Re: காடி, நெய் - சங்க இலக்கியத்தில் விளக்கெண்ணெய் (Castor Oil) பெயர்கள்

31 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 9, 2023, 7:52:41 AM5/9/23
to santhav...@googlegroups.com, sivasub...@sivasubramanian.in, Dr.Krishnaswamy Nachimuthu, George Hart, Erode Tamilanban Erode Tamilanban, sirpi balasubramaniam, tiruva...@googlegroups.com, Robert Zydenbos, Brenda Beck, K Rajan
On Mon, May 8, 2023 at 9:47 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
கணேசனாரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க வகையில் விளங்குகிறது! -
புலவர் இராமமூர்த்தி 

விளக்கெண்ணெய் உருவாக்கும் ஆமணக்கு, ஐயவி (வெண்கடுகு) இரண்டும் இந்தியாவில் 5000 ஆண்டுகளாகப் பயிராகின்றன. பேரா. ச. கண்மணி விளக்கெண்ணெய் பற்றிக் கேட்ட கேள்வி, சற்று ஆராயச் செய்தது. நெய் என்ற சொல்லைப் பார்த்ததும், கால்நடை நெய் என்று பொருள் கொள்ளத் தோன்றும். பின்னர், தொல்காப்பியம், அதன் உரைகள், அறநெறிச்சாரம், சங்க நூல்களில் “காடி”, ”நெய்” வரும் இடங்களைக் கண்டால், தற்காலத்தில் நாம் விளக்கெண்ணெய், ஆமணக்கெண்ணெய் என்பது “காடி” - ஏனெனில் அதில் 90% அமிலம் உள்ளது - மற்றும் நெய். எள்ளில் இருந்து எடுப்பது எண்ணெய். ஆனால், நெய் என வரும் போது அது மாட்டு நெய்யா, விளக்கெண்ணெயா என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். மாட்டுநெய் அமிலம் அல்ல, அது alkaline producing food என வகைப்படுத்தப்படுகிறது. எனவே, மாட்டு நெய் “காடி” என்பதற்கு நேரெதிரானது. இன்றும் வார்னிஷ் அமிலம், காடிநெய் என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன். காடி = நெய் என்று ஒரு பொருள் என்று சொல்லிவிட்டார் நச்சினார்க்கினியர். துவரம் பருப்பை மசியச் செய்ய, விளக்கெண்ணெய் சில சொட்டுகள் விட்டுச் சமைப்பது போல, பலாக்கொட்டை, அவரைவித்து, ... இவற்றை நன்கு சமைக்கவும் காடிநெய் பயனாகியுள்ளது. “பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப” என்பது காடி = விளக்கெண்ணெய். மாவடு காடி தோய்த்துச் சமைத்துப் பின் சில காலம் சென்றபின், காடியில் மிதக்கிறது போல, என “பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப” பொருள் கூறலாம். பரல் = பலாக்கொட்டை, அவரைவித்து, ... வறுத்துப் பொறிகறி சமைக்கையில், விளக்கெண்ணெய் சில சொட்டுச் சேர்ந்து செய்யும் தாளிதத்தில் பலாக்கொட்டை மிதக்க . பரல் = பலாக்கொட்டை, அவரை என்றாது பொ. வே. சோமசுந்தரனார்.

சென்னைப் பல்கலைப் பேரகராதியில் பாருங்கள்:
காடி² kāṭi , n. prob. கடி⁵. cf. ghṛta. Ghee; நெய். (பெரும்பாண். 57, உரை.)

காடி = நெய் என்று நச்சர் எழுதியுள்ளதைப் பார்த்ததும், நெய் = ghee என்று மொழிபெயர்த்துவிட்டனர். இது பிழையென்று தெரிகிறது.
ஏனெனில், மாவடு ஊறுகாய் செய்யுமிடத்தில், காடி (= விளக்கெண்ணெய்) பயன்படுத்தலைச் சங்கப்புலவோர் பாடியுள்ளனர்.


சங்க இலக்கியத்தில் காடி வைத்த கலன். வண்டிகளில் சாரிசாரியாய் விளக்கெண்ணெய் (=காடி. அமிலங்களால் பெறும் பெயர்) வைத்த மிடாக்கள், மிகுந்த காவலுடன் சந்தைகளுக்குக் கொண்டுச்செல்வது கூறப்பட்டுள்ளது. வடுமாங்காய் ஊறுகாய் காடி (விளக்கெண்ணெய்) கொண்டு தயாரித்ததைப் பரிமாறுவதும் அழகுற வர்ணிக்கப்படுகிறது. விளக்கெண்ணெய் பயன்படுத்தி வடுமாங்காய் ஊறுகாய் காடிநெய்யால் செய்முறை. https://www.youtube.com/watch?v=CX6ryeY7x-4
https://www.facebook.com/watch/?v=322467525935229
((1) காரம் - மிளகாய்த்தூள். அப்போது, குறுமிளகு. + (2) உப்பு. + (3) காடி என்பது நெய் (விளக்கெண்ணெய், தற்காலப் பெயர்). இதே செய்முறையைப் பத்துப்பாட்டில் 2000 வருஷம் முன்னரே கொடுத்துவிட்டனர் சங்கச் சான்றோர். விளக்கெண்ணெய் அரிதாகவே சமையலில் பயன்படும். உதாரணம் பரல் என்னும் பலாக்கொட்டை, அவரையை மசியச் செய்யச் சேர்த்துவதும் காண்கிறோம்.

காடி = நெய் என்பது நச்சினார்க்கினியர் வாக்கு. இந்த நெய் பூசி பேய்க்காஞ்சி என்னும் துறையில் அணங்குகளிடம் இருந்து காப்புக்கு ஐயவி அப்பியும், மகப்பேற்றுக் காலங்களில் தாய், சேய்களுக்கும் உபயோகப்படுத்தினர். சங்க நூல்களில் அணங்குக் கோட்பாடு அக்காலச் சமய, சமூக நிலையை விளக்குவது:
https://tamilnation.org/caste/hart.pdf .                        பல்லவர் காலத்தில், அணங்காடல் பற்றி, ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் பாடிய பாசுரப் பதிகம் அழகானதும், முக்கியமானதும் ஆகும்.

விளக்கெரிக்க முக்கியமான எண்ணெய் ஆனதால், களவினின்றும் காத்து ஒழுகைகள் செல்ல வேண்டியதாயிற்று. இப்போது பெட்ரோல் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு செல்வதுபோல.

நச்சர் கூறுவது:  “இனிக்காடியை நெய்யென்பாரும் உளர்”. நெய் என்பது விளக்கெண்ணெய், மாவடு ஊறுகாய் சமையல், தொல்காப்பியம் காட்டுகிறது. நெய் என்னும் விளக்கெண்ணெய்யின் உபயோகம் தமிழர் சமயம் (அணங்காடல், ...), மகப்பேறு வைத்தியம், பேய்க்காஞ்சி என்னும் துறை, போர்வீரனுக்கு புண்ணுற்ற காலத்தில் பேய்க்காப்பு, மருத்துவத் தெய்வம் தன்வந்திரிக்கு விளக்கெண்ணெய் எரித்தல் போன்றவற்றால் அறியலாகிறது.

நா. கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages