பொதுவாக ராகம் தானம் பல்லவியில் பாடும் பல்லவி வரிகள் ராகமுத்திரையை ஏந்தி எடுத்துக்கொண்ட ஒரு தாளத்தின் ஒரு ஆவர்த்திக்குஅமைத்துக்கொள்ளப்படும் அதில் பூர்வாங்கம், உத்தராங்கம், எடுப்பு, பதகர்ப்பம், அறுதிக் கார்வை என்ற பலவும் உண்டு. நான்கு களை என்பது ஒவ்வொரு எண்ணிக்கையையும் நான்கு முறைப் போடுவது. உதாரணமாக ஆதி தாளம் என்று எடுத்துக்கொண்டால் அதில் 8 எண்ணிக்கைகள். நான்கு களையாகப் போடும்போது அவை 32 ஆகிவிடும்.ஹம்ஸத்வனி என்பதால், விதுஷி இந்த வரிகளை அமைத்துக்கொண்டிருக்க வேண்டும். தினமலரின் விமர்சகர் வரிகளைத் தவறாக எழுதியுள்ளார் என்று நினைக்கிறேன்.. " ஹம்ஸோஹம் ஸோஹம்ஸ ஆனந்தஸாகரம் பரம" என்று எழுதியிருக்கிறது. அது, "ஹம்ஸ ஸோஹம் - ஸோஹம் ஹம்ஸ ஆனந்தஸாகரம் பரம்" என்றிருக்கவேண்டும்.இது பந்துல ராமாவே செய்த பல்லவி வரியாக இருந்திருக்கவேண்டும். இந்த கச்சேரியும் 2014 நடைபெற்றதாகத் தெரிகிறது. யாராவது இதை ஒலிப்பதிவு செய்திருப்பார்கள்.. விசாரித்துப் பார்க்கவேண்டும். தேடிக்கொண்டிருக்கிறேன்..
On Sat, Apr 1, 2023 at 7:30 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:Looking for a Carnatic song.--
https://www.dinamalar.com/news_detail.asp?id=1150797
ஹம்சத்வனியில் ஆலாபனை செய்து தானம் பாடி, 'ஹம்ஸோஹம் ஸோஹம் ஆனந்த ஸாகரம் பரம' என்ற பல்லவியைப் பாடி, நிரவல் செய்து விளம்பகாலத்திலும் மத்தியமகாலத்திலும் கற்பனை சுரம் பாடினார்.இந்த பல்லவி, திரிபுட தாளத்தில்,நான்கு களையில், அரை இடம் தள்ளி எடுப்பு என்பதாக அமைந்திருந்தது.சமீப காலங்களில், இசை விழாக்களில், நான்கு களையில் கலைஞர்கள் பாடுவதோ இசைக் கருவிகளில் பல்லவி வாசிப்பதோ, வழக்கத்தில் இல்லை.
---------
இப்பாடல் யார் இயற்றியது? முழுவடிவம் கிடைக்குமா?
நா. கணேசன்
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAA%2BQEUdU1pP_9N1L2bwPQEejXc%3DAYBjmnhveNcQ9hzGHmHJ2rQ%40mail.gmail.com.
----
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALCiuL4mvuJx_M6Or_e%3DGF%3D-oNneSkmyA7A5BbfprX5vVqXXOQ%40mail.gmail.com.