Re: [வல்லமை] உலக சிட்டுக்குருவிகளின் நாள்

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Mar 21, 2023, 8:06:04 AM3/21/23
to tiruva...@googlegroups.com
முப்பதே ஆண்டு வாழ்ந்த ஷெல்லியின் தாசனாகப் புனைபெயர் வைத்துக் கவிதை இயற்றியவர் பாரதியார். பாரதியும் ஷெல்லியும் என்ற நூலில், தொ. மு. சிதம்பர ரகுநாதன் (திருச்சிற்றம்பலக் கவிராயர்), ஷெல்லியின் வானம்பாடிக் கவிதைக்கும் (To a Skylark), அதனை வாசித்த விளைவாய் சிட்டுக்குருவிப் பாடல், கட்டுரைக்குமான உறவுகளை விவரிக்கிறார்: தொமுசி, வானம்பாடியும், சிட்டுக்குருவியும்.
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZh8luhy.TVA_BOK_0003809/page/221/mode/2up

தெரிவு: NG

சிட்டுக் குருவி
    - பாரதியார்

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.

இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண். மற்றொன்று பெண். இவை தம்முள்ளே பேசிக் கொள்கின்றன. குடும்பத்துக்கு வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடுகட்டிக் கொண்டு, கொஞ்சிக் குலாவி மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசியில்லாமல் காப்பாற்றுகின்றன.

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமையுண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஏது, எனக்குத் தோன்றவில்லை. ஒருமுறையேனும் தலை நோவை அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை. பயமும் மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு. இருந்த போதிலும், க்ஷணந்தோறும் மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே. அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்கமாட்டாயா? பாழ்பட்ட மனிதர் கூட்டத்தையும், அதன் கட்டுகளையும், நோய்களையும், துன்பங்களையும், பொய்களையும் உதறி எறிந்துவிட்டு, நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்லமாட்டேனா? ஆஹா! எத்தனை தேசங்கள் பார்க்கலாம்! எத்தனை நாடுகள், எத்தனை பூக்கள்! எத்தனை மலைகள், எத்தனை சுனைகள், எத்தனை அருவிகள், எத்தனை நதிகள், எத்தனை கடல் வெளிகள்! வெயில், மழை, காற்று, பனி இவையெல்லாம் என் உடம்புக்கு நன்றாய் வழக்கப்பட்டு இவற்றால் நோய்கள் உண்டாகாமல் எப்போதும் இன்ப உணர்ச்சிகளே உண்டாகும் இந்த நிலை எனக்கு அருளபுரிய லாகாதா? குருவிக்குப் பேசத் தெரியும்; பொய் சொல்லத்தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு; தீராத கொடுமைகள் இல்லை. குருவிக்கு வீடுண்டு; தீர்வை கிடையாது. நாயகனில்லை; சேவகமில்லை.

தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலாகாதா? குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான். ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும்; குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும், இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால் நான் பரிபூரண இன்பத்தை அடையமாட்டேனா?

இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? ''விடு'' ''விடு'' ''விடு'' என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு வழி இன்னதென்று தெய்வம் குருவித் தமிழிலே எனக்குக் கற்றுக் கொடுப்பதுபோலிருக்கிறது.

விடு, விடு, விடு - தொழிலை விடாதே. உணவை விடாதே. பேட்டை விடாதே. கூட்டை விடாதே. குஞ்சை விடாதே. உள்ளக்கட்டை அவிழ்த்துவிடு. வீண் யோசனையை விடு. துன்பத்தை விடு.

இந்த வழி சொல்லுவதற்கு எளிதாயிருக்கிறது. இதனை நன்றாக உணர்ந்து கொள்ளுதல் எளிதன்று. உணர்ந்த பின்னும் இவை வழக்கப்படுத்துதல் அருமையிலும் அருமை.

'விடு' என்ற பகுதியிலிருந்து "வீடு" என்ற சொல் வந்தது. வீடு என்பது விடுதலை. இதை வடமொழியில் முக்தி என்கிறார்கள். இந்த நிலைமையை இறந்துபோனதன் பின்பு பெறவேண்டும் என்று பெரும்பாலோர் விரும்புகிறார்கள். இவ்வுலக வாழ்க்கையிலேயே, இப்போதே, அந்நிலையை விரும்புதல் நன்று.

விடுதலையே இன்பத்திற்கு வழி; விடுதலை பெற்றோர் வறுமையிலிருந்து மாறி செல்வமடைவார்கள். மெலிவும் நோயும் நீங்கி வலிமையும் உறுதியும் பெறுவார்கள். சிறுமை நீங்கிப் பெருமை காண்பார்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் எய்துவார்கள்.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.

நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர்.

அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.

பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.

பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்.

உலகச் சிட்டுக்குருவி தினம்
--------------------------------------------

சிறு + குருவி =சிற்றுக்குருவி/சிட்டுக்குருவி. தேவாரப் பாடல் பெற்ற தலம் வட குரங்காடுதுறை.  இத்தலத்தில் சிட்டுக்குருவி ஈசனை வழிபட்டது. எனவே, சுவாமி பெயர் சிட்டிலிங்கேசுரர்.

ஷெல்லி Skylark என்ற கவிதை பாடினான். அதன் தாக்கம், பாரதி சிட்டுக்குருவி எனச் சிறந்த கவிதை தந்தார்.

To a Skylark
    Percy B. Shelley (1792 - 1822)
https://www.poetryfoundation.org/poems/45146/to-a-skylark

உண்ணி கிருஷ்ணன் அழகாகப் பாடினார்,
https://youtu.be/vEjnKohKWKo
பித்துக்குளி முருகதாஸ்,
https://youtu.be/SPAl-I4zSQw

விடுதலை - சிட்டுக்குருவி
                மகாகவி பாரதியார்.

பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

சரணங்கள்
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு)

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு)

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)

N. Ganesan

unread,
Mar 29, 2023, 4:08:20 PM3/29/23
to Santhavasantham

On Wed, Mar 29, 2023 at 2:55 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
SK> வழமையான குருவியைக் காட்டிலும் சிறிய அளவினதான குருவிகள் (பெயர் தெரியாது- எங்கள் வீட்டில் எல்லோரும்
> குட்டிக்குருவி என்று சொல்வோம்) என் வீட்டுச் சீத்தா மரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.

Its name is Munia in English, from Hindi. இதுவா நீங்கள் குறிப்பிடும் குட்டிக்குருவி? இதன் தமிழ்ப்பெயர்களைப் பற்றிச் சொல்கிறேன்.
சிட்டுக்குருவியை ஒத்ததும், இந்தியாவில் மிகப் பரவலாக இருப்பதும் இந்த “முனியா”  தான்.



On Tue, Mar 21, 2023 at 8:17 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நடைமுறையில் ஆண்குருவிக்கும் பெண்குருவிக்கும் இடையில் நிகழும் இல்லறச் சண்டையைப் பார்த்த அனுபவம் உள்ளதா? 

வழமையான குருவியைக் காட்டிலும் சிறிய அளவினதான குருவிகள் (பெயர் தெரியாது- எங்கள் வீட்டில் எல்லோரும் குட்டிக்குருவி என்று சொல்வோம்) என் வீட்டுச் சீத்தா மரத்தில் ஒவ்வொரு சீசனுக்கும் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கும்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் சீதாமரம் ஏதோ நோய் கண்டு பட்டுப்போனது. வீட்டில் அப்படி நிற்கக் கூடாது என்று வெட்டிவிட்டோம். ஆண் குருவி கூடு கட்ட இடம் தேடியது. பாவம்... வழக்கமான மரம் இல்லாததால் வீட்டின் சலதாரைக் கடவுக்குள் இருந்த குழல்விளக்கிற்கும் பிடிப்பானு (ஹோல்டர்)க்கும் இடையில் குச்சிகளைச் சேர்க்கத் தொடங்கியது. பெண்குருவி 'வீர்வீர்' என்று கத்திக் கத்திச் சண்டை போட்டது. அத்தனை குச்சிகளையும் கலைத்துப் போட்டது. மீண்டும் மீண்டும் ஆண்குருவி அதே இடத்தில் குச்சிகளை அடுக்க... பெண்குருவி கலைக்க... இப்படியே மூன்று நாட்கள் தொடர்ந்தது. பின்னர் ஒருவழியாக தாழ்வாரத்து மூலையில் இருந்த கான்க்ரீட் சன்னலில் கூடு கட்டின. 

ஆனாலும் அந்த ஆண்குருவிக்கு இல்லாத சமயோசித புத்தி பெண்குருவியிடம் இருந்ததையும்; அதன் சாதிக்கும் இயல்பையும் எண்ணி வியப்பு மேலிட்டது.

ஆண்குருவி தான் கடைசியில் பணிந்து போனதும் லேட்டாகப் புரிந்து கொண்டதும்; குறிப்பிடத்தக்கது. 


சக 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd5GHN9MuiDt4P_2%2BWCj%2BrutFZPk-1f9ec3NZYQEYcrug%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcvuEH4yrovefm6EwFxZzi1Zo3-qh0-XrLbVa_0TOZGezw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 3, 2023, 9:17:53 AM4/3/23
to vall...@googlegroups.com
சிட்டுக்குருவி, க.நா.சு சிறுகதை
1955-இல் க.நா.சு. எழுதிய சிறுகதை இது...
https://porulputhithu.com/2023/04/03/short-story-of-ka-na-su-2/

On Thu, Mar 30, 2023 at 5:28 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
Thanks. Nice photos of the nest of black drongo.
It is called Valiyan for a reason:

பறவைகளில் கோட்டைப்பாலன் (> கொத்தவால்)

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசும். - ஆண்டாள்.
ஆனைச்சாத்தன் காரணப்பெயர். கரிக்குருவியின் வால், ஆனை மீது
ஆரோகணித்து வரும் சாத்தன் போல இருப்பதால் (மகாராஜலீலாசனம்).

கரிச்சாங்குருவி பாரத்வாஜ குலச் சின்னம். எனவே, எழுத்தாளர் புனைபெயர்.

NG

Reply all
Reply to author
Forward
0 new messages