Fwd: [MinTamil] தொடுகுறி சாஸ்திரம்

63 views
Skip to first unread message

arun kumar

unread,
Mar 9, 2010, 1:52:45 AM3/9/10
to thiy...@googlegroups.com


-

காலம் என்பது தொன்றுதொட்டு மனிதனுக்கு சவால் தரும் விஷயம். ஒவ்வொரு
கலாச்சாரமும் காலத்தை உட்புகுந்து அறிய முயன்றிருக்கின்றன. எகிப்து, சீன,
மயன் என்ற பழைய கலாச்சாரங்களில் குறி சொல்வது ஒரு அரசு அங்கீகரித்த
தொழிலாக இருந்துள்ளது. கைரேகை சாஸ்திரம் பற்றி எழுதும் கைரோ
அச்சாத்திரத்தை இந்தியாவிலிருந்து தாம் கற்றதாக எழுதுவார்.
இந்தியாவிலிருந்து சென்ற நாடோடிகள் (ஜிப்சி) குறி சொல்லும் வழக்கை
ஐரோப்பாவிற்கு கொண்டு வந்திருக்கலாம்.

பொதுவாக புது வருடத்தன்று ஏஞ்சல் கார்டு எனும் ஒரு விளையாட்டு
ஜெர்மனியிலுண்டு. அதன் படி தேவதாகுறி கொண்ட சீட்டுகளை பரப்ப வேண்டும்.
அமைதியான, தெய்வீக சூழலை உருவாக்கி மனது சொல்லும் ஒரு அட்டையை எடுத்துப்
புரட்டினால் நம் மனதிலிருக்கும் கேள்விக்கான விடை ஒரு சொல்லில் அட்டையில்
இருக்கும். இந்த வருடமும் குடும்பத்துடன் விளையாண்டோம்.

அப்போதுதான் ஞாபகம் வந்தது, பிரித்தானிய நூலகத்திலிருந்து பாச்சிகை
நூலொன்றை முன்பு வெளியிட்டது. அதில் பஞ்ச பாண்டவர்களில் கணித விற்பன்னரான
சகாதேவர் வழங்கிய தொடுகுறி சாஸ்திரம் ஒன்று உள்ளது. இதை பிரஷ்ணம் என்றும்
சொல்லலாம். நாம் தொடுகின்றன் போதுள்ள கற்றைத் தொடர்பினால் ஒரு பலன்
கிடைக்கும். தொட்டவுடன், முதலில் ஒரு தேவதையின் அட்டை வரும். அதுவே
அப்பொழுதின் பல தேவதை. அது சொல்லும் பலனை வைத்து ஒரு காரிழம் தொடங்கலாமா?
இல்லையா? என அறிந்து கொள்ளலாம்.

நான் இதற்கென ஒரு தேவதா சக்கரம் உருவாக்கியுள்ளேன்.

http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

அங்குள்ள சக்கரத்தில் ஏதாவதொரு இடத்தில் சொடுக்குங்கள். ஒரு அட்டை வரும்
(அதி தேவதை), அதில் மீண்டும் சொடுக்குங்கள், உங்களுக்கான பலன் வரும்.
பலன் சிறு கவிதை நடையிலிருக்கும். சித்தர்களின் நாடி ஜோஸ்யத்தில் வரும்
அதே நடை. எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். (பொருளுரை மூலத்தில் இல்லை).

ஒரே அட்டையை எத்தனை முறை முயன்றாலும் மீண்டும் பெறமுடியாது.
அந்தந்தப்பொழுதிற்கான பலனே கிட்டும்.

முயன்று பாருங்கள்.

கோளறுதிருப்பதிகத்தில் சொல்வது போல் இறைச் சிந்தனையுடன் தொடும் போது நல்ல
பலன்களே இதுவரை கிட்டியுள்ளன!

கண்ணன்



--
JK அருண்
9994544753

சிறந்த பேச்சு ,நேர்மையான பொய்
மோசமான மௌனம் ,நிர்வாண உண்மை

Reply all
Reply to author
Forward
0 new messages