அல்லாஹ்வின் திருப்பெயரால்..
இதே வேகத்திலும், வெறியிலும் அவர்கள் இராமர் கோயில் கட்டுவதற்கான பிரதான வாசலை எழுப்புதவற்கு அடிக்கல்லும் நாட்டி விட்டார்கள். இந்த அடிக்கல் நாட்டுப் பணி 22, அக்டோபர் 1991 ல் நடைபெற்றது. நரசிம்ம ராவ் அரசு இத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி வாய் பொத்தி நின்றது. இத்தனையையும் முடிந்த பின்னர் தான் நீதி மன்றம் தனது ஆணையை அக்டோபர் 25 ல் பிறப்பித்தது.
நீதிமன்ற ஆணைக்குப் பின்னரும் அங்கு கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. 1991 அக்டோபர் 30 ல் கொடியேற்றினார்கள். இந்நாளில் விஹெச்பி தொண்டர்கள் பள்ளிவாசல் முன் கூடி 1990 ல் அங்கு வந்த கரசேவைக்காரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தினார்கள். இதில், இந்து வெறி தலைவர்கள் குழமி இருந்தோரைத் தூண்டி விடும் அளவில் வன்முறைப் பேச்சுக்களைக் கட்டவிழ்த்து விட்டனர்.
ஆத்திரம் கொண்ட கூட்டத்தினர், பள்ளிவாசலின் மேல் ஏறி காவிக் கொடியைக் கட்டினர். கல்யாண்சிங் அரசு அவர்களுக்கு ஊக்கம் தந்தது. நரசிம்ம ராவ் அரசு அமைதி காத்தது.
1992 பிப்ரவரி
8 ம் நாள், உத்திரப்பிரதேச அரசு தான் கையகப்படுத்திய இடத்தைச் சுற்றித் தடுப்புச் சுவர் எழுப்பும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.
1992 மார்ச்
கல்யாண்சிங்கின் பாஜக அரசு, பாபரி பள்ளிவாசலைச் சுற்றி இன்னும் 42 ஏக்கர் நிலத்தை இராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குக் குத்தகைக்கு விட்டது. இந்த இடம் இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட பயன்படுத்தப்படும் எனவும் அறிவித்தது அரசு.
1992 மார்ச் 22
இதில் உற்சாகம் பெற்ற விஹெச்பி, பஜ்ரங்தள் தொண்டர்கள் இன்னுமிருந்த சிறு, சிறு கோயில்களை இடித்து இராமர் கதை சொல்லும் பூங்கா அமைத்திட வகை செய்தனர்.
இந்தச் சாக்கில் சுற்றி இருந்த வீடுகளையும், கடைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசை மிரட்டி சில அறிக்கையை வெளியிட்ட வாளாவிருந்தது.
1992 ஏப்ரல்
7 ம் நாள் நாடாளுமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய ஒருமைப்பாட்டுக் குழவின் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட 35 உறுப்பினர்கள் அயோத்தியாவில் பாபரி பள்ளிவாசல் வளாகத்திற்குள் என்ன தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பதைப் பார்வையிடச் சென்றனர். இந்தப் பார்வைக் குழுவுக்கு ஜனதா தளத் தலைவர் எஸ்.ஆர். பொம்மை அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இந்தக் குழு அயோத்தியாவிலும் பாபரி பள்ளிவாயில் வளாகத்திற்குள்ளும் நீதி மன்ற ஆணைகளும், நீதிமன்ற நெறிகளும் தொடர்ந்து மீறப்பட்டிருக்கின்றன என்ற அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கரசேவை ஜுலை 1992
9 ம் நாள் 2.774 ஏக்கர் நிலத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஆணைகள் புறக்கணிக்கப்பட்டு, கரசேவைகள் நடைபெற்றன. நீதிமன்ற ஆணைப் புறக்கணிப்புக்கு நடவடிக்கை ஏதமில்லை. 15 ம் நாள் விஹெச்பி க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஓர் ஆணையிட்டது. அந்த ஆணை, பாபரி பள்ளிவாசல் வளாகத்திற்குள் நடக்கும் அத்தனை கட்டுமானப் பணிகளையும் உடனேயே நிறுத்திட வேண்டும் என்பதே! நீதிமன்ற ஆணை புறக்கணிக்கப்பட்டது. நடவடிக்கை ஏதமில்லை. ஜுலை 22, 1992 அன்று உச்ச நீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பித்து, கட்டுமானப் பணிகளை நிறுத்திட வேண்டும் எனப் பணித்தது. 23 ஜுலை, 1992 ல் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்தில், இனி அதன் ஆணைகளை நிபந்தனைகளின்றி அடிபணிந்திட சித்தமாய் இருப்பதாக அறிவித்தார்.
பிரதமர் நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களுக்குத் தந்த உறுதிமொழி
ஜுலை 22, 1992 அன்று நரசிம்ம ராவ் அவர்கள் சாதுக்களை - சாமியார்களை அழைத்துப் பேசினார். நீதிமன்ற ஆணைகளைச் செயல்படுத்த மனமில்லாத அவர், சாதுக்களை அழைத்துச் சமாதானம் பேசினார். அந்தச் சாதுக்களிடம் கரசேவையை நிறுத்திட வேண்டும் என்று முறையிட்டார். நான்கே மாதங்களில் தான் மொத்தப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு பிடித்து விடுவேன் என்றும் வாக்களித்தார். கரசேவையை நிறுத்திட வேண்டும் என முறையிட்ட அவர், கரசேவை செய்பவர்களின் மீது எந்தப் பலப் பிரயோகமும் செய்யப்பட மாட்டாது என்றும் ஒரு தேவையற்ற யாரும் கேட்காத வாக்குறுதியைத் தந்தார்.
இந்தக் கடைசி வாக்குறதியின் பொருள் நீங்கள் கரசேவையைத் தொடர்ந்து நடத்தலாம் என்பதே! அத்தோடு சாதுக்கள் கரசேவையாளர்களை பக்கத்தில் கிருஷ்ணனுடைய கோயிலைக் கட்டுவதற்காக அனுப்பினார்கள்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் பொய் சொன்னாரா?
சாதுக்களை சந்தித்து ஒரு வாரத்திற்குப் பின், பிரதமர் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலைச் சொன்னார். தான் சாதுக்களைச் சந்தித்துப் பேசி விட்டதாகவும், பல்வேறு நீதிமன்றங்களிலும் கிடப்பிலிருக்கும், பாபரி பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும், உச்சநீதிமன்றத்திடம் இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டிடப் போவதாகவும் அறிவித்தார்.
அத்தோடு பாபரி பள்ளிவாசலைக் கட்டுவதற்கு முன் அங்கிருந்த கோயில் ஏதேனும் இடிக்கப்பட்டதா? என்றொரு வினாவை உச்சநீதிமன்றத்திடம வைத்து விடை கேட்கப் போவதாகவும் அறிவித்தார்.
பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கோயில் இருந்தது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் இந்து வகுப்புவாதிகள் சொல்வதைக் கேட்டாக வேண்டும். இந்த அறிவிப்பைச் செய்த மறுநாள் சாதுக்கள் மிரண்டார்கள். பிரதமரை மிரட்டினார்கள். பிரதமர் தங்களிடம் (சாதுக்களிடம்) பேசிடும் போது நீதிமன்ற விவகாரங்கள் எதையும் பேசவில்லை ஆகவே பிரதமர் பொய் சொல்லுகின்றார். எனவே நாங்கள் பிரதமரிடம் ஒப்புக் கொண்டவற்றிலிருந்து பின்வாங்குகின்றோம் என்றும் அறிவித்தனர்.
ஆனால் பாபரி பள்ளிவாசல் செயல்பாட்டுக் குழு (யுஐடீஆயுஊ : யுடட ஐனெயை டீயடிசi ஆயளதனை யுஉவழைn ஊழஅஅவைவநந) நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.
ஆனால் இந்துத் தீவிரவாதிகள் மத நம்பிக்கை என்பது நீதிமன்ற முடிவுகளுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த விவகாரத்;தில் நீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்வதற்கில்லை என்று அறிவித்தார்கள்.
1992 அக்டோபர் 30,31 நாட்களில் .. ..
விஹெச்பி யின் சாதுக்களின் அவை டெல்லியில் கூடி பின்வருமாறு அறிவித்தது:
நீதிமன்ற ஆணைகளைப் பற்றிக் கவலைப் படாமல் டிசம்பர் 6, 1992 முதல் கரசேவை துவங்கும். அது கர்ப்பக் கிரகத்திலிருந்து – அதாவது பாபரி பள்ளிவாசலின் மத்திய (டூம்) பகுதியிலிரந்து ஆரம்பிக்கும். அந்தக் கரசேவை கோயில் கட்டி முடிக்கப்படும் வரை தொடரும்.. ..
1992 நவம்பர் உச்ச நீதிமன்ற உத்தரவு
இந்நாளில் உச்ச நீதிமன்றம், உத்திரப்பிரதேச அரசுக்கு 2.774 ஏக்கரில் எந்தக் கட்டுமானப்பணிகளும் நடக்கக் கூடாது, என்றும் ஆணையிட்டது. அத்தோடு கட்டுமானப் பணிகளை அரசு எப்படித் தடுக்கப் போகின்றது என்பதை எழுத்து மூலம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திட வேண்டும் என்றம் கூறியது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்த இந்த ஆணையின் கீழ், உத்திரப்பிரதேச பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ஓர் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், டிசம்பர் 6, 1992 அன்று நடக்கவிருக்கும் கரசேவை சமிக்ஞை அளவில் தான் நடைபெறும். அத்துடன் கீர்த்தனைகள் பாடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால் பிஜேபி தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஸி அவர்களும், கரசேவைக்காரர்கள் பஜனைகளையும் கீர்த்தனைகளையும் பாட வரவில்ல. அவர்கள் முழு அளவில் கோயில் கட்டவே வருகின்றார்கள் என அறிவித்தார்கள்.
ஆனால் பள்ளிவாயிலை இடிப்பதற்குத் தேவையானவற்றையெல்லாம் சங்க் பரிவாரம் முழு அளவில் ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. இதனை அறிந்தும் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.
டிசம்பர் 6, 1992 ஞாயிறு அன்று சுமார் 11 மணி அளவில் ஆரம்பித்து மாலை 6 மணி அளவில் பாபரி பள்ளிவாசல் முழமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை பாஜக தலைவர்கள் நேரில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். குடியரசுத் தலைவருக்கும் பிரதமர் அவர்களுக்கும் தவறாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன. இடித்து முடித்த பின்னர் அந்த இடத்தில் ராமர் - சீதை (குழந்தைகள்) சிலையை வைத்தார்கள்.
1992 டிசம்பர் 8 ம் நாள் மத்திய அரசின் செலவின் கீழ் கரசேவைக்காரர்கள் இலவசமாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரசேவைக்காரர்களை இலவசமாக இல்லாங்கொண்டு சேர்த்திட ரெயில்வே துறைக்கு மட்டுமே 300 கோடி செலவு என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்தது.
எதிரொலி
1992, டிசம்பர் 6 அன்று மாலை உத்திரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். எல்.கே.அத்வானி அன்று வரை தான் வகித்து வந்த நாடாளுமன்ற எதிர்க்கட்சிப் பதவியை இராஜினாமா செய்தார்.
உத்திரப்பிரதேச சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கே அமல்படுத்தப்பட்டது. பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயிலுக்கு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டன. இதற்கிடையே அயோத்தியிலிருந்த முஸ்லிம்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நாடு முழவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிக்காட்ட அறப் போராட்டங்களை நடத்தினர். பல்லாயிரம் முஸ்லிம்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாக்கப்பட்டனர். இன்னும் பல ஆயிரம் முஸ்லிம்கள் தடா வின் கீழ் கைது செய்யப்பட்டு நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். (நன்றி : விடியல் வெள்ளி டிசம்பர் 1998)
(இன்ஷா அல்லாஹ் .. .. இந்தப் பக்கத்தில் இனி வரும் காலங்களில் பாபரி மஸ்ஜித் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இணைக்க இருக்கின்றோம். இது பற்றி தகவல்கள் தர விரும்புவோர் எமது ஈமெயில் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். உங்களது தகவல்களை அனுப்பி இந்தத் தளம் இன்னும் வலிமையானதாக உருவெடுக்க நீங்கள் துணையும் நிற்கலாம்).
இது ஒரு வரலாற்று ஆவணம்?
பாபர் மசூதி இடிப்பு விவகாரம் மற்றும் மார்ச் 15 ல் பூமி பூஜை தொடர்பாக நடந்த நிகழ்வுகள்
24 பிப்ரவரி 2002
காவிக் கொடிகளை ஏந்நியபடி குஜராத் மாநிலம் ஆமதாபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் ராமர் கோயில் கட்டுவதற்காக கூடினர்.
அயோத்தி விவகாரத்தில் திமுக, அதிமுக மௌனம் வேதனை அளிக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை
உபி - யில் எந்தக் கட்சி வென்றாலும் ராமர் கோயில் கட்டும் திட்டத்தில் மாற்றமில்லை. பஜ்ரங் தளம் அறிவிப்பு
2 மார்ச் 2002
குஜராத் கலவரம் ஆரம்பம். அயோத்தி சென்று விட்டு வந்த கரசேவகர்கள் ரயிலில் எரிப்பு
6 மார்ச் 2002
கரசேவகர்களின் கொலைத் தாக்குதலுக்குப் பயந்து அயோத்தி முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து, வெளிஊர்களுக்குச் செல்கின்றனர்.
அயோத்தி பிரச்னையில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையீடு. புதிய யோசனை.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் எவ்விதப் பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ராம ஜன்ம பூமி அறக்கட்டளையையும், விஎச்பி இயக்கத்தையும் கேட்டுக் கொண்டேன். அரசு கையகப்டுத்தியுள்ள சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு ஹிந்து அமைப்புகளிடம் அளித்தால், சர்ச்சை;ககுரிய பகுதியில் எந்தப் பணியையும் மேற் கொள்ள மாட்டோம் என்று விஎச்பி ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புகளும் உறுதியளித்துள்ளன.
சர்ச்சைக்கிடமில்லாத பகுதியை விட்டுக் கொடுத்து விட்டால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என முஸ்லிம் தலைவர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால், அப்பகுதி ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்குரியது. சர்ச்சைக்குரியது. சர்ச்சைக்குரிய பகுதியில் தற்போதைய நிலை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினோம். அதில் அவர்களுக்குத் திருப்தி ஏற்பட்டதாகத் தெரிகிறது. முஸ்லிம் சட்ட வாரியத்தின் பொதுச் செயலாளர் சையத் நிஜாமுதீன் தலைமையிலான 11 பேர் கொண்ட தூதுக்குழுவுடன் ஜயேந்திரரைச் செவ்வாய்க் கிழமை சந்தித்தனர்.
தடையை மீறி அயோத்தியில் கரசேவகர்கள் ஊர்வலம்.
இந்த ஊர்வலம் கரசேவக புரம் வரை ஒரு கிமீ தொலைவுக்கு நடைபெற்றது. அவர்களைத் தடுக்க போலிஸார் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. கரசேவகர்களின் ஊhவலத்தை அமைதி ஊர்வலம் என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சட்டத்தை அவர்கள் யாரும் மீறவில்லை என்றும் அவர் சொன்னார்.
7 மார்ச் 2002
அயோத்தி வழக்கை விரைவில் தீர்க்க மனு. உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல்.
நிலத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள அரசுக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை. அதனால் அது தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரிக்கப்படக் கூடியதல்ல என்று, சன்னி வக்ஃப் போர்டு சார்பாக ஸபர்யாப் ஜீலானி கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார்.
அயோத்தி பிரச்னையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிப்போம் என்று உறுதி மொழி அளிக்கப்படவில்லை. இப்பொழுதுள்ள நிலை நீடிக்கப்படும் என்று தான் ராமஜன்ம பூமி அறக்கட்டளை உறுதியளித்தது. பிரச்னைக்குரிய இடத்தில் பாபரி மசூதி கட்ட அனுமதிக்க மாட்டோம். அந்த இடம் ராமர் கோயில் இருந்த இடமாகும். முஸ்லிம்களுக்குச் சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் விஸ்வ இந்து பரிஷத் என்ன செய்யும் என நிருபர்கள் பரிஷத்தின் மூத்த துணைத் தலைவர் ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர் அவர்களிடம் கேட்டதற்கு, வரலாற்றுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு இருக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. பிரச்னைக்குரிய இடத்தில் தடையின்றி பூஐஜ நடத்த அனுமதிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்ற அவர், வாரணாசியில் கோசிபுரா பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடுகாடுகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு முன் தீர்ப்பு கூறியது. அத் தீர்ப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான கருத்து : புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறை, 2000 ரூபாய் அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 3 மாத சிறை. நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட அருந்ததி ராய், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக எழுந்த புகாரின் பேரில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
பாபரி மஸ்ஜித் ற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்த மாட்டோம் என்று எழுத்து மூலம் நீதிமன்றத்துக்கு வாக்குறுதி அளித்த அத்வானி இன்றைக்கு எந்தவித தண்டனையுமின்றி உள்துறை அமைச்சராகப் பதவியில் இருந்து கொண்டிருப்பது, இந்த ஜனநாயகத்தின் நீதித்துறையின் வலிமை?யைக் காட்டுகின்றது.
8 மார்ச் 2002
அயோத்தி பிரச்னையில் நீதிமன்றம் அளிக்கும் எந்தவித தீர்ப்புக்கும் கட்டுப்படுவோம். விஸ்வ இந்து பரிஷத் அறிவிப்பு.
இது குறித்து பிரதமர் வாஜ்பாயிடம் எழுத்து மூலமாக உறுதிமொழி அளித்திருப்பதாகக் கூறியுள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அசோக் சிங்கால் அவசரமாகக் கூட்டப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவை அறிவித்தார். பிரச்னைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கின்றதோ அப்போது அந்த இடம் அவர்களுக்குத் தரப்படும் என்று நான் பிரதமரிடம் உறுதி அளித்துள்ளேன் என்றார் அவர்.
அயோத்திப் பிரச்னையில் முடிவெடுப்பதில் விஎச்பி க்கு எந்தப் பங்கும் இல்லை - ஜயேந்திரர்.
அயோத்திப் பிரச்னையில் இந்து முஸ்லிம்கள் இடையே அமைதி ஏற்பட பாடுபட்டு வருகிறேன். இது முழு வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. விஸ்வ இந்து பரிஷத்தின் எந்த அறிவிப்பையும் நம்ப வேண்டாம். அயோத்திப் பிரச்னை தொடர்பாக முடிவெடுப்பதில் அதன் பங்கு ஏதமில்லை. இதில் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை கூறுவதையே கருத்தில் கொள்ள வேண்டும். அயோத்திப் பிரச்னைக்கு அரச, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, முஸ்லிம்கள் இணைந்து ஜுன் மாதம் 2 ம் தேதிக்குள் தீர்வு கண்டு விடுவார்கள்.
9 மார்ச் 2002
அயோத்தியில் சர்ச்சைக்கிடமில்லாத நிலத்தில் ராமர் கோயில் கட்டும் பணி ஜுனில் தொடக்கம். மார்ச் 15 ல் பூமி பூஜை.
சென்னை திரும்பிய ஜயேந்திரர் அறிவிப்பு. அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தில் இப்போதுள்ள நிலையே தொடரும். இது குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள் முன் வந்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முஹம்மது ஹாஷிம் என்பவர் தாக்கல் செய்த இந்த வழக்கில், அசோக் சிங்கால், ஆச்சார்ய கிரிராஜ் உள்பட விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் மசூதி இருந்த இடத்தைக் கோயிலாக மாற்ற பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அடத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை இதன் மூலம் அவர்கள் மீறி வருகின்றனர். நீதி மன்ற உத்தரவை செயல்படுத்தத் தவறிய அயோத்தி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தரப் பிரதேச முதல்வர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை செயலாளர் கமல்பாண்டே ஆகியோர் மீதி நீதிமன்றத்தை அவமதித்தற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். விசுவ இந்து பரிஷத் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாஜ்பாயியும், உள்துறை அமைச்சர் அத்வானியும் அறிக்கை வெளியிடவில்லை. எனவே அவர்கள் விஎச்பி தலைவர்களுக்கு ஆதரவு தருகின்றனர் என்றும் அம் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
10 மார்ச் 2002
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அரசு செயல்படும் - பிரதமர் வாஜ்பாய் அறிவிப்பு.
அயோத்திக்கு இராணுவத்தை அனுப்பும்படி உ.பி. கவர்னர் வி.கே.சாஸ்திரி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வ கோரிக்கையை விடுத்துள்ளார். இதனைப் பரிசீலிப்பதாக பெர்ணாண்டஸ் அறிவிப்பு.
அயோத்தியில் தடையை நீக்குவதற்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அயோத்திக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்குவதானது கண்டிக்கத்தக்கது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இப்போதுள்ள நிலையை நீடிக்கச் செய்யும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. தடையை நீக்கினால் விசுவ இந்து பரிஷத் மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையினர் கசசேவகர்களை ஒன்று திரட்டுவர். அது மட்டுமல்ல, மார்ச் 15 ம் தேதி தங்கள் திட்டத்தையும் செயல்படுத்தத் தொடங்குவர். இதற்கு இடம் தரலாகாது. அயோத்திக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சுவாமி அங்கு, ராமஜன்ம பூமி அறக்கட்டளைத் தலைவரை சந்தித்துப் பேசியுள்ளதும் கண்டிக்கத்தக்கது என் அகில இந்தி முஸ்லிம் மஜ்லிஷே முஷாவரத் அமைப்பின் தலைவர் ஷஹாபுத்தீன் தெரிவித்துள்ளார்.
11 மார்ச் 2002
அயோத்தியில் பூமி பூஜை நடத்தும் பிரச்னையில், ஜயேந்திரரின் யோசனையை முஸ்லிம் சட்ட வாரியம் நிராகரித்தது.
அயோத்தியல் ராமர் கோயில் கட்டுவதற்கு, சர்ச்சைக்கு இடமில்லாத பகுதியில் மார்ச் 15 ம் தேதி அடையாளமாக பூமி பூஐஜ நடத்த அனுமதிப்பது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறிய யோசனையை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்து விட்டது. அயோத்தியில் அடையாள பூமி பூஐஜ நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசை இந்த வாரியம் கேட்டுக் கொண்டது. அயோத்திப் பிரச்னைக்குத் துண்டு துண்டாகத் தீர்வு காண்பது சாத்தியமற்றது என்று அது சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், காஞ்சி சுவாமிகள் கூறியிருக்கும் யோசனை முழமையானதாக இல்லை. பிரச்னைக்கு முழமையான தீர்வைக் கூறுவதாக அவரது யோசனை இல்லை. பல முறை கேட்ட பின்னரும் கூட, கட்டுமானத் திட்டம் குறித்து விஎச்பி தயாரித்துள்ள கட்டட வரைபட பிரதியோ, மனையின் வண்ண வரைபடப் பிரதியோ எம்மிடம் தரப்படவில்லை. வாஜ்பேயிடம் ராமஜன்ம பூமி நியாஸ் கொடுத்திருக்கும் வாக்குறதியின் பிரதியும் எம்மிடம் தரப்படவில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திடடத்தை உடனடியாத் தொடங்குவதை அந்த யோசனை உறுதி செய்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்குமாறு முஸ்லிம்களைக் கோருகிறது அந்த யோசனை.
கட்டுமானத் திட்ட வரைபடம் இல்லாமல், ராமஜன்ம பூமி அறக்கட்டளை எழுத்துப்பூர்வ உறுதிமொழி கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
ராமர் கோயில் கட்டும் பணியை மேற்கொள்ள அறக்கட்டளைக்கு எவ்வாறு உரிமை கிடைத்தது. ராமஜன்ம பூமி அறக்கட்டளைக்கும், விஎச்பிக்கும், சங்க பரிவாரத்தின் இதர அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை.
1980 ம் ஆண்டிலிருந்து விஎச்பி தான் அந்த இயக்கத்தை நடத்தி வருகின்றது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக விஎச்பி கொடுத்த உறுதி மொழி எதுவும் அந்த யோசனையில் இல்லை. எனவே, தொடர்ந்து இயக்கத்தை நடத்தவும் தொண்டர்களைத் திரட்டவும் விஎச்பி க்க எவ்விதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.
சங்கப் பரிவார அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு வைத்துக் கொண்டு செயல்படுபவை. ஆனால் அத் தொடர்புகளை அவை சாதுர்யமாக மறைத்துக் கொண்டு, சட்டத்தின் பிடியில் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சங்கப் பரிவார அமைப்புகள் அனைத்தும் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் அந்த யோசனையில் இல்லை.
சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக அலஹாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றால், அந்த இடத்தில் மசூதியைக் கட்டிக் கொள்ள எவ்விதத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என்ற உறுதி மொழியோ, உத்தேச ராமர் கோயிலின் கர்ப்பக் கிரகப் பகுதி வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்பது பற்றிய உறுதிமொழியோ காஞ்சி சுவாமிகளின் யோசனையில் அளிக்கப்படவில்லை என்று முஸ்லிம் சட்ட வாரியம் தனது தீர்மானத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
பாபர் மசூதி நடவடிக்கைக் குழு அமைப்பாளர் சையது சஹாபுத்தீன், பாபர் மசூதி ஒருங்கிணைப்புக் குழத் தலைவர் ஜஃபர்யாப் ஜீலானி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா, வாரிய உறுப்பினர்கள் உள்பட சுமார் 70 பேர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திட்டமிட்டபடி 15 ல் பூமி பூஜை நடைபெறும். நாடு முழுவதும் அயோத்தியாக மாறும்.
ராமர் கொயில் கட்டுமான பணியை தொடங்குவதற்கான அடையாள பூஐஜ செய்வதற்கு ஹிந்துக்களுக்கு உள்ள மத உரிமையில் தலையிட இந்த நாட்டில் யாருக்கும் உரிமை கிடையாது என்று பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா கூறினார். காஞ்சி சுவாமிகள் தலையிட்டதை அடுத்து பிரச்சினையில் தாங்கள் சிறிது விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் அப்படி இருப்பினும், முஸ்லிம் நண்பர்கள் உச்ச நீதிமன்றம் சென்று தங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.
ஹிந்துக்களின் ஆதரவை ஒவ்வொரு நாளாக அன்றி, ஒவ்வொரு மணி நேரமும் வாஜ்பாயி அரசு இழந்து வருகின்றது. காஞ்சி சுவாமிகள் சில திட்டங்களை முன் வைத்த போது, அவற்றை ஏற்று அரசுக்கு உதவி செய்தது பரிஷத். ஆனால், பரிஷத்திற்கு அரசு உதவி செய்யவில்லை. அயோத்திக்குச் செல்ல கரசேவகர்களுக்குள்ள தடைகளை அரசு நீக்க வேண்டும். ஹிந்துக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. சர்ச்சை இல்லாத நிலத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்துப் பேச எந்த முஸ்லிம் ஸ்தாபனத்துக்கும் உரிமை இல்லை.
இந்த நிலப்பகுதி தொடர்பாக எந்த வழக்கும் இல்லை. முஸ்லிம் ஸ்தாபனங்கள் இந்த நிலத்தில் தலையிட்டு மக்களின் உணர்வுகளைத் தூண்டி விடப் பார்க்கின்றன. இந்த நிலம் சம்பந்தமாக பேச தகுதி உள்ளவர்கள் அரசு மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளை மட்டுமே. இதில் மூன்றாவது தரப்பு யாரும் இல்லை. (இந்த இடம் சம்பந்தமாக வழக்குதாரர்கள் முஸ்லிம்களும், சங்கபரிவாரங்களும் இருக்க, பிரவீண் தொகாடியாவோ, இந்த வழக்கில் அரசும், ஹிந்துக்களும் தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி முஸ்லிம்களின் உரிமைகளை மறுக்கின்றார்)
வரும் 15 ம் தேதி அயோத்திக்கு நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கரசேவகர்கள் வருவர். ராமர் கோயில் கட்டுவதை குறிக்க நாடு முழவதும் ஆங்காங்கே ஊhவலங்கள் நடக்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு இடமும் அயோத்தியாக மாறும்.
பூமி பூஐஜ அiதியாக நடக்கும் சூழ்நிலையை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். ஹிந்துக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றார் பிரவீண் தொகாடியா.
பாபர் மசூதி இயக்கத் தலைவர் கைது?
அயோத்தியில் சர்ச்சைக்கு உட்படாத பகுதியில் 15 ம் தேதியன்று பூமி பூஐஜ நடத்தப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்தது. இதற்குப் போட்டியாக தில்லியிலிருந்து அயோத்திக்கு அரசியல் சாசனத்தைக் காக்கக் கோரும் ரத யாத்திரையை நடத்த பாபர் மசூதி இயக்கம் திட்டமிட்டிருந்தது. எனவே இதன் தலைவர் முஹம்மது யூனுஸ் சித்தீகி யை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் அவரை காவலில் வைத்துள்ளது. தில்லியில் ஜாஹிர் நகரிலுள்ள இல்லத்தில் சித்தீகி தங்கியிருந்தார். சனிக்கிழமை நள்ளிரவு அவரைப் போலீஸார் அழைத்துச் சென்றனர் என்று பாபர் மசூதி இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மாட்டோம், ஹிந்துக்களின் உணர்வுகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறும் சங்க பரிவாரங்கள் வெளியே சுற்றிக் கொண்டு திரிகின்றார்கள்).
13 மார்ச் 2002
அனைவர் கவனமும் உச்ச நீதிமன்றம் மீது!
அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஜை நடத்துவது என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு எடுத்துள்ள சர்ச்சைக்குரிய முடிவு குறித்து, உச்ச நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கின்றது. நீதிபதிகள் பி.என்.கிர்பால், ஜி.பி.பட்டநாயக், வி.என்.கரே அடங்கிய பெஞ்ச் இவ்விசாரணையை மேற்கொள்கின்றது. உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைக்காமல் பூமி பூஐஜ நடத்தவோ, பிற விஷயங்களுக்கோ அரசு அனுமதி தராவது என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்.
பூமி பூஐஜ நடத்தக் கூடாது என்று விஎச்பி க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதை;திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் தனது மனுவில் கோரியிருக்கின்றது. அஸ்லம் பூரே என்பவரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மநு தாக்கல் செய்திருக்கிறார் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் பூமி பூஐஜ நடத்துவது, 1994 ல் உச்ச நீதிமன்றம அளித்த தீர்ப்பை மறுவதாக அமையும் என்று இரு தரப்பாரின் மனுக்களும் சுட்டிக் காட்டுகின்றன. (இருப்பவை இருக்கும் விதத்திலேயே இருக்கட்டும். இறுதித் தீர்ப்பு வரும் வரை யாரும், எதையும் மாற்றக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் அத் தீர்ப்பில் கூறியிருந்தது).
அயோத்தியில் ராணுவத்தை நிறுத்த வேண்டும், அயோத்தி நகரில் உள்ள கரசேவகர்புரத்திலும் ராஜஸ்தானின் பின்ட்வாராவிலும் ராமர் கோயிலுக்காகத் தயார் நிலையில் வைத்திருக்கும் தூண்களையும், கட்டுமானங்களையும் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்ய வேண்டும். கரசேவகர்புரத்திலும் பின்ட்வாராவிலும் ஆலய கட்டுமானத்துக்காகப் பொருள்களை வைத்திருக்கும் இடங்களை மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்து, தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அஸ்லம் பூரே தனது மனுவில் கூறியிருக்கின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அயோத்திக்கு வரும் ஆயிரக்கணக்கான கரசேவகர்களைத் தடுத்து நிறுத்தவும் ராணுவத்தை அயோத்தியில் நிறுத்தவும் தூண்களையும் இதர தளவாடங்களையும் கைப்பற்றவும் இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கா விட்டால், 1992 ல் நடந்ததைப் போல கலவரங்கள் மூண்டு அப்பாவி மக்கள் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது என்று அவர் தனது மனுவில் அச்சம் தெரிவித்திருந்தார்.
ரவீந்தர் குப்தா என்பவர், ராமரை வழிபட அயோத்தி செல்ல தனக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறார். மார்ச் 7 ம் தேதி ஃபைஸாபத்திலிருந்து என்னை விரட்டி விட்டு விட்டார்கள். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்ற அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக அரசின் இந்த நடவடிக்கை இருக்கிறது என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற ஆணை அமல்படுத்தப்படும். உ.பி. ஆளநர் சாஸ்திரி பேட்டி
அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளிக்கும் ஆணை அமல்படுத்தப்படும். இப்பிரச்னை தொடர்பான விசாரணையை உச்சநீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்கின்றது. இப்பிரச்னை குறித்து பிரதமர் என்ன கூறினார் எனக் கேட்டதற்கு, உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து அதன்படி நடக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறினார்.
பூமி பூஐஜ நடத்தியே தீருவோம் என்று விசுவ இந்து பரிஷத் கூறியுள்ளது குறித்துக் கேட்டதற்கு, கோயிலில் தரிசனம் செய்யக் கூடாது என்று எப்படிக் கூற முடியும். இன்று மகாசிவ ராத்திரி. கோவிலுக்குச் சென்று மக்கள் வழிபாடு நடத்துவர். உங்களால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? இந்துக்களின் முக்கியப் புனிதத் தளங்களில் ஒன்று அயோத்தி. அங்கு பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருப்பர். வீடுகளிலும், கோயில்களிலும் கடவுளைத் தரிசிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தால் மக்களைத் தடுக்க முடியுமா? (கேள்வி பூமி பூஜையைப் பற்றியது, பதிலோ மக்கள் சிவராத்திரி வழிபாடு பற்றியது, சிவராத்திரி வழிபாடு பற்றியோ, அயோத்தி இந்துக்களுக்கு புனிதத்தளமா என்பது பற்றியோ கேள்வி கேட்கப்படாத பொழுது, ஒரு ஆளநராக இருப்பவர் எந்தளவு இந்து வெறியோடு பதிலளித்து இருக்கின்றார் என்பதற்கு அவரது பதிலே சாட்சியமளிக்கின்றது.)
2000 பேருடன் சென்று புனிதத் தூணை ஒப்படைப்போம். தடுத்தால் கைதாவோம்.
அயோத்தியில் வரும் வெள்ளிக் கிழமை சர்ச்சை இல்லாத இடத்தில் புனிதத் தூணை அரசிடம் ஒப்படைப்பது, பிரார்த்தனை ஆகியன மட்டுமே நடக்கும் என்று விஎச்பி மற்றும் ராம ஜன்ம பூமி அறக்கட்டளையும் அறிவித்துள்ளன.
அயோத்தி : பூமி பூஜைக்கு முஸ்லிம்கள் ஒப்புதல் அளிக்க ஜயேந்திரர் வலியுறுத்தல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஐஜ செய்ய முஸ்லிம்கள் பரந்த மனப்பான்மையுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு தான். இந்து மக்கள் இது குறித்து வேதனை அடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். அதே போல முஸ்லிம்களும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டாம். வெற்றி, தோல்வி என தீர்ப்பைக் கருதத் தேவையில்லை.
பூமி பூஜை என்பது சிறிய சடங்கு ஆகும். ஜுன் 2 ம் தேதிக்குள் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கால அவகாசம் தந்துள்ளோம். கடந்த 1994 ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் இது தொடர்பாகத் தீர்ப்பளித்துள்ளனர்.
இதில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்துள்ளனர். மற்ற 2 நீதிபதிகளும் கூட பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் கூறியுள்ளனர். நிலத்தைத் தரக் கூடாது என கூறவில்லை. அயோத்தியில் கட்டடம் கட்ட 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளனர். அது குறித்து பிறகு பேசலாம். இப்போது பூமி பூஐஜ செய்ய ஆட்சேபணை இல்லை முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.
பெருந்தன்மையுடன் முஸ்லிம்கள் இதைச் செய்தால் பலத்த வரவேற்பு, கௌரவம் கிடைக்கும். இரு சமுதாயத்தினரும் விட்டுக் கொடுத்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயேந்திரர்.
(இங்கு ஜெயேந்திரர் முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்தால் கௌரவம் கிடைக்கும் என்கிறார். அவர் எதனைக் கேட்கிறார் என்பது புரியவில்லை. முஸ்லிம்கள் ஏற்றுப் பின்பற்றிக் கொண்டிருக்கும் மார்க்கத்தையே விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது பாபர் மசூதியை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? அல்லது இன்னும் எங்களது பட்டியலில் 3 ஆயிரம் பள்ளிவாசல்கள் உள்ளன எனக் கூறுகின்றனரே அந்தப் பள்ளிவாசல்களையும், இன்னும் காசி, மதுரா வில் உள்ள பள்ளிவாசல்களையும் விட்டுக் கொடுக்கச் சொல்கின்றாரா? இவர் தான் சமாதானத்தூது சென்றவர்?!! இவர் இந்துத்துவாவிற்கு ஆதாயம் பார்க்கச் சென்றிருக்கின்றார் என்பதை விட வேறு என்ன அவரது முயற்சியில் இருக்கின்றது?)
இந்த வரலாற்று ஆவணம் இன்னும் தொடரும்.. இன்ஷா அல்லாஹ்..
================================================================
ராம்ஜென்ம பூமி பிரசினை பற்றி உங்கள் கருத்து என்ன? - பதிலளிக்கின்றார் : டி.கே.வெங்கட சுப்ரமணியம்
அரசியலுக்காக பெரிதாக்கப்பட்ட பிரசினை அது. புரஃபஸர் பி.பி.லாலுடைய அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஆதாரமாகச் சொல்கிறார்கள். விஎச்பி யைச் சேர்ந்தவர்கள். ஆனால் பி.பி.லால் முன்னுக்குப் பின் முரணாக எழுதக் கூடியவர். 1978 ல், கி.மு.800 விற்கு முன்னால் அயோத்தியில் மக்கள் வாழ்ந்ததற்கான அறிகுறியே இல்லை என்றவர் 1997 ல் ரிக்வேத காலம் என்பது கி.மு.3500 என்றார். உத்தரப்பிரதேசத்தில் எங்கு தோண்டினாலும் இந்து, ஜெயின், புத்த கோயில்களின் மீதங்கள் கிடைக்கும். அதைப் போல் தான் பாபர் மசூதிக்குப் பக்கத்திலும் சில கட்டடப் பகுதிகள் கிடைத்திருக்கின்றன. அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் இருந்த அது இடிக்கப்பட்டது என்று சொன்னால் அதற்கான அகழ்வாராய்ச்சி நிரூபணத்தைத் தந்தாக வேண்டும். ஃபீல்ட் நோட் புக் என்று சொல்லப்படும் அந்த முக்கிய ஆவணத்தைக் கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறார்கள். பாபர் மசூதி கட்டப்பட்டது சமீப காலத்தில் தான். (1528) கோயில் இடிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதற்காண நிரூபணம் கிடைத்திருக்கும். அதே காலத்தில் வாழ்ந்த துளசிதாசர் அதைப் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ராமதாஸரான அவர், கோயில் இடிக்கப்பட்டிருந்தால் எழுதாமல் இருந்திருப்பாரா?
சரித்திரத்தைக் காவிமயமாக்கும் முயற்சி இப்போது நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே, -ல் இருந்தவர் நீங்கள். உங்கள் கருத்து?
கருத்து வேறுபாடுகளால் அதிலிருந்து வெளியே வந்து விட்டேன். அறிவியல் ஆதாரமில்லாத சில அடிப்படை மாற்றங்களை மத ரீதியாக மாற்றும் முயற்சிகள் நடந்து வருவது உண்மை தான்.
உங்கள் கருத்துப்படி அயோத்தியில் ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி இருந்த இடம் தான் என்பது சரியானது தானா?
சரியல்ல. அது வெறும் நம்பிக்கை தான். ஆதாரப்பூர்வமானது அல்ல. நம்பிக்கைகளை அரசியலாக்க நினைப்பது ஆபத்தில் தான் போய் முடியும்!.
பாபரி மஸ்ஜித் - அகழ்வாய்வு பயன்தருமா?
பாபரி மஸ்ஜித் பிரச்னையின் இன்னொரு பகுதியாக, அகழ்வாராய்ச்சின் மூலமாக பூமிக்கடியில் கிடைக்கக் கூடிய பொருள்களைக் கொண்டு, அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைக்கின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இரு சமூகங்களையும் சேர்ந்தவர்களைக் கொண்ட கமிட்டியை நியமித்து, அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த மார்ச் 10 திங்கட் கிழமை முதல், பாபரி மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன.
நீதிமன்றத்தின் இந்த முடிவு இரு சமூகங்களிடையேயும் மீண்டும் பிரச்னையைக் கிளறி விட்டிருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கின்ற இந்துத்துவவாதிகள், சரியான ஆதாரங்கள் எதனையும் நீதிமன்றத்தின் முன் வைத்தபாடில்லை. இதுவரை நடந்த வழக்குகளின் முடிவுகளைப் பார்த்தோமானால் அது முஸ்லிம்களுக்குச் சாதகமான முடிவாகத் தான் இருக்கும். அந்தளவு ஆதாரங்களுடன் முஸ்லிம்கள் தரப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றது.
இப்பொழுது நீதிமன்றம் அகழாய்வுப் பணிக்கு உத்தரவிட்டு, அதனுடைய முடிவுகளும் முஸ்லிம்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டால், நீதிமன்றத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட மாட்டோம் என்று குரல் கொடுத்தால், சங்க பரிவாரங்களை நீதிமன்றம் என்ன செய்யும்? என்பது பற்றி தெளிவான அறிக்கையை வெளியிட்டு விட்டு, இந்த வழக்கை மீண்டும் எடுத்துச் செல்வது தான் நல்லது என்று முஸ்லிம்கள் தரப்பினர் கருதுகின்றனர். ஏனெனில் பாபரி மஸ்ஜிதை மட்டும் அவர்கள் உரிமை கொண்டாடவில்லை. இன்னும் நாட்டில் உள்ள 3000 மஸ்ஜித்களில், காசி, வாரணாசி போன்ற பிரபலமான இடங்களில் உள்ள 7 பள்ளிவாசல்களையும் சேர்த்தே இப்பொழுது உரிமை கொண்டாடி வருகின்றார்கள். இதனை பிரவீண் தொகாடியா பொது மேடைகளில் அறிவித்து, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்த வண்ணம் இருக்கின்றார்.
இன்னும் சங்க பரிவார ஆதரவாளரான காஞ்சி சரஸ்வதி சுவாமிகள், தொல்லியல் துறை தரக் கூடிய ஆதாரங்களை இருதரப்பாரும் ஏற்றுக் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிக்கை விட்டுள்ளார். இந்த அறிவிப்பு முஸ்லிம்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏனெனில், இதுவரை முஸ்லிம்கள் தரப்பு – நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்றே கூறி வந்திருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டோம் என்று முஸ்லிம்கள் தரப்பில் இதுவரை மறுத்துப் பேசியதில்லை. இந்த நிலையில், தொல்லியல் துறையினரின் ஆதாரங்களும் முஸ்லிம்களின் பக்கம் உள்ள நியாயத்திற்கு சான்று பகர்வதாக இருந்தால், சங்க பரிவாரங்களைச் சரிக்கட்டும் பொறுப்பை சரஸ்வதி சுவாமிகள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதும், இன்னும் அவ்வாறானதொரு தீர்ப்பு எங்களுக்கு பாதகமாக வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று சங்கபரிவாரங்களிடமிருந்து வாக்குறுதி பெற்றுத் தர முயல்வாரா? என்பதும் சந்தேகத்திற்கிடமானவைகள்.
சரஸ்வதி சுவாமிகளின் அறிக்கை வெளியான அதே காலத்தில் தான், தொகாடியா இன்னும் 7 பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவோம் என்றும் அறிக்கை விட்டிருக்கின்றார். இது முன்னுக்குப் பின் முரணாகப் பேசக் கூடிய அவர்களின் நயவஞ்சகப் போக்கைத் தான் காட்டுகின்றது. இன்னும் தொல்லியல் துறை சங்க பரிவாரங்களின் மூத்த தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான முரளிமனோகர் ஜோஸி வசம் இருந்து கொண்டிருக்கும் போது, நியாயமான முறையில் தீர்ப்புக் கிடைக்குமா? என்பதும் சந்தேகத்திற்கிடமானதே என்று கூறி, மத்திய வக்பு வாரியத்தைச் சேர்ந்த முகம்மது ஹஷிம் இந்த அகழ்வாராய்ச்சிப் பணியைப் புறக்கணித்தார். அவரது சந்தேகம் நியாயமானதே. இதுவரை பாபரி மஸ்ஜித் பிரச்னையில் முஸ்லிம்கள் தரப்பிற்கு எந்த நியாயத்தையும் நீதிமன்றமோ அல்லது ஆட்சியாளர்களோ வழங்கவில்லை.
பாபரி மஸ்ஜித் இருந்தபொழுது, சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், முஸ்லிம்கள் தொழுவதற்கு அனுமதி மறுத்தது. இப்பொழுது பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பின்னரும், அங்கு சிலைகள் வைக்க அனுமதித்து, பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இது ஒன்றே போதும் நீதிமன்றங்களும், அரசுகளும் முஸ்லிம்களுக்கு எதிராக, ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றன என்பதற்கு! இந்த நிலையில், தொல்லியல் துறை முரளி மனோகர் ஜோஸி கை வசம் இருக்கும் போதும், உள்துறையும், பிரதமரும், ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி என அனைத்துத் தரப்பாரும் சங்க பரிவாரங்களாக இருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்குச் சாதகமான முறையில் தொல்லியல் துறை முடிவுகள் வந்தாலும், அந்த முடிவு முஸ்லிம்களின் கைகளுக்குக் கிடைக்க எத்தனை வருடங்களாகுமோ? என்பதும் கேள்விக்குறியே!
இன்னும் தொல்லியல் முடிவுகள் முஸ்லிம்களுக்குச் சாதாகமாக வரும் பட்சத்தில், சங்க பரிவாரங்களின் எதிர்ப்பு கடுமையாக இருக்கும். இந்த எதிர்ப்பை நீதிமன்றங்களும், அரசும் எவ்வாறு சமாளித்து முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்கும் என்பதும் சந்தேகத்திற்கிடமானவையே!
இதற்கிடையே, ஆட்சியும் அதிகாரம் கையில் இருக்கின்ற காரணத்தால் , தொல்லியல் துறையும் அதன் கை வசம் இருக்கின்ற காரணத்தால், அதன் முடிவுகள் இந்துக்களுக்குச் சாதகமாக வர வாய்ப்பை ஏற்படுத்தி விடுவார்களென்றால், இதுவரை நீதிமன்றத்தையே நம்பி இருந்து, சரியான ஆதாரங்களைக் கையில் வைத்திருக்கும் முஸ்லிம்களின் நிலை என்ன?
நீதிமன்றம் தனது தீர்ப்பினை ரெகார்டுகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? அல்லது தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமா? என்பதனையும் நீதிமன்றமானது, மக்கள் மன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
பாபர் மசூதி இருந்த இடத்தில் ரேடார் கருவி மூலம் சர்வே செய்த டோஜி விகாஸ் இண்டர்நேஷனல் என்ற கனடா நாட்டு நிறுவனத்தின் சர்வேயின் படி, பூமிக்குக் கீழே தூண்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியில் எந்தளவு ஆழம் வரை இவ்வாறு தோண்டிப் பார்ப்பார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.
எது எவ்;வாறிருப்பினும், இன்னும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் நீதி அமைப்பின் மீது நம்பிக்கை வைத்த வண்ணமே, பாபரி மஸ்ஜிதை மீட்க போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
===========================================
நெஞ்சில் அலைபாயும் அனல்கள் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
தலைவர். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன. இந்த தீர்ப்புகள் குறித்துச் செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் மும்பையிலும், கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம் மாநகரங்களில் முறையே டிசம்பர் 92 ஜனவரி93 மற்றும் நவம்பர்-டிசம்பர் 97ல் நடைபெற்ற முஸ்லீம் இனப் படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறி விட்டன. அப்பாவி பொது மக்களைக் கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப்படுத்தவில்லை. ஆனால் அத்தகைய நாசகாரச் செயல்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லீம் இனப் பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?

மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால் அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லீம் இனப் பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டு வெடிப்புகள் பற்றிய படங்களைப் பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரைப் பேட்டி கண்டு குண்டு வெடிப்பில் ஈடுபட்டோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துவுருவாக்கத்தைச் செய்து வருகின்றனர். இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். முதலில் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றியும் பின்னர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கு குறித்தும் ஆய்வு செய்வோம்.
முதலில் கோவையில் 1998 பிப் 14 அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153 ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்கத் துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்குக் காரணமானவர்களை, அவர்களது தலைவர்களைத் தாக்க வேண்டுமென்பது தான். எனவே இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது. பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்குத் திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள் தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலா வரும் பயங்கரவாதிகள். இந்தப் பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதைக் கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இரு மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர்-டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்குச் செல்வோம்.
நவம்பர் சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இட ஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சினையை முன் வைத்துப் பேரணி மற்றும் மாநாட்டிற்காகப் பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வந்த வேளையில் தான், அந்தச் செய்தி 39 இப்ராஹீம் சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற எண்ணில் அப்போது இருந்த த.மு.மு.கவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது. கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டை மேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்குக் காவல் துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்துத் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்குத் தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி(22), மற்றும் ஷபி(20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர். இத்துடன் பிரச்சினை முடிவடைந்து விட்டது என்பது தான் அந்தச் செய்தி. ஆனால் இதற்குப் பிறகு வந்த செய்திகள் நமது நெஞ்சத்தை பிளப்பதாக இருந்தது.
பிரண்ட் லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13.26.1997) அதன் சிறப்புச் செய்தியாளர் டி.வி.என்.சுப்பிரமணியன் பின்வருமாறு வருணிக்கிறார்.
மறு நாள் ஞாயிற்றுக் கிழமை அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்துக் காவலர்கள் மட்டுமல்லாமல், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்புப் பட்டைகளை அணிந்து திருச்சி சாலை- டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல் துறையினரின் மனைவிமார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சி பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கிக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைட்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. அந்தக் கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிகடைகள், கடிகாரக் கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடிய பின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களைத் தெருவில் போட்டுத் தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்குச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி.ரவி அங்கே வந்த போது காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். சி.டி தண்டபாணிக்கும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முஸ்லிம்கள் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது வன்முறை கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர். அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹிபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார். இதைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டை மேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப் கான் மருத்துவமனைக்கு வந்த போது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
தனது ஆயுட்காலச் சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்தியேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறை கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத் தலைவி அழுது கொண்டே நம்மிடம் எனது கல்யாண பட்டு எரிந்து விட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை என்று நம்மிடம் சொன்னார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்குத் தகவல் தந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவ முன் வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்.
பிரபலப் பத்திரிகையாளரும், நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நாய்யார் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழில் ‘எ காங் இன் தி வீல்’ என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
நாடாளுமன்றத்தின் கவனத்தைத் தப்பும் அளவிற்குக் கோவை கலவரங்கள் லேசானது அல்ல நய்யார் சபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அல்லது சூறையாடப்பட்டது, கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிகள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்புக் கோடியைத் தாண்டும். இதனை ஹிந்து முஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது.
இது காவல் துறையின் கைங்கர்யத்தினால் நடந்தது. இதன் காரணமாகத் தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. காவல் துறையினர் ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினர். என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்ய சபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இதனைத் தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்குச் சிறிய பிரச்சினை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்திக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்கு சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரீப் கர்ண கொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறைக்க முடியாதவை.
நமது வர்ணனையை விடத் தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நாய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி விக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்- டிசம்பர் 1997ல் இந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைதுச் செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறிக் குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்களை முன் நின்று நடத்திய காவல் துறை அதிகாரிகளோ அல்லது ஹிந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120, பி153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை. செல்வராஜ் கொல்லப்பட்டட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துல் நாசர் மஃதனியை போல் வருடக் கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூடச் சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல் துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரில் உடல்களைக் கோவை அரசு மருசத்துவமனையில் இருந்து பெற்று அதனைக் கோட்டை மேட்டிற்கு எடுத்து வந்து, இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாகக் கோவை சுண்ணாம்புக்கலவாய் அடக்கவிடத்தில் அடக்கப்பட்டது. கோவை வரலாற்றில் மதக்கலவரத்தினால் ஏற்படும் மரணங்களின்பொழுது நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்மை ஆனால் அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றிய போது, நல்ல காவல் துறை அதிகாரிகள் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு பதில் வன்முறை தீர்வாகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும் என்று நான் குறிப்பிட்டேன். அன்றைய கோவை மாவட்டக் கலெக்டர் சந்தானமும், ஊர்வலப் பாதுகாப்பிற்குத் தலைமை தாங்கிய ஐ.ஜி.ஆர்.வி, கோபாலனும் எனது உரையைப் பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாகக் கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவுச் செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசியச் சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதிகிடைக்கவில்லை. இந்தப் பின்னணியில் தான், தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துகள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்து அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சி பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரைச் சிறையில் சந்தித்த போது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்தை உணர முடிந்தது. தி இந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்குப் பெரும் தண்டைனயாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்குச் சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திரபதி நீதி வழுவாமல் தனது இறுதி தீர்ப்பை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்து மும்பை குண்டு வெடிப்பு பின்னணியை ஆராய்வோம்.
மும்பையில் மார்ச் 12 அன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த தீர்ப்புச் சில வாரங்களுக்கு முன்பு வெளி வந்துள்ளன. 14 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட 123 நபர்களில் 100 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 12 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 15 பேருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு வெளி வந்த பிறகு நிலவும் நிலை குறித்து சி.என்.என்.ஐ.பி.என் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் சாகரிகா கோஷ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
ஒரு மயான அமைதி நிலவுகின்றது. இந்தத் தீர்ப்பை மனக் குழப்பத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஒரு துளியளவு இரக்கமும் வெளிக்காட்டப்படவில்லை.
சுயபரிசோதனை செய்வதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. மக்கள் மன்றத்தில் சந்தேகத்தின் பலன் குற்றஞ்சாட்டப்பட்ட எவருக்கும் அளிக்கப்படவில்லை. நீண்ட காலமாக நடைபெற்று வரும் விசாரணை குறித்துச் சந்தேகத்தைக் கிளப்புவது தேசவிரோத மற்றும் போலி மதசார்பற்ற செயலாகக் கருதப்படுகின்றது.
இருப்பினும் மூத்த வழக்குரைஞர்கள் மும்பை குண்டு வெடிப்பு விசாரணையை நிற்கும் ஆவணங்கள், பெரும் அளவிலான சான்றுகள் மற்றும் அவற்றுக்கான எதிர் ஆவணங்கள், நீண்ட நெடிய விசாரணை, மனிதனின் இயற்கையான ஞாபக மறதிகள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பாவம் நீதிபதி பி.டி.கோடே எப்படி நீதியாக தீர்ப்பு அளித்திருக்க முடியும். ஒரு மூத்த வழக்குரைஞர் இந்த வழக்கு விசாரணையை ஒரு குளறுபடியான விசாரணை என்றும் மக்களைத் திருப்திபடுத்தும் நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் சஞ்சய்தத் பிரச்சினையில் பொது மக்களிடையே ஏற்பட்ட உக்கிரம் நிறைந்த விவாதத்தைத் தவிர மற்றபடி நிசப்தம் தான் நிலவுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தானே.
14 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வெளிவந்த நிலையில் மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக இருந்த பேரழிவு கலவரங்கள் குறித்து விரிவாகப் பெரும்பாலான ஊடகங்கள் பேசவில்லை. இருப்பினும் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் மும்பையில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று இன்று வலிமையான குரல் எழுந்து வருகின்றது.
மும்பை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 257. ஆனால் டிசம்பர் 1992 மற்றும் ஜனவரி 1993ல் நடைபெற்ற கலவரங்களில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1788 என்று சர்வதேசப் பொது மன்னிப்பு நிறுவனம். தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிடுகின்றது.
இக்கலரவங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் 1998ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட போது மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஸ்ரீ கிருஷ்ணா பிறகு உச்ச நீதிமன்ற நீதிபயாகிப் பணியில் இருந்து ஓய்வும் பெற்று விட்டார். ஆனால் இதுவரை முஸ்லிம் பேரின அழிவு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை அளிக்கப்படவில்லை. கலவரத்தில் ஈடுபட்ட அந்தக் கொடியவர்கள் யார்?
நீதிபதி கிருஷ்ணா கூறுகிறார்:
ஜனவரி 6, 1993 முதல் பெரும் அளவில் கலவரமும் வன்முறையும் இந்து வகுப்புவாதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன. இந்து வகுப்புவாத அமைப்புகள் செய்த பிரச்சா£ரமும், சாம்னா மற்றும் நவாக்கல் இதழ்களில் எழுதப்பட்டவையும் கலவரத்தைத் தீவிரப்படுத்தி அதனை உச்ச நிலைக்குக் கொண்டுச் சென்றன. இதன் பிறகு சிவவேசனை தலைவர்கள் கலவரத்திற்குத் தலைமை தாங்கி நடத்தினார்கள். தொடர்ந்து அவர்களது எழுத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் வகுப்புவாதத்தை அவர்கள் கொளுந்து விட்டு எரிய வைத்தார்கள். சிவசேனை தலைவர் பால் தாக்கரேயின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இவையெல்லாம் நடந்து வந்தன. ஜனவரி1, 1993 அன்று சிவசேனையின் பத்திரி¬யான சாம்னாவில் இந்துக்களை வன்முறையில் ஈடுபட தூண்டும் கட்டுரை ஒன்று பிரசுரமாகியது.
மிகத் தெளிவாக நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கலவரத்திற்குக் காரணமானவர்கள் யார் என்று தெளிவுபடுத்திய போதிலும் எவ்வித நடவடிக்கையையும் காவல் துறை மேற்கொள்ளவில்லை.
சாம்னா பத்திரிகை மீது சமுதாயங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தியதாக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 153 ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மும்பை மாநகராட்சியின் முன்னாள் ஆணையாளர் ஜே.பி.டிசொசா வழக்குத் தாக்கல் செய்தார்.சாம்னா மீது அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றமும் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இதற்கு மாறாக மராட்டிய அரசு சாம்னா மற்றும் நவாக்கல் பத்திரிகைகளைப் பல வகையில் ஆதரித்து அவற்றின் விஷமக் கருத்துக்களுக்கு ஆர்வமூட்டியது.
துவேஷத்தையும், வன்முறையையும் பரப்பிய இந்தப் பத்திரிகைகளுக்கு பொது மக்கள் நிதியில் இருந்து விளம்பரங்களும் அளிக்கப்பட்டன. குற்றத்தை தூண்டும் வகையில் எழுதியவருக்கு வன்முறையில் ஈடுபட்டவருக்கு அளிக்கப்படும் அளவில் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடம் உண்டு. மும்பை குண்டு வெடிப்பில் 257 பேர் உயிர் இறந்தார்கள். இந்தக் குண்டு வெடிப்பை நடத்தச் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விடப் பன்மடங்கு அதிகமாக மக்கள் உயிர் இழப்பதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு என்ன தண்டனை? சாம்னா பத்திரிகை தொடர்ந்து வன்முறைப் போக்கை பரப்புவதற்காக விளம்பரங்கள், தண்டனைக்குப் பதிலாக வெகுமதியாக அளிக்கப்பட்டன.
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் பாகம், இரண்டாவது அத்தியாயத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்:
26 டிசம்பர் 1992 அன்று மகா ஆரத்திகள் தொடங்கின. இது வகுப்புவாதப் பதட்டத்தை அதிகரித்ததுடன் அரைகுறையாக ஏற்படுத்தப்பட்டிருந்த அமைதியையும் குலைத்தது. மகா ஆரத்தி நடைபெற்ற சில இடங்களில் வகுப்பு வாதத்தை தூண்டும் சொற்பொழிவுகள் நடைபெற்றன. இத்தகைய மகா ஆரத்திகளில் பங்குக் கொண்ட பிறகு கலைந்து செல்லும் கூட்டத்தினர் வழியில் தங்கள் கண்களில் பட்ட முஸ்லிம் கடைகளை அடித்து நொறுக்கினர். முஸ்லிம்களைத் தாக்குவதற்காகச் சிவசேனைக்காரர்கள் ஒன்று திரண்டார்கள். பல்வேறு பகுதிகளில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இராணுவ மதிநுட்பத்துடன் நடத்தப்பட்டன. முஸ்லிம் நிறுவனங்களில் பட்டியல், முஸ்லிம் வாக்காளர் பட்டியல் இவற்றைக் கையில் வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளது போல் கையில் வாக்காளர் பட்டியலுடன், இராணுவ மதிநுட்பத்துடன் செயல்படுவது என்பது சதித்திட்டமே. ஆனால் டிசம்பர் 92 மற்றும் ஜனவரி 93 மும்பை கலவரத்திற்குச் சதிதிட்டம் தீட்டிய சிவசேனை பயங்கரவாதிகள் மீது இ.பி.கோ 120 பிரிவின் படி எந்தவொரு வழக்கும் பதிவுச் செய்யப்படவில்லை. சுமார் 2000 இந்தியர்கள் உயிர் இழப்பதற்குக் காணமாக இருந்தவர்கள் என்று நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அவர்களால் அடையாளம் காணப்பட்டவர்கள் மீது இன்று வரை சதித்திட்டம் தீட்டினார்கள் என்று வழக்குப் போடப்படவில்லை என்ன காரணம்?
உயிர் இறந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதினாலா?
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் முஸ்லிம் சமூகப் பேரழிவுக் கலவரங்களை நடத்துவதற்கு எவ்வாறு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்பதை விவரிப்பதுடன் நிற்கவில்லை.
இந்தக் கலவரங்களைத் திட்டமிட்டு, அதற்கு உதவிகள் புரிந்து, எல்லா வகையிலும் அது நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த நபர் யார் என்பதையும் நீதிமான் ஸ்ரீ கிருஷ்ணா அம்பலப்படுத்துகிறார். தனது அறிக்கையின் இரண்டாம் பாகம் மூன்றாம் அத்தியாயத்தில் மும்பை கலரவரத்தை முன் நின்று நடத்திய பங்கரவாதி குறித்து அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:
சிவசேனையின் தலைவர்கள மற்றும் தொண்டர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவர் பால் தாக்கரே என்பது தெளிவாகத் தெரிகின்றது. முஸ்லிம்களைத் தாக்க வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும். இந்தத் தாக்குதல்களுக்கு பிறகு என்ன நடந்தது என்பதற்குச் சாட்சி சொல்ல ஒரு பயலையும் விட்டு வைக்கக் கூடாது என்று பால் தாக்கரே உத்தரவுப் பிறப்பித்தார். இது போன்ற உத்தரவுகளைப் பால் தாக்கரே தொலைபேசியில் போட்டுக் கொண்டிருக்க ரமேஷ் மோரே மற்றும் சர்போட்தார் ஆகியோர் அங்கு வந்து தங்கள் பகுதியில் உள்ள நிலைகளை விவரித்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கும் இது போன்ற உத்தரவுகள் போடப்பட்டன. வட மண்டலக் கூடுதல் காவல் ஆணையாளர் ஏ.ஏ. கானைப் பிடித்து அல்லாஹ்வின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். மண்டுக்கரை முடித்து விடுங்கள். ஆனால் முடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று பால் தாக்கரே உத்தரவு போட்டார்.
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையின் முதல் தொகுதி, அத்தியாயம் 2ல் இன்னும் தெளிவாகப் பயங்கரவாதி தாக்கரேவை பின் வருமாறு வர்ணிக்கிறார்:
ஜனவரி 8, 1993 முதல் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் சொத்துகளுக்கு எதிரான தாக்குதலில் சிவசேனையும் அதன் உறுப்பினர்களும் தான் முனணணி வகித்தார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. கிளைத் தலைவர்கள் முதல் சிவசேனையின் தலைவரான பால் தாக்கரே வரை அனைத்துச் சிவசேனை தலைவர்களும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான பதில் தாக்குதலை ஒரு தேர்ந்த இராணுவத் தளபதி போல் செயல்பட்டுப் பால் தாக்கரே சிவசேனைக்காரர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மதச்சார்பற்ற, மனித உரிமை அமைப்புகள் டிசம்பர் 92, ஜனவரி 93 கலவரங்களில் ஈடுபட்டதாக ஸ்ரீ கிருஷ்ணா ஆணையத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட 31 காவல் துறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி வருகின்றார்கள். ஆனால் பால் தாக்கரே மற்றும் அவரது பயங்கரவாகதக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று குரல் வலிமையாக வைக்கப்படாதது வருத்தத்திற்குரியதாகும்.
குடிமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்பது அரசியல் சாசனம் தரும் உரிமையாகும். அரசியல் சாசனத்தின் 21ம் பிரிவு இந்திய குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அரசின் அடிப்படை கடமை என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் மும்பை பற்றி எரிந்தது. முஸ்லிம்களின் உயிர் மற்றும் உடமைகள் மிக மலிவாகப் பறிக்கப்பட்டன.
இதற்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையில் அமைந்த ஆணையம் மிகத் தெளிவாகக் குற்றஞ்சாட்டிய பிறகும் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் இதர மதச்சார்பற்ற அரசுகளும் பயங்கரவாதி தாக்கரே மற்றும் அவரது எடுபிடிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்க மறுத்து வருவது அரசியல் சாசனச் சட்டம் அரசுகளுக்கு அளித்துள்ள பொறுப்புகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீபா பட்டீலை ஆதரித்ததற்கு நன்றி தெரிவிக்கப் பயங்கரவாதி பால் தாக்கரே வீட்டிற்கு இன்றைய மராட்டிய முதல்வர் விலாஸ் ராவ் தேஸ்மூக் நேரில் சென்றுள்ளார். இது வெட்கக் கேடானது. (சஞ்சய்தத் தற்பொழுது பிணையில் வந்தபொழுது அவரிடம் கைகுலுக்கிய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம், மிகப்பெரிய கலவரத்திற்குக் காரணமான பால்தாக்கரேவை முதலமைச்சரே வீடுதேடிச் சென்று சந்திக்கிறார்.) பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட சரிவிற்கு என்ன காரணம் என்பதை தேஸ்மூக் போன்ற காங்கிரஸ்காரர்கள் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் காங்கிரஸ் கட்சிக்கு அவகாசம் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக அந்த அறிக்கை அடையாளப்படுத்தியுள்ள பால் தாக்கரே உள்ளிட்ட பயங்கரவாதிகளை அரசு கைது செய்ய வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். நடுநிலையான நீதிபதி முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டம். பால் தாக்கரே போன்றோருக்கு உச்சபட்சத் தண்டனையான தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் வாதாடும் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்பட வேண்டும். இதுவே முஸ்லிம்கள் உள்ளத்தில் காங்கிரஸ் ஆட்சிகளின் கையாலாகாத போக்கினால் ஏற்பட்ட ரணத்தைக் களைய உதவிடும்.
மொத்தத்தில் கோவை மற்றும் மும்பை குண்டுவெடிப்புகளுக்கு காரணம் அதற்கு முன்பு அந்த இரு மாநகரங்களிலும் நடைபெற்று முஸ்லிம் பேரழிவு கலவரங்கள் தான். சட்டம் தனது கடமையை அப்போது செய்திருந்தால் குண்டு வெடிப்புகள் என்ற மாபாதகக் குற்றத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் இந்தப் படிப்பினையை மனதில் கொண்டு செயல்படுவார்களா?
இறைவன் நாடினால் தீர்ப்பு நம் பக்கம்....அல்லாஹ் அக்பர்
--
9/18/2010 03:22:00 PM அன்று
சஹாரா தமிழ் இல் ஜன்னத் மைந்தன் ஆல் இடுகையிடப்பட்டது