் மீது வாங்கியிருந்த கடனை அடைப்பதற்கே போதுமானதாக இருக்கிறது. அவரது எதிர்மனை சிந்தனை வேலை செய்யலாயிற்று.

 

முதலாளி கூப்பிடுகிறார். வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். கடன் பாக்கிக்காக வீட்டை வங்கி எடுத்துக் கொள்கிறது. சோற்றுக்கும் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலைமை. வறுமை சூழ்ந்து விடுகிறது. வியாதி வருகிறது. இந்த மாதிரியான அச்சங்கள் மனதில் ஏராளமாக வளரலாயின. எண்ணிக்கையில் பெருகின. தீவீரத்தில் ஒன்றையொன்று மிஞ்சலாயின. மனிதில் சித்திரங்கள் வரையத் தொடங்குகிறார். எல்லாம் உள்மனத்தில் மனோசித்திரங்களாகப் பதிவாயின….

 

இப்படி நினைக்கின்ற ஒருவரின் பிற்பகுதியை நீங்களே கற்பனை செய்து கொண்டுவிடலாம்.

 

வேலை போய்விடுமோ என்று காரணமில்லாமல் சஞ்சலப்பட்ட அந்த மனிதரைக் கவலை பறித்துத் தின்றது. இரவில் தூங்கமுடியவில்லை. அமைதி பெறும் பொருட்டு குடிக்கலானார். வேலை நேரத்தில் எரிச்சல்படுவார். ஒத்துழைக்கமாட்டார். அவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லை. வெறுக்கலானார்கள். வேலை செய்யும் போது பிழைகள் நடைபெறலாயின. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. உணவை ஜீரணம் செய்வது பிரச்சனையாயிற்று. இருதயத்தைச் சுற்றி அடிக்கடி வலி ஏற்பட்டது. மாரடைப்பின் ஆரம்பமாக இருக்குமோ என்னவோ! வீட்டில் தங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது என்றார்கள். அவர் கலக்கமடைந்தார். வேலையைச் சமாளிக்க முடியாமல் திணறினார். துரதிர்ஷ்டம்! விதி! அவற்றோடு சண்டைபோட முடியுமா? தோற்றுப் போனார்.

 

ஏன்? பயம்!  தேவை இல்லாத, காரணமே அற்ற அச்சம்.

வேறு எதைக் காட்டிலும் அச்சம் காரணமாகத் தான் அதிகத் தொல்லைகளும், துக்கமும் உண்டாகின்றன. அதிக மக்களுடைய வாழ்க்கை பாழாகிறது.

அச்சம் தவிர்ப்போம்.!!!

 

__._,_.___

With Regards,

 

Velmurugan.S

Condition Monitoring Technician

Reliability Dept

GSM: 00 968 98920377

Off   : 00 968 23218933

E-Mail: muru...@salalahmethanol.co.om

cid:image001.jpg@01C9CE36.C26A44F0 mvs.vel...@gmail.com

 velmuru...@hotmail.com

 Salalah Methanol Company, L.L.C. (SFZ)

 Mailing Address:  P.O. Box 316, P.C. 217, Al Awqadain, Salalah, Sultanate of Oman

 Location Address:    Salalah Free Zone Area, Raysut, Salalah, Sultanate of Oman

P Please consider the environment before printing this e-mail.

 

 



This email, including any attachments, is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient you are not allowed to use, copy, disseminate, disclose or use any part of it. If you have received this email in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Internet communications cannot be guaranteed to be timely secure, error or virus-free.Salalah Methanol Company LLC. (SFZ). accepts no responsibility or liability for any harm to the recipient’s, or any party's, system or data caused by this e-mail or its attachments or any viruses or similar contained in it.

Reply all
Reply to author
Forward
0 new messages