பாரதிக்கு ஜதி பல்லக்கு - ஹூஸ்டன் பொன்விழா ஆண்டு!

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 31, 2024, 7:10:34 AM8/31/24
to Santhavasantham, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, Dr. Y. Manikandan, George Hart, Dr.Krishnaswamy Nachimuthu, tiruva...@googlegroups.com
பாரத தேச விடுதலைக்கு வாய்த்த மகாகவி பாரதி. பாரதமாதா கருத்துருவாக்கம் வங்காளியர் 19-ம் நூற்றாண்டுக் கடைசியில் உருவாக்கினர். பாரதமாதாவைத் தமிழர்க்கு அறிமுகம் செய்து கவிபாடினோரில் நம் தேசியகவி பாரதி தலையாயவர். *பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்*
https://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html

பாரதியார் எட்டயபுரம் ஜமீந்தாரிடம் தன் "கவிப்புலமையை மெச்சி, ஜதிபல்லக்கு தா!" என்றார். அவர் வாழ்நாளில் அப்பெருமை கிடைக்கவில்லை. பின்னர் கிடைக்கிறது. பாரதி பிறந்த நாளில், திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லத்தில் ஜதி பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது. பார‌தி திருவிழா ந‌ட‌த்தும் வான‌வில் ப‌ண்பாட்டு மைய‌த்தின் த‌லைவ‌ராக‌ இருப்ப‌வ‌ர் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ர‌வி. இவ‌ர் செய்திவாசிப்பாள‌ராயிருந்த‌ ஷோப‌னா அவ‌ர்க‌ளின் க‌ண‌வ‌ர். ரவி - ஷோபனா ரவி முயற்சியால் தொடங்கிய நிகழ்ச்சி, "ஜதி பல்லக்கு". பாரதி கலைமன்றம் பொன்விழா பாரதிக்கும், வள்ளுவருக்கும் ஜதி பல்லக்குடன் தொடங்குகிறது. பாரதி "ஜதி பல்லக்கு" கேட்டதை, அவரது சொற்களால் அறிவோம்! 2 மே 1919 தேதியன்று பாரதி எட்டயபுர மன்னருக்கு *சீட்டுக்கவி* எழுதினார். அறுசீர் விருத்தங்கள் ஐந்து, முழுமையாக வாசிக்க:
https://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html

வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
       கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட
       நீகேட்டு நன்கு போற்றி
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள்
       பொற்பைகள் ஜதிபல் லக்கு
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப்
       பல்லூழி வாழ்க நீயே!
 
பாரதி இன்று வானுலகு விட்டு ஹூஸ்டன் மீனாட்சி கோவிலுக்கு வந்துவிட்டார்!

தெரிவு,
நா. கணேசன், PhD (SME, Space Structures)
பாரதி கலை மன்றம், ஹூஸ்டன் - பொன்விழா ஆண்டு. Bharati Kalai Manram Golden Jubilee (1974 - 2024), Houston, Texas, USA.

Reply all
Reply to author
Forward
0 new messages