டாக்டர் அப்துல் கலாம் விருது பெற்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

1 view
Skip to first unread message

Khaleel Baaqavee / கலீல் பாகவீ

unread,
Jul 14, 2019, 1:54:30 PM7/14/19
to Kuwait Committe

டாக்டர் அப்துல் கலாம் விருது பெற்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

குவைத் நாட்டில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக குவைத் வாழ் தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் மக்களுக்கு கல்வி, சமயம், சமூகம், வேலை வாய்ப்பு, பொது நலன், ஆரோக்கியம், தேசியம், ஒருமைப்பாடு, விளையாட்டு போன்ற தளங்களில் பல்வேறு சேவைகளை சிறப்பாக செய்துக் கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்திற்கு மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை, "டாக்டர் அப்துல் கலாம் விருது" அளித்து சிறப்பு சேர்த்தது.

மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை தனது மூன்றாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு தமிழர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் முகமறியா தன்னார்வளர்களை சிறப்பிக்கும் வகையில் சமூக சேவகர்களை வாழ்த்தி பெருமைபடுத்தி பல்வேறு விருதுகளை வழங்கியது.

டாக்டர் அப்துல் கலாம் விருதை குவைத் மதுரை உதவும் உறவுகள் அறக்கட்டளை நிறுவனர் அட்வகேட் அ. ஜமாலூதீன் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் வழங்க குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது அப்பாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விருதை வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும், இதை பெறுவதற்கு காரணமாக திகழும் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், களப்பணியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்.

https://www.facebook.com/q8tic/posts/2881511535255996

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
+965 9787 2482
www.k-tic.com


--
--------------------------------------
கருத்து முரண்பாடுகளை களைவோம்! களமிறங்கி செயலாற்ற ஒன்றிணைவோம்!!
சமூகப் பிணிகளை நீக்குவதே நம் சமூகப் பணிகளாக இருக்கட்டும்!!!

குவைத்திலிருந்து...
ங்கிப்பேட்டை கலீல் பாகவீ

அலைபேசி  / வைபர் /  டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ  : (+965) 9787 2482
வாட்ஸ்அப் : +965 6664 1434
முகநூல் (Facebook): 
http://www.facebook.com/khaleelbaaqavee
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic 

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live

ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12
K-Tic Kalam Award 2019 1.jpg
K-Tic Kalam Award 2019 2.jpg
K-Tic Kalam Award 2019.jpg
K-Tic Kalam Award 2019 4.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages