அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு..,
باب النهي عن قول هلك الناس
மக்கள் நாசமாகிவிட்டனர் ‘ என்று கூறுவது தடை செய்யப்பட்டதாகும் :
2623 حدثنا عبد الله بن مسلمة بن قعنب حدثنا حماد بن
سلمة عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ح وحدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الرجل هلك الناس فهو أهلكهم
[ صحيح مسلم ]
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
‘ மக்கள் நாசமாகிவிட்டனர் ‘ என்று ஒருவர் கூறினால் , அவர்களைவிட அவரே மிகவும் நாசமடைந்தவர் ஆவார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5117
-------------------------------------------------------------
விளக்கம் :
மக்களெல்லாம் மார்க்கத்தை மறந்து , பாவங்களில் மூழ்சி நாசமடைந்துவிட்டனரே என்று உண்மையான அக்கறையோடும் கவலையோடும் ஒருவர் கூறினால். அது சமூகத்தின் மீது அவருக்குள்ள பற்றைக் காட்டும் , ஆனால் தாம் மட்டுமே
நல்லவர் ; வணக்கசாலி ; மார்க்கத்தின் படி நடப்பவர் என்று கருதி மற்றவர்களெல்லாரும் மோசமானவர்கள் ; இறையச்சம் இல்லாமல் நாசமாகிவிட்டார்கள் என்று கேவலமாக ஒருவர் கருதினால், அவர்களைவிட அவரே நாசமானவர் ஆவார்,
ஏனெனில் நல்லவர் யார் ; கெட்டவர் யார் என்பது ஒரு ரகசியம் , அந்த ரகசியம் அல்லாஹ்வுக்கு
மட்டுமே தெரிந்த ஒன்று. அப்படியிருக்க தம்மை மட்டும் தூய்மைப்படுத்தி மற்றவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் பேச யாருக்கும் உரிமை கிடையாது.
நூல் : அல்மின்ஹாஜ்