நற்செயல்களில் சிறந்தது:-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து.
வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர
வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம்
உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)' என்று
ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச்
சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்.
அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை
நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும்,
அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட
அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புகாரி ஹதீஸ்: 6403
சிந்தனைக்கு சில:-
1.ஒரு அடிமைகளை வைத்திருப்பது என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்பு Ferrari,Jaguar & Mercedes-
Benz போன்ற விலை அதிகமான வண்டிகளை வைத்திருப்பது போன்றது, அப்படியே வைத்திருந்தாலும்
தானம் கொடுப்போமா? பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மையென்ரால் சாதாரண விசயமா?
2. நாம் தவறே செய்யவில்லையா? 100% உத்தரவாதம் சொல்ல இயலுமா? வேண்டுமென்றால் தவறு
செய்வதை குறைத்து கொண்டோம் என்று சொல்லலாம். நூறு தவறுகள் அழிக்கப்படும் என்பது
சாதாரண விசயமா? மஹஸர் மைதானம் சூழ்நிலையை நினைத்து பாருங்கள்...உண்மை புரியும்...
3. ஷைத்தானிலிருந்து பாதுகாப்பு என்பது சாதாரண விசயமா? தொழுகையில் நம் நிலைப்பாட்டை
நினைத்து பாருங்கள்..."அய்யோ கைசேதமே" என்று கதறக்கூடிய சூழ்நிலையை நினைத்து பாருகள்...
4. இந்த மெயில் வாசிக்கும் நிமிடம் நமது கடைசி நிமிடமாக இருந்தால்? இருக்காது என்று உத்தரவாதம்
சொல்ல இயலுமா? மரணித்த நமது உற்றார் உறவினர்கள் இனிமேல், மேல் உள்ள ஹதீஸ் படி கூற
இயலுமா? கற்பணை செய்ய இயலுமா? சிந்தித்து பாருங்கள்...
மேல் உள்ள ஹதீஸ் படி கூற சக்தி படைத்த நன் மக்களாக அல்லாஹ்! சுபானஹுதாள! நம்
அனைவரையும் ஆக்குவானாக...என்று "துவா" செய்தவனாக உங்கள் சகோதரன் ..
--