கீழடி அல்ல, இது கூடல்நகர் . ஆலவாய்நகர் என்ற மதுரை மாநகரம்.

8 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Sep 21, 2019, 10:18:42 PM9/21/19
to Kalai Email, thiruppuvanam
கீழடி அல்ல, இது கூடல்நகர் . 
ஆலவாய்நகர் என்ற மதுரை மாநகரம்.

201909100845241499_long-wall-discovery-in-Keeladi_SECVPF.gif

“பூவின் இதழகத்து அனைய தெருவம்;
இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்”

என்று மதுரையின் அமைப்பைக் குறிப்பிடுகிறது பரிபாடல்.
மாயோன் கொப்பூழில் தாமரை மலர்ந்துள்ளதாம்.  அந்தத் தாமரைப் பூவின் இதழ்களைப் போன்ற வடிவத்தில் மதுரைமாநகரின் தெருக்கள் இருக்கின்றனவாம்.  தாமரைப் பூவின் பொகுட்டு போன்று, மதுரை நகரின் நடுவில் அண்ணல் (சிவன்) கோயில் உள்ளதாம்.  ஆனால் இன்றைய மதுரை நகரமானது தாமரை இதழ்கள் போன்ற வடிவில் இல்லாமல் சதுரவடிவில் உள்ளது.  சங்கத் தமிழ்ப் புலவருக்குத் தாமரையின் இதழ் வடிவத்திற்கும் சதுரவடிவத்திற்கும் வேறுபாடு தெரியாதா என்ன?  பரிபாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள தாமரைப் பூவின் இதழ்களைப் போன்ற தெருக்களைக் கொண்ட மதுரை எங்கே உள்ளது?

மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளதாம்.  இதை “மாடமலி மறுகில் கூடல் குடவயின்” என்று பாடுகிறார் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரன். “கூடற் குடவயின் பரங்குன்று” என்று அகநானூறும் குறிப்பிடுகிறது.   திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளதாக நக்கீரன் குறிப்பிடும் மதுரை எங்கே உள்ளது?  அகநானூறு குறிப்பிடும் மதுரை எங்கே உள்ளது?

Madurai Manavoor - Copy.jpg
செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,  - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)
திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே கீழடிதான் உள்ளது.  கீழடி அருகேதான் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது.  கீழடி அருகே புதையுண்டுள்ள நகரம்தான் பண்டைய கூடல்நகரமா? இதுதான் பண்டைய ஆலவாய் நகரமா?  இந்த நகரத்தின் தெருக்கள் தாமரைப்பூவின் இதழ்களைப் போன்ற அமைப்பில் உள்ளனவா? இந்த நகரத்தின் மையப்பகுதியில் அண்ணல் (சிவன்) கோயில் உள்ளதா?

manalur siva temple - Copy1.jpg
zip manalur 11 oct 2016 (4).jpg
zip manalur 11 oct 2016 (6).jpg
அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே சுமார் 500 மீட்டர் கிழக்கே சிவலாயம் ஒன்று மண்ணுள் புதைந்து கிடக்கிறது. நந்தியின் தலைப்பகுதி மட்டும் காணும்படி உள்ளது. இந்தக் கோயிலே பரிபாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள அண்ணல் (சிவன்) கோயிலாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.
பண்டைய மதுரைமாநகரத்தை ஆட்சி செய்த குலசேகரபாண்டியன் இப்போதுள்ள மதுரை நகரை உருவாக்கினான் என்றும், அவன் ஆட்சி செய்த பண்டைய மதுரை மாநகரமானது கடல்கோளால் அழிந்து போனது என்றும் குறிப்பிடுகிறது திருவிளையாடற் புராணம்.   

திருப்பரங்குன்றத்திற்குக் கிழக்கே உள்ளது.  மையத்தில் சிவன்கோயில் புதையுண்டுள்ளது.  இதனால் இப்போது அகழ்வாய்வு நடைபெறும் இடமே நக்கீரர் காலத்தில் மதுரையாக இருந்துள்ளது என்பதும்,  அகநானூறு குறிப்பிடும் மதுரையும் இதுவே என்பதும் தெளிவு.
பரிபாடலில் குறிப்பிடப்பெற்றுள்ளபடி,  இந்தப் புதையுண்டுள்ள நகரத்தின் தெருக்கள் மட்டும் தாமரைப்பூவின் இதழ்களின் வடிவத்தில் அமைந்திருந்தால் போதும்.  பரிபாடலில் குறிப்பிடப்பெறும் பண்டைய மதுரை இதுவே என உறுதியாகச் கூறலாம்.

தொல்லியலாளர் போற்றுவோம்,
தமிழரின் தொன்மை போற்றுவோம்,
கூடல்நகர் போற்றுவோம்,
திருவாலவாய் போற்றுவோம்.

அன்பன்
கி. காளைராசன்
22.09.2019
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2019/09/blog-post.html  
-------------------------
பரிபாடல் திரட்டு (எட்டாம் பாடல்)
மதுரை

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;

தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.
--------------------------------

சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த;
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின்,
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்,
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன்- வாழி, என் நெஞ்சே!- சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
10

வளம்கெழு முசிறி ஆர்ப்பெழ வளஇ,
அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது,

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய, 15
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 19                        
                                                         - எருக்காட்டூர் தாயங்கண்ணனார்  (அகம்-149)

149. எளிதாகப் பெற்றாலும் வாரேன்!
பாடியவர்: எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார். திணை: பாலை. துறை: தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. சிறப்பு : சேரநாட்டுடன் யவனர் செய்த வாணிகச் செய்தியும், செழியனின் மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங் குன்றத்து வளமும்,
(தன் நெஞ்சத்திலே பொருள்தேடி வருதல் வேண்டுமென்ற ஆர்வம் எழ, முன்னர்த், தான் அப்படிப் பிரிந்த காலத்திலே, தன் தலைவி அடைந்த வேதனை மிகுதியை மறவாத தலைவன், தான் வாரேன் எனத் தன் நெஞ்சிற்குக் கூறிப்போவதை நிறுத்தி விட்டான். அதுபற்றிக் கூறுவது இச்செய்யுள்)
சிறுபுன் சிதலை சேண்முயன்று எடுத்த, நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையின். புல்லரை இருப்பைத் தொள்ளை முனையின், பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும் அத்த நீள்இடைப் போகி, நன்றும் 5
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும் வாரேன்-வாழி, என் நெஞ்சே!-சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 1 O

மூலமும் உரையும் புலியூர்க்கேசிகன் 65
வளர்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகின் கூடற் குடாஅது, 15 பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய,
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள் - அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே. 20
சிறிய புல்லிய கறையான் முயன்று எழுப்பிய மிகவும் உயரமான சிவந்த புற்றினுள் மறைந்து கிடக்கும் புற்றாஞ் சோற்றினைப், பெரிய கையினையுடைய கரடியின் பெரிய சுற்ற மானது தின்னும் அதுவும் வெறுத்துவிட்டதானால், புற்கென்ற அரையினையுடைய இருப்பையின் தொளையுடைய வெண்மை யான பூக்களைக் கவர்ந்து உண்ணும். அத்தகைய சுரத்திலே நெடுந்தொலைவு சென்று, மிகவும் அரிதாக ஈட்டத்தக்க உயர்ந்த பொருளை எளிதாக யான் பெற்றாலும்கூட -
சேர மன்னர்களது, ‘சுள்ளி’ எனப்படும் அழகிய பேராற்றினது வெண்மையான நுரைகள் சிதறிப் போகுமாறு, நல்ல தொழில் மாண்புடைய மரக்கலத்திலே யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிப் போகும் நல்ல வளங்கெழுமிய ஊர் முசிறி ஆகும். அதன்கண், ஆரவாரம் எழுமாறு முற்றுகையிட்டு, நடந்த அரிய போரையும் வென்று, அங்குள்ள பொற்பாவையையுங் கவர்ந்து வந்தவன், நெடிய நல்ல யானைப் படையினையும் வெல்லும் போராற்றலையும் உடையவனாகிய செழியன். அவனுடைய கொடியசையும் தெருக்களையுடைய மதுரைமா நகருக்கு மேற்குப்புறத்தே இருப்பது திருப்பரங்குன்றம். பல புள்ளிகளையுடைய மயிலின் வெற்றிக்கொடியினை உயர்த்திருப்பது அது. இடையறாத விழாக்களையும் அது உடையது. நெடியோனாகிய முருகனின் அந்தத் திருப்பரங்குன்றின் குண்டு சுனையிலே, வண்டினம் மொய்க்க இதழ் விரிந்த புதிய நீலப்பூவின் ஒத்த மலர்கள் இரண்டின் சேர்க்கையைப் போன்ற, இவளது செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ச்சியான கண்கள் தெளிந்த கண்ணிரினைக் கொள்ளுமாறு, நெஞ்சமே! இவளைப் பிரிந்து யான் நின்னோடு வருவேனல்லேன். நீ போய் நின் வினையை முடித்து வாழ்வாயாக! என்று, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொன்னான் .
அகநானூறு - மணிமிடை பவளம்
சொற்பொருள்: 1. சிதலை - கறையான். 2. நெடுஞ்செம் புற்று - உயரமான சிவந்த புற்று. ஒடுங்கு இரை உள்ளே மறைந்து கிடக்கும் இரையான புற்றாஞ் சோறு. முனையில் - வெறுத்தால், 3. வான்பூ - வெண்மையான பூ எண்கு கரடி இருங்கிளை பெரிய சுற்றம், 9. யவனர் - அயோனியர் போன்ற மத்திய தரைக்கடல் நாட்டவர். கலம் - மரக்கலம். 10, கறி மிளகு, 12. படிமம் - பாவை. 16. ஒடியா விழவு - இடையறாத விழாக்கள். 17. குண்டு சுனை - வட்டமான ஆழச்சுனை.
https://ta.wikisource.org/wiki/பக்கம்:அகநானூறு-மணிமிடை_பவளம்-மூலமும்_உரையும்-2.pdf/81
_________________

மதுரை மாநகரத்தின் மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம்.

'' செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போல்அரு வாயில்
திருவீற் றிருந்த தீதுதிர் நியமித்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று''   -- (நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப் படை)

(போருக்கு அறை கூவிக் கட்டிய நெடுந்துரம் உயர்ந்த நெடிய கொடிக்கருகே, வரிந்து புனையப்பட்ட பந்து பாவையோடு தொங்க, யுத்தம் செய்வாரை ஒடுக்கிய போர் இல்லாத வாயிலையும், திருமகள் வீற்றிருந்த குற்ற மற்ற அங்காடி வீதியையும், மாடங்கள் மலிந்த வீதியை யும் உடைய கூடல் மாநகரத்தின் மேற்கே.
செரு-யுத்தம். பொருநர்-பொருபவர். நியமம்கடைவீதி, மறுகு-வீதி. குடவயின்-மேற்குத் திக்கில்.)
மலையின் அடிவாரத்துக்கருகே விரிந்த வயல்கள் இருக்கின்றன. நீர்வளமும் நிலவளமும் செறிந்தவை அந்த வயல்கள் என்பதை அங்குள்ள கரிய சேறு காட்டு கிறது. சேற்றிடையே விரிந்து வாயவிழ்ந்த தாமரை மலர்கள், முள்ளைத் தண்டிலே கொண்ட தாமரை மலர்கள் உள்ளன. கட்டுக் காவலுள்ள இடத்தைப் போலத் தாமரையின் தண்டு, எதுவும் ஏறி வராதபடி முள்ளுடன் இருக்கிறது. மலர்களில் வண்டுக்கூட்டங்கள் தங்கி ஒய்யாரமாக இருக்கின்றன. மாலைக்காலம் வந்து விட்டது. தாமரை மலர்கள் மூடிக் கொண்டன. மெத் தென்ற மலர்ப் படுக்கையில் வண்டுகள் சுகமாகத் துங்கிப் போகின்றன.
(கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து மலர்ந்த முள்ளையுடைய தண்டைப் பெற்ற தாமரை மலரில் தூங்கி, விடியற் காலையில் தேன் பரந்த நெய்தல் மலரை ஊதி, சூரியன் உதயம் ஆனவுடன் கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனைகளில் உள்ள மலர்களிலே சிறைகளையுடைய வண்டின் அழகிய கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருத்தலையும் உடையவன். அதுவேயன்றி.
இரு - கரிய. எல் பட - சூரியன் உதிக்க. அரி - அழகு. குன்று - திருப்பரங்குன்றம்.)
https://ta.wikisource.org/wiki/பக்கம்:வழிகாட்டி.pdf/79

--
Reply all
Reply to author
Forward
0 new messages