கலை என்பது amongst Antelopes, kalai means blackbuck. For example, KoRRavai is associated with *kalai* for 4700 years in the ancient Indian astronomy of India: https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html The Indus crocodile sign theory and its later evolution, the 4MSR (near Binjor, Rajasthan) seal with gharial (Pole star - Dhruva nakshatra) and blackbuck (Albaderan star - RohiNI nakshatra) tells a lot about Indus and later Hindu religion. It reveals India's history in many ways. See my latest essay in The Hindu book (2022), https://archive.org/details/harappan-civ-the-hindu-dr-nganesan-essay/page/n1/mode/2up
Kalai Deer (= Sambar_deer, rusa unicolor, கடமான்) --------------------------------------------------------------------------
கல்-/கரு- கருமை நிறம். (1) புல்- ‘meat, blood, stench, pollution' என்னும் தாதுவேர் தரும் சொற்கள் புலை, புலி. (2) ஒல்-/ஒரு- ஒருங்கு- ஒன்றுபடல், ஒருக்கு - ஒன்றுபடுத்தல். ஒருக்கு > ஒக்கு (= நேர், same) என ஆதல் consonant assimilation. same = ஸமம் எனும் வடசொல் தமிழில் தற்சமமாய் இயங்குகிறது. இவைபோல், (3) கல்- 'black, dark' என்னும் தாதுவேர் தருவது கலை (blackbuck antelope, and sambar deer). Note that kalai is used for both antelope species such as blackbucks and for deer species such as sambhur. உழை என்பது இன்று புள்ளிமான். புள்ளிமானைப் புள்ளிக் கலை, பொறிவரிக் கலை எனச் சங்க இலக்கியம் சில இடங்களில் குறிப்பிடும். இங்கே, கலை என்ற சொல், எண்ணெய் எல்லா வகை Oils-க்கும் சொல்கிறோமே, அதுபோல் எனக் கொள்ள வேண்டும்.
கலைமான்கள் பெண்டிருக்கு உவமை. கண்ணே, கலைமானே என்றார் கண்ணதாசனும். https://youtu.be/EfYeT2FsSGo இக் கலைமானைப் பச்சைமான் என்றும் சொல்வதுண்டு. பச்சைமானைப் பார்வதிக்கு உருவகமாக்குவர். பச்சை = கருமை. பச்சைமால் என்கிறோம் அல்லவா? அர்ச்சுனன் தென்னாடு போந்து பாண்டிய இளவரசியை மணலூரிலே கட்டினான் எனச் சங்கப் பாடல் உண்டு - அழிந்துபோன சங்க நூலில் - கீழடி, கீழடி என்பதே எங்கும் பேச்சு (உ-ம்: முகநூல்). ஆனால், இதையெல்லாம் ஒருவரும் குறிப்பிட்டு மணலூர் (இப்போது, கீழடி) யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை. பார்த்திபன் பாண்டி நாட்டு சித்திராங்கதையைத் (அல்லி ராணி) திருமணம் செய்தான். பச்சென்ற திருநிறமும் என நான்காம் தமிழ்ச்சங்கப் புலவர், (15-ம் நூற்.) வில்லிபுத்தூரார் பாண்டிப் பெண்களைப் பாடியுள்ளார். இப் பாடலை எனக்குச் சொன்னவர் பெரும்புலவர் கம்பராமன் ஐயா.
கலைமான்கள் (மேலே உள்ள வலைக்கண்களைத் திறந்து காண்க):
'navvi', the name of the Chinkara antelope in Tamil Sangam literature is analyzed. 'marai' is the name for antelopes in Tamil, as ‘tiruku-marai’ is spiraling screw in Tamil. The defining feature of “marai” (= antelope) is that their horns are screwed in to their skulls always. On the other hand, for deer, the branching antlers 'kavaik kōḍu' are shed and then the antlers regrow each year. Tolkāppiyam sūtra-s relevant to the deer and antelope species are discussed.
மரை (antelope):
கலை - கருமை நிறத்தால் வரும் பெயர். Kalai, due to black color, is applied both for antelopes (Blackbucks) as well as deer (Sambur). கலைமானில் இருவகை: (i) மரை (=antelope) இனத்தில் இரலைக்கு வரும். மரை எனும் பெயர் கொம்பு மண்டையோட்டில் நிரந்தரமாய் இருப்பதால். ‘அவனுக்கு மரை கழன்று போனது’, மரையாணி (=திருகாணி), மரையாடு (=கேழையாடு, muntjac) (ii) மான் (deer) இனத்தில் கடமானுக்கு வரும். கடமான் கலை நிறத்தில் (=கலங்கிய கரு நிறம்). சங்க இலக்கியத்தில் கலை என்ற சொல்லை ஆராய்ந்த தெளிவு இஃது. 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). இரலை (Cf. இருள்) = Blackbuck [Ref. 1]. புல்வாய் = மரை (antelopes) + கலை (deer, esp. Sambur = kalaimān); பொதுப்பெயர். புல்வாய் இப்போது நாம் மான் என்று உபயோகிக்கிறோமே, அப்பொருளில் வழங்கிய பழம்பெயர்: pulvāy, an all encompassing term for deer and antelopes (Tolkāppiyar says so.)
தொல்திராவிடர்கள் வைத்த கலைச்சொல்: மரை = antelope. மரையா/மரையான் (lit. “cow-like antelope”, Nilgai), கன்னடத்தில் மராவு, மரவி என்கிறார்கள். ஆக, antelope என்பதற்கு மிகப்பழைய த்ராவிட வார்த்தை ‘மரை’ என்பது உறுதி.
For representative, typical species in zoology, we see the scientific names repeated twice: Axis Axis deer (puḷḷi mān), Gazella Gazella (African gazelle) etc., https://en.wikipedia.org/wiki/List_of_tautonyms#Mammals அதுபோன்ற நூற்பா மேற்சொன்ன தொல்காப்பிய நூற்பா ஆகும். தமிழகத்தில் உள்ள Antelopes-ல் சிறந்த இரலை-யும், Deer-ல் சிறந்த கடமானையும் குறித்து, புல்வாய் என்பது இரண்டையும் சேர்த்த பொதுப்பெயருள் அடங்கும் என்கிறார்: 'இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய' (தொல்காப்பியம்). பல இடங்களில் மனிதன் என்றால் பெண்ணையும் சேர்த்துத்தான். அதுபோன்ற சூத்திரம். Mankind என்றால் பெண்ணும் உளப்படத் தானே. மேலும், http://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.html
நிற்க. சரசுவதியை 64 கலைகள் புள்ளிகளாகக் கொண்ட கலைமான் என்கிறார் கம்பர். சரசுவதி அந்தாதி. கண்ணே, கலைமானே என்றார் கண்ணதாசனும். https://youtu.be/EfYeT2FsSGo
புள்ளிக்கலை என்று சங்க இலக்கியம் கூறும்.மானுக்கு இலக்கணம் புள்ளிக் கலைமான். விலங்கியலில் ஒரு இனத்துக்கு இலக்கணமாக விளங்குவது இருமுறைபெயரிடுவர். போஸ்ட்கம்பம் எனச் சொல்கிறோம் அல்லவா. அதுபோல.
This post is dedicated to the memory of Tamil patron, Sri. N. Mahalingam of Pollachi whose anniversary is today (Oct. 2nd). https://youtu.be/7Q341qkjOZY