Re: மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956

10 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 27, 2023, 7:37:00 AM9/27/23
to Santhavasantham, housto...@googlegroups.com, Dr. Y. Manikandan, sirpi balasubramaniam, Thevan, Vedachalam V
தி ஹிண்டு பத்திரிகை புகழ்மிக்க பத்திரிகை. 1878-ல் தொடங்கி 135+ ஆண்டுகளாய் இன்றும் அச்சாகும் பத்திரிகை. இணையத்திலும் இருக்கிறது. அதன் தமிழ்ப் பதிப்பில் திரு. வி. எஸ். நவமணி அவர்கள் (தமிழக ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர்) மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சியில் நிகழ்ந்தவற்றைத் தொகுத்துத் தந்துள்ளார். உ-ம்: நேதாஜியின் தோழர், “தேசியம் உடல், தெய்வீகம் உயிர்” என  வாழ்ந்த உ. முத்துராமலிங்கத் தேவர் மரணத்தின்போது அண்ணா ஆற்றிய உரைப்பகுதி:
https://kamadenu.hindutamil.in/politics/anna-didnt-apologize-in-madurai-devar-issue-says-forward-bloc-navamani
”1963-ல் தேவர் இறந்துபோகிறார். அப்போது நடந்த இரங்கல் கூட்டத்தில் பேசிய அண்ணாதுரை, “ இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் உள்ளனர். நான் ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் பணியாற்றிய போது, அங்கே தேவர் பேச வருவதாகச் சொன்னார்கள். இந்த ‘தென்பாண்டி சிங்கம்’ எப்படி இருக்குமென பார்க்க கூட்டத்தோடு நானும் நின்றேன்.

அப்போது பிடரி சிலிர்க்கும் சிங்கமென, துள்ளல் நடையுடன் மேடையேறிய தேவரைக் கண்டு ‘தென்பாண்டி சிங்கம்’ என்ற பெயர் இவருக்கு சாலப் பொருந்தும் என்று உணர்ந்தேன். அப்படி சிங்கம் போல இருந்த தலைவரை, அடையாளம் தெரியாமல் தனிமை சிறையில் அடைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் நஞ்சு கொடுத்து, எலும்பும் தோலுமாக இன்று நம் கையில் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் அரசு.

தேவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி, வரும் தேர்தலில் காங்கிரஸை வேரோரும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவதுதான்” என்றார். அதற்கு முன்னர் இந்த ‘ஸ்லோ பாய்சன்’ பேச்சே இல்லை. ” திராவிட இயக்கக் கட்சிகள் பத்திரிகைகளில் அண்ணாவின் முழுப்பேச்சு இருக்கும். அதனை இணைய உலா காணச்செய்தல் வேண்டும்.

இப்பேட்டியில் திரு. வி. எஸ். நவமணி குறிப்பிடும் ’தீபம்’ நா. பார்த்தசாரதி அவர்களின் 1974-ம் ஆண்டுக் கட்டுரை அவரிடம் கேட்டேன். அன்புடன் உடனே அனுப்பி வைத்தார். தீபம் நா. பார்த்தசாரதி அவர்களின் அரிய கட்டுரை தருகிறேன். வாசித்தருள்க. ~NG https://nganesan.blogspot.com

*ஒரு குறிப்பு*: தமிழிலே உள்ள மகாபாரதம் வில்லிபுத்தூராழ்வார் செய்தது. அதன் புரவலன் கொங்கர்கோன் வரபதி ஆட்கொண்டான். அவனைக் குறிக்கும் இடங்களில் எல்லாம், நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தான் என்று தான் பாடிய தமிழ் இதிகாசத்தில் வில்லிபுத்தூராரும், இதிகாசப் பாயிரத்தில், வில்லிபுத்தூரார் திருமகன் வரந்தருவாரும் பாடியுள்ளனர். எனவே, பாலவநத்தம் ஜமீந்தார் பொ. பாண்டித்துரைத்தேவர் அமைத்த மதுரைத் தமிழ்ச்சங்கம் ஐந்தாம் தமிழ்ச் சங்கம் என்பது சாலப் பொருந்தும்.

Deepam_NP_On_Thevar1.jpeg
Deepam_NP_On_Thevar2.jpeg

On Sun, Sep 24, 2023 at 9:31 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர், 1956
------------------------------
-----

பாலவநத்தம் கிழார் பொ. பாண்டித்துரைத் தேவரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் ஆதரவு நல்கி, மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901-ல் தொடங்கியது. பல தமிழ் இலக்கியங்கள் முதன்முதலாக அச்சுவாகனம் ஏறின. செந்தமிழ் என்னும் அரிய ஆய்விதழில் நல்ல கட்டுரைகள். புலவர் தேர்வு முறையாக நடந்தது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பல பெரும்புலவர்கள். மகாவித்துவான் ரா. ராகவையங்கார், மு. ராகவையங்கார் தலைமை வகித்தனர். இருவரும் எழுதிய இரு நூல்களில் தான் கரூர் சேர நாட்டின் தலைநகராக விளங்கியமை வெளிப்பட்டது. சங்க காலத்தில் வஞ்சி மாநகர் எனக் கரூர் அழைக்கப்பட்டது. அரண்மனை இருந்த பகுதி கருவூர். இப்போது “Downtown" என அமெரிக்க நகரங்களில் இருப்பது போன்றதாகும். பின்னாளில், தொல்லியல்துறையினர் சங்க கால வஞ்சி கரூர் என அகழாய்வுகள், நாணயவியல் கொண்டு நிறுவினர் என்பது 20-ம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு வரலாறு. ஆக, மதுரை, உறந்தை, வஞ்சி மூவேந்தர் தலைநகரங்கள் தமிழ் இன்றும் உள்ள தமிழ்நாட்டின் பெருநகரங்கள்.  வஞ்சிக்காண்டம் என்று தன் தலைநகர் அரண்மனையில் வாழ்ந்து சிலப்பதிகாரத்தின் இறுதிக்காண்டத்தை அமைத்துள்ளார் இளங்கோவடிகள். குலசேகர ஆழ்வார் காலத்திற்குப் பின் கேரளா பக்கம் சேரர்கள் தலைநகரம் மாறியது.

தற்போது மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன்விழா நிகழ்ச்சிகள், அதில் நடந்த சம்பவம் பற்றி, பத்திரிகைகளில் செய்திகள் அடிபடுகின்றன.
மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் 1956-ல் அச்சாகியது. தமிழவேள் பி. டி. இராசன் பதிப்பாசிரியர். 11 பேராசிரியர் கட்டுரைகள். தொகுப்புக்குப் பேரா. அ. கி. பரந்தாமனார் உதவியிருக்கிறார். மதுரை தமிழ்ச்சங்கப் பொன்விழா மலர் (1956) வாசித்தருள வேண்டுகிறேன்:
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0015792_மதுரைத்_தமிழ்ச்_சங்க_மலர்.pdf

தெரிவு:
நா. கணேசன்
https://nganesan.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages