ல/ர மாற்றம். நீர்-/நீல- போல.
பெரியபுராணம். உம்பர் = யானை.
எம்பிரான் தன் மேனியின்மேல் சருகு விழாமையான் வருந்தி
உம்பர் இழைத்தநூல் வலயம் அழிப்பதே என்று உறுத்து எழுந்து
வெம்பிசிலம்பி துதிக்கையினில் புக்குக்கடிப்ப வேகத்தால்
கும்பயானை கைநிலத்தில் மோதிக்குலைந்து வீழ்ந்தது ஆல்
"Should this elephant do away with my web of threads
Which I have wrought with pain, as a canopy
To prevent the fall of dry leaves on the person of the Lord?"
Thus thinking in great ire and sorrow, the spider moved
Into the hole of the tusker's trunk and stung it;
Unable to bear the immense pain, the mammoth
Struck the earth with its trunk (repeatedly),
Fell down undone and died.
(Translation by TN Ramachandran)
இது போல், உம்பர் = யானை என்ற மேலும் இலக்கியச் சான்று இருந்தால் தருக. நன்றி.
நா. கணேசன்