தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்களின் மூலம் ரியாத்திலிருந்து ஹஜ் செல்பவர்களின் கவனத்திற்கு!
***************************
இந்த ஆண்டு ரியாத்திலிருந்து தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்களின் மூலம் புனித ஹஜ் மேற்கொள்ளவிருக்கும் சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு.
உள்நாட்டிலிருந்து (சவூதிஅரேபியாவிலிருந்து) ஹஜ் செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முகமாக சவூதி அரசு பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்தி உள்ளதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
வெளிநாட்டிலிருந்து வரும் ஹாஜிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும் ஹரம்ஷெரிஃபின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு உள்நாட்டிலிருப்பவர்கள் தயவு செய்து கூட்ட நெரிசலை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று உள்நாட்டு மக்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
மேலும் உள்நாட்டிலிருந்து ஹஜ் செய்யச் செல்வோர் முறையாக ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான அங்கீகாரம் மற்றும் தஸரீக் பெற்றுக் கொண்டு செல்வேண்டும் என்றும் அதை மீறுவோர் மீது கிரிமினல் குற்றம் பதிவு செய்து அபராதம் மற்றும் தண்டனையுடன் நாடு கடத்தப்படுவார்கள் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், ஏற்பாட்டாளர்கள், அழைத்துச் செல்பவர், ஓட்டுனர் என்று அனைவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரியாத் நகர் முழுதும் ஹஜ் அமைச்சகத்தின் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை நகர்வலம் வரும் சகோதரர்கள் அறிவார்கள்.
நாம் அறிந்தவரை தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் முதல் 7000 ரியால்கள் வரை வசூலிப்பதாக கேள்விப்படுகிறோம். இவ்வாறு வசூலிக்கும் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் முறையாக அரசின் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதையும் நாம் கண்டறிந்துள்ளோம்.
ஹஜ் எனும் புனித பயணத்தை வியாபாரமாக்கி கோடிக்கணக்கில் கல்லாக்கட்ட சில கொள்ளைக் கும்பல் டெக்னிக்காக திட்டமிட்டுள்ளன.
ஆன்லைனில் பதிவு செய்து அங்கீகார ரசீது பெற்றவர்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் செல்ல முடியும். ஏற்பாட்டாளர்களின் பேச்சை நம்பி யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
ரியாத்திலிருந்து ஹஜ் செல்பவர்கள் தங்களின் பஸ்களில் கால் வைக்கும் முன் தஸரீகை உங்கள் கைகளில் பெற்றுக் கொண்டு பஸ்சில் கால் வையுங்கள். மீறினால் நீங்கள் வழியில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் என்பதை எச்சரிக்கின்றோம்.
போலி ஏற்பாட்டாளர்களின் திட்டம், உங்களை பஸ்சில் ஏற்றி தாயிப் நகரில் இஃக்ராம் கட்டவைத்து அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விடுவது தான் அவர்களின் திட்டம். இஃக்ராம் கட்டிய பின் இஃக்ராம் சட்டத்திற்குள் ஹாஜிகள் வந்து விடுவதால் அவர்கள் கோபம் கொளள்வோ சண்டை போடவோ திட்டவோ கூடாது என்பதை தெரிந்து இந்தக் கொள்ளைக் கூட்டம் தைரியமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.
உங்களை பாதி வழியில் இறக்கி விடும் அவர்கள், நாங்கள் ஒரு சவூதியை நம்பி ஏமாந்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று நீலிக்கண்ணீர் வடிப்பது அவர்களின் திட்டத்தில் ஒன்று...
தயவு செய்து சகோதர சகோதரிகள் யாரும் ஏமாந்து விடவேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.
புனித ஹஜ்ஜுக்குச் செல்லும் நீங்கள் அவமானப் பட்டு நாடு கடத்தப் படுவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள் என்று நம்புகிறோம். சவூதி அரசின் அறிவிப்புக்கு ஓத்துழைப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
பிரார்ததனைகளுடன்
எம். ஹூஸைன்கனி
மண்டல தமுமுக, ரியாத்.
--
Hussain Ghani
President
Tamilnadu Muslim Munnetra Kazhagam,
Central Region,
Riyadh - Saudi Arabia.
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! அல் குர்ஆன் 3:08.
------~~~----------~~~----------~~~--------------~~~----------------~~~----------~~~--------------