TMMK-KSA again on web with New Face

23 views
Skip to first unread message

Media Ksa

unread,
Jun 23, 2015, 3:58:30 AM6/23/15
to
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்!!

TMMK-KSA என்றப் பெயரில் இதுவரை தமுமுக மற்றும் மமகவின் சவூதி சார்ந்த அமைப்புச் செய்திகளை மட்டும் வழங்கி வந்த இந்த இணையதளம் சிறிய தளக் கட்டுமான இடைவேளைக்குப் பிறகு அல்லாஹ்வின் பேரருளால் புதிய பரிமாணத்தில் புதுப்பொலிவுடன் மத்தியக் கிழக்கு-வளைகுடா உள்ளடக்கிய செய்திகளையும் தாங்கி வரும் தமுமுக மற்றும் மமகவின் அதிகாரப்பூர்வ இணையதளமாக இன் ஷா அல்லாஹ் செயல்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தமிழகம் மற்றும் பிற மாநிலச் செய்திகளும், மாவட்ட ரீதியான செய்திகளும், சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் இடம் பெரும். நமது தலைமைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான TMMK.IN க்கு துணையாக இந்த இணையதளம் செயல்படுகின்ற காரணத்தினால் கழக உறுப்பினர்கள், வாசகர்கள் அனைவரும் தங்கள் பகுதி செய்திகளை படங்களுடன் உடனுக்குடன் tmmk...@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




--
______________________________________________________________________________________________

அவசியம் பாருங்கள்:
www.tmmk.in
www.tmmk-ksa.com
______________________________________________________________________________________________

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - வரலாறு

வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!

ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன.

தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம், சமுதாய முன்னேற்றத்திற்கான அரசியல் முடிவுகள் இவைதான் தமுமுகவின் வெற்றிக்கான தாரக மந்திரங்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.


Reply all
Reply to author
Forward
0 new messages