Why Sangam poets compare Proto-Nagasvara (Pungi/MakuDi) with the trunk of elephants?
https://groups.google.com/g/houstontamil/c/QWXmPGLO0sE/m/x-jFmAh8BQAJ*கடி* இரும்புன்னை என்கிறது குறிஞ்சிப்பாட்டு. திண்காழ் வயிர் - வயிர் என்னும் குழாய் துளையாக வகிர்ந்தது/வகுந்தது. இன்றும், வயிறு வகுறு/வகிறு என்கிறோமே. புன்கி/புங்கி புன்னை மரத்தைக் குழாய் போலச்செய்து ஆம்பல் (அ) கொன்றை (அ) முல்லை மலர் போன்ற அணைசுகளுடன் செய்யும் ஊதுவாய். பின்னர் சுரைக்குடுக்கை (அ) தேங்காய் ஓடு, கடைசியில் யானைத் துதிக்கைபோல, மூங்கில் குழல்கள் இரண்டு: melody pipe and drone pipe.
Biologist and Agro-Scientist, Dr. Mahesh K., Florida sent this drawing of the "breathing tube" of the Punnai trees.
https://uses.plantnet-project.org/en/Calophyllum_inophyllum_(PROTA)#
வாஷிங்டனில் சிவசங்கர் நாதஸ்வரம் வாசிக்கிறார். அவரது கட்டுரையில் இருந்து,
https://www.valaitamil.com/Feb-month-article_19209.html“ ஆதி தமிழர்கள் மரத்தினைப் பயன்படுத்துவதில் எவ்வளவு நிபுணத்துவம் கொண்டிருந்தார்கள் என்பதற்குச் சில உதாரணங்களை இங்குக் காணலாம், பலா மரத்தில் பானை வடிவில் குடையும்போது உடையாமல் இருக்கும், மற்றும் நாதத்தைப் பெருக்குவதில் பலாமரம் பெரும் பங்கு வகிக்கிறது. இதனாலேயே வீணை பலா மரத்தில் செய்தனர். புன்னை மரத்தில் குழாய் போல் நீளமாகக் குடைந்தால் வைரம் போல வெடிக்காமல் இருக்கும் என அறிந்தவர்கள், நாதசுரக் கருவியினை புன்னை மரத்தில் செய்தனர். சுரபுன்னை என்ற பெயரும் பெற்றது. ஆச்சா மரம் கொண்டும் நாதசுரம் செய்யத் தொடங்கினர். இன்றும் நாதசுரம் தான் உலகிலேயே மரத்தினால் செய்து அதிக இசையோசை எழுப்பக் கூடிய ஒரே துளைகருவி.”
தண்செய் (தஞ்சை) ராஜராஜீச்சரம் கோவிலிலே ஒரு கல்வெட்டு, நட்டுவாச்சார்யன் ஆன சாவூர் சோனகன் பரஞ்சோதி என்பவனைப் பற்றி உள்ளது. பரஞ்சோதி ஹிந்து என்பது பெயரால் தெரிகிறது. இன்றும், ராவுத்தன் என்பது போன்ற பெயர்கள் இந்துக்கள் சூடிக்கொள்கின்றனர். சோனகம், பழைய வடமேற்கு இந்தியா (காந்தாரம் போன்ற நாடுகள்), அங்கே யவனர்கள்(கிரேக்கர்) வருகையால் நாடகம் கூத்தியல் தழைத்தது. குப்தர் அரசவையை அலங்கரித்த மகாகவி காளிதாசன் எழுதிய நாடகங்கள் இந்த சோனக நாடுகளின் நாடகங்களின் தாக்கம் உண்டு. அங்கே பயின்று, தஞ்சாவூர்ப் பெரிய கோவிலில் தமிழ் மொழிக்கு வடபுலத்து கலைநுட்பங்களைக் கொணர்ந்து நாடகங்கள் நடத்தியிருக்கிறான் பரஞ்சோதி ஆசான், யா மரங்கள் - Shorea trees and similar trees that attain great heights. யா மரங்கள் நிறைந்து விளங்குவது இந்தோனேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள். எனவே, யாவ(க)ம் எனப்பெயர். யவம் என்றால் பார்லி தானியம், எனவே, யாவம் என்ற பெயர் என சமற்கிருதப் பேராசியர் ஒருவர் எழுதியுள்ளார். அது பொருந்துமாறில்லை. யாவ-/யாவக- இப்போதும் ஜாவ தீவு உண்டு. சாவகச்சேரி யாழ்ப்பாணத்தில். சாவகம் மணிமேகலை செல்கிறாள். யாவ + ஊர் > யாவூர்/சாவூர் எனக் கருதுகிறேன். இதற்கு பரஞ்சோதி போன்றவர்கள் நாகூர், நாகப்பட்டினம் போன்ற துறைமுகங்களில் இருந்து சாவகத்திற்குப் பிரயாணம் சென்றிருக்கவேண்டும்.
யா-/சா- > யாவூர்/சாவூர் எனக் கல்வெட்டுப் போலவே, நாக + ஊர் = நாகூர் என வரும். நாகம் என்பது சுரபுன்னை, புன்னை மரங்கள். Mangrove forest trees. மகாவித்துவான் வா. குலாம்காதிறு நாவலர், புன்னை மரத்தால் - நாகம் - தம்மூர் நாகூர் பெயர்பெறுவதை நாகூர்ப்புராணத்தில் பாடியுள்ளார். இந்த நிலத்தில் புன்னை மரங்கள் நிறைந்து காணப்பட்டதாம். புன்னை மரங்களுக்கு மற்றொரு பெயர் நாகமரம். மலையாள மொழியில் இதன் பெயர் ‘புன்னாகம்’ என்பதாகும். நாகவூர் என்ற பெயரே பின்னாளில் நாகூர் என்று மருவியது என்கிறார் இவர்.
“போக மாமரம் பலவகை உளவெனிற் புன்னை
யேக வொண்மர முதன்மைமிக் கிருத்தலின் இவ்வூர்
நாக வூரெனுந் தலைமை பற்றி யபெயர் நண்ணி
யாக மற்று நாகூர் எனம ரீஇயதை யன்றே”
– (நாகூர்ப் புராணம், செய்கு யூசுபு நாயகர் உபாத்துப்படலம்: 6)
https://nagoori.wordpress.com/2014/08/24/நாகூர்-என்ற-பெயர்-ஏன்-வந்/https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU0kJUy.TVA_BOK_0005776/mode/2upநாகசுரம் என்னும் தமிழிசைக் கருவி, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்தது என்பதற்கு முகாந்திரம் இல்லை. இசைக் கருவிகள் பலவும் இப்போதெல்லாம், மொபைல் தொலைபேசிகளில் நல்ல ஒளிப்படங்கள் எடுக்க லட்சக்கணக்கானோரிடம் காமிராக்கள் உள்ளன. அவைகொண்டு, மூலை முடுக்குகளில் உள்ள கோவில்களில் தாளக்கருவி, யாழ், கின்னரம் (வயலின்), நாகசுரம், கொம்பு, ... இவற்றின் போட்டோக்கள், இருக்கும் இடம், இவையெல்லாம் ஆவணப்படுத்தினால், தமிழிசை வரலாறு இன்னும் துலக்கமாகும். இந்திய வரலாற்றின் பல கூறுகளை உணரப் பழந்தமிழினை ஆழமாக ஆராய வேண்டும். இந்தியாவில் உள்ள கலைவரலாறு, வட இந்தியா எப்படி தாம் பேசிய மொழிகளினின்றும், ஆரிய பாஷைகளுக்கு மாற்றம் பெற்றது என்பதெல்லாம் அறிய தமிழ்/த்ராவிட மொழியியல் ஒரு துறையாக உதவுகிறது. இந்திய வானவியல் ஆய்வால் வெளிப்படும், ஆர்க்கியாலஜி செய்திகள் இரண்டைக் குறிப்பிடலாம்.
(1) தை/தைஇ- தனித்தமிழ்ச் சொற்கள். இதற்கு நேரான சமற்கிருதம் பிதா/நேதா/தெய்வம். யாரோ, சங்க இலக்கியம், தமிழ் பரப்பு தெரியாமல் தை வடமொழிச் சொல் என்று சொல்லிவிட்டார். தை என ஒரே எழுத்தாக, கூறப்படும் சம்ஸ்கிருத வார்த்தை குறுகாது. தற்பவமாக, இரண்டோ அதற்கு மேலோ எழுத்துக்கள் ஆகவேண்டும். ஒரே எழுத்தாய் தை போல வார்த்தைகள் சம்ஸ்கிருதம் தருவன அல்ல. ஆனால், சமற்கிருதத்தில் தை/தைஇ-க்கு தொடர்புடையதாக வார்த்தைகள் காணோம். புஷ்ய நக்ஷத்ரம் பூசம் என்றாவது போல ஆகவேண்டும். தை, தையல், தைத்தல் முக்கியமான சொற்கள். தய்-க்கல்/தய்-த்தல்:: தச்சன்/தக்ஷன் என்ற சொற்கள் உருவாகும் வினைச்சொல் தைத்தல்/தச்சு. 12 மாதப் பெயர்களில் “தை” என்ற சொல் தனித்தமிழாக விளங்குகிறது. புள்ளிருக்குவேளூரில் தையல்நாயகிக்கு வாலாம்பிகை எனப் பெயர். எனவே, தையல் = வாலை (< Baalaa) என தமிழ்த்தாத்தா உவேசா விளக்கியுள்ளார்கள். தை, தையல், தைக்கல் - தாந்திரிகப் பொருளும் உண்டு.
இப் பாசுரத்தில் உள்ள சொற்கள் தமிழ் எப்படித் தற்பவம் செய்யும் எனக் காட்டும்.
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும் பாலூட்டாள் பாவை பேணாள்,
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன் ஐந் தழலோம்பு தைத்திரியன் சாம வேதி,
அந்தோ வந் தென்மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே,
(2) வட இந்தியாவின் ஆர்க்கியாலஜிஸ்ட்கள் பலருக்கு இன்னும் தை-கொற்றி தெய்வத் தம்பதி பற்றித் தெரியவில்லை. சிந்து வெளிச் சமையம் இது. Observe the amulet of 4MSR site (Binjor, Rajasthan), the symbols of Thai god, the Pole Star as crocodile and KoRRi (proto-Durga) as blackbuck are shown in the amulet. North Indian archaeologists say this is a Frog (Frontline, 2016). However LOOK at the scale of the two animals. Compared to the antelope, the frog will be tiny. Also, frog representations are just one from Indus valley - shows they are unimportant in Indus art - shown in proper scale 50% of nearby scorpions.
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html . Look at the crocodile in Adichanallur pottery, the scales of the antelope vs. crocodile again. Without realizing the scale issue, one archaeologist said, palli 'wall lizard'. If it were so, then the issue of scale, I pointed out at 10th WTC, Chicago, 2019.
பிற பின்,
நா. கணேசன்
http://nganesan.blgspot.com