Fwd: முஃபர்ரிதூன்கள் என்றால் யார் தெரியுமா ???

182 views
Skip to first unread message

Sathag Vajeer

unread,
Jul 22, 2013, 4:30:24 AM7/22/13
to

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

இறைவனை அதிக அதிகம் நினைப்போம் !!! முஃபர்ரிதூன்கள் என்றால் யார் தெரியுமா
??? இந்த நபிமொழிகளை படித்து பாருங்கள் ...

“முஃபர்ரிதூன்கள் வெற்றி பெற்றனர் “ என நபி ( ஸல் ) கூறினார்கள்.” இறைத்தூதர்
அவர்களே ! முஃபர்ரி தூன்கள் யார் ? “ என்று நபித்தோழர்கள் கேட்டனர். “ அதிகமாக
அல்லாஹ்வை நினைவு கூரும் ஆண்களும் , பெண்களும் ஆவர் “ என்று நபி( ஸல் )
கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2676

-----------------------------

அரபி :

أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ "" - ص 428 - شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ فَأَخْبِرْنِي بِشَيْءٍ
أَتَشَبَّثُ بِهِ قَالَ لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ

“ இறைத்தூதர் அவர்களே ! இஸ்லாமியக் கடமைகள் என் மீது அதிகம் உள்ளன.
ஆகவே தொடர்ந்து உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளக்கூடிய ஒன்றை எனக்குக்
கற்றுத் தாருங்கள் “ என ஒருவர் கேட்டார் . “ அல்லாஹ்வை நினைவுகூர்வதில் (
திக்ரு செய்வதில் ) உமது நாக்கு தொடர்ந்து திளைத்து இருக்கட்டும் “ என்று நபி (
ஸல் ) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ரு ( ரழி)
நூல் : ஜாமி உத் திர்மிதீ 3375

------------------------------

“ என் அடியான் என்னை நினைவு கூரும் இடத்தில் நான் உள்ளேன் . என்னை அவன்
நினைவு கூர்ந்தால் , நானும் அவனுடன் உள்ளேன் . அவன் தன் மனதிற்குள் என்னை
நினைவு கூர்ந்தால் , என் மனதிற்குள் நான் அவனை நினைவுகூர்வேன். ஒரு
கூட்டத்தில் என்னை அவன் நினைவுகூர்ந்தால் அவர்களையும் விடச் சிறந்த ஒரு
கூட்டத்தில் ( வானார்களின் கூட்டத்தில் ) அவனை நினைவு கூர்வேன் என்று
அல்லாஹ் கூறினான் “ என நபி ( ஸல் ) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி )

நூல்கள் :

ஸஹீஹுல் புகாரி 7405

ஸஹீஹ் முஸ்லிம் 2675


Jazakallah Khayran (May Allâh reward you [in] goodness.")...Mr.Fasil (For the
source)

--------------------------

--
இப்ராஹீம் நபியின் பத்துக் கட்டளைகள்..
=================================
1. வீண் பேச்சு பேசாதீர்கள். 2. நீதி, நேர்மையோடு வாழுங்கள். 3. ஏழைகளை உயர்வாக மதியுங்கள்.
4. நேர் வழியில் உணவை தேடுங்கள். 5. பாவங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். 6. பிறர் மனம் புண்படும் படி நடக்காதீர்கள்… 7. உறவினர்களை அரவணைத்துக்கொள்ளுங்கள்… 8. உங்களால் பிறருக்கு தொல்லை ஏற்பட்டிருப்பின் மன்னிப்பு கேளுங்கள்… 9. அநியாயம் செய்தோருக்கும் அருள் புரியுங்கள். தீமை செய்தோரை மன்னியுங்கள்… 10.உங்களின் பொன்னான நேரங்களை இறைவனை வணங்குவதிலும், இறையச்சத்துடன் பொருளீட்டுவதிலும், தமது மனைவி, மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்…


Reply all
Reply to author
Forward
0 new messages