சுயம்பு லிங்கங்கள்

145 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 3, 2017, 6:47:06 AM3/3/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, Mdu poovalingam sundaram, Au1 Udayaganesan

வணக்கம்.

மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாகத் தானே தோன்றிய இலிங்கங்களைச் சுயம்புலிங்கங்கள் என வகைப் படுத்துகின்றனர். உலகத்திலேயே அதிகமான சுயம்பு லிங்கங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் மட்டும் 44,000 சுயம்புலிங்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.

பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகிவிடுகிறது.   இவ்வாறு மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்பு லிங்கம் என்கின்றனர். மதுரையில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணப் புராணம்.

விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக உள்ளதப் புராணம் குறிப்பிடுகிறது.

அன்பன்
கி. காளைராசன்
>
> On 28-Feb-2017 2:55 AM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
> >
> >
> >
> > 2017-02-27 4:01 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
> >>
> >> வணக்கம்.
> >>
> >> On 27-Feb-2017 8:20 AM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
> >> >
> >> >
> >> >
> >> > On Sunday, February 26, 2017 at 6:16:12 PM UTC-8, kalai wrote:
> >> >>
> >> >> வணக்கம்.
> >> >> On 26-Feb-2017 3:55 PM, "Suba" <ksuba...@gmail.com> wrote:
> >> >> >
> >> >> > நல்ல பதிவு.
> >> >>
> >> >> நன்றி.
> >> >> > இதில் கோயிலின் வரலாற்று விசயங்களையும் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.
> >> >> >
> >> >> > உதாரணமாக இக்கோயில் எக்காலகட்டத்தில் எந்தப் பேரரசு அல்லது மன்னன் அல்லது சிற்றரசரசால் கட்டப்பட்டது என்ற செய்திகள் இணைத்தால் நன்று.
> >> >>
> >> >> இந்தக் கோயிலில் உள்ள சுயம்புலிங்கத்தின் அடியைக் காண இயலவில்லை. அவ்வளவு ஆழத்தில் உள்ளது.  இது போன்ற சுயம்பு லிங்கங்கள் தோன்றிடக் குறைந்தது 17 இலட்சம் வருடங்கள் ஆகியிருக்கும்.
> >> >> இத்தனை நெடிய காலத்தில் எத்தனையோ திருப்பணிகள் நடைபெற்றிருக்கும்.
> >> >
> >> >
> >> > 17 இலட்சம் வருடங்கள்!!!!!!!!!!!!
> >> >
> >> சுயம்பு லிங்கங்கள் குறைந்தது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்களின் படிமங்கள் ஆகும். (இதற்கான அறிவியல் ஆதாரம் கொண்ட கட்டுரையைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் பதிவு செய்கிறேன்.)
> >> வழிபாடு தொடங்கிய காலத்தை அறியத் தலபுராணம் வேண்டும்.
> >
> >
> > ​கல்மரங்களாகும் மரங்களின் படிமங்கள் தாம் சுயம்புலிங்கம் எனப்படுவதா?​
> > ​சுபா​

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 3, 2017, 10:20:13 PM3/3/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

வணக்கம்.

காசி, திருப்பூவணம், கும்பகோணம் அமிர்தகடேசுவர், திருவையாறு, தீர்த்தாண்டதானம் என்ற தலங்களில் உள்ள சிவலிங்கங்களை மிகவும் அருகில் நின்று கண்டு வழிபடும் பேறு பெற்றுள்ளேன்.
இவை யெல்லாம் சுயம்புலிங்கங்கள்.
இவற்றின் தலை உருளை வடிவம் அல்ல.
இவற்றின் விஷ்ணு பாகம் நான்கு பட்டைகளைக் கொண்டன அல்ல.
இவற்றின் பிரம்மபாகம் பூமிக்குள் பாதலத்தில் (பாதாளத்தில்) உள்ளன.

திருப்புனல்வாயில் சிவலிங்கத்தைத் தோண்டிப் பார்த்து, கண்டுபிடிப்பது கடினமாகிப்போக, பெரியார் பொய்சொல்கிறார் என்று ஆத்தீகரான பெரியவரை அறிவேன்.  யாரேனும் திருப்புனல்வாயில் வருவதாக இருந்தால் இவரிடம் அழைத்துச் செல்கிறேன்.

தீர்த்தாண்டதானம் சிவலிங்கத்தைத் தோண்டிப் பார்த்தவர் அந்தக் கோயிலின் பின்பக்கம் இன்றும் வசித்து வருகிறார்.
வருவதாக இருந்தால் இவரிடம் அழைத்துச் செல்கிறேன்.

திருவேடகம் சிவலிங்கத்தைப் பெரிதும் முயன்று பிய்த்து எடுத்து வைத்துள்ளனர்.
இதற்குத் தேவகோட்டை சமீன்தார் அவர்கள் சாட்சி.
வருவதாக இருந்தால் இவரிடம் அழைத்துச் செல்கிறேன்.

அவரவர் கண்டறிந்த சுயம்புலிங்கங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

அன்பன்
கி. காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 4, 2017, 10:48:34 AM3/4/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

வணக்கம்.
மெக்காவில் வணங்கப் படுவது ஒரு சுயம்பு லிங்கம் என்ற ஒளிப் பதிவு ஒன்றைப் பார்த்தேன்.

http://tamilcause.blogspot.in/2016/09/blog-post_24.html?m=1

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 6, 2017, 11:13:21 PM3/6/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Mdu poovalingam sundaram

வணக்கம் ஐயா.
On 06-Mar-2017 11:10 AM, "Singanenjam Sambandam" <singa...@gmail.com> wrote:
>
> மறுமொழிக்கு நன்றி.
>
> ஐயா , எந்த புராணத்தில் கல்மரம் சுயம்பு லிங்கமாக மாறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
>
திருப்பூவணப் புராணம், காளையார்கோயில் புராணம் இவற்றில் உள்ளது.

> காசியில் உள்ள லிங்கம் விண் கல் எனும் குறிப்பு எங்கேனும் உள்ளதா. 
>
காசியில் கோயில் உள்ளே வளாகச் சுற்றுச் சுவரில், காசிலிங்கம் தோன்றிய வரலாற்றைச் சுதைசிற்பங்களாக வைத்துள்ளனர்.

> 2017-03-05 20:57 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.

>> "சுயம்பு லிங்கங்கள்" என்ற தலைப்பில் இந்த இழையில் நான் எழுதுவன எல்லாம் புராணங்களின் அடிப்படையிலான எனது சொந்தக் கருத்துகளாகும்.  இவை அறிவியல்  அடிப்படையில் விஞ்ஞான முறைப்படி ஆராயந்து சொல்லப்பெற்றவை அல்ல.


>>
>> அன்பன்
>> கி. காளைராசன்
>>

>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 9, 2017, 10:21:28 AM5/9/17
to mintamil, Kalai Email, naga rethinam, thiruppuvanam, Mdu poovalingam sundaram, Pirama Dr Palanichamy FFE, Au1 Udayaganesan

சுயம்புலிங்கங்கள் (தைலாபுரம்)

புதுச்சேரி திண்டிவனம் சாலையில் தைலாபுரம் உள்ளது. இங்குள்ள அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயில் மிகவும் பழைமையானது.  முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் இருந்த கோயிலைப் புனர்நிர்மாணம் செய்து குடமுழுக்கு நடத்தியுள்ளனர். கோயிலில் உள்ள நந்தி மிகவும் பழைமையானது.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன்.  கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்தது, அப்போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகைதான். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் அந்தக் கோயில் பூசாரி அவர்கள்.  கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.  சுவாமியின் பெயரும் மருந்தீசுவரர்.   எனவே இங்கு எரிந்துபோன சுயம்புலிங்கம் கல்லால் ஆனது அல்ல, அது ஒரு மூலிகை மரமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்.  இந்த ஊருக்குத் தலபுராணம் கிடைத்தால் அதில் இந்தச் சுயம்புலிங்கம் பற்றிய குறிப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

IMG_20160522_174854.jpg
IMG_20160522_173934.jpg
IMG_20160522_180807.jpg
சுயம்பு லிங்கங்கள் தைலாபுரம்.docx

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 3, 2018, 10:58:14 AM12/3/18
to mint...@googlegroups.com, Kalai Email, thirup...@googlegroups.com
“திருவையாறு, ஐயாறப்பன்சுவாமி கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி வரை மட்டுமே நாம் செல்லலாம். மூவரின் சிரசில் ஜடாபரணக் கொண்டை உள்ளதால் இறைவனின் சடாமுடி பின்பக்கம் பரவியுள்ளது. எனவே மேற்கொண்டு இறைவனின் பின்பக்கம் செல்லக் கூடாது என்பர்” (Ref: http://www.tamiltempledetails.com/thiruvaiyaru-thanjavur/)

சுயம்புலிங்கத்தின் பின்பக்கம் சடைமுடிபோன்று காணப்படுகிறது.  சுனாமி என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்த்தால், சுயம்புலிங்கத்திற்குப் பின்பகுதியில் சுனாமியால் அடித்துவரப்பட்டட களிமண் படிந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளது.  இதைச் சிவலிங்கத்தின் சடைமுடி என்கின்றனர்.
புவியியல் படித்த பேரறிஞர்கள் யாரும் இந்தச் சுயம்புலிங்கத்தை ஆராய்ந்து பார்த்துள்ளனரா? அருகில் சென்றாவது பார்த்துள்ளனரா? எனத் தெரிவில்லை.

அன்பன்
கி. காளைராசன்
On Tue, 1 Aug 2017 at 14:51, kalai <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.
வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பெற்ற தலபுராணம் கிடைக்க வேண்டும்.அதைப் படிக்க வேண்டும். படித்ததுபோல் உள்ளதா? எனச் சென்று பார்க்க வேண்டும். பிறகுதான் அந்தப் புராணக் கருத்து உண்மையா? என அறிய முடியும்.

படிக்காத ஒரு புத்தகத்தில் உள்ள கருத்து கற்பனையானது எனச் சொல்வது கற்பனை முதல்வாதம் ஆகும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 25, 2019, 10:42:16 AM11/25/19
to thiruppuvanam, Kalai Email, Pirama Dr Palanichamy FFE, naga rethinam, Mdu poovalingam sundaram, Au1 Udayaganesan, Chandramohan Prof, Au Prof. Sekar, Bio Electronics Biosensors, Au Geology Prabhakaran Asst. Prof, Trichy Tvn Prof. Muthu erulandi, Dr.S.GURUSAMY,Professor, Dr.SubasChandra Bose, Dr.E.M.Sudarsana Natchiappan
கோகர்ணம் சுயம்புலிங்கம்
(குறிப்பு - இது அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து எழுதிய கட்டுரை அல்ல.  இது ஒரு புராணப் புளுகுக் கட்டுரை எனக் கொள்க)
a15828-3 (1).jpg
Atmalinga-02.jpg
e6874f7b556cca2ff63f786b6eded338.jpg
கோ என்றால் மாடு,
கர்ணம் என்றால் காது.
கோகர்ணம் என்றால் மாட்டினுடைய காது என்று பொருள்.
மாட்டினுடைய காதுபோன்ற அமைப்பில் இங்குள்ள சுயம்புலிங்கள் உள்ளது.  அதனால் அந்தச் சிவலிங்கத்திற்குக் கோகர்ணம் என்ற காரணப் பெயர்.  சிவலிங்கத்திற்கான பெயரே ஊருக்கும் ஆகி அமைந்துள்ளது.

திருவிளையாடல் புராணம் பாடல் எண் 3322 -
பாடல் -
சுரபிநீள் செவியி லிங்கச் சுடருரு வாயி னான்றன்
இரவினிற் றிருத்தேர் மன்றல் நடக்குமூ ரிவ்வூர் மேலை
உரவுநீர்க் கரைத்தேண் மாதத் துயர்ந்தகார்த் திகையிற் றேரூர்ந்
தரவுநீர்ச் சடையான் வேள்வி நடக்குமூ ரவ்வூர் காண்மின்.

சொற்ப்பொருள் பிரிப்பு --
சுரபி நீள் செவியில் இலிங்கச் சுடர் உரு ஆயினான் தன்
இரவினில் திருத்தேர் மன்றல் நடக்கும் ஊர், இவ்வூர் மேலை
உரவு நீர்க்கரைத் தேள்மாதத்து உயர்ந்த கார்த்திகையில் தேர்ஊர்ந்து
தரவு நீர்ச்சடையான் வேள்வி நடக்கும் ஊர், அவ்வூர் காண்மின்.

பாடலின் பொருள் ---

பசுவினது நீண்ட காதைப்போன்று இலிங்கத்தின் சுடவர் வடிவாகிய, இறைவனது சிவ நிசியில் திருத்தேர் விழா நடக்கும் திருக் கோகரணம் இத் திருப்பதியாம்;  மேலைக் கடற்கரையில், கார்த்திகைத் திங்களில் சிறந்த கார்த்திகை நாளில், பாம்பையுங் கங்கையையு மணிந்த சிவ பெருமான் தேரில் ஏறியருள, திருவிழா நடக்கும் திருவஞ்சைக்களம் அத் திருப்பதியாம்;  கண்டு வழிபடுங்கள், கண்டு வழிபடுங்கள்.

சுரபி நீள் செவி - ஆனின் நெடிய காது; கோகர்ணம். இராவணன் இலங்கையில் நிறுவுமாறு சிவபிரான்பாற் பெற்றுக் கொணர்ந்த சிவலிங்கத்தை வானோர் வேண்டுகோளின்படி விநாயகர் வாங்கிக் கீழ்வைத்துப் பிரதிட்டை செய்துவிடலும், இராவணன் அதனைப் பெயர்த் தெடுக்கத் தன் ஆற்றல்கொண்டு இழுத்தகாலை அந்தச் சிவலிங்கம் பசுவி்ன் காதுபோற் குழைந்தமையின் ‘கோகர்ணம்’எனப் பெறுவதாயிற்று.
சுடர் உருவாயினான் தன் இரவு - மகா சிவராத்திரி. சுடர் உருவாய் ஆன சிவபெருமானின் இரவு.
தேர் மன்றல் - தேர்த்திருவிழா, இரதோற்சவம்.
உரவு நீர் - வலிய நீர்; கடல்.
தேள் மாதம் - விருச்சிக ராசியில் ஆதித்தன் இருக்கும் கார்த்திகைத் திங்கள், கார்த்திரை மாதம்.
உயர்ந்த கார்த்திகை - கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை நட்சத்திரம்.
தரவு நீர்ச்சடையான் - சிவபெருமான்
வேள்வி நடக்கும் ஊர், அவ்வூர் காண்மின்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கார்த்திகை 9 (25.112019) திங்கள் கிழமை
Reply all
Reply to author
Forward
0 new messages