Re: தமிழில் இடப்பெயர் ஆராய்ச்சி

33 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 26, 2014, 6:03:55 AM8/26/14
to mint...@googlegroups.com, tiruva...@googlegroups.com, housto...@googlegroups.com
On Monday, August 25, 2014 6:31:17 PM UTC-7, சிவகாமிப் பாட்டி வகையறா wrote:
உலகெங்கும் இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுப்புலத்தின் ஒரு பகுதியாக இடப்பெயராய்ச்சியை வலியுறுத்தி வளர்த்துள்ளனர்.  தமிழில் ரா.பி.சேதுப்பிள்ள இடப்பஎயர் பற்றி ஒரு ஆய்வு நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகப்  புவியியல் துறை தமிழகத்தின் பல சர்வே வரைபடங்களை கனடாவின் வாடர்லூ பல்கலைக்கழகக் கூட்டாய்வில் எண்ணிமப்படுத்தியபோது சில ஆய்வறிக்கைகளை உருவாக்கியது  நானறிந்தவரை லண்டனில் இந்தியா அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான திரிக்னாமெட்ரி சர்வே வரைபடங்கள் வரிசைப்படுத்தப்பட்ட ஆவணங்களாக உள்ளன.  கி.பி 1860-ல் மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாட்டுச் சர்வே தமிழகத்தில் உள்ள கிராமங்களின் பெயர்களை வரிசைப்படுத்திய்ள்ளதை அறியலாம்.  அதனடிப்படையில் கோடம்பாக்கம் என்ற ஊர் சைதாப்பேட்டைத் தாலுக்காவில் உள்ளது.  தமிழ் இடப்பெயராய்ச்சியைப் பல்கலைக் கழகங்களும் தமிழ் ஆய்வு நிறுவனங்களும் ஆய்வுத் திட்ட அடிப்படையில் முன்னெடுக்க முனைதல் வேண்டும்

மதஎசுஇந்திரன்


Another scholar who did Place name studies is Prof. K. Nachimuthu from Kongunad. He is in Pondicherry French Institute this week teaching Veerachoziyam grammar. 
It is important to study the hydronyms and toponyms of Pancha Dravida  lands. Like Tamil fonts slowly grow to include PuLLi, as Grantha fonts grow in Time in Malayalam BMP block, we need to introduce PuLLi to denote the place names of Dravidian languages  correctly to include short e, short o etc., Like Nachimuthu's
careful study of place names, Karur's Elango aDikaL, in his Jaina epic, carefully chose the character names for his Tamil nationalsitic novel.

கண்ணகி என்ற சொல் கர்ணகம் என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தி
பலகாலமாகக் கோவலன்கதை இருக்கிறது. ஆனால், கர்ணகம் என்பது மஹாலக்ஷ்மி வீற்றிருக்கும்
தாமரைக்கண் (பொகுட்டு) என அருமையாக விளக்கியவர் தமிழ்ப் பேரறிஞர் மு. இராகவையங்கார்
என்று குறிப்பிட்டிருந்தேன். அதனை வைத்துப் பார்த்தால் சிலம்பின் மாதவி(-குருக்கத்தி) போன்ற
பாத்திரப் பெயர்கள் எளிதில் விளங்கும்,

காவிரிக்கு ஏன் பொன்னி என்ற பெயர் வந்தது? - என ஏராளமான தமிழ்ப் பேரறிஞர்கள் எழுதியுள்ளனர்.
அவற்றில் சில குறிப்பிட்டேன். 

சைனா நாட்டில் மஞ்சளாறு இருக்கிறது. அது உற்பத்தியாகும் இடத்தில் மஞ்சள் மண் இருப்பதால்.
 ஆனால் தமிழ் நாட்டில் மஞ்சளாறு இல்லை. எந்த மொழியிலும் காபேரி, காவேரி என்றால் மஞ்சள்
நிறத்தைக் குறிப்பதில்லை என்று இந்திய மொழிகளின் அறிஞர்கள் உரைக்கின்றனர். எந்த மொழியில்
காபேரி, காவேரி என்றால் மஞ்சள்? ஒன்றிலும் இல்லை என்கின்றனர் இந்திய மொழியறிஞர்கள்.

பொன்னி என்ற இன்னொரு சிறு ஆறும் தமிழ்நாட்டில் இருப்பதை திருச்செங்கோடு அஷ்டாவதானம்
முத்துசாமிக்கோனார் விரிவாக எழுதியுள்ளார்கள் - 90 ஆண்டுகளுக்கு முன்னமேயே. எனவே,
பொன்னி என்ற காரணப் பெயர் விளங்கும். கோலார் மாவட்டத்தை காவேரியின் கேட்ச்மெண்ட் ஏரியாவில்
அடங்குவதை கர்நாடக அரசின் ஆவணங்களில் காண்க. அர்க்கவதி ஆறு நந்திமலையில் உற்பவித்து
கோலார் மாவட்டத்தை வளமாக்கி, வெங்காலூர் (பெங்களூர்) மாவட்டத்தில் ஓடி கனகபுரத்தில்
காவிரியுடன் கலக்கிறது, இதனால் பொன்மணல் பொன்னிக்கி வருகிறது. மேலும் பொன்னியாறு
என்றே சிறு நதி கொங்கினில் உண்டு. கொங்குநாட்டை வளமாக்கிய பின்னர்தான் பொன்னி (cf. பொன் 'gold')
சோழநாடு சேர்கிறாள்.

கொங்கில் பொன்கிடைக்கும் என்பது தமிழ் இலக்கியங்கள் எப்பொழுதும் காட்டும் செய்தி.
அதனால் தான் அகல்விளக்கின் திரிபோலக் கொங்குநாட்டை வடகரை, தென்கரை என்று
இருபகுதிகள் ஆக்கி ஓடும் காவிரி பொன்னி எனப்படுகிறாள் என்பது அறிஞர் கூற்று.
பொன்னி நதியும், கோலாரில் இருந்து வரும் அர்க்கவதியும் இணையும் கூடல் நகரம்
கனகபுரம்/கனகனஹள்ளி என்பது பொன்னியின் காரணப்பெயரான “பொன்” = கனகம்
என்று இன்றும் உறுதிப்படுத்துவதைக் காண்க. இவை எல்லாம் பழைய கொங்குநாட்டுப்
பகுதிகள். ஆண்ட கங்க மன்னர்கள் கொங்குநாட்டவர் என்பது என எண்ணுகின்ரனர்
வரலாற்றுப் பேராசிரியர்கள் (பேரா. மு. ஆரோக்கியசாமி போன்றோர்).

பல நூற்றாண்டுகளாக, பொன்னி என்ற காரணப்பெயர் பொன் உலோகத்தால்
பெற்ற ஆறு காவிரி. காவிரி, காவேரி, காபேரி என்றால் மஞ்சள் என்ற பெயர் எந்த
இந்திய மொழியிலும் இல்லை என்பதூஉம் ஆய்வினில் கணக்கிலெடுக்க வேண்டும்.

சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு
கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோன்
“றிங்கட் சடையர் தமரதென் செல்வ” மெனப்பறைபோக்
கெங்கட் கிறைவ னிருக்குவே ளிர்மன் னிடங்கழியே”
            - திருத்தொண்டர் திருவந்தாதி (65)

கனகசபையாக்கப் பொன் கொடுத்தது

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய் 
சிற்றம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன் 
முற்றிலுந் தன்கைத் தேவிளை வாவதை மொய்ம் பிறையுண் 
மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே.

                      - கொங்கு மண்டல சதகம்.

”காவிரி நதிக்கு பொன்னி என்ற காரணப் பெயரும் உண்டு. இதில் பொன் (தங்கம்) கலந்துள்ளதாம். ”

பிற பின்!
நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages