தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் அமைப்பு தேர்தல்க ü ல் அடிப்படை கிளை முதல் மாவட்ட நிர்வாகம் வரை தேர்தல் நடைபெற்றது. அதன் இறுதியில் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் வழக்குறைஞர் பி. எம். ஆர். சம்சுத்தீன் மற்றும் சுலைமான் ஹாஜியார் ஆகியோர் செயல்பட்டார்கள்.
கழகத்தின் அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய முன்று பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது என்று முன்னதாக திருத்தம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இம்மூன்று பொறுப்புகளுக்குமான தேர்தல் நடந்து முடிந்த பிறகு துணைத் தலைவராக விஞ்ஞானி என். எஸ். அப்துல் ஜலீலும், துணைப் பொதுச் செயலாளராக மவ்லவி ஜே. எஸ். ரிபாயியும், மாநிலச் செயலளார்களாக எம். தமீம் அன்சாரி மற்றும் பி.அப்துஸ்ஸமது ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். ஏனைய 4 மாநில செயலாளர்களும் துணைச் செயலளார்களும் பிறகு நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் திருத்தம்
விதி 24 சொத்து பாதுகாப்புக் குழு நீக்கப்பட்டு அதற்கு பதிலாக பின்வரும் விதி இணைக்கப்படுகின்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்காக வாங்கப்பட்ட மற்றும் இனி வாங்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் டிரஸ்டிற்காக அதன் தலைவர் பெயரில் வாங்கபடுகின்றது என்று பத்திரங்க ü ல் பதிவுச் செய்யபட வேணடும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக டிரஸ்டின் அறங்காவலர்களாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள், தமுமுகவின் சொத்து பாதுகாப்புக் குழுவாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அறக்கட்டளை செயல்படும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அறக்கட்டளைக்கும் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராக இருப்பார்கள்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள டிஎம்எம்கே மீடியா டிரஸ்ட் தமுமுக தலைமை நிர்வாக குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். அதன் அறங்காவலர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு நியமிக்கும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் டிஎம்எம்கே டிரஸ்டின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளராக இருப்பார்கள்.
விதி 12 பிரிவு 3 பின்வருமாறு திருத்தப்படுகின்றது.
பத்தி 2ல் பின்வருமாறு திருத்தப்படுகின்றது மாவட்டப் பொதுக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவர்
இது தவிர மேலதிகமாக ஒரு துணைத் தலைவர், மூன்று துனணச் செயலாளர்களை மாவட்ட நிர்வாகிகள் தலைமைக் கழகத்திற்கு பரிந்துரைக்கலாம். அந்த பரிந்துரையின் அடிப்படையில் தலைமை நிர்வாகக் குழு நியமனம் செய்யும்
விதி 6 கிளைகள் பிரிவு 6 பின்வருமாறு திருத்தப்படுகின்றது
ஒன்றியச் செயலாளர்கள் மாவட்டங்க ü ல் அரசு அமைத்துள்ள ஒன்றிய பகுதிகü ல் மாவட்ட நிர்வாகம் ஒன்றியச் செயலாளர்களை செயல்படுவார்கள். ஒன்றியத்திறகுட்பட்ட நகரங்களை தவிர மற்ற ஊர்க üல் உள்ள அமைப்புகள் இவரது கண்காணிப்பின் கீழ் செயல்படும். ஒரு ஒன்றியத்தில் உள்ள நகர அமைப்புகளைத் தவிர்த்த ஏனைய கிளை நிர்வாகிகளால் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார், ஒன்றியச் செயலாளர்கள் மாவட்ட செயற்குழு, மாவட்ட பொதுக்குழு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பார்கள்
விதி 17 செயற்குழு பிரிவு 2 மாவட்ட செயற்குழு அ
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தலைப்பில் உள்ள ஒஒஒ ( பேரூராட்சிக்கு கீழ் மட்டத்தில் உள்ள ஊர்கிளைக ü ன் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர்) நீக்கப்படுகின்றது,)
தலைமை நிர்வாக குழு தேர்தல்
விதி 14 தலைமை நிர்வாகக் குழு பிரிவு 3 பின்வருமாறு திருத்தப்படுகின்றது
தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர்க ü ல் தலைவர், பொதுச் செயலளார் மற்றும் பொருளாளர் ஆகிய மூன்று நிர்வாகிகள் பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்படுவார்கள், துனணத் தலைவர், துணைப் பொதுச்செயலாளர் மற்றும் ஆறு செயலாளர்கள் ஆகியோரை பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், பொதுச் செயலளார் மற்றும் பொருளாளர் ஆகியோரால் நியமிக்கப்படுவார்கள்
விதி 15 பிரிவு 4 பத்தி இரண்டில் மற்றும் முன்றில் தலைமை நிர்வாக குழுவில் உள்ள 11 நிர்வாக பொறுப்புக்கும் என்ற வாசகம் தலைவர் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் என்று திருத்தப்படுகின்றது
பிரிவு 5 பின்வருமாறு திருத்தப்படுகின்றது
மாநிலப் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர். பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் மற்றும் அவர்களால் நியமிப்பட்ட துணைத் தலைவர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஆறு செயலாளர்களை கொண்ட தலைமை நிர்வாக குழுவிற்கு அனைத்து அதிகாரங்களையும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு வழங்கும். அது எடுக்கும் முடிவே இறுதியானது,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாபா கலை மற்றும் அறிவியல் கல்லுரி வளாகத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் கழகத்தின் பொதுச்செயலளார் எஸ். ஹைதர் அலி சமர்பித்த அறிக்கை
மதுரை பொதுக்குழு முதல் பாபநாசம் பொதுக்குழு வரையிலான அறிக்கை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மதுரையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்றது, இப்பொதுக்குழுவிற்குப் பிறகு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அ ü க்கப்படுகின்றது,
டெல்லியில் பேரணி மற்றும் சமூக நீதி மாநாடு
மதுரை பொதுக்குழுவிற்கும் இந்த பொதுக்குழுவிற்கும் இடையே நிகழ்ந்த முக்கிய நிகழ்வு அப்பொதுக்குழுவில் திட்டமிட்டபடி ''டெல்லியில் இடஒதுக்கீடு பேரணி'' மற்றும் ''சமூக நீதி மாநாடு'' மிகுந்த எழுச்சியுடன் மார்ச் 7 அன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் அனேகமாக அனைத்து முஸ்லிம் அமைப்புக ü ன் தலைவர்களும் பங்குகொண்டது சமீபகால இந்திய முஸ்லிம்கü ன் வரலாற்றின் முக்கிய நிகழ்வாகும். டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு எந்தவொரு கட்சியும் இவ்வளவு பெரிய பேரணியை நடத்தவில்லை. அல்ஹம்துலில்லாஹ், பேரணி மற்றும் மாநாடு முடிந்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோரிடம் கோரிக்கை பிரகடனம் அ ü க்கப்பட்டது.
மக்கள் உரிமைக்கு தனி அலுவலகம்
இதேபோல் இந்த காலக்கட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு எண்.6, வடமரைக்காயர் தெருவில் உள்ள கட்டடத்தின் மூன்றாம் தளம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு வாங்கப்பட்டது. தற்போது அங்கு மக்கள் உரிமை மற்றும் பிளாக் & ஒயிட் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் இயங்கி வருகின்றது.
வக்ஃபு வாரியத் தலைவரானார் செ. ஹைதர் அலி
சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது மாநில செயற்குழு கோரியதற்கேற்ப தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ், ஹைதர் அலி தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக கடந்த மார்ச் 27 அன்று ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்,
ஏனைய நிகழ்வுகள்
ஒட்டகக் குர்பானி தடைக்கு இடைக்காலத் தடை
தியாகத் திருநாள் ஒட்டகக் குர்பானிக்குத் தடை விதிக்க பாரதிய பிராணி மித்ரா சங்கம் எனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஒட்டகம் அறுக்க இடைக்கால தடை பெற்றது. இவ்வழக்கு குறித்து தெரிய வந்ததும் இவ்வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொண்டு த.மு.மு.க வாதிட்டது. ஒட்டக குர்பானிக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி தீர்ப்பு பெற்றது.
ஈராக் அதிபரின் படுகொலைக்கு கண்டனம்
ஈராக் அதிபர் சதாம் ஹுசைனை பயங்கரவாத அமெரிக்காவும், அதன் அடிவருடிகளும் தூக்கிலிட்டுப் படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 61 இடங்ககுல் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அவசர ஊர்திகள் அர்ப்பணிப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் திருச்சி மாநகர் 49வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கும் உதவிடும் வகையில் 21வது அவசர மருத்துவ ஊர்தி சேவை டிசம்பர் 25 அன்று தொடங்கப்பட்டது.
த.மு.மு.கவின் 22வது அவசர உதவி ஊர்தி திருவாரூரில் அர்ப்பணிக்கப்பட்டது.
தமுமுகவின் 23வது அவசர உதவி ஊர்தி குடியரசு தினமான ஜனவரி 26 அன்று நாகை மாவட்டம் ஏனங்குடியில் அர்ப்பணிக்கப்பட்டது. அதேநா ü ல் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் தமுமுகவின் 24வது அவசர உதவி ஊர்தி அர்ப்பணிக்கப்பட்டது.
10.02.2007 அன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் த.மு.மு.கவின் 25வது அவசர உதவி ஊர்தி அர்ப்பணிக்கப்பட்டது.
டெல்லி பேரணி: எழுச்சி கூட்டங்கள்
மார்ச் 7 டெல்லி பேரணியை விளக்கி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களும், தெருமுனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.
டெல்லி பேரணியை விளக்கி பிப்ரவரி 16 அன்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன் இணைந்திருந்த சிறுபான்மையினர் நலத்துறையைத் தனியாகப் பிரித்து தனித்துறையாக உருவாக்க வேண்டுமென, பிப் 15,2007 அன்று முதலமைச்சரை சந்தித்து த.மு.மு.க வலியுறுத்தியது. இதன் விளைவாக தமிழக அரசு சிறுபான்மை நலத்துறையைத் தனியாக உருவாக்கியது.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு சட்டம் நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே தாக்கல் செய்யப்பட வேண்டும் என த.மு.மு.க தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதினார். சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் மானிய கோரிக்கையின் போது முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அ üக்கப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசுமாறு பல கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது,
சென்னையில் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
சென்ற ஜனவரி 6ம் தேதியன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை யகத்தில் தமுமுகவின் ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் சகோ. ஹுஸைன் பாஷா நடத்திய ''உணர்வாய் உன்னை'' எனும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் வடசென்னை, தென்சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர் உள்குட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமுமுக தொண்டரணிக்கு காவல்துறை பாராட்டு
160107 பொங்கல் கடைசி தினம் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் கடற்கரை மணலே தெரியாமல் மனிதத் தலைகளாகவே காட்சி தந்தன. மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூடிய மெரினாவில் தமுமுக மாநில தொண்டர் அணிச் செயலாளர் எம்.ஏ. முஹம்மது ரஃபி தலைமை யிலான குழு உதவி ஆய்வாளர் தலைமையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 50 தமுமுக தொண்டர்கள் களப் பணியாற்றினார்கள்.
கூட்ட நெரிசலில் தொலைந்து போன 68 குழந்தைகளையும் 4 முதியவர்களையும் மீட்டெடுத்து காவல்துறையின் உதவியுடன் உரியவர்ககுடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமுமுக தொண்டரணியினர் ஆற்றிய இந்தக் களப்பணியினை குழந்தை களைத் தொலைத்த பெற்றோர்களும், காவல் துறையினரும் தமுமுகவினரின் இந்தப் பணிகளை வெகுவாகப் பாராட்டினார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமுமுக தலைவர்கள்
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக 19.02.2007 அன்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் கலந்து கொண்டு தமுமுகவின் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
தமுமுகவுக்கு ரத்த தான விருதுகள்
கோவை மாவட்டத்தில் 2006ம் ஆண்டில் அதிக அளவு ரத்த தானம் செய்த தொண்டு அமைப்புகளுக்கு விருது வழங்கும் விழா சென்ற பிப்ரவரி 29ம் தேதி நடைபெற்றது. முதல் பரிசு கோவை மாவட்டத் தமுமுகவிற்கு வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் கலாநிதி விருதை வழங்க கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
கடந்த 23032007 அன்று ரத்த தான கழகத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் ரத்த தானம் செய்ததற்காக மாவட்ட அளவிலான முதல் பரிசு தமுமுகவிற்கு வழங்கப்பட்டது. விருதை டாக்டர் எஸ். ராமகுரு வழங்க மருத்துவ சேவை அணியின் மாவட்ட துணைச் செயலாளர் கே. தாஹீர் உஸாமா விருதை பெற்றுக் கொண்டார்.
நாகூர் தெத்தியில் பேரிடர் பாதுகாப்பு மையம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தெத்தி கிராமத்தில் பேரிடர் பாதுகாப்பு மையத்தை ஏப்ரல் 28 சனிக்கிழமை அன்று பகல் 1.00 மணியளவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் சமூகநலக் கூடத்தை திறந்து வைத்தார்
இந்த பேரிடர் நிவாரண மையத்திற்கு, சென்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொது சாலை விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் மவ்லவி. பி. அப்துல் ரஹீம் அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோட்டக்குப்பம் கடல் அரிப்பு: தமுமுக வழக்கு
சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் புதுச்சேரி மாநில எல்லையினை ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் தொடர்ந்து ஏற்படும் கடல் அரிப்பால் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடல் நீர் மக்கள் வசிக்கும் நிலப்பகுதிக்குள் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் நாசமாயின. பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும் மக்களுக்கு பலத்த சேதத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியது. கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டும், இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு மாற்று இடம் தரவேண்டும் என தமுமுக சார்பில் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி பொது நல வழக்கு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணையினை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், பழனிவேலு ஆகியோர், '''கடல் அரிப்பு மற்றும் கடல் நீர் நிலப்பகுதிக்கு வருவதைத் தடுக்க கோட்டக்குப்பம், ரஹமத் நகர், மூர்சா தெரு ஆகிய இடங்களில் சுமார் 97 லட்சம் செலவில் 100 மீட்டர் நீளமுள்ள தடுப்புச் சுவரை கட்டிட அரசு 8 மாத காலத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹீமுடன் தமுமுக தலைவர் சந்திப்பு
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடந்த மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பினாங்கில் இயங்கும் தலைசிறந்த நுகர்வோர் பாதுகாப்பு இயக்கமான பினாங்கு பயனிட்டாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் இப்பயணத்தை மேற்கொண்டார். இந்நுகர்வோர் சங்கத்தின் செயல்பாடுகளை அவர் அறிந்து கொண்டார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய வாழ் இந்திய முஸ்லிம்களின் அமைப்பான 'பெர்மிம்' சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதே போல் பினாங்கு ஈமான் சங்கம் மற்றும் கோலாலம்பூர் மதரஸா பரிதிய்யா ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக ü லும் தமுமுக தலைவர் பங்குகொண்டு உரையாற்றினார். பிரமுகர்கள், வணிகர்கள், எழுத்தாளர்கள் என முக்கிய நபர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை பொதுச் செயலாளர் கேப்டன் அமீருத்தீன், தலைமைக்கழகப் பேச்சாளர் வேங்கை இப்றாஹீம், சிவகங்கை மாவட்டத் தலைவர் மௌலா நாஸர் ஆகியோரும் பங்கேற்றனர்.
மலேசிய சுற்றுப்பயணத்தில் முக்கிய அம்சமாக பிரபல பொருளாதார மேதையும், முன்னாள் மலேசிய துணைப் பிரதமருமான அன்வர் இப்ராஹீமை தமுமுக தலைவர் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது.
சிங்கப்பூரில் எழுச்சிமிக்க நிகழ்ச்சிகள்
மே12 மற்றும் மே 13 ஆகிய இரு தினங்க ü ல் தமுமுக தலைவர் சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் செய்தார். தமிழ் முஸ்லிம் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் 'தமிழக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்களும் அவற்றை எதிர்நோக்கு வழிமுறைகளும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டனர். தமிழக முஸ்லிம்க ü ன் கூட்டமைப்பு தலைவர் ஆடிட்டர் பிரோஸ்கான் ஏற்பாட்டில் மறுநாள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சுல்தான் பள் üவாசலில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் இஸ்லாமியப் பணிகளை ஆற்றும் சகோதரர்கள் பங்குகொண்டனர். சமுதாயப் பணிகள் தொடர்பான பல கேள்விகளுக்கு தமுமுக தலைவர் பதில் அ ü த்தார். இந்திய வம்சாவழி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு: கண்டன ஆர்ப்பாட்டம்
ஆந்திர மாநில தலைநகரம் ஹைதராபாத்தில் கடந்த வெள் ü க்கிழமை மக்கா பள்ü வாசலில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பைக் கண்டித்தும். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியானதைக் கண்டித்தும், குண்டுவெடிப்பில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் தமுமுக சார்பில் மே 22 அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாநிலப் பொருளாளர் ஒ.யு. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்புடன் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்கள்
மாணவச் செல்வங்களை ஒழுக்க சீலர்களாகவும், கொள்கை வீரர்களாகவும் உருவாக்கவும் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக ஆக்கவும் வருடந்தோறும் பள் ü க்கூட மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்களை தமுமுக நடத்தி வருகிறது. இந்த வருடமும் கோடை கால பயிற்சி முகாம்கள் தாம்பரம், சென்னை, ராமநாதபுரம், கோபிச்செட்டிபாளையம், காரைக்கால் என நான்கு இடங்க üல் நடத்தப்பட்டன. ஒரு வார கால பயிற்சி முகாம்க üல் தலைசிறந்த ஆலிம்கள், அறிஞர்கள் பங்குகொண்டு இஸ்லாமிய கொள்கை விளக்கங்கள், வரலாறு, ஒழுக்கம், விஞ்ஞானம், பத்திரிக்கைத்துறை என பல்வேறு தலைப்புகளில் பாடங்கள் எடுக்கப்பட்டன. வெறும் பாடங்களோடு நின்றுவிடாமல் கேள்வி பதில் நிகழ்ச்சி, விளையாட்டு என முகாம் அமர்க்களப்பட்டது.
இலங்கை அமைச்சர்கள் தமுமுக தலைமையகம் வருகை
சென்னையில் நடைபெற்ற ஏழாம் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கு கொள்வதற்காக வந்திருந்த நான்கு இலங்கை அமைச்சர்கள் மே 26 அன்று தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தனர். தமுமுக நிர்வாகிகளுடன் இலங்கையில் முஸ்லிம்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அஞ்சல் மற்றும் தகவல்தொடர்பு அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம், இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் சேர்மனும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான பஷீர் ஷேக் தாவூத், தோட்டக்கலை வளர்ச்சித்துறை அமைச்சர் நிஜாமுத்தீன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பைசல் காசிம் ஆகியோர் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர்கள் மவ்லவி ஜே.எஸ். ரிஃபாயி, பி. அப்துஸ்ஸமது ஆகியோர் அவர்களை வரவேற்றனர். இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கிடையே நடைபெற்றுவரும் மோதலில் சிக்கி தமிழ் பேசும் முஸ்லிம்ககுன் துயரங்களை இலங்கை அமைச்சர்கள் தமுமுக தலைவர்களுக்கு விவரித்தனர்.
பேராளர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
சென்னையில் கடந்த மே மாதம் 25, 26, 27 ஆகிய மூன்று தினங்களில் அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 7ம் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான தமிழ்ச் சான்றோர்கள் வருகை புரிந்திருந்தனர். இவர்களை வரவேற்று உபசரிக்கும் நிகழ்ச்சியை 28லி5லி07 அன்று ஒட்டல் ராயல் ரெசிடெண்ஸியில் தமுமுகவும் தமிழ்சுடர் நாளிதழும் இணைந்து நடத்தின.
இராமநாதபுரத்தில் தொண்டரணி அணிவகுப்பு
இராமநாதபுரத்தில் மே 26, 2007 அன்று சச்சார் குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரி மாபெரும் தொண்டரணி அணிவகுப்பு நடைபெற்றது. கோவை தொண்டரணியின் ராஜ அணிவகுப்பைத் தொடர்ந்து ராமநாதபுரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டரணியினரும், அவர்களுக்குப் பின்னால் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டரணியினரும் அணிவகுத்தனர். ஒருமணி நேரம் நடைபெற்ற அணிவகுப்பு முக்கிய வீதிக ü ல் வழியாகச் சென்று அரண்மனைப் பகுதியை அடைந்தது. மக்ரிப் தொழுகைக்குப் பிறகு எழுச்சிமிகு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமுமுக தலைவர்களின் வளைகுடா சுற்றுப்பயணம்
தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களும், ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் கடந்த ஜுன் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கடந்த ஜூன் 8 அன்று முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் துபாயில் ஸபா பூங்காவில் சிறப்பான கருத்தரங்கம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமீரகத்தில் உள்ள பல்வேறு மாகாணங்களுக்குச் சென்று கழகச் சகோதரர்கள் பங்குகொண்ட கூட்டங்க ü ல் கலந்துக் கொண்டு உரையாற்றினர்.
கத்தார் மாநாட்டில் பங்கேற்பு
கத்தாரில் தமுமுக சார்பு அமைப்பாக இயங்கி வரும் இந்தோ கத்தார் இஸ்லாமிய கவுன்ஸிலின் 10ஆம் ஆண்டு மாநாடு மிகுந்த எழுச்சியோடு தலைநகர் தோஹாவில் கடந்த 15-06-2007ஆம் தேதி கத்தார் அவ்காஃப் அமைச்சகத்திற்கு சொந்தமான ஃபனார் அரங்கில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமுமுக குவித்த இரத்த தான விருதுகள்
மாநில அளவில் இரத்த தானம் செய்ததற்கான விருது வழங்கும் விழாவில் தமுமுகவிற்கு 13 விருதுகள் கிடைத்தன. (சென்ற ஆண்டு 8 விருதுகள் பெற்றது குறிப்பிடத்தக்கது) நேரடியாக சென்று உடனுக்குடன் இரத்ததானம் செய்ததற்காக சிறப்பு விருதை இந்தியன் வங்கி, கனரா வங்கி போன்றவைகளே இதுவரை மாறிமாறி பெற்று வந்தன. ஆனால் இவ்வாண்டு இறையருளால் தமுமுக அவ்விருதை அவ்வங்கிகளிடமிருந்து கைப்பற்றியது. மேலும் தமிழக அளவில் அதிகமாக இரத்ததானம் வழங்கியதற்காக தமுமுக இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது. 1000 நபர்களுக்கு மேல் இரத்த தானம் செய்ததற்காக தமுமுக தலைமைக்கும், 500 நபர்களுக்கு மேல் இரத்த தானம் செய்ததற்காக கோவை மாவட்ட தமுமுகவிற்க்கும் விருதுகள் கிடைத்தன. மேலும் 100 நபர்களுக்கு மேல் இரத்தானம் செய்தற்காக கடலூர், திருச்சி, வட சென்னை, தாம்பரம், தி.நகர், கல்பாக்கம், திருவள்ளூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் கிளைகளும் விருதுகளைப் பெற்றன.
அமெரிக்க போர்க்கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு
ஈராக்கில் பேரழிவு ஏற்படுத்திய அமெரிக்க போர்க்கப்பல் 'நிமிட்ஸ்' சென்னையில் முகாமிட்டிருப்பதைக் கண்டித்து த.மு.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னை துறைமுகம் அருகே நடைபெற்ற எழுச்சிமிக்க இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க போர்க்கப்பல் மாதிரிகள் உடைத்து நொறுக்கப்பட்டு எரிக்கப்பட்டன.
தேசிய சிறுபான்மையினர் நல ஆணைய கூட்டத்தில் தமுமுக தலைவர்
தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் குறை கேட்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 04.07.07 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்புககுல் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் எம்.எச்.அன்சாரி அவர்க ü டம் வேண்டுகோள் விடுத்தார்.
அருப்புக்கோட்டையில் தமுமுகவின் 26 ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் 15.07.2007 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் த.மு.மு.கவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, மாநில துணைச் செயலாளர் பேரா. ஜெ. ஹாஜாகனி, தலைமைக்கழகப் பேச்சாளர் சிவகாசி முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
அந்தமானில் தமுமுக துவக்கம்
ஜுலை 13 ஆம் தேதி முதல் தமுமுக மாநிலச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி அவர்கள் அந்தமானுக்கு சுற்றுப் பயணம் செய்தார். அன்று மாலை இறைநம்பிக்கை என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ். ரிஃபாயி சொற்பொழிவு நிகழ்த்தினார்.
ஜுலை 16 ஆம் தேதி அந்தமான் வரலாற்றில் சமுதாய மார்க்க அரசியல் விழிப்புணர்வுக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆம் அன்று தான் (15-07-2007) தமுமுக உதயம் ஆனது. நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அந்தமான் வாழ் சகோதரர்களுக்கு மார்க்க சொற்பொழிவுக்காக ஓர் மார்க்க அறிஞரை தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்குமாறு அந்தமான் தமுமுக, தலைமைக்கு கோரிக்கை வைத்தது.
தஞ்சை மாவட்ட இரத்த தான விருது
தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜா மிராசுதார் மருத்துவமனை இணைந்து நடத்திய மாவட்ட அளவில் இரத்த தான சேவை செய்தவர்களுக்கான விருதுகளை வழங்கியது. அதில் தஞ்சை மாவட்ட தமுமுகவிற்கு மாவட்ட அளவில் இரண்டாம் இடத்திற்கான விருது கிடைத்தது. இந்த விருதை மாவட்ட மருத்துவ அணி சேவை செயலாளர் சோழபுரம் யாஸிர் பெற்றுக் கொண்டார்
காரைக்காலில் சமூகநலக்கூடம் அர்ப்பணிப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சுனாமியால் பாதிக்கப்பட்ட காரைக்காலில் ஜுலை 28 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தலைமையில் சமூகநலக் கூடம் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சமூகநலக் கூடத்தை புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் எஃ.ப். ஷாஜகான் திறந்து வைத்தார்.
காஞ்சி மாவட்ட அணிவகுப்பு மற்றும் மாநாடு
தமுமுகவின் காஞ்சி மாவட்டம், ஆகஸ்ட் 17ம் தேதியை மறக்க முடியாத கழக வரலாறாகப் பதிவு செய்திருக்கிறது. சென்னையின் நுழைவாயிலாக இம்மாவட்டம் இருப்பதால், மாவட்ட நிர்வாகிகள் அதீத சிரத்தையெடுத்து மாநாட்டுப் பணிகளை வெகு நேர்த்தியாக செய்திருந்தனர்.
மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுத்த இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்டு கோவை தொண்டரணியைப் போன்றே மிடுக்காக தொண்டரணியை தயார்படுத்தியுள்ளனர். அணிவகுப்பிலும் அதே நேர்த்தி! அதே கம்பீரம்! அல்ஹம்துலில்லாஹ்!!
28வது அவசர ஊர்தி சாயல்குடியில் அர்ப்பணிப்பு
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சாயல்குடியில் ஆகஸ்ட்16 ஆம் தேதி அன்று 28வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்புலன்ஸை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில துணைச் செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், தலைமைக்கழகப் பேச்சாளர் சிவகாசி எம். முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வீட்டுவசதி வாரிய அமைச்சர் சுப. தங்கவேலன், கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
குலசேகரப்பட்டணத்தில் மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணத்தில் இரண்டு நாள் மருத்துவமுகாம் கடந்த ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில் இருதயம், காது மூக்கு தொண்டை, கண், தொண்டை மற்றும் எலும்பு நோய்களுக்கான சிறப்புமிகு மருத்துவர்களால் இந்த முகாம் நடைபெற்றது. அனைத்து சமயங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் இம்முகாமில் பங்குக் கொண்டு பயனடைந்தனர். தமுமுக வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முகாமாக இது அமைந்தது.