ஆசான்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 15, 2023, 10:21:35 AM4/15/23
to Santhavasantham
MM> ஆசுகவி- அறிவால் குற்றம் உடைய கவி😅

ஆஶு- = விரைவு. ஆஶுகவி = விரைந்து கவிபாடும் கவிவலவர், மரபின்மைந்தன் போல்.
ஆஶுகவி > ஆசுகவி. பஶு > பசு எனத் தமிழில் ஆதற்போல்.

இதற்கும், ஆசார்ய- எனும் வடசொல் தற்பவமாக ஆகும் ஆசிரியன் என்பதற்கும்
எந்தத் தொடர்புமில்லை.
ஆசிரியன் = ஆசு + இரியன் எனப் பிரித்தல் பிழை. ஆசான் = குற்றம் மலிந்தவன் என
இழிபொருள் தந்துவிடும்.

மாசு > ஆசு. இந்த எதிர்மறையில் இருந்து தொழிற்பெயரின் உற்பத்தி என்றால்
ஆசிரிசெய்வோன், ஆசிரித்தன் எனத் தொற்றமிழர் பெயர் வைத்திருப்பர்.
ஆசறுப்போன்(மாசறுப்போன்), ஆசற்றோன்(மாசற்றோன்) எனப் பெயரிட்டு நேராகப்
பொருள் விளங்கவைத்திருப்பர். தன்வினை, பிறவினை பொருள்கள் பற்றி
கோதைமோகனுக்கு எழுதியுள்ளேன். ஆசு = குற்றம் என்ற சொல்லினின்றும்
ஆசிரியன் தோன்றியிருந்தால் மாசறுப்போன் > ஆசறுப்போன் என வாத்தியாருக்குப்
பெயர் வைத்திருப்பர்.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள் - குறள்

ஒரு சொல்லின் தாதுவேர் காண உழைத்தல் வேண்டும் என்றார் தொல்காப்பியனார்
(சொல்லதிகாரம்):

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே.

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்.
...
மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா.

NG
Reply all
Reply to author
Forward
0 new messages