
இலங்கையிலிருந்து வெளிவரும் 'உண்மை உதயம்" இதழின் ஆசிரியரும், தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவருமான மவ்லவி எஸ்.எச்.எம். இஸ்மாயில் சலபி அவர்கள் மக்கள் உரிமைக்காக எழுதும் புதிய ஆய்வுத் தொடர் இஸ்லாத்தின் பார்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.
ஐ.எஸ்.எஸ் எனும் அமைப்பு தொடர்பாக பலத்த சர்ச்சை நிலவி வருகின்றது. இவர்கள் யார்? இவர்கள் யாரால் உருவாக்கப்பட்டார்கள்? இஸ்லாத்தின் எதிரிகளால் அவர்களது அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பா? இவர்களது பின்னணி என்ன? அமெரிக்காவா? இஸ்ரேலா? ஈரானா?.... விடை காணப்படாத இவ்வாறான வினாக்கள் பல உள்ளன.
இந்தக் கேள்விகளுக்கும் அப்பால் ஐ.எஸ்.எஸ் என்பது இஸ்லாமிய நோக்கில், இஸ்லாமிய அடிப்படையில் செயற்படும் ஒரு அமைப்பா? இஸ்லாமிய கிலாபத்தா? அல்லது வழிகெட்ட தீவிரவாத கவாரிஜ் அமைப்பா?.. என்பது குறித்து இந்தத் தொடரில் அலசப்படுகிறது.