அங்கதம் எனில் என்ன என சொல்லுங்க
அங்கதந் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே.
ஔவையின் ‘இவ்வே பீலியணிந்த’ என்னும் புறப்பாட்டு செம்பொருள் அங்கதம் எனலாம். கரந்த அங்கதத்தில் தமிழின் மகாகவி திருவள்ளுவருக்கு இணை யாருமில்லை. தமிழ்ச் சமணர்கள் பன்னெடுங்காலமாக இந்திரனை 1000 தாமரைக்கண்ணான் என்Ru அதற்கொரு கதையும் விளக்கமாகச் சொல்லி வந்துள்ளனர். தாமரை என்றால் அவன் அடைந்த பரிசில் ஆன யோனி என்பது அன்றைய தமிழகத்தில் பிரபலமான கதை. அதைத் திருவள்ளுவனார் குறிப்பாகச் சொல்லியுள்ளார். வள்ளுவரின் தாமரைக்கண்ணான் கதையை விரிவாகத் தந்தவர் சிந்தாமணியுடையார் ஆகிய திருத்தக்கதேவர். மிக விரிவாகப் பல இடங்களில், சிந்தாமணியைப் பின்பற்றி விருத்த யாப்பில் காவியம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் தாமரைக்கண்ணான் என்று சமணர்கள் சொல்வதன் விளக்கம் தந்துள்ளார். கம்பரின் ஒருபாடல் பற்றி பலமாதங்கள் முன்பு எழுதினேன். அதுவரை யாரும் கம்பன் கூறும் இந்திரன் பட்டமும், அப் பட்டக்காரணம் அவருக்கு முன் 1500 ஆண்டுகளாகத் தமிழகத்தில் சிரமண சமயத்தவர் சொன்ன கதையும் ஆராயப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே கருப்பொருளுடைய அரிய பாடலைச் சொ. வினைதீர்த்தான் அவர்கள் நேற்று மின்முழுக்களில் பலரும் அறியத் தந்தார்கள். கம்பன் தாமரைக்கண்ணான் என்று வள்ளுவர் குறிக்கும் இந்திரனைச் சொல்லும் இடங்களை எல்லாம் தொகுத்து நல்ல கட்டுரை எழுதலாம். தமிழர்களின் சமய வளர்ச்சி வரலாறு அறிய அக்கட்டுரை உதவும். வள்ளுவர்
இந்திரனைத் ‘தாமரைக் கண்ணான்’ என்பதும் கரப்பங்கதமே என்பது தெளிவு. கம்பரும் அங்கதம் என்ற சொல்லைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்துகிறார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். மணி மகுடம் பறி போன இராவணன் அங்கதப் பாடலால் புகழ் அழிந்த ஒருவனை ஒத்திருந்தான் என்கிறார் கம்பர்.
இதைவிட, வள்ளுவர் மிகச் சிறந்த அங்கதச் செய்யுள் ஒன்றை முழுதுமாகப் பாடியருளியுள்ளார். மகாகவி வள்ளுவர் நமக்கெல்லாம் தந்துள்ள அங்கதக் குறள் யாது?
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
இதன் விளக்க உரையைக் காண்க:
https://groups.google.com/forum/#!msg/vallamai/1ZtPfgP0GIA/-WCW4iuTKs0J
-------------------------------
இளம்பூரணர் உரை
செய்யுளியல்
429 அங்கதந் தானே அரில்தபத்1 தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே.
என்-னின் . அங்கதச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அங்கதமாவது குற்றமற ஆராயிற் செம்பொருளெனவும் , கரந்த தெனவும் இருவகைப்படும் என்றவாறு. அவை முன்னர்க் காட்டுதும்.
(118)
1.அரில்தப' என்றது என்னையெனின் அவை புகழ்போன்ற வசையாதலும் பட்டுத் தோன்றும் மயக்க முடைய ஆதலின் மயக்கமறத் தெரியின் என்றவாறு. ' நூற்றுவர் தலைவனைக் குறங்கறுத் திடுவான் ' என்பது புகழ்போன்று வசையாயிற்று.என்னை? கொன்றானாயினும் குறங்கினும் கதத்தண்டு கொண்டு எற்றுதல் குற்றமாதலின் என்பதறிக. கொடைமடங்கூறுதல் வசைபோன்று புகழ் எனப்படும் . அஃது அங்கதம் ஆகாதென்பான் அரில்தப என்றான் என்பது. (தொல் , பொருள் , 436 , பேரா.
--------------------------------------------
நச்சினார்க்கினியர் அங்கதச் செய்யுள் என்று விளக்க ஒரு கதை
சொல்கிறார். ”நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளிலே கொண்டான் என்னுங் குயவன் பட்டிமண்டபமெய்தி வடமொழியே சிறப்புடையதென்றும் தமிழ் சிறப்புடைய தன்றெனவு மிழித்துக் கூறினான். அதுகேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள்ளுகின்றது; தமிழை இகழ்ந்த நின்னை வடமொழியாலே இறக்கும்படி கூறுகிறேன்; அது நின்னை இறக்கச் செய்யாதாயின் தமிழ் தீதேயென்று சொல்லி "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி, பரண கபிலரும் வாழி - அரணிலா, ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான், ஆனந்தஞ் சேர்கசுவா கா" என்று கூறலும் அவன் அவ்விடத்தே வீழ்ந்து உயிர்துறந்தான். (ஆனந்தம்-சாக்காடு) அதனை நோக்கிய ஏனையோர் வந்து வேண்ட "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய; அந்தண்பொதியி லகத்தியனா ராணையாற், செந்தமிழே தீர்க்கசுவா கா" என்றொரு வெண்பாப்பாட அவன் உயிர்பெற்றெழுந்தானென்ப.”
http://218.248.16.19/slet/l1200/l1200pd2.jsp?bookid=21&auth_pub_id=100&pno=759
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றிப்பற்றத் தலைப்படும் தானே
நச்சினார்க்கினியர் மந்திரத்தினின்றும் வேறுபடுத்திக் காட்ட நக்கீரரின் வெண்பாக்களை உதாரணம் காட்டுகிறார்.
ஒப்பியன்மொழிநூலில் (பக். 62, 63) பாவாணர் நச்சினார்க்கினியர் தரும் கதையை விளக்குகிறார்:
http://218.248.16.19/slet/lA100/lA100pd2.jsp?bookid=186&pno=62
இதில் பரிதிமாற்கலைஞரை நச்சினார்க்கினியருடன் ஒப்பிட்டுப் போற்றுகிறார். தமிழ்நாட்டின் எல்லாச் சமூகத்தவரும், சமயத்தவரும் செந்தமிழை வளர்த்தெடுத்தனர். இன்று ஆரியமும், செந்தமிழுமே இந்தியாவின் செம்மொழிகள் என ஜார்ஜ் ஹார்ட் போன்றோர் வரையறுக்க உதவுவது நச்சினார்க்கினியர் போன்றோர் பெருங்கொடையே.
நா. கணேசன்
இன்கவி பாடும் பரம கவிகளால்
தன்கவி தான்தன்னைப் பாடுவி யாதுஇன்று
நன்குவந்து என்னுடன் ஆக்கிஎன் னால்தன்னை
வன்கவி பாடும்என் வைகுந்த நாதனே! - நம்மாழ்வார்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே! - திருமூலர்
On Saturday, August 24, 2013 6:24:32 PM UTC+5:30, N. Ganesan wrote:நச்சினார்க்கினியர் அங்கதச் செய்யுள் என்று விளக்க ஒரு கதை
சொல்கிறார். ”நக்கீரனார் சங்கத்தில் வைகுநாளிலே கொண்டான் என்னுங் குயவன் பட்டிமண்டபமெய்தி வடமொழியே சிறப்புடையதென்றும் தமிழ் சிறப்புடைய தன்றெனவு மிழித்துக் கூறினான். அதுகேட்ட நக்கீரர் வடமொழியே தமிழைச் சிறப்புடைய மொழியென்று ஒப்புக்கொள்ளுகின்றது; தமிழை இகழ்ந்த நின்னை வடமொழியாலே இறக்கும்படி கூறுகிறேன்; அது நின்னை இறக்கச் செய்யாதாயின் தமிழ் தீதேயென்று சொல்லி "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி, பரண கபிலரும் வாழி - அரணிலா, ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான், ஆனந்தஞ் சேர்கசுவா கா" என்று கூறலும் அவன் அவ்விடத்தே வீழ்ந்து உயிர்துறந்தான். (ஆனந்தம்-சாக்காடு) அதனை நோக்கிய ஏனையோர் வந்து வேண்ட "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய; அந்தண்பொதியி லகத்தியனா ராணையாற், செந்தமிழே தீர்க்கசுவா கா" என்றொரு வெண்பாப்பாட அவன் உயிர்பெற்றெழுந்தானென்ப.”
http://218.248.16.19/slet/l1200/l1200pd2.jsp?bookid=21&auth_pub_id=100&pno=759
5% லிடரேட்டில் குயவரும் அடக்கம். :)