எடுத்துக்காட்டும் உரையும்
---------------------------------------------
31 : அ இ உ அம் மூன்றும் சுட்டு.
அ இ உ -என்ற இம்மூன்றும் பெயரைச் சார்ந்து வரும் சுட்டெழுத்துகளாகும். .
உ என்பது தற்போது வழக்கிலில்லை.
எ.கா : அது இது உது
அச்சிறுவன், இப்பெண், அவ்விடம், இவ்விடம், அப்பொருள், இப்பொருள்,
அக்காலம், இக்காலம், அவ்விலை, இவ்விதழ், அச்சிறப்பு, இப்புகழ்
32 : ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.
ஆ, ஏ, ஓ என்ற மூன்றெழுத்துகளும் வினா எழுத்துகளாக வரும்.
எ.கா : அவனா?, ஏன்?, ஏது?,அவளோ ?
33 : அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
உள என மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்.
எழுத்துகள் தமக்கு விதிக்கப்பட்ட மாத்திரை அளவு கடந்து
ஒலித்தலும்,ஒற்றெழுத்துகள் தம் மாத்திரையிலிருந்து நீண்டொலித்தலும்
உண்டு.
விளித்தல் பொருளிலும் இசைப்பாடலிலும் இவ்வாறு ஒலிக்கும் என்று புலவர்
கூறுவர்.
எ.கா :கெடுப்பதூஉம், எடுப்பதூஉம், கலங்ங்கு, இலங்ங்கு, உழாஅர்.
பாடல்களில் எழுத்துகள் நீண்டு ஒலிப்பதுமுண்டு.
அன்புடன் ...... செல்வி ஷங்கர்