துபை வாழ் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுடன் பேராசிரியரின் கலந்துரையாடல்
===============================================
அமீரகம் வருகைத் தந்துள்ள சமுதாயத்தின் மூத்த தலைவர் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் M L A அவர்கள் 20-04-2015 திங்களன்று இரவு 9:00 மணியளவில் துபை அல்முத்தினாவில் உள்ள அஸ்கான் D பிளாக்கில் தனது தொகுதிற்கு உற்பட்ட சகோதரர்களை சந்தித்து கலந்துரையாடினார்,கடந்த நான்கு ஆண்டுகளாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தான் செய்த பணிகளை தொகுதியின் பொதுமக்களிடத்தில் விளக்கினார்,சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கும் விளக்கமளித்தார், பின்னர்
பேராசிரியர் அவர்களின் கையெழுத்தினால் உருவான நூல்கள் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது .
1.தித்திக்கும் திருப்பு முனைகள் -
மதுக்கூர் ஹாஜா வழங்க ஜாகிர் ஹுசைன் ( MD POWER GROUPS OF COMPANY ) பெற்றுகொண்டார்
2.பாலஸ்தின வரலாறு
ஹமீது கக்கன் வழங்க பைஜுர் ரஹ்மான் (AYMAAN TRUST - WELFARE DEPT) பெற்றுகொண்டார் .
3.40 ஹதிஸ்கள்
மகாரும் காக்க வழங்க தவ்பீக் அவர்கள் பெற்றுகொண்டார் .
4.அகிலத்திக்கு அருட்கொடை அண்ணல் நபி ஸல் அலைஹிவசல்லம் .
சமீம் வழங்க சபியுல்லாஹ் அவர்கள் பெற்றுகொண்டார் .
இந்நிகழ்வில் அமீரகத்தின் பல்வேறு பகுதிலிருந்து தமுமுக கொள்கை சகோதாரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்