உ

I am glad that you have given the reminecence of Thirukanaper alias kalaiyar koil. The Kalayarkoil has astya kalis as guards and one is near the temple and another is the kollangudi kaliamman. remaining kaliayammans near are also very powerful guards of the temple and they also serve as a solace to many. If you know the details please share.
இத்தீர்த்தம், தேவேந்திரனின் ஐராவதம் என்னும் வெள்ளை யானையால் உண்டாக்கப் பட்டதாகும். எனவே இது யானைமடு என வழங்கப் பெறுகிறது.
தேவேந்திரனது ஐராவதம் என்னும் வெள்ளையானை நந்தியின் கோபத்திற்கு ஆளாகி, காட்டானையாய்ப் பிறந்து இத்தலம் வந்து, தன் கொம்புகளாலேயே, குத்திக் குத்தித் தடாகத்தை உண்டாக்கி இதிலுள்ள நீரைத் தன் துதிக்கைகளால் முகந்து காளீசருக்கு அபிடேகம் செய்ய சாப நீக்கம் பெற்றது.
அன்றுமுதல் இத்தடகம் யானைமடு எனப்பெயர் பெற்றது. யானை இறங்கினும் மூழ்கடிக்கும் அளவு ஆழம் உள்ள குளம் இது.
இத்தீர்த்தமானது மிகப்பெரிய தெப்பமாக இன்று காணப்படுகிறது. இத் திருக்கோயிலின் தென்புறத்தில், மிகப் பெரிய நீராழி(மைய) மண்டபத்துடன் நான்கு படித்துறைகளை உடையது. இத்தெப்பக்குளம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் போன்று மிகப் பெரியது. மருதுபாண்டியரால் செப்பனிடப்பெற்று இன்று ஊர்மக்கள் நீராடுகின்ற திருக்குளமாகக் காட்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழாவில் கடைசி நாள் தெப்பத் திருவிழா இத்திருக்குளத்தில் தான் நடைபெறுகிறது.
http://kaalaiyarkovil.blogspot.in/2012/06/blog-post.html
தொடரும்......
சிவகங்கை தீர்த்தம் :
காளையார் கோயிலில் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கில், செல்வ விநாயகர் கோயிலின் அருகே உள்ள கிணறே சிவகங்கை தீர்த்தமாகும். இத் தீர்த்தம் “ஆதிதீர்த்தம்“ எனப்படுகிறது. சிவபெருமானால் உண்டாக்கப்பட்டது. பாதாள கங்கையில் கலக்கிறது. கோயிலின் பழமையான தீர்த்தமாகும். இதில் அகத்தியர் மூழ்கி, ஞானோபதேசம் பெற்றார். பத்திரகாளி மூழ்கி, வெப்பம் நீங்கிச் சண்டாசுரனை வதம் செய்தாள். திருமால், பிரமன், இந்திரன் முதலியோர் இத்தீர்த்தத்தில் மூழ்கி நற்பேறு பெற்றனர். கங்கைநீர் கொண்டு காளீசனை அபிடேகம் செய்யக் கருதிய தேவதாசப் பாண்டியனுக்கு சிவபெருமானே இத்தீர்த்தத்தின் பெருமையை எடுத்துக் கூறினார். முன்பு வாவியாக இருந்தது. பின்னர் கோயில்கட்டப் பெறும்போது கிணறாக மாறிவிட்டது.
http://kaalaiyarkovil.blogspot.in/2012/06/blog-post_10.html
தீர்த்தங்கள் தொடரும் ............
அன்பன்
கி.காளைராசன்
காளையார் கோயில் கௌரி தீர்த்தம் :
சண்டாசுர வதம் முடிந்தபின்னர் பத்திரகாளி சோதி வனத்தில் இரண்டு இலிங்கங்களைக் கொண்டு வணங்க, கரியநிறமுடைய காளி வடிவம் நீங்கி சுவர்ண வல்லியாகிறாள். அம்மை உமை என்றும், கௌரி என்றும் இரண்டாகப் பிரிந்து ஸ்தூல லிங்கத்துடன் (சோமேசர்) உமையும், சுயம்புலிங்கத்துடன் (காளீசர்) கௌரியும் இணைந்தனர். சிவபூசையின் பொருட்டு, கௌரியால் உண்டாக்கப்பட்ட புண்ணிய தீர்த்தமே கௌரி தீர்த்தமாகும்.
இத்தீர்த்தம் காளீசர் சந்நிதியின் இடப்புறத்தில் ஒரு சிறிய குளமாக கோயிலின் உள்ளே, கோபுரத்தின் அருகே உள்ளது. படிக்கட்டுகளுடன் அமைந்த இதனை இப்பொழுது பொய்கை என்றும் வழங்குகின்றனர்.
காளையார் கோயில் சரசுவதி தீர்த்தம்:
இத்தீர்த்தம் தடாகமாக இருந்தது. இதில் மூழ்கினால் கல்வி உண்டாகும்.
மீனாட்சி – சுந்தரேசர், சொர்ணவல்லித் திருக்கோயில்களுக்கு இடையே இத்தீர்த்தக் கிணறு உள்ளது. இதற்குமுன் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. தடாகமாகச் சொல்லப்பட்ட இது கிணறாகச் சுருங்கியுள்ளது.
உ
சிவமயம்
பாண்டிநாட்டிலுள்ள
திருக்கானப்பேர் என்னும்
காளையார்கோயிற் புராணம்
இஃது
தஞ்சாவூர், சதாவதானம்
பிர்ம்ம - ஸ்ரீ
சுப்பிரமணிய ஐயரவர்கள்
இயற்றியது.
தேவகோட்டை ஜமீன்தான்
ஸ்ரீமான் - அள.அரு.
இராமசாமிச் செட்டியாரவர்கள்
விருப்பத்தின்படி
சென்னை
வெ.நா.ஜுபிலி அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது.
1899
(copy right reserved)
-------------------------------------------------
உ
திருச்சிற்றம்பலம்
திருக்கானப்பேர் என்னும் காளையார்கோயில்
தேவாராப்பதிகங்கள்
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
1)
பிடியெலாம்பின்செலப்பெருங்கைமாமலர்த்தழீஇ
விடியலேதடமூழ்கிவிதியினால்வழிபடுங்
கடியுலாம்பூம்பொழிற்கானப்பேரண்ணனின்
னடியலாலடைசரணுடையரோவடியரே.
2)
நுண்ணிடைப்பேரல்குனூபுரமெல்லடிப்
பெண்ணினல்லாளையோர்பாகமாப்பேணினான்
கண்ணுடைநெற்றியான்கருதியகானப்பேர்
விண்ணிடைவேட்கையார்விரும்புதல்கருமமே.
3)
வாவிவாய்த்தங்கியநுண்சிறைவண்டினங்
காவிவாய்ப்பண்செயுங்கானப்பேரண்ணலை
நாவிவாய்ச்சாந்துளும்பூவுளுஞானநீர்
தூவிவாய்ப்பெய்துநின்றாட்டுவார்தொண்டரே.
4)
நிறையுடைநெஞ்சளுநீருளும்பூவுளும்
பறையுடைமுழவுளும்பலியுளும்பாட்டுளுங்
கறையுடைமிடற்றண்ணல்கருதியகானப்பேர்
குறையுடையவர்க்கலாற்களைகிலார்குற்றமே.
5)
ஏனப்பூண்மார்பின்மேலென்புபூண்டீறிலா
ஞானப்பேராயிரம்பேரினானண்ணிய
கானப்பேரூர்தொழுங்காதலார்தீதிலர்
வானப்பேரூர்புகும்வண்ணமும்வல்லரே.
6)
பள்ளமேபடர்சடைப்பாற்படப்பாய்ந்தநீர்
வெள்ளமேதாங்கினான்வெண்மதிசூடினான்
கள்ளமேசெய்கிலார்கருதியகானப்பே
ருள்ளமேகோயிலாவுள்குமென்னுள்ளமே.
7)
மானமாமடப்பிடிவன்கையாலலகிடக்
கானமார்கடகரிவழிபடுங்கானப்பே
ரூனமாமுடம்பினிலுறுபிணிகெடவெண்ணின்
ஞானமாமலர்கொடுநணுகுதனன்மையே.
8)
வாளினான்வேலினான்மால்வரையெடுத்ததிண்
டோளினானெடுமுடிதொலையவேயூன்றிய
தாளினான்கானப்பேர்தலையினால்வணங்குவார்
நாளுநாளுயர்வதோர்நன்மையைப்பெறுவரே.
9)
சிலையினான்முப்புரந்தீயெழச்செற்றவ
னிலையிலாவிருவரைநிலைமைகண்டோங்கினான்
கலையினார்புறவிற்றேன்கமழ்தருகானப்பேர்
தலையினால்வணங்குவார்தவமுடையார்களே.
10)
உறித்தலைச் சுரையொடுகுண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலைபாவிகாண்
மறித்தலை மடப்பிடிவள ரிளங்கொழுங்கொடி
கறித்தெழுகானப் பேர்கைதொழல்கருமமே.
11)
காட்டகத்தாடலான் கருதியகானப்பேர்
கோட்டகத்திளவரால் குதிகொளுங்காழியா
னாட்டகத் தோங்குசீர் ஞானசம்பந்தன
பாட்டகத்திவைவ லார்க்கில்லையாம் பாவமே.
திருச்சிற்றம்பலம்
-----------------------------------------------------------------------------------------------
சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் தொடரும்....
மிக நல்ல முயற்சி , வாழ்க !--பதிவுகளை எதிர் நோக்குகிறேன்அன்புடன்தேவ்-----
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
பண் -– புறநீர்மை.
திருச்சிற்றம்பலம்.
1)
தொண்டரடித் தொழலுஞ் சோதியிளம் பிறையுஞ்
சூதனமென்முலையாள் பாகமுமாகிவரும்
புண்டரி கப்பரிசா மேனியும் வானவர்கள்
பூசலிடக்கடனஞ் சுண்டகருத்தமருங்
கொண்டலெனத் திகழுங்கண்டமு மெண்டோளுங்
கோலநறுஞ்சடை மேல்வண்ணமுங்கண்குளிரக்
கண்டுதொழப் பெறுவதென்று கொலோ வடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
2)
கூதலிடுஞ்சடையுங் கோளரவும் விரவுங்
கொக்கி றகுங்குளிர் மாமத்தமு மொத்துனதா
ளோதலுணர்ந்தடியா ருன்பெருமைக் குநினைந்
துள்ளுரு காவிரசு மோசையைப் பாடலுநீ
யாதலுணர்ந் தவரோடன்பு பெருத்தடியே
னங்கையின்மாமலர்கொண்டென்கணதல்லல்கெடக்
காதலுறத் தொழுவதென்று கொலோ வடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
3)
நானுடைமாடென வேநன்மை தரும்பரனை
நற்பதமென்று ணர்வார் சொற்பதமார் சிவனைத்
தேனிடையின்ன முதைமற் றதனிற்றெளியைத்
தேவர்கணாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடைமா மதியை மாசறு சோதியனை
மருதமும் மனலும் மண்டலமும் மாய
கானிடைமா நடனென்றெய் துவதென்று கொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளையையே.
4)
செற்றவர்முப்புரமன்றட்டசிலைத் தொழிலார்
சேவகமுந் நினைவார் பாவக முந்நெறியுங்
குற்றமிறன்னடியார் கூறுமிசைப் பரிசுங்
கோசிகமும்மரை யிற்கோவண மும்மதளு
மற்றிகழ்திண் புயமுமார் பிடைநீறு துதை
மாமலை மங்கையுமை சேர்சுவடும் புகழக்
கற்றனவும் பரவிக்கை தொழலென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளை யையே.
5)
கொல்லைவி டைக்கழகுங் கோலநறுஞ்சடையிற்
கொத்தலரும் மிதழித் தொத்து மதனருகே
முல்லைபடைத்த நகைமெல்லியலாளொருபான்
மோகமிகுத் திலகுங்கூறு செயொப்பரிசுந்
தில்லைநகர்ப் பொதுவுற்றாடிய சீர்நடமுந்
திண்மழுவுங்கைமிசைக் கூரெரியும் மடியார்
கல்லவடப்பரிசுங் காணுவதென்று கோலொ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளையையே.
6)
பண்ணுதலைப்பயனார் பாடலுநீடுதலும்
பங்கயமாதனையார் பத்தியுமுத்தியளித்
தெண்ணுதலைப் பெருமானென் றெழுவாரவர்த
மேசறவும் மிறையா மெந்தையையும் விரவி
நண்ணு தலைப்படு மாறெங்ஙன மென்றயலே
நைகிறவென்னை மதித்துய்யும் வணம்மருளுங்
கண்ணுதலைக் கனியைக் காண்பதுமென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளை யையே.
7)
மாவையுரித்ததள் கொண்டங்க மணிந்தவனை
வஞ்ச மனத்திறையு நெஞ்சணுகாதவனை
மூவருருத்தனதா மூலமுதற்கருவை
மூசிடுமால்விடையின் பாகனையாகமுறப்
பாவகமின்றி மெய்யே பற்றுமவர்க்கமுதைப்
பானறு நெய்தயிரைந் தாடுபரம்பரனைக்
காவலெனக் கிறையென்றெய் துவதென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளை யையே.
8)
தொண்டர்தமக் கெளியசோதியை வேதியனைத்
தூயமறைப் பொருளா நீதியைவார்கடனஞ்
சுண்டதனுக்கிறவா தென்றுமிருந்தவனை
யூழிபடைத்தவனோ டொள்ளரியும்முணரா
வண்டனையண்டர் தமக்காக நூன்மொழியு
மாதியைமே தகுசீரொதியை வானவர்தங்
கண்டனையன் பொடுசென்றெய் துவதென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளை யையே.
9)
நாதனை நாதமிகுத் தோசையதானவனை
ஞானவிளக்கொளி யாமூனுயிரைப்பயிரை
மாதனை மேதகுதன்பத்தர் மனத்திறையும்
பற்றுவிடா தவனைக்குற்றமில்கொள்கையனைத்
தூதனையென் றனையா டோழனை நாயகனைத்
தாழ்மகரக் குழையுந் தோடுமணிந்ததிருக்
காதனை நாயடியேனெய் துவதென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறைகாளை யையே.
10)
கன்னலை யின்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறைகாளை யையொண் சீருறைதண்டமிழா
லுன்னிமனத் தயராவுள் ளுருகிப்பரவு
மொண்பொழினாவலர் கோனாகியவாரூரன்
பன்னுமிசைக் கிளவிபத்திவை பாடவல்லார்
பத்தர்குணத் தினராயெத் திசையும் புகழ
மன்னியிருப்பவர்கள் வானி னிழிந்திடினு
மண்டலநாயகராய் வாழ்வது நிச்சயமே.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்ஷேத்திரக் கோவை தொடரும்....
திருஞானசம்பந்த மூர்த்திநாயனார்
பொது
திருக்ஷேத்திரக்கோவை - பண் - இந்தளம்
ஆரூர் தில்லையம்பலம் வல்லநல்லம்
வடகச்சியுமச் சிறுபாக்கநல்ல
கூரூர்குடவாயில் குடந்தைவெண்ணி
கடல்சூழ்கழிப்பாலை தென்கோடி பீடார்
நீரூர்வயனின் றியூர்குன்றியூருங்
குருகாவையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள்வய னெய்த்தானமும்
பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே.
திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசு நாயனார்
பொது
பாவநாசத்திருப்பதிகம் - பண் - பழம்பஞ்சுரம்
ஆனைக் காவிலணங்கினை யாரூர் நிலாய வம்மானைக்
கானப்பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப்பேரார் வந்தேத்தும் வாய் மூர்வாழும் வலம்புரியை
மானக்கயிலை மழகளிற்றை மதியைச் சுடரைமறவேனே.
க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்.
ஆரூர்மூலட்டானமானைக்காவுமாக்கூரிற்றன்றோன்றிமாடமாவூர்
பேரூர்பிரமபுரம்பேராவூரும்பெருந்துறைகாம்பீலிபிடவூர்பேணுங்
கூரார்குறுக்கைவீரட்டானமுங்கோட்டூர்குடமூக்குக்கோழம்பமுங்
காரார்கழுக்குன்றுங்கானப்பேருங்கயிலாயநாதனையேகாணலாமே.
திருச்சிற்றம்பலம்.
சுந்தரமூர்த்தி நாயனார்.
திருநாட்டுத்தொகை - பண் - இந்தளம்.
தென்னூர் கைம்மைத் திருச்சுழியற் றிருக்கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பரமர்க்கிடம் பாய்ஞல
மென்னூ ரெங்கள் பிரானுறையுந் திருத்தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே.
ஊர்த்தொகை – பண் - பழம்பஞ்சுரம்
காட்டூர்க்கடலே கடம்பூர்மலையே கானப்பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே யழுந்தூரரசே கொழுநற்கொல்லேறே
பாட்டூர்பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே
மாட்டூரறவா மறவாதுன்னைப் பாடப்பணியாயே.
திருச்சிற்றம்பலம்
உ
சிவமயம்
சிறப்புக்கவி
தேவகோட்டை
வித்துவசிகாமணியாகிய - ஸ்ரீமான்
வீர -– லெ.
சிந்நயச்செட்டியாராவர்கள்
இயற்றியது.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பூமணியாயதஞ்சைப் பூசுரமணி நூறென்னுந்
தூமணியவதானந்தேர் சுப்பிரமணியமேலோன்
பாமணியென்னயாத்துப் பைம்மணிவண்ணற் கொண்ணா
மாமணிவாழ்கானப்பேர் மான்மியமணிதந்தானே.
படலவட்டவணை தொடரும்......
உ
படலவட்டவணை
1) பாயிரம்
2) நாட்டுப்படலம்
3) நகரப்படலம்
4) நைமிசப்படலம்
5) அகத்தியர் ஞானோபதேசப்படலம்
6) காளிதிருவவதாரப்படலம்
7) காளிபட்டாபிடேகப்படலம்
8) சண்டாசுரன்வதைப்படலம்
9) காளிபூசனைப்படலம்
10) சுவர்னவல்லி திருமணப்படலம்
11) தேவர்கள் பூசித்தபடலம்
12) தேவதாசப்படலம்
13) இலக்குமி சாபந்தீர்ந்தபடலம்
14) உருத்திரசாபந்தீர்ந்தபடலம்
15) வீரசேனபாண்டியப்படலம்
16) வரகுணபாண்டியப்படலம்
17) சுகந்தகேசிப்படலம்
18) விக்கிரமசோழன் சிவலிங்கப்பிர திட்டைப்படலம்
19) புட்கரப்படலம்
20) பேய்கள் சாபநீங்கியபடலம்
21) கங்கை பாபந்தீர்ந்தபடலம்
22) கவுதமப்படலம்
23) வெள்ளையானை சாபந்தீர்ந்தபடலம்
24) இந்திரன் சாபநீங்குபடலம்
25) கண்ணுவப்படலம்
26) தேவசேனப்படலம்
27) மகாகாளேசப்படலம்
28) சோமநாதப்படலம்
29) சுந்தரமூர்த்திப்படலம்
30) தேவராதப்படலம்
31) கதாசங்கிரகப்படலம்
32) தலவிசேடப்படலம்
33) முனிவர் பூசித்தப்படலம்
திருக்கானப்பேரூரென்று வழங்குகின்ற காளையார்கோயிற் புராணம் தொடரும்....
அன்பன்கி.காளைராசன்
உ
சிவமயம்.
திருக்கானப்பேரூரென்று வழங்குகின்ற
காளையார்கோயிற் புராணம்
பாயிரம்
விநாயகர்துதி
1
சீர்பூத்த மணிமார்பன் வியன்படையு மயன்படையுந் தேவர்கோமான்
வார்பூத்த வயப்படையும் வியப்படையு நுதித்தந்த வரைகோல்கொண்டு
பார்பூத்த புகழ்த்தாதை கைச்சிலைசித் திரித்தாங்குப் பாரதந்தீட்
டேர்பூத்த கானப்பேர்ச் சிங்காரகணபதிதா ளிறைஞ்சிவ வாழ்வாம்.
காளீசர்
2
மாமேவு மலரனங்கா ணாமுடிகண் டாமெனவுணம
தேமேவு நறுங்கொன்றை முகமலரக் கங்கையலை திரண்டுபொங்க
மீமேவு வெண்பிறையு மெய்வளர்ந்து பூரிப்ப வேணிதாங்குங்
காமேவு கானப்பேர்க் காளீசன் கான்மலரைக் கருத்துள்வைப்பாம்.
சுவர்னவல்லியம்மை
3
கலைவல்லி கடவுளர்க ளமுதவல்லிக் கரணிகொடு கடைந்துபண்டு கண்டதீம்பா
லலைவல்லி யுடற்கண்ணா னில்வாழ்வல்லி யாதியவல் லிகளெல்லா மண்மிப்போற்றுந்
தலைவல்லி நகையெனுந்தன் போதோடங்கை தனமூக்கென் றேனையமுப் போதும்பூத்த மலைவல்லி சோதிவனச் சுவணவல்லி மணவல்லி மலர்த்தாளுண் மலருள் வைப்பாம்.
சோமேசர்
4
இம்பரின்முன் னமைச்சரண்புக் கருச்சித்த பனவச்சே யினைக்கறுத்த
வெம்பகடூர் தியைக்கழலிற் றேய்த்திட்டா மின்னுநலம் வேண்டிப்பூசை
நம்பியுஞற் றிடுமடியார்க் கெவ்விகனே ரினுந்துமிப்பா ஞாட்பேற்றென்னாத்
தும்பையணிந் தருள்மவுலிச் சோமேசன் றுணைமலர்த்தா டொழுதுவாழ்வாம்.
சவுந்தரநாயகி யம்மை
5
கருவளரு மூலத்துத் தருணரவி நேர்வித்திற் கலைமானாகி
யிருவளரு மிதயத்திந் திரகோப நேர்வித்தி னிடைச்சீயாகித்
தருவளரு மாஞ்ஞையினின் மதியினைநேர் வித்திற்சிற் சத்தியாய
திருவளருங் கானப்பேர்ச் சவுந்தரிய நாயகிதாள் சென்னிசேர்ப்பாம்.
சுந்தரேசர்.
6
துன்னியமெய் யிடப்பாலி லொருபெண்ணை மணந்ததுவுந் தூயதிங்கட்
பொன்னினொளிர் வேணிமிசை யொருபெண்ணை மணந்ததுவும் போதாவென்னாக்
கன்னவிறோ ளொருமாறன் பெண்ணைமுன மணந்தமையாற் கானப்பேரிற்
பின்னுமொரு தென்னவனிற் பெண்மணந்த சுந்தரனைப் பேணிவாழ்வாம்.
மீனாட்சியம்மை
7
புயற்கணாயகி னறைகமழ் பூங்குழற் பூவை
யயற்கணாயகி ரீசனா ருயிரனா ளன்ப
ருயற்கணாயகி லங்கண்முற் றளித்தரு ளூட்டுங்
கயற்கணாயகி கழற்புணை கொடுபவங் கடப்பாம்.
சபாநாயகர்
8
உலகெலாமென வுதித்ததோ ரோசையா னுலகத்
தலகிலாதவ ராந்திருத் தொண்டர்த மருமை
யிலகுமாக்கதை தோற்றுவித் தக்குண மின்றிச்
சுலவுசீர்ச்சிதா காயத்தி னடிப்பவர்த் தொழுவாம்.
சிவகாமியம்மை.
9
ஒருமாமரையிலிருகுவளை யொளிசூழ்ந்தென்ன வுயர்மன்றத்
தருமாமறையினுபநிடமு மயனுமாலு நேடரிய
பெருமானடனகுஞ்சிதத்தாள் பெட்பாற்றுணைக்க ணோக்கிநலம்
வருமாநிற்குஞ்சிவகாம வல்லி துணைத்தாண் மலர்போற்றி
தட்சணாமூர்த்தி
10
வாலியர்சார்மாணாக்கர் வார்த்திகர்குரவராதன்
மாலியலையந்தீர்த்தல் வாய்திறந்துரைத்தலென்னும்
பாலியலதற்குமாறப் பண்டுமூப்படைந்த நால்வர்க்
காலியலடிக்கீழ்மோனத் தாற்பொருடெளித்தார்த் தாழ்வாம்.
வயிரவர்
11
குரைத்தலைமேவும் வேதக் குக்கனானகயலிற்சூழ
விரைத்தலையெழப் பல்வானோர் மெய்யினின்றிழி நெய்த்தோரா
றரைத்தலையோட்டினுக்கு மரையளவென்னவேற்கு
மரைத்தலைமாவாழ்சோதி வனவயிரவன்றாள் போற்றி.
வாள்மேனடந்தவம்மை
12
தோண்மேலடல் சூடிய தென்னவனோ
டேண்மேலெதி ரேற்ற புலிக்கொடியோன்
கோண்மேலுயர் கோட்டை யெனப்புரியும்
வாண்மேனடந் தாளை வணங்குவமால்.
செல்வவிநாயகர்
13
வில்வமறுகருக்கிதழி முதலாயவிரைமலர் தூய் மேனாளாற்று
நல்வினையாற்றனைப்பூசை புரிபவர்க்கைந்தருநிழரு நளினவீடும்
பல்வகையபொறிவிரவு பாப்பணையுமாதியவாப் பகராநிற்குஞ்
செல்வமெலாந்தந்தருளுஞ் செல்வவிநாயகனடியைச் சிந்தைசெய்வாம்.
சுப்பிரமணியர்
14
பாமினாதன் பதியென வாழ்பவன்
றோமினாத தொடர்தரக் குட்டியே
யோமினாத வுரைக்குரை யோதிய
சாமினாதன் சரண்சர ணாகுமே.
திருநந்திதேவர்
15
பண்டரண்வடிவிற்பட்ட பாண்டியன் பிரம்பின்மொத்துக்
கண்டிடிற்பொ துவேயாகக் கயிலையுட்கோயில்சாரு
மண்டர்மெயதொ றுஞ்சிறப்பா மடிதரும்வேத்திரங்கைக்
கொண்டுலாநந்திதேவன் குளிர்மலர்த் தாள்கள் போற்றி.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள்
16
முன்புகோ தமன் மொய்வரச் சார்பினாற்
பின்புகல்லினைப் பெண்ணென வாக்கியோன்
வன்புநாணுற மாதென வஃதிலா
தென்பையாக்குசம் பந்தரை யேத்துவாம்.
திருநாவுக்கரசு சுவாமிகள்
17
வேணியேறந்த வெள்ளத் துமையொடேர்
தோணியேறிதன் சொற்றுணை யாற்கழு
நாணியேறுநர் வீழ்த்த நரலைகற்
றேணியேறிக் கடந்தார்த் தொழுவமால்.
18
பண்டுதான்றடுத தாண்ட பரிசென
மண்டுசோதி வனத்திறை காளையாய்த்
தண்டியீர்ப்பத் தமிழ்ப்பதி கஞ்சொல்வன்
றொண்டர் தொண்டர்க்குத் தொண்டுசெய் வாமரோ.
மாணிக்கவாசக சுவாமிகள்
19
வேதமாதியுள் விட்டுணு வென்றபேர்
மாதுபாதியற் கேயென வையமோர்ந்
தோதமாறற்கொண் டூங்கடிப் பித்தநம்
வாதவூரர் மலரடி வாழ்த்துவாம்.
சண்டேசர்
20
திண்ணனார்மென்று தின்றுள மிச்சிலுண்
டண்ணியெய்த வருங்கதி யுய்த்தவ
னுண்ணவெஞ்சிய வுண்டுமற் றென்றுணாத்
திண்ணமேவுசண் டீசரைச் சேவிப்பாம்.
அறுபத்துமூவர்
21
தம்பிரானார் தனித்தோழர் சாற்றுதொண்டத் தொகைக்கரும்பி
நம்பியாண்டார் நம்பியன்பா னவிலந்தாதி வயிற்போதா
யெம்பிரான் சேக்கிழார்பெருமா னிசைத்தபுராணத் திடைமலர்ந்து
பம்பிநீள்சீர்ப்பத்தரறு பத்துமூவர் பதம்பணிவாம்.
கலைமகள்
22
வலக்கையிற்படிகமாலை வாமக்கைம்மலரின்ஞான
மிலக்குபுத்தகமொன்நேற்தி யியல்வரம்பயங்காட்டி
நலத்ததண்மதிநேர்தன்மெய்ந் நகைக்குக்கூம்பா வெண்கஞ்ச
மலர்க்கண் வாழ்கலை மானுக்கென் மனக்கமலமும்புக்கில்லாம்.
தமிழாசிரியர்
23
சுத்தமெய்ய றிவானந்த சுந்தரக்கடவுள கூட
னத்தியசங்கத்தாரு ணக்கீரனாரைநோக்கி
யித்தரைநம்மையொப்பா னென்னவாய்மலரப்பெற்று
முத்தமிழ்க்குரவு பூண்டமுனிவன்றாண்முடிமேற்கொள்வாம்.
வாழ்த்து
24
மாமறைக்கீதம்வாழ்க வளர்மகவிசேடம்வாழ்க
தூமழைபொழிந்துவாழ்க துன்னியபயிர்கள்வாழ்க
பூமலியுயிர்கள் வாழ்க பூதிசாதனங்கள்வாழ்க
மீமிசைசைவம்வாழ்க வேந்தர்மெய்ச்சேங்கோல்வாழ்க.
நூற்பயன்
25
கானப்பேர்மான்மியத்தைக் கனிந்தநல்லன் பிற்கேட்போர்
மீனப்பேருவரிசூழ்பூ மீதுபன் னாள்வாழ்வும்பர்
மானப்பேசழியாச் செல்வ மன்னிநன்மகார்ப் பெற்றுப்பின்
பூனப்பேறுடன் மீட்டெய்தா வுயர்சிவகதியைச்சார்வார்.
•••••
அவையடக்கம்
26
வனசமாமலர்ப்பொகுட்டு வாழ்பவன் முதல்வானோர்
மனவணுக்கொடுதேர்ந்தோத மாட்டாமைவெள்கிநிற்ப
வெனதுவெள்ளறிவியார்க்கு மெளிமையிற்றெரியும்வண்ண
மினிதுநீகானப்பேரு ரீசன்மாக்கதை சொல்கென்னா
27
சங்கொடுகமலரூப தனநிதிதம்பாலென்றுந்
தங்கலாலீகையத்தாற் றகுசிவதருமமத்தாற்
றுங்கமார்போகமத்தாற் றூயநீடின்பமேவி
யிங்குவாழ்பெரியோர்கூற விசைந்தனன்சிறியேன்கூற.
28
என்கவியினையும் பற்பலினிய நூல்கண்டமேலோர்
பன்கவியாக்கொள்வாரெப் பான்மையினென்னினன்னார்
நன்கவிபுனையென்றியா நாட்டியசொன்மறாமே
யென்கவியேனுஞ்செப்ப வெழுந்தனனென்னுமன்பால்.
29
திங்களினொளியைக்கான்று திகழுமிப்பியினமுததோடு
தங்குபைங்கழையின்முத்துந் தரளமாக்கணித்தல்[1போலப்
பொங்குபேரறிவான்மிக்கோர் புகன்றநற்பாக்களோடு
புங்கமிலாதேன்சொற்ற புன்சொலுங்கணிப்பந்தூயோர்
30
நன்குசால்கரும்பின்சாறு நச்சினார்பருவங்[2கோட்ட
மன்கழிகோதுநாடா ரஃதெனவழுவிராய
வென்கவிப்புன்மையுன்னா தேற்பர்கானப்பேரீசன்
றன்கதைச்சுவையளாய் தன்மையானன்மைசான்றோர்.
சிறப்புப்பாயிரம்
31
நாற்றிசைபரவுந்தஞ்சை நகரில்வாழந்தணாளன்
போற்றுறுசதாவதானப் புலமையிற்றலைமைபூண்டோன்
றோற்றலில்கலைகள்கற்றோன் சுப்பிரமணியசனமன்
சாற்றினன்கானப்பேரூர்த் தலத்துமான்மியத்தைமாதோ.
பாயிரமுற்றிற்று.
நாட்டுப்படலம்
1
இறைவனங்கயற்கணம்மையிருந்திறற்சேயென்றின்னோர்
முறைவழிகாத்தியங்கண்முழங்குகானப்பேர்முன்னாப்
பிறைமுடிப்பெம்மான்வாழ்க்கைபெறுதலம்பலபுனைந்த
மறைவளபாண்டிநாட்டின்வளஞ்சிலவழுத்தலுற்றாம்.
2
எழினலமுடையார்தம்முளிசைக்குழற்கண்ணனென்ன
வழிவிலாச்செல்வர்தம்முளளகையம்பதியானென்னப்
பழியொழிகற்றார்தம்முட்பஃறலைச்சேடனென்னச்
செழியதண்பன்னாட்டுள்ளுஞ்சிறந்ததுபாண்டிநாடு.
3
நதிகளிற்கங்கைமாவினவில்வயச்சிங்கவேறு
பதிகளின்மநுவேந்தம்பொற்பணியின்மங்கலநாண்கூர்த்த
மதிகளின்மதியளித்தவண்புதன்மதியேயென்ன
நிதிவளப்பன்னாட்டுள்ளுஞ்சிவந்ததுபாண்டிநாடு.
4
துங்கமன்னின்னாடென்னத்துறுவளமடைந்திலேமென்
றங்கனகத்துநன்னுடயர்ந்தவமதிப்புற்றிங்குத்
தங்கமென்றோதுநாடாய்த்தனிப்பறந்தந்தரத்திற்
றொங்கவண்மல்லன்மல்கிச்சுரப்பதுபாண்டிநாடு.
5
இகலொரீஇச்செழியராளவிருமைகொண்டனறிந்நாடு
பகருநின்மரபில்வந்தபார்த்திவர்க்கெனையுங்காப்பப்
புகன்மதியெனமதிப்பாற்போந்திரந்தாங்குமீக்க
ணகனமருலகுநிற்குமணியதுபாண்டிநாடு.
6
வறியவர்மெலியுநோயர்வன்கணர்படிறர்சீரிற்
குறியவர்கற்குநூலிற்குறைந்தவர்மதியாலென்றுஞ்
சிறியவர்மடமைசான்றசிந்தையர்சான்றோராஞ்ஞை
யெறிதருவாரின்னோரையில்லதுபாண்டிநாடு.
7
துய்யபஞ்சவன்பெண்வேள்வித்தொகுபலபண்டமுண்டு
நையுமோர்பாரிடத்தினனிவிடாய்தணித்திட்டாங்கு
மையதீவினையரேனும்வன்பவவிடாயுந்தீர்க்கும்
வையைமாநதியுஞ்சூழும்வளத்ததுபாண்டிநாடு.
8
ஆலவாயகானப்பேரூராடானைபுனவாயில்குற்
றலமேடகம்பரங்குன்றாப்பனூர்சுழியல்புத்தூர்
மாலிராமேச்சுரம்பூவணங்கொடுங்குன்றுவேய்நெல்
வேலியாந்தலமுறுப்பாமேயதுபாண்டிநாடு.
9
வேதநற்கீதமெங்கும்வேள்விசெய்சாலையெங்கு
மூதறப்புறங்களெங்குமொய்கடிமணங்களெங்கு
மேதகுவிழாக்களெங்கும்விரிமகரிகைகளெங்கு
மாதவர்குழாங்களெங்குமங்கலவள்ளையெங்கும்.
வேறு
10
கங்கைமாநதிகடற்றலைமகனொடுங்கலப்பப்
பொங்குநேயமிக்கெழவழிக்கொடுசெலல்போல
வெங்குமேவிவிண்ணிடைப்படர்ந்தொளிரும்வெள்ளெழிலி
செங்கணாயிரமுடையவன்றிசையினிற்சென்ற.
21
பொருவின்மாமல யந்தரு மருவியாம் புதல்வி
குருவில்வாணுத னாசிகைக்குமிழ்முலைக் கோங்கு
மருவுதோட்பணை கோடலங்கையையு மன்னிப்
பொகுநையென்னுமோர் பெயர்கொடுநடந்தனள் புவிமேல்
22
கோடெறிந்தெதிர் கயத்தலையடர்ந்தடல் கொண்டு
நாடுமங்குச பாசமுந்துதிக்கையு நயந்து
நீடுகுஞ்சர சுமுகமேவிக்கட நீர்தோய்ந்
தாடிமுன்னவற் போன்றதாலறல்விரி பொருநை
23
எறிந்தவேலினா லெதிர்த்ததிண் மாமரஞ்சாய்த்துச்
செறிந்ததண்கடம் பணிந்துபைஞ் சிகண்டியைமேவிக்
குறிஞ்சிபுக்குறை குறவர்தம்மாதினை மணந்து
முறிந்திடாவலி முருகனைப்போன்றது பொருநை
24
கொன்றைவேய்ந்துசெம் மானிடமேந்திநீள் கோட்டுக்
குன்றநேர்பொரு மத்தியையடர்த்துரி கொண்டங்
கொன்றுமம்புலி முடிமிசையணிந்துசே வுந்திப்
பொன்றலில்கறைக் கண்டனைப்போன்றது பொருநை
25
குலவுதண்டுவாள் கொடுமரந்திகிரிசங்கேந்தி
மெலிவில்பாடிபுக் கிழுதுபான்மிடாவொடு மிசைந்தாச்
சுலகிலாய்ச்சிய ரகமுறுகற்பினைக் கவர்ந்து
பொலியுமாயனைப் போன்றது புதுப்புனற் பொருநை
26
கருவியாகியங் கலையவளந்தனங் கலந்தே
ருருவமாமரை மேவிநால்வாயுமுற் றுலகி
லொருவிலாவிக டந்துபன்னியமமு முற்றுப்
பொருவில்போதனைப் போன்றது புதியநீர்ப் பொருநை
27
புனனிறைந்துள கடலெனும்பதியைநீர்ப் பொருநை
யெனுமொர்கன்னிகான் றண்ணடைநெய்தலை யேய்ந்து
தனஞெமுங்குறத் தழீஇவிராய்மணந்ததா லவ்வவ்
வினமினத்தினை வேட்குதல் வையகத் தியல்பே
28
வேறு
உக்கிரமாறனாடொட் டும்பர்கோனுக்கேயென்றுந்
தக்கசீர்க்காரைக்காத்தார் தருபிணை பிழையாவண்ண
மிக்கவான்மழைதகப்பெய் வித்திடல்கடமைத்தென்னி
னக்கவின்வளஞ் சொல்வாராரைந்திணை வளமுஞ்சொல்லாம்.
29
குறிஞ்சி
ஒருமலையுதித்துக்கையா லொருமலைகுனித்துவெள்ளி
யொருமலையிருந்தாற்கூடி யொருத்தியீன் றளிக்கத்தோன்றி
யொருமலைவேட்டகம்புக் குளவுரிமையினாற்பேயா
லொருமலைபுகுந்தாற்காத்தோ னுவந்துகாப்பது குறிஞ்சி.
30
முருகுலாங்கூந்தனமாவை முந்துநல்கியவலாரி
முருகவேளைக்கண்டாட முகில்கண்டுமயில்களாடு
மருகனைமாமன்காணூஉ மகிழ்வுறமாமனூர்தி
31
கொம்புளவேங்கைமீது கொம்பிலாவேங்கைபாயக்
கொம்புளநாகமீது கொம்பிலாநாகம்பாயும்
வம்புளவெற்புமீது வம்பிலாவெற்புப்பாய
வம்புளவண்டுமீது வம்பிலாவண்டுபாயும்
32
வரைமிசைக்கிளைத் துநீண்டு வளர்ந்துவான்மீன்கடோய்ந்து
வரைசெயற்கரிதாய்த் துற்று மன்னியவரைகளீ ட்டம்
வரைசெயுங்கயற்பதாகை மாறர்முன்னாண்டார் தம்மை
வரைசெய்துகணித்துக்காணும் வழிக்கொரு துணையாய்நிற்கும்
33
இறவுளரிதைவிதைப்பா னிரும்புனந்திருத்திக்கிண்டி
யெறிகதிர்மணிக்கற்குப்பை யெடுத்தயற்புறங்குவிப்பார்
குறமினாரவற்றையெல்லாங் கோத்தெறிகவண்கல்லாக்கி
மறவரைமீட்டும்வேலை வாங்குவாரிதண்மேலோரே
34
வேடுவரொடிபோக்கோதை வேழநீர்பருகுமோதை
மாடுளகொடிச்சிமார்கண மாத்தினை யிடிக்குமொதை
நீடருவிகள் வீழோதை நெருங்குபல்விலங்கினோதை
பாடுமிவ்வைந் துங்கூடிப் பஞ்சதுந்துமியைத்தாழ்த்தும்
35
சண்முகன்படைவீடாறுட சந்தநாசலமுந்திங்கட
டண்முகப்பிடியைவேட்ட தனிப்பரங்குன்றும்பூவிற்
பண்முகவளிகள்சூழும் பழமுதிர்சோலைவெற்பு
மண்மியோர்பாதியாங்க ணாயின்வேறுரைப்பதென்னே
36
மாதவனூர்தி தன்னை வாய்ப்பெய்தவழுவைப்பாற்று
மேதுவின்மயூரம்பூசை யியற்றித்தீர்வுற்றுத் தூய்தாய்
மேதகுகுமரவேளை வெரிநிடைச்சுமவாநிற்குங்
கோதிலாக்கிரியுமந்தக் குறிஞ்சியேற்புனையப்போமோ.
37
முல்லை
வேறு
முன்னாளோர்பிருந்தையுடன் முயங்கிநலனுகர்மாலோன
பின்னாளுமவ்வேட்கை பெரிதாகப்பல்லுருவ
மன்னாநின்றவளுருவாம் வனங்கள் பலவளர்வனமீ
தென்னாநெஞ்சுவந்துகலந் திருந்துபுரப்பது முல்லை
38
இன்னிலத்தரேயண்ட ரெழிலாக்களேதேனு
துன்னுபயமேயமுதந் துறுவனமேகற்பகமாங்
கன்னவிறோட் காவலனுங் கரியவனாங்கண்கூடா
மன்னிதுவேசுவர்க்கமன்றி மற்றதைவான்கண்டவர்யார்
39
பொதுவியர்கள் பல்லோர்க்கும் போகம் வெவ்வேறூட்ட
மதுகையிடவர்ச்சாய்த்த மாயவனாகியபுத்தேள்
புதியவுருப்பலகாட்டிப் பொற்புறநிற்றன்மான
மதுவொழுகுமிதழ்விரித்து மலர்ந்து நிற்கும்பலகாயா
40
தொறுவியர்நம்மெயிற்றினுக்குத் தோற்றுடைந்ததளவரும்பி
முறுவலித்தவென்னென்னா முனிவரும்பித்தாநகைப்பத்
துறுமவைகண்மீட்டுமதே தொழின்மிகுக்கத் தம்மியற்கை
யறிகில ராயலர்விரிப்பார்க் கசியியல்பேயெனச் சிரிப்பார்
41
எள்ளிறுங்கு சாமைபய றீரவரைகோத்திரவங்
கொள்ளுழுந்தாடகமலைபோற் குவிப்பாரவ்விடையுள்ளார்
தெள்ளுசுவைப்பாலட்டுத் தீந்தயிர்தோய்த்தேடெடுத்துக்
கொள்ளருவெண்ணெய்மலைபோற் குவிப்பாரவ்விடையில்லார்
42
ஆயர்விடைதழீஇயடக்கி யம்மடவார்மார்பகத்துத்
தோயவெழுயானைகளைத் தோண்மலைக்குள்ளடக்குவரந்
நாயகர்வாயெழுகுழலி னாதவொலியினையந்த
வாயநலார் ததிகடையு மார்ப்பினுக்குள்ளடக்குவரால்
43
பெரும்பசுவின் பான்மணமும் பெய்துருக்குநெய்மணமு
மரும்புதளவின்மணமு மாய்ச்சியர்மெய்யியன்மணமும்
விரும்பிநனிகுமிழ்மரமும் வீநாசிபலபெற்றாறு
விரும்புவியிலிவைமோக்கா ரெவரவரின்மூக்காரே
44
பசுக்களைத் தன்னுதரத்தின் பாற்காட்டித்தமையென்று
நசிப்படையாப்பாலனஞ்செய் நன்மாயனிற்சிறந்தே
பசுக்களெலாந்தம் முறுப்பிற் பசுபதிமுற்றேவர்களை
வசிப்பியலாற்காட்டியுயிர் வளர்க்கும்வனவனப்பெளிதோ
45
வேப்புடையார்குலத்துமுனோர் மீனவன்வேட்டம்புரிந்து
நாப்புடையார்நீருலர்ந்து ஞாலமிசைச்சோர்ந்துவிழக்
காப்புடையாவவன்விரதங் காப்பான்காட்சிக்கரனா
ராப்புடையாராந்தலமுன்னாம்பலவாங்குரைப்பதெவன்
46
மருதம்
வேறு
அந்தரத்தர சாட்சியுண் டெனினும்பல்லவுணர்
வந்துவந்திடை யூறுசெய் வறுமையை மறுப்பான்
மைந்துமிக்குயர் மன்னர்தம் படைத்துணை வேண்டி
யிந்திரன்புரந் தாளுவ தெழில்வள மருதம்
47
அங்கண்வானதி மேலதென் றிடிலவணதனீர்
தங்குமேரிசெய் யெத்தனை விளைசொலெத்தனையென்
றிங்கணெண்ணுகான் முயன்மருப் பெனவதையிழித்துப்
பொங்கியார்ப்பொடு வந்தது பொருநைமாநீத்தம்
48
மலயமேயசெம் மணிக்குவைகளைவிழைஇக் காண்பான்
செலவினீரினே ரேறுவசெல்லுவ சிலமீன்
குலவுவேலையுள் வெண்மணிக்குவைகளை நோக்கச்
செலவினீரொழுக் கின்வழிச்செலலுவ சிலமீன்
49
பெருநேடுங்குலை யடர்த்தடங்காவரு பெருக்கைக்
கருமைமண்டொடு கருவியினடக்கியே காலின்
மருவிநேர்செல வுய்த்தனருழவர்கண் மதமா
விருமையங்குசத் தடக்குமம்மள்ளர்பேரெடுத்தார்
50
நலமுலாமரு தத்திடைப்பொருநைநன் னதியிற்
சுலவிநீடிய கால்பலபிரிந்திடு தோற்ற
முலவுதிங்களின் விம்பநின்றொண்ணிலாக் கற்றை
பலவிரிந்திடு பான்மையைச்சிவணுறும் பரவி
அன்புள்ளகாளைராசன் அவர்களுக்கு,இத்துடன்திருக்கானப்பேர் திருமுறை எனும்தொகுப்பினை வைத்துள்ளேன் காண்கமுன்பு திருப்பூவணம் எனும் தொகுப்பினை வைத்திருந்தேன்அதனைப்போல் சாதாரணமான எல்லோரும் வைக்கும் தலப்பாடல்களைத் தவிர திருக்கானப்பேர் தலப்பெயரைக் குறித்தே போற்றப்படும்ஏனைய 12 திருமுறைகளில் வரும் வைப்புப் பாடல் களும் இணக்கப்பட்டுள்ளதுசலவைக்கல் கல்வெட்டிலோ அல்லது கற்சுவற்றினில்வண்ணம் கொண்டு எழுதியதாகவோ இருக்கலாம்நுண்ணிய ஆய்வுக் குறிப்புகள் = (திருமுறையிலிருந்து தலபுராணம் )சம்பந்தர் பதிகம்(1) முதல் பாடலிலேயே யானை வழிபட்டமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதுஉங்கல் தலபுராணத்தில் உள்ளதா? 7 ம் பாடலிலும் பெண்யானை பெருக்கி(அலகிடுதல்) தன் கரியுடன் வழிபாடு காண்க (10 த்திலும் காணலாம்)(2) சம்பந்தர் 3 ம் பாடலில் மான் மதம் (நாவி வாய் சாந்து ) கலந்த நீரை நீராட்டுகளில்பயன் கொள்ளுதல்(3) பறை முழவு இசைக்கப்பட்டது (பாடல் 4 0(4) காட்டுப்பன்றியின் கொம்பு அணணிகலன் என இருந்தது = பாடல் 5(5) படல் 9 மான்கள் உலாவும் புறவு = புதர் போன்று செடிகொடிகள் அடர்ந்து காணும்ஒர் இடம் தேனடையுடன் அருகு இருந்ததுசுந்தரர் பதிகம்சம்பந்தர் கலத்திற்குப்பிறகு ஏதொ மாற்றம் அதனால்தான்காணுவது என்கொலோ என ஏக்கம் எல்லா வரிகளிலும் வருகின்றது(1) கார் பழனம் சூழ்ந்துள்ள ஊர் (பச்சைப்பசேல்) எல்ல அடிகளிலும் ஈற்றில் காண்க(2) பாடல் 4 மங்கையுமை சேர் சுவ டும்(3) பாடல் 5 கல்லவடம் எனும் இசைக்கருவி இந்த ஊரில் சிறப்பாக பயன் பட்டுள்ளது(4) பாடல் 9 அகச் சான்று சிவபெருமான் தோழனாகவும் தூதனாக வும் ஆயது(5) பாடல் 9 ஆடல்வல்லான் திரு மேனியில் காணும் மகரக்குழை வலது காதிலும்பனை ஓலை இடது காதிலும் இருக்க வேண்டியமை(6) பாடல் 10 சிறப்பு விளி = காளை அதனை வைத்து காளையார் கொயில்வைப்புப் பாடல்கள்பாடல் 3 கட்டி சிறப்புப் பெயர் விளிகட்டி = கற்கண்டு (கட்டிபட்ட கரும்பினை = மற்றொரு தேவார வரி)(அடுத்தே கானூர் விளைந்த கரும்பே எனவும் வருதல் காண்க )-------------------------------------------------------திருஞானசம்பந்தர் தேவாரம்திருக்கானப்பேர் - கொல்லிபிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடுங்
கடியுலாம் பூம்பொழிற் கானப்பேர் அண்ணல்நின்அடியலால் அடைசரண் உடையரோ அடியரே 3.26 1நுண்ணிடைப் பேரல்குல் நூபுரம் மெல்லடிப்பெண்ணின்நல் லாளையோர் பாகமாப் பேணினான்கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே 3.26 2வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினங்காவிவாய்ப் பண்செயுங் கானப்பேர் அண்ணலைநாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்தூவிவாய்ப் பெய்துநின் றாட்டுவார் தொண்டரே 3.26 3நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளுங்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்குறையுடை யவர்க்கலாற் களைகிலார் குற்றமே 3.26 4ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலாஞானப்பே ராயிரம் பேரினான் நண்ணியகானப்பே ரூர்தொழுங் காதலார் தீதிலர்வானப்பே ரூர்புகும் வண்ணமும் வல்லரே 3.26 5பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்உள்ளமே கோயிலா உள்குமென் னுள்ளமே 3.26 6மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே 3.26 7
வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண்
டோளினான் நெடுமுடி தொலையவே யூன்றியதாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார்நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே 3.26 8சிலையினால் முப்புரந் தீயெழச் செற்றவன்நிலையிலா இருவரை நிலைமைகண் டோங்கினான்கலையினார் புறவில்தேன் கமழ்தரு கானப்பேர்தலையினால் வணங்குவார் தவமுடை யார்களே 3.26 9
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்துச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்மறித்தலை மடப்பிடி வளரிளங் கொழுங்கொடிகறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே 3.26 10காட்டகத் தாடலான் கருதிய கானப்பேர்கோட்டகத் திளவரால் குதிகொளுங் காழியான்நாட்டகத் தோங்குசீர் ஞானசம் பந்தனபாட்டகத் திவைவலார்க் கில்லையாம் பாவமே 3.26 11காளையீசுவரர்-மகமாயியம்மைசுந்தரர் தேவாரம்திருக்கானப்பேர் - புறநீர்மைதொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோளுங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.1கூத லிடுஞ்சடையுங் கோளர வும்விரவுங் கொக்கிற குங்குளிர்மா மந்தமும் ஒத்துனதாள்ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந் துள்ளுரு காவிரசும் ஓசையைப் பாடலும்நீஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன் அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்காத லுறத்தொழுவ தென்றுகொ லோவடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.2நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத் தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனைவானிடை மாமதியை மாசறு சோதியனை மாருத மும்மனலும் மண்டல மும்மாயகானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.3செற்றவர் முப்புரம்அன் றட்ட சிலைத்தொழிலார் சேவக முந்நினைவார் பாவக முந்நெறியுங்குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசுங் கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்கற்றன வும்பரவிக் கைதொழல் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.4கொல்லை விடைக்கழகுங் கோல நறுஞ்சடையிற் கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகேமுல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால் மோகம் மிகுத்திலங்குங் கூறுசெய் யெப்பரிசுந்தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந் திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.5பண்ணு தலைப்பயனார் பாடலும் நீடுதலும் பங்கய மாதனையார் பத்தியும் முத்தியளித்தெண்ணு தலைப்பெருமான் என்றெழு வாரவர்தம் ஏசற வும்மிறையாம் எந்தையை யும்விரவிநண்ணு தலைப்படுமா றெங்ஙனம் என்றயலே நைகிற என்னைமதித் துய்யும்வண் ணமருளுங்கண்ணு தலைக்கனியைக் காண்பதும் என்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.6மாவை உரித்ததள்கொண் டங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனைமூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப் பால்நறு நெய்தயிரைந் தாடு பரம்பரனைக்காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.7தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத் தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்சுண்டத னுக்கிறவா தென்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணராஅண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும் ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தங்கண்டனை அன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.8நாதனை நாதமிகுத் தோசைய தானவனை ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரைமாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும் பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்தூதனை என்றனையாள் தோழனை நாயகனைத் தாழ்மக ரக்குழையுந் தோடும் அணிந்ததிருக்காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே. 7.84.9கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும் ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழமன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே. 7.84.10காளைநாதேசுவரர் - பொற்கொடியம்மை------------------------------------------1 திருவையாறு - மேகராகக்குறிஞ்சிகங்காளர் கயிலாய மலையாளர் கானப் பேராளர்மங்கைபங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கிசெங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே 1.130.32 திருக்ஷேத்திரக்கோவை -- இந்தளம்ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம் வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்லகூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும் பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே 2.39.13 பாவநாசத்திருப்பதிகம் - -பழம்பஞ்சுரம்ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்கானப் பேர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினைவானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியைமானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே 4.15.24 திருக்கழிப்பாலை - திருநேரிசைஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார்ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார்வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார்கானப் பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே 4.30.75 திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்சிறையார் புனற்கெடில வீரட்டமுந் திருப்பா திரிப்புலியூர் திருவாமாத்தூர்துறையார் வனமுனிக ளேத்தநின்ற சோற்றுத் துறைதுருத்தி நெய்த்தானமும்அறையார் புனலொழுகு காவிரிசூழ் ஐயாற் றமுதன் பழனம்நல்லகறையார் பொழில்புடைசூழ் கானப் பேரரும் கழுக்குன்றுந் தம்முடைய காப்புக்களே 6.7.36 திருக்காளத்தி திருத் தாண்டகம்தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண் திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்கஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண் நம்பன்காண் ஞானத் தொளியா னான்காண்வானப்பே ரூரு மறிய வோடி மட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக்கானப் பேரூரான்காண் கறைக்கண் டன்காண் காளத்தி யானவனென் கண்ணு ளானே 6.8.97 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம்கடமன்னு களியானை யுரிவை போர்த்தார் கானப் பேர் காதலார் காதல் செய்துமடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார் மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காணநடமன்னி யாடுவார் நாகம் பூண்டார் நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே 6.10.68 திருவீழிமிழலை - திருத்தாண்டகம்மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார் கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோர்மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார் வீழி மிழலையே மேவி னாரே 6.51.79 க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம்ஆரூர்மூ லத்தானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்கூரார் குறுக்கைவீ ரட்டா னமுங் கோட்டூர் குடமூக்கு கோழம் பமுங்காரார் கழுக்குன்றுங் கானப் பேரும் கயிலாய நாதனையே காண லாமே 6.70.210 திருப்புகலூர் - திருத்தாண்டகம்தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந் திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்றுநாவார்ந்த மறைபாடி நட்ட மாடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய் கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணி யனே 6.99.711 திருநாட்டுத்தொகை - இந்தளம்தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப் பேர்பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம்என்னூர் எங்கள் பிரானுறை யுந்திருத் தேவனூர்பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி சைநாட்டுப் புரிசையே. 7.12.612 ஊர்த்தொகை - பழம்பஞ்சுரம்478 காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறேபாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானேமாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. 7.47.113 கல்லாடதேவ நாயனார்திருக்கண்ணப்பதேவர் திருமறம்- - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - -வாய்க்கல சத்து மஞ்சன நீரும் 20)கொண்டு கானப் பேர் உறை கண்ணுதல்முடியிற் பூசை அடியால் நீக்கிநீங்காக் குணத்துக்கோசரிக்கு அன்றவன் நேசங் காட்டமுக்கண் அப்பனுக்கு ஒருகணில் உதிரம் 25 >> 11.514- - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - -14 கபிலதேவ நாயனார்சிவபெருமான் திருவந்தாதிமுலைநலஞ்சேர் கானப் பேர் முக்கணான் என்னும்முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும்-முலைநலஞ்சேர்மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோரமாதேவா சோரல் வளை 51 >> 11.62215 பரணதேவ நாயனார்சிவபெருமான் திருவந்தாதிநிலைத்திவ் வுலகனைத்தும் நீரேயாய் நின்றீர்நிலைத்திவ் வுலகனைத்தும் நீரே-நிலைத்தீரக்கானப் பேரீர்கங்கை சூடினீர் கங்காளீர்கானப்பே ரீர்கங்கை யீர் 73 >> 11.74416 திருநாவுக்கரசர் புராணம்திருத்தொண்டர்புபுராணம் சேக்கிழார்அங்குறைந்து கண் நுதலார் அடி சூடி அகன்று போய்ப்பொங்கு தமிழ்த் திரு நாட்டுப் புறம் பணை சூழ் நெல் வேலிசெங்கண் விடையார் மன்னும் திருக் கானப் பேர் முதலாம்எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார் 5.1.410 / 12.168017 திருஞானசம்பந்தர் புராணம்திருத்தொண்டர்புபுராணம் சேக்கிழார்பற்றார் தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்துபுற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக்கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக்குற்றாலம் குறும் பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று உகைத்தார் நெல்வேலி குறுகினாரே 6.1.886 / 12.278418 கழற்றி அறிவார் நாயனார் புராணம்திருத்தொண்டர்புபுராணம் சேக்கிழார்கானப் பேர் யாம் இருப்பது எனக் கழறி கங்கை எனும்வானப் பேராறும் உலவும் மா முடியார் தாம் அகலஞானப் பேராளர் உணர்ந்து அதிசயித்து நாகம் உடன்ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் இருந்த பரிசு என்பார் 7.4.113 / 386019கண்டு அருளும் படி கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் கழல் வணங்கிப் போய்அண்டர் பிரான் திருக்கானப் பேர் அணைவார் ஆரூரர்தொண்டர் அடித் தொழலும் எனும் சொல் பதிகத் தொடை புனைவார் 7.4.114 / 386120மன்னு திருக்கானப் பேர் வளம் பதியில் வந்து எய்திசென்னி வளர்மதி அணிந்தார் செழுங் கோயில் வலம் கொண்டுமுன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் சேவடி தாழ்ந்துபன்னு செழுந்தமிழ் மாலை பாடினார் பரவினார் 7.4.116 / 386321ஆராத காதலுடன் அப்பதியில் பணிந்து ஏத்திச்சீராரும் திருத்தொண்டர் சில நாள் அங்கு அமர்ந்து அருளிக்காராரும் மலர்ச்சோலைக் கானப் பேர் கடந்து அணைந்தார்போரானேற்றார் கயிலைப் பொருப்பர் திருப்புனவாயில் 7.4.117 / 3864
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
51
இந்தநாட்டுள படப்பைகட் கவற்றெழிலெல்லா
முந்துமன்பொடு நோக்குறக் கால்பலவுற்றுக்
கொந்துதெண்டிரைப் பொருநைதண் ணடைகொடுகுலாவு
மந்தநீர்மையாற் றண்ணடை யெனும்பெயரறைவார்
52
வேறு.
மள்ளர்கூக்குரற்கலிப்பு மகளிர்வாய்க்குரவையார்ப்பும்
வெள்ளநீரடையொலிப்பு மிகுமதகொழுக்கிரட்டும்
பள்ளவாய்மடை முழக்கும் பண்ணைநீர்பாய்தெழிப்பும்
வள்ளியல்பறையதிர்ப்பும் வாய்ப்பெயுங்கடற்கரைப்பை
53
உழவர்கடாம்புமாட்டி யுறுநுகம்பிடரினாட்டி
மழவிடைபகடுபூட்டி வலக்கையின் முட்கோனீட்டி
யெழின்மலர்க்கற்பநாட்டி னிறைபதமுடிமேற்சூட்டிக்
கொழுநுதியேரையோட்டிக் குறையெலாமோட்டுவாரால்
54
உழுதனர்கழனியெல்லா மொழுகிளந்தொள்ளியாக்கிப்
பழுதினேர்பரம்புபோக்கிப் பளிங்கெனச்சமப்படுத்தி
விழுமியவின்சொல்வித்தை விதைத்தார்மாணவருட்செய்யை
மெழுகுசெய்தின் சொல்வித்தை விதைக்குமாசிரியரொத்தார்
55
சொல்லினுட்பொருளாயுள்ள தூயகாளீசன்மெய்போ
னெல்லினுட்பொருளாயுள்ள நீண்முளைவெளர்த்துத்தோன்றிச்
சொல்லின துருவாயுள்ள சுவணவல்லியின் மெய்போல
நல்லியற்கவுரம்வாய்ந்து நனிதழை இப்பசந்தமன்னோ
56
கோட்டையுட்டொகுத்தவித்தைக் கொண்டுசில்பணையில்வீசி
நீட்டிமுன்வகைசெய்திட்ட நீர்மைசால் கருங்கான்மள்ளர்
மீட்டுமச்செயல்விரிப்பார் மேயநாறுகள் பறித்து
நாட்டுபற்பலவயற்க ணட்டனர்விருத்திசெய்தார்
57
பருவமதுணர்ந்துமள்ளர் பாய்ச்சுறுபயமடுத்து
மருவுநெற்பைங்கூழெல்லாம் வளர்ந்தனபழனந்தோறுங்
கருவுயிர்த்திட்டதாயர் கனிசுவைப்பயம்புகட்டப்
பருகிமெய்தழைவுற்றோங்கும் பச்சிளஞ்சேய்கண்மான
58
பெற்றதம்மகார் தமக்குப் பிணியுறிற்றந்தையாராய்
வுற்றுரைகுறிப்பிற்றீர்வை யுஞற்றியவெழுமாய்மார்போற்
சுற்றிளம்பயிர்க்கூறுகிச் சூழ்களைகளைகவென்னா
முற்றியகளமரோத முயன்றனருழத்திமார்கள்
59
தம்முகத்தோடெதிர்த்த தாமரைகளைந்தார்மீட்டுந்
தம்முகநிழலைப்பற்பல் தரங்ளைந்தொழிந்தின்றென்னாச்
செம்முகம்வெயர்த்தையுற்ற சிந்தையர்நிற்பவாங்கோர்
பைம்முகத்தேரைநீரிற் பாயமுற்றாயவென்பார்
60
காவியைக்கண்கள் காட்டக் கைரவங்களைவாயோத
மேவுசைவலத்தைக்கூந்தன் மேல்விழுந்தேகுறிக்கத்
தாவவைகளைந்துஞ்சாய்த்த சலசமுமுழத்திமார்கை
பாவியபிறர்தெவ்வுஞ்சாய்ப் பவர்கடம்பகைநீப்பாரோ
பின்னையாளுரம் பெட்டவன்முன்புகா
னன்னலாருடை யாடைகொண்டேறுசீர்
மன்னவேட்டவன் வாழ்மனை வாயினின்
றென்னநாகங்க ளீர்ங்கரைமல்குமால்
72
விரவுவார்திரை வீசியமுத்தமு
மருவுபுன்னை மரத்துகுமொக்குளுங்
குருவினொன்றெனக் கோக்குநுளைச்சியர்
பரவளிக்குலம் பாய்தலோர்ந்துள்குவார்
73
உரவுநீடிமி லோட்டப்படுமொலி
பரவர்வீசிய பாசமிழுப்பொலி
விரவுமந்நலர் மீன்விலைகூறொலி
பரவையார்ப்பொடு பாயுமெதிரொலி
74
பரமனாரும் பரதவராகியோர்
பரவமாதினைப் பாணிபிடித்தெலாம்
பரவவாழும் பதிமுதற்பஃறலம்
பரவுநெய்தலின் பண்பெவர்பாடுநர்
பாலை
75
கோங்குபாடலங் கூருங்குராநெலி
தாங்குமீந்தொடு சார்சிலமல்கிச்சூழ்
ஞாங்கர்வாண்மே னடந்தவள்காப்பச்சீ
ரோங்குபாலையு மோதுந்தகைத்தரோ
திணைமயக்கம்
குறிஞ்சியும், முல்லையும்
(வேறு)
76
மலையின்மேவிய மஞ்ஞைகளா லுவமுல்லைத்
தலையில்வா ரணங் கண்டுடன்றானுநின்றாடுந்
தலைமெய்யாயிரு தானவராமொருவடிவி
னிலவு கூறுகளாகிய வுறவினைநிகழ்த்தும்
முல்லையும், குறிஞ்சியும்
77
கருமைமன்னிய கான்குயில்கூவுறச் சாரற்
பெருவரைக்கிளி பேதையர்மொழியெனப் பயிலு
மிருமைமேவிய குரவர்களிசை த்ததை யிசைக்குந்
திருவின மேவிடை மாணவர்தஞ்செயறேற்றும்.
குறிஞ்சியும், மருதமும், மருதமும், குறிஞ்சியும்.
78
கருவரைப்பக டுறுபணைக்கரும்பினைக் கறிப்ப
மருதம்வாழ்கரும் பகடுகள் வரைத்தினை மேய்வ
விருநிலத்துமாக் களும்பரிவருத்தனை யியற்ற
விருதிறத்தவிம் மாக்களுமதுசெய லேய்க்கும்
79
குறிஞ்சியும் நெய்தலும், நெய்தலும், குறிஞ்சியும்
வரைக்கணாகங்க ணெய்தனாகங்களில வாவத்
திரைக்கருங்கொடி கறிக்கருங்கொடியிற்றாபச் சேர்வு
தரைக்கண்மற்றவை பரற்பரம்பெயர்கள் சார்ந் தனவென்
றுரைக்குமொற்றுமை யோர்ந்துறவுறுசெய லுறழும்.
முல்லையும், மருதமும்.
80
வனத்தினான்பயம் வயனிறைபயத்தொடு மருவி
யனத்தினாலும்வே றறிதரவரியதாய்க் கலவல்
சினத்தினாலெதிர் சென்னிதாழ்ந்தளித்ததென் னவனிற்
றனத்தின்மங்கைகா ளீசன்மெய்க்கலந்ததைச் சாற்றும்.
அன்புள்ள காளை அவர்களுக்கு
தாங்கள் எழுதி வரும் காளையார் கோயில் பற்றிய செய்திகள் ஒரு
நல்ல முயற்சி.இங்கிருந்துதான் வீரபாண்டியன் என்ற வேந்தன்
கோயிலூர் வந்து திரு நெல்லை உடனாய கொற்றவாளீரசருக்குக்
கோயில் கட்டினான் என்பது வரலாறு.இதையும் இணைத்துக் கொள்க.
"போரும் தேரும்" என்றொரு நூல் தேவகோட்டையைச் சார்ந்த எழுத்தாளர்
ஜெகதீசன் என்பவரால் எழுதப் பெற்றுச் சென்னையில் உள்ள "டைகர் பதிப்ப
கத்தால் அச்சாக்கம் பெற்றுள்ளது.இதில் உங்க்ளுக்கு மருது சகோதரர்கள்
மங்கம்மாள் சிவகங்கை வேலு நாச்சி பற்றிய செய்திகள் விரிவாக் காணக்
கிடைக்கின்றன.பல செய்திகள் வியப்பைத் தரும்.மருது பாண்டியர் சிவகங்கை
மன்னரான விதம் வேலு நாச்சியாரையே மனைவி ஆக்கிக் கொண்ட விதம்
(இதுபற்றி வேலு நாச்சி தன் கைப்பட ஆங்கிலேய ஆட்சியாளர்களுகு எழுதிய
கடிதப் பதிவும் வேலு நாச்சி எழுதிய சொத்துரிமை ஆவணக் கடிதமும்
உள்ளது)
மேலும் தாங்கள் எழுதியுள்ள தேவாரப் பாடல்களையும்,புராணப் பாடல்களையும்
பதம் பிரித்து எழுதினால் நல்லது என்பது என் எண்ணம்.செய்வீர்கள் என்று எதிர்
பார்க்கிறேன்.
மீனவன்
மருதமும், முல்லையும்
81
மருதநின்ழெழு வயலையம்பொற்கொடி வனத்துத்
துருமமென்னும்வண் குருந்தினுணுழைந்துமேற் றுலங்கல்
பருவநேர்தரு சுவணவல்லிக்கொடி பண்டு
மருவுகாளீலிங் கத்துளார்ந்திலங்குதன் மானும்.
முல்லையும் நெய்தலும், நெய்தலும் முல்லையும்
மருதமும் நெய்தலும், நெய்தலும் மருதமும்.
82
முல்லைவெண்மல ராற்படற்சங்கினை மூடப்
புல்லுமங்கவை வெண்மணியாலவை புதைக்கு
மல்லலம்புய நெய்தல்கள் கூம்புகான் மகிழு
மொல்லுநெய்தலன் னவைகுவிதருபொழு துவக்கம்.
நாற்றிணையும்
வேறு
83
மலைத்தேனாவ லூர்க்கோன்சொல் வனத்தான்பானா வரசுமோழி
யுலப்பினெய்தன் மலர்ப்பிரச முயர்காழிக்கோ னுரையொக்குந்
தலைப்பெயம்மூன் றையுங்கொண்டு தடத்திலார்தேம் பொற்கமலந்
குலத்தேவாரத் திருமுறையாங் கோசம்புதைபொன் மன்றொக்கும்.
ஐந்திணையும்.
84
பலவின்சாறுங் கான்வெள்ளிற் பலவின்சாறும் பணையரம்பைப்
பலவின்சாறுஞ் சுரநெல்லிப் பலவின்சாறு நெய்தலின்வா
யலருந்தேனாம் பூஞ்சாறு மைந்துங்கலவி நிறையவல்கள்
குலவும்பெருமைத் திருவருட்பாக் கோசங்களையொத் திலங்குறுமால்.
85
வரைகொள்வலிய வச்சிரமும் வன்பானாகச் செம்மணியு
மரைகொண்முல்லைச் சுரபியும்வண் மருதத்தருவும் பதுமமுநீ
டிரைகொள்கடற்சங் கமுமாமைந் திணைப்பல்பொருளுந் தலைக்கூடிச்
சுரைகொணாடு பலகொலெனச் சுரருண்மயங்க மயக்குறுமால்.
86
இன்னும்பல்ல வளங்களுள வெழிலார்பாண்டி நாட்டணியைப்
பன்னப்பன்ன கேசனும்வாய் பலவாயுற்று முற்றனனாண்
சின்னஞ்சிறியே மேதுரைத்தேந் திகழுங்கானப் பேரூராம்
பொன்னம்பதியின் வியன்சீரும் புந்திக்கெட்டி யவாறறைவாம்.
நாட்டுப்படலமுற்றிற்று
நகரப்படலம்
1
சொற்பதப்பொருளதாய்ச் சுவணவல்லிதாய்ப்
பொற்புறப்படருபு பொலியிடத்ததா
யெற்பகலொளிசெய்கா ளீசனாமுயர்
கற்பகமுறைவது கானப்பேர்நகர்.
2
வழுதிநாட்டினியதே வாரப்பாசுரந்
தழுவுமீரேழுபா தலத்தொன்றாயது
வழுவிலாவன்பொடு வதிவர்மும்மலங்
கழுவுநீர துதிருக் கானப்பேர்நகர்.
3
மலைமகளுறத்தரும் வாம்பாகநீர்த்
தலைமகளுறத்தரும் சடிலவீடுபா
லலைமகளுறத்தரு மாக்கமெய்க்கலை
கலைமகளுறத்தருங் கானப்பேர்நகர்.
4
விதியுறவருள்வது மேயநல்லற
நிதியுறவருள்வது நிலவுவான்முதற்
பதியுறவருள்வது பகருமின்பமேற்
கதியுறவருள்வது கானப்பேர்நகர்.
5
விண்மணிசூழ்தர விரிந்தவையமாம்
பெண்மணிமுகநிகர் பெற்றித்தாயது
நண்மணியொளிர் தமிழ் நாடதன்வலக்
கண்மணியனையது கானப்பேர்நகர்.
புறநகர்
வேறு
6
பொன்னகர்ச்சூழ்ந்தைந்தென்னப் புகன்றிடப்பட்டகாவிற்
கென்னெழி லுளதென்றேசி யெழீஇப்பொருவான்சென்றவ்வூர்
மன்னவனூர்தியேழும் வழித்தடைசெயக்கீழ்த்தாத்தி
யன்னதைவளைந்தெனச்சூழ்ந் ததுமானளப்பில்சோலை.
7
பலர்நுகர்தரநிவந்த மன்மரம்பொ துள்கொதும்ப
ரலர்தருநெடிகோட்டி னடர்ந்தமஞ்சரிபரப்பு
மலரைமேற்போர்த்துநின்ற மலர்த்தலையுலகந்தன்னை
மலர்தலையுலகமென்ப வகுத்தபல்விகாரந்தேர்ந்தோர்.
8
மதுக்குடம்விரிந்தாற்போன்று வண்பொழின்மலரின்வாரு
மதுப்பெருக்கார்ந்துமுந்நீர் வயிறுகீண்டப்பாற்பாயு
மதுப்பெயர்நதியிங்குள்ள வாய்மைகண்டநுமானத்தான்
மதுக்கடலொன்றுண்டென்றே வழங்கினர்வையத்தோரே.
9
ஒவ்வொருமலருந்தேவ குறையுளாப்பெறீஇத்தழைத்த
செவ்விநந்தனத் துவீழ்ந்து தீமதுப்பருகும்வண்ட
ரவவியலமரரில்லத் தரும்பொருளனைத் துந்துய்ப்பான்
கவ்வினர்கொள்ளை கொள்ளுங் கரியதானவரைமானும்.
10
சேவரை துவசக்கைமா தேவனார்பொதுமையின்றி
மீவருமீசநாம மேவியதென்னப்பாரிற்
பூவெனப்படுவதிந்தப் பொறிவாழ்பூவெனச்சிறந்து
மாவுயர்கமலம்பூத்து மலிபலதடங்கள்சூழும்.
11
இருமருப்பினிலொன்றில்லா விபமொன்றைச்சூழ்ந்திறைஞ்சி
யிருமருப்புடையயாங்க ளிருவினை துமித்தும்வானீ
ரிருமருப்புடையயானை யெம்மைத்தாழ்ந்தேத்திலெம்மி
னிருமடங்கிடர் துடைக்கு மெனனுமால பானைபல்ல.
12
வாரியில்யாத்தவேழ மதப்பெருக்கறுகாற்கூட்ட
மார்தலினாலடங்கு மல்லதேலாழியெட்டாஞ்
சேருமக்கூடமெல்லாந் திமில்களாந்தறிகளெல்லாஞ்
சீரியகூம்பாமேன்மொய் சீமுதம்பாயாபன்னோ.
13
பாற்கடற்பிறந்துவந்த பரித்தலைகுரமிதித்து
மீக்குலவென்றூழேற மிளிருமோராழித்தேரை
யேற்கவானீர்த்துச்செல்லு மெழுமாவுமெழாமாவாக
மேக்குறப்பாய்பல்வாசி விசித்தமந்திரங்கள் பல்ல.
14
கதிகளோரைந்துங்காட்டிக் கவனவேகத்திற்சென்று
குதிகொளுந்துரகதத்தின் குழாங்கள்வாயுமிழ்விலாழி
பதியுமவ்வயனச்சேற்றிற் பருமச்செம்மணிகள் வீழ்ந்து
வதிதராவென்னிலாங்கு வழுக்குறதேவர்செல்வார்.
15
நண்ணுநாலுருள்கள்பூண்டு நாற்றிசைச் செல்மாண்பேம்யாம்
விண்ணகத்திரவிதேவன் மேவுபுவூரும்வைய
முண்ணிலவுருளொன்றேபூண் டோர்திசைக்கேபோநீர்த்தத்
திண்மைகாற்காற்கூறென்றே சிரித்தெனவொளிருந்தேர்கள்.
16
உயர்ந்திடுங்கொடிகண்மேலா லூன்றியதணிமட்டன்று
வயந்தருகுறிப்பிற்கென்றே வகுத்துரை தரப்பொலிந்து
பயந்தருபான்மையில்லாப் பகைஞர் தானையையுஞ்சாய்க்குஞ்
சயந்தனமாகப்பூண்ட சயந்தனசாலைபல்ல.
17
கூற்றுநேர் படினவன்மெய்க் கூறிரண்டாக்குங்கோளார்
சீற்றமேற்கொள்ளின்விண்ணின் சீயத்தின்மேலும்பாய்வார்
மாற்றுதற்கரியதாய மானமேபூணாப்பூண்பார்
தோற்றவெந்காண்பாரன்றித் தோற்றுவெந்காட்டார்வீரர்
18
தோமரம்வாள் வேல்குந்தஞ் சூலந்தண்டாழிநாஞ்சில்
காமருநாந்தகந்திண் கப்பணம்வீசும்விஞ்சை
நாமவெஞ்சிலைநாண்பூட்டி நற்கணை தொடுக்கும்விஞ்சை
காமன்சேய்நிகர்த்தவீரர் கற்குங்கல்லூரிபல்ல.
19
முன்னைநாட்சென்னியேற்று முடுகிவந்தியற்றப்பட்ட
துன்னும்வாட்கோட்டை தன்னைத் துவைத்துப் பூவெனமிதித்துப்
பன்னருந்துகள்படுத்த பாழியம்புயத்துவீர
ரின்னகரத்தாரென்னி னிவர்வலியிசைக்கற்பாற்றோ
20
வேழமாவாதிகட்கு வேண்டுமூண் சமைக்குஞ்சாலை
சூழுநாற்படைக்கியன்ற தோட்டிமத்திகைவாராதி
யேழுயர்கொடிஞ்சிமற்று மெழில்படவமைக்குஞ்சாலை
யாழிவேலாதியேதி யாக்குஞ்சாலைகள் பற்பல்ல.
இடைநகர்
வேறு
21
சுவணமாமலை யினைத்தினமொழிவின்றிச் சூழ்ந்து
கவலயர்ச்சியை மாற்றுவானொன்பது கதிரு
மவிர்தரக்குழீஇப் பொலிவினோருழையுறைந் தாங்கு
நவமணிக்கணங் குயிற்றுசெய்குன்றுக ணகுமால்.
22
தரளவெண்மணிக் காவணங்களும் பொனிற் சமைத்த
வரமியங்களும் பளிக்குமாமேடையு மரங்குங்
கரவில்செம்மணித் தெற்றியுமொளிர்மர கதத்தான்
மருவுவேதியுங் கண்கவர்வனப்பின வயங்கும்.
23
தூம்புநுண்டுளைச் சிவிறியுந்துருத்தியுங் குழலுங்
காம்புறழ்ந்ததோண் மாதருமைந்தருங் கைக்கொண்
டோம்புகந்தநீர் புயமுலையூடுற வீசிக்
கூம்பலில் தட நீர்வழிதரக்குடை குவரால்.
24
கதிரும்வாவிநீர் குடைதலிற்கன்னியர் கொங்கை
பொதியுநுண்டுகில் விலகல்கண்டாடவர் புளகித்
ததிகரித்திடு வியப்பினராய்மகிழ் வடைவார்
புதைதனம்வெளிப் படிற்களிப்புறாரெவர் புவிமேல்.
25
மண்ணுசந்திர காந்தமாடத்தவர் மார்பிற்
கண்ணுறங்குறு மங்கையர்முகத்தெழில் கள்ளத்
தண்ணிலாமதி கதிர்க்கரஞ்சாளர நுழைக்க
வுண்ணனீர்பெரு கலும்விழித்திடவவ னோடும்.
26
அம்பொனாக்கிய மாடமேலரமியத் தலத்து
வம்புலாமல ரமளியின்மைந்தர்தம் புதிய
கொம்பனார்கலை நெகிழ்ககநாண்கொண்டுகண் புதைப்பப
பம்புமோர்துறைக் கோவை நூல்பாடுவர் குமரர்.
27
பளிக்குமாடமேற் பள்ளியிலூடிய நல்லா
ரொளிக்கவாடவ ரெதிர்ச்சுவர்த்தோன்றவ ருருவை
விளிக்கவுட்புக முட்டுறீ இவெள்கினர் நிற்பக்
களித்துவந்தவர் குயம்புயமுட்டிடக் களிப்பார்.
28
கூடமேனிலைப் பள்ளிகொளரையினுட் கொண்க
ரோடுமேவிய புதுக்கடிமின்னனா ருறச்சூ
ழாடியிற்பொலி தந்நிழன்மாற்றவ ராமென
றூடவன்னவ ரடிமுடிச்சூடியஃ தொழிப்பார்.
29
மணிசெய்மேனிலை மாடமே லூடிய மடவார்
பணியுமாடவர் சென்னியிற்பதமெடுத் தோச்ச
வணிசெய்நூபுரத் தெழுமொலியரம்பையர் செவியி
னணுகவன்னரு மூடுவரந்நல நயந்தே.
30
கணங்கொண்மாமணி மாடமேற்கந்துகம் பயில்கா
லணங்கனாரணி யணியிற்சிந்தியமணி யொன்று
வணங்கிவானவ ரூர்விழவலிந்தவ ருரிமை
யிணங்கமுன்னடை யெதிர்மறையாச்சொலிக் கவர்ந்தார்.
தொடரும்.....
31
சங்கவெண்சுதை தீற்றியமாடமேற சரிக்கு
மங்கைமார்பதத் தலத்தகச்சுவடுகள் வயங்க
றங்குதீம்பயச் சலதியின்மீமிசைப் பரவிப்
பொங்குகோகந தம்பல்மலர்ந்தன போலும்.
32
சந்தமாடமே னடம்பயின்மங்கையர் தங்கள்
கந்தவார்குழற் பூந்துகணறவொடு கலவி
வந்துகீழ்ப்படி தரவதில்வழுக்கிவீழ்ந் தெழுவார்
மைந்தரன்னதும் பரதத்தோர்வகையென மகிழ்வார்.
33
வாய்ந்தபேரெழின் மாடமேற்பந்தெறி மகளிர்
கூந்தனின்றுதிர் நறுமலர்க்குப்பையைப் பணிசெய்
மாந்தர்மாற்றவுங் கற்பகம்பொன்மலர் குவிப்ப
வாய்ந்திடாதுலவாக்கிழி யிதுகொலென் றயிர்ப்பார்.
34
இந்துகாந்தவெண் சிலையினினியற்றுமா ளிகைமேற்
கந்தவாகனாற் றுறுத்திடுகளங்கநீர் பெருக்கிப்
புந்திதாதைநிச் சலுங்கழுவுறுதொழில் பூண்டா
றைந்துநாட்கொரு நாடொழிலொ ழிவையு மடைந்தான்.
35
வடுக்களில்லா மியத்திடையிருந்தெழின் மாத
ரெடுத்தெறிந்திடு வெண்மணியம்மனை யிருவா
னடுத்துமேற்பதிந் திருந்துவின் விழுவன வறியா
ருடுக்கள் வீழ்ச்சியென் றுரைப்பரவ்வுரையுமோர் பொருளோ.
36
வதியுமாடமேன் மடவரலொருத்தியெய் யாது
மதியைப்பாங்கிதன் முகமெனத்திலதமுன் வனைந்தா
ளதனையோர்தரா திம்பரார்களங்கமென் றறைவார்
முதலெய்யாமையேன் முற்றுமெய்யாமையா மன்றோ.
37
நீனிறத்துகிற் கொடிபலமாடத்து நிவந்து
தூனிறத்தவா னதிப்புனறோய்ந்து பஃறுளிகண்
மேனிலத் துநின் றெங்கணும் வீசுவ கண்டோர்
நீனிறப்புயல் பொழிந்ததென்பார்சுர நிலத்தே.
38
மொய்த்தநீன்மணி மாளிகை நுழைந்துராய் முன்னா
ளொத்தமாமதி யுடல்கறுப்புற்றிடும் பின்னாண்
முத்தவெண்சுதை மூடுமாடத்துராய் வெளர்க்கு
மித்திறத்தினா லிருபக்கமாயின வென்றும்.
39
பொன்னினாலுயர் பொங்கொளிமாடமே லூடு
மின்னனார்களைந் தெறிதருவெறிமலர் மாலை
மன்னம்வீதிசெல் குமரர்தோள் வீழ்தலு மணத்தூழ்
பின்னராம்பவத் தாயினுமாமெனப் பெட்பார்.
40
மணியுமாடையு மாடையுமுண்டியு மலிந்து
திணிதலாலவண் வறிஞரேயில்லைகிற் சிலரங்
கணுகின்மாடமே லூடினர்களைந்தெறி யாரத்
தணிகளத்திலூ ழால்விழத்தனபதி யாவார்.
உண்ணகர்
வேறு.
41
தவத்துயர்பொதியக் கும்பசன்கையா சமனித்துத்தாழ்த்திடப்பட்ட
வுவர்க்கருங்கடலும் விந்தமாம்வரையு முற்றனனந்தமாமுனிவன்
றவப்பெருவலிமை தூயகாளீசன்றனை முனஞ்சூழ்ந்ததாலென்றே
துவக்குமுன்னுருவுற் றடைந்துசூழ்ந்தாங்குச் சூழ்ந்தனகிடங்கருமெயிலும்
42
நொச்சியும்கழு முன்றவஞ்சிறிது நோற்றிலாவிழிவினி னன்றோ
நச்சியஃதுஞற்றி யுயர்தமிழ்முனிவ னக்கியேதாழ்த்தினன்முன்னா
ளச்செயலிந்நா ளகத்தியரநேக வாயிரர் துவன்றினுமாகா
நிச்சயநங்கா ளீசனைச்சூழ்ந்த நிகரில்புண்ணியவலி யெளிதோ.
43
எத்தகையவருமெட்டொணாவழலாயெழுந்தருளெம்பிரான்முடியை
மெய்த்திடவயன்பிற்கண்டிடிலிந்தவியன்மதின்முடியையுங்காண்பாம்
பத்தருள்ளுறைவோனடியினையரிபிற்பார்த்திடிலியாமும்பிற்பார்ப்பா
மித்திருநகரைவளைந்துகம்பீரத்திலங்ககழியினடியையுமே.
44
உயர்ந்துமேற்புகுந்துநீண்மதிலரணமும்பர்தம்பதங்கடந்ததுநீர்
பயந்துகீழாழ்ந்துபாம்புரிநாகர்பதத்தினைக்கடந்ததேயன்றி
முயன்றுமுன்னையதின்முடியினையேறிமுற்றியகடந்தவரில்லை
யியன்றபின்னையதினடியினைமூழ்கியிழிந்துகீழ்க்கடந்தவரில்லை.
45
ஆழ்ந்தகழப்பட்டதகழியென்னலாய்ந்திடுகாரணக்குறியாங்
கீழ்ந்தவிவ்வகழிக்கப்பெயருலகுகிளந்தகாரணவிடுகுறியே
சூழ்ந்தரண்செய்வதரணியென்றுரைத்தல்சூழ்ந்திடுகாரணக்குறியாம்
வாழ்ந்தவிம்மதிலுக்கப்பெயரெவரும்வகுத்தகாரணவிடுகுறியே.
46
பாம்புரியதனிற்படர்ந்துநீண்டடர்ந்தபற்பகுவாய்ச்சிசுமாரந்
தோம்புரிவாளையாதியேயமையுஞ்சூழ்ந்தெதிர்த்திடுமிகல்செகுப்ப
வேம்புரியவைதரமிலக்கியஞ்செய்யாவிடின்மதிற்பொறிகளேயடர்க்குங்
காம்புரிவீரராழிமுற்படைகள்கையணியாழிமுற்பணியே.
47
இஞ்சியின்மேயபொறிக்கரியொன்றேயெதிர்த்தநூறிரதங்கணூறுந்
துஞ்சலில்சிங்கவேற்றினிலொன்றேதோலினமாயிரந்தொலைக்கு
மஞ்சலில்புண்டரீகத்துளொன்றேயயுதவாம்பரித்திரளழிக்கு
நெஞ்சினுட்சினத்தவெய்யினத்தொன்றேநியுதவன்பதாதிமெய்கிழிக்கும்
48
இஞ்சிமேலூன்றுபதாகையையருணனெழுபரிமத்திகையென்பான்
விஞ்சையர்கலவியயர்ச்சியைப்பாற்றமேவியசிவிறிகளென்பார்
மஞ்சிவரரிதன்னகர்விழவினுக்குமன்னியவணிப்பொருளென்பான்
மிஞ்சுமிவ்வுலகோர்தலையணாப்புற்றும்விழிப்படாதுரைத்திலரேதும்.
பரத்தையர்வீதி
வேறு
49
அமரர்கோமகனாயிரங்கண்கள்பெற்
றமர்தலெற்றினுக்காவென்றுசாவிடி
னமரர்வந்தனையாற்றுமிம்மாநக
ரமர்பரத்தையராரெழினோக்கற்கே.
50
இருதனக்குவையேய்ந்தபரத்தையர்
பெருவிலைக்கிடுபேரின்புகிட்டுமோ
தருமுதற்பலசார்சென்றிரந்துகொள்
ளொருதனக்குவையுற்றவிண்வாணர்க்கே
தொடரும்....
51
வெள்ளைநுண்டுகின்மெய்வெளித்தோன்றப்பூண்
டுள்ளழைத்துவந்துள்ளுறுப்பாசைமேற்
கொள்ளமுன்னேதிர்காட்டிக்குலாவியே
கொள்ளைகொள்வர்குமரர்தங்கைப்பொருள்.
52
புறத்தகத்துப்புணர்ச்சிவிசேடங்கள்
புறத்தெவர்க்கும்புலப்படவிற்சுவர்ப்
புறத்தகத்துப்பொறித்தனர்சித்திரம்
புறத்திலன்புபொதிவிலைமாதரே
53
ஆவணத்திலடுக்கியபல்பொருண்
மேவுசிற்சிலசிற்சிலர்மெச்சுவர்
நீவுறுவிலைமாதர்நியமத்தி
னோவியத்துளொவ்வொன்றும்வேண்டாரெவர்
54
அத்தநல்கியழைஇக்கிளரத்தமு
முத்தநல்கிவெண்முத்தமுங்கொண்டவர்
வித்தமெத்தனையத்தனைவிற்றின்ப
மொத்தபின்பணுவுந்தரார்வேசையர்
55
வாணிபத்தெலாமன்னுமிலாபமும்
பூணுநட்டமும்போதுமிவ்வேசையர்
வாணிபத்தூதியமன்றிமற்றதில்
காணிலன்னதுங்காலிடையுண்டரோ
56
வரைவிலாரெனும்பேரேமரீஇயினார்
வரைவிலாத்தெருவண்மைசொல்வாரெவர்
வரைவிலாப்புகழ்வாய்ந்தவேளாளர்தம்
வரைவிலாமறுகின்சீர்வகுக்குமால்
வேளாளர்வீதி
57
உயர்ந்தகங்கையினொண்மைக்குலத்துதித்
தயர்ந்திடாமலாசாரமனைத்தையு
நயந்துநல்லறநாடிப்பெறும்பயன்
வியந்துவாழுநர்வேளாண்மரபினர்.
58
எந்தநள்ளிருளேவரதிதியர்
வந்துநண்ணினும் வாழ்வின்வேளாளர்தர
முந்துமன்பினுணாக்களட்டூட்டுவார்
முந்தைமாறர்போன்முட்டுப்படாரரோ
59
எத்தினம்விருந்தெய்தப்படாததோ
வத்தினந்தானவம்படுகின்றதாந்
துர்த்தினம்மெனச்சூழுவரன்னவ
ரத்தினத்திலொன்றாயினுநேர்ந்திலர்
60
பூதியேபெரும்பூதிமெய்ச்சாதன
மாதியேயுயர்வாம்வழிச்சாதனம்
வாதில்சைவமதமேமதமெனா
வோதியுற்றவற்றைக்கண்ணினோம்புவார்
61
முன்குலத்தவர்மூவர்க்கும்வேண்டுவ
நன்குஞற்றிநடைபெறுஞ்சானவி
தன்குலத்தர்சீர்சாற்றினம்வைசியர்
மன்குலத்தெருவாழ்க்கையுஞ்சாற்றுவாம்
வைசியர்வீதி
வேறு
62
உமையெதிர்நடிக்குமெம்மானூன்றுதாணமலரிலெல்லா
மமைதரவொடுக்குமாபோலார்ந்தவெந்நிலத்துந்தொன்றுஞ்
சுமைதருபொருளனைத்துந்தொகைப்படத்தம்முட்கொண்டு
தமைநிகரின்றிநாளுந்தழைப்பனவணிகர்மாடம்
63
தருணநேர்நோக்கித்தம்பாற்சார்ந்தொடுங்குயிர்கடம்மை
யொருவில்பல்லிடத்துஞ்செல்லவுய்க்குமப்பரமனென்னப்
பெருகியவணிகர்மாடம்பிறங்கமுற்கொண்டபண்டந்
திருவுறுகாலந்தேர்ந்துசெலுத்தியூதியம்பெற்றோங்கும்
64
விலைமலிநாளிற்பண்டமிகுதியிற்பல்லகொண்டு
விலைகுறைநாளவற்றைவிற்றுமிக்கிலாபங்கொள்வார்
விலைகுறைநாளிற்கொண்டுவிலைமலிநாளில்விற்று
விலைநிலைமாறிநட்டம்விதியினுமடையாரன்னார்
65
கானப்பேரூர்வாழ்செல்வக்கனதனவணிகமாத
ரீனப்பேர்வுரியகந்தையெனநினைஇக்களைந்தெறிந்த
தேனப்பேர்த்துளவோன்றூசிற்சிறந்தபொற்றுகில்கடம்மை
வானப்பேரூரார்வெளவிமருங்கசைஇப்பொன்மையுற்றார்
66
மானிதிவணிகமாக்கண்மனைகள்வாய்வாணிபஞ்செய்
நீனிறக்கம்பளத்தினின்றுதிர்மரகதங்க
ளானமாசலகினீப்பாரள்ளிச்சென்றியக்கர்கோன்பா
லீனமாவிற்கக்கொண்டேயியைமரகதனென்றானான்
67
நிறைவளவணிகச்செல்வர்நியமத்தினூடுபுக்குக்
குறைவில்செமமணிப்பூணாடைகொளவுளத்தவாய்வேணடாருந்
தறையிடைச்சிலருண்டன்னார்தாய்வயிற்பிறந்தவண்ண
மறையுமேற்சுமையொழித்தவவதூதராயினோரே.
68
எவ்வெத்தேயத்துமுள்ளவிரும்பொருளீட்டவல்லா
ரவ்வத்தேயத்துஞ்சைவவறங்களையீட்டவல்லா
ரெவ்வெத்தேயத்துமன்னமிடுங்கொடிநாட்டவல்லா
ரவ்வத்தேயத்துஞ்சீர்த்தியணிக்கொடிநாட்டவல்லார்
69
எந்தநாட்டினைப்பூவேந்தரெய்திநூதனமாக்கைக்கொண்
டுந்துதங்கொடிமுன்னட்டேயுயர்செங்கோனாட்டுவாரே
லந்தநாட்டுடனன்னாருமடைந்துவேலவன்கைச்சேவற்
சந்தமாங்கொடிநட்டேவத்தகச்செங்கோனாட்டுவாரால்
70
தனதர்கள்பல்லோர்தொக்குச்சார்ந்தெனவயங்குநாய்க
ரினமலிமறுகின்வண்மைபெம்முரையளவிற்றாமோ
தினகரன்சவியுங்குன்றத்திகழ்மணிமுடிமுடித்த
அரசர்வீதி
71
மையின்மாணிக்கங்கொண்டுவனைந்துசெங்கேழ்பொருந்தித்
துய்யதண்டிங்கட்டுண்டஞ்சுரநதிமுடியளாவி
வெய்யமுத்தலைச்சூல்வான்மீன்வெண்டலைமாலையேந்திச்
செய்யகோல்வேந்தர்மாடந்திகழுருத்திரனையொக்கும்
72
புறத்தெலாநீலக்கற்கள்பொதிந்துசெம்மணிகுயின்ற
நிறத்தசாளரங்கண்மேக்குநிலாவப்பல்சிகரமேவி
யறத்துநீளரசர்மாடமாயிரங்கமலக்கண்வாய்
புறத்தவிர்மணிசெய்மோலிபொலிந்தகார்வண்ணற்போலும்
73
பொன்னொளிர்பதுமராகம்புறமெலாமுறப்பதித்து
மன்னநாற்றிசையும்வாயில்வகுத்துமேற்சிகரிநான்கு
துன்னவேய்ந்தவிரும்வேந்தர்சூழ்ந்துறைமாடநான்கு
நன்னிதிமோலிபூண்டநான்முகத்தேவைமானும்
74
படரொளிமரகதங்கள்படிதரப்புறங்குயிற்றி
யடிமுதன்முடியின்காறுமமைத்தசாளரங்கள்பல்ல
வடர்தருமன்னர்மாடமாயிரங்கண்களுற்ற
வுடலவிர்தரவான்வேந்தாயுறைகரியவனைநேரும்
75
முரசதிர்தரும்பேரோதைமொய்த்தசதுரங்கவோதை
விரவுசிற்றரசர்வந்துவிரைஇத்திறைகொட்டுமோதை
பரவியபாவலோர்க்குப்பரிசிற்பொன்னளக்குமோதை
யரசர்கள்மேவிவாழுமரண்மனைமுன்றிலெங்கும்
76
வலியினால்வாகைதன்னால்வளமலியளவில்செல்வப்
பொலிவினாற்கொடையால்யாரும்பொருவிலாமன்னர்வீதி
யலகிலாவளஞ்சொல்வாராரருமறையனைத்துந்தேர்ந்த
மலிபுகழந்தணாளர்மறுகின்சீர்வளமுஞ்சொல்வாம்
அந்தணர்வீதி
77
அறுதொழிலாளராகியைந்தெழுத்துண்மையாயந்து
மறுவினான்மறைகடேர்ந்துவளங்கெழுமூன்றுதீயு
மிறுதலிலாமலோம்பியிருவினையொப்புக்கண்டு
குறுகலிலாவோர்ஞானங்கூடியந்தணர்கள்வாழ்வார்
78
கொலைவினைகூடாதென்னக்கூறியவேதங்கொண்டே
தொலைவில்பல்பசுக்கள்கொன்றுஞ்சூழ்பவந்தம்மைச்சாரா
துலைவில்பேறதுசுவர்க்கமுண்மையன்றிப்பவர்க்க
மிலையிலையென்றேதீகையேந்தினாரந்தணாளர்
79
வழங்குமெத்தேவர்க்குந்தேமாதேவனென்றேவேதந்
தழங்குரலெடுத்தந்தத்திற்சாற்றிடுமளவைக்கேற்ப
முழங்குசெந்தீயினாப்பண்முதலவனியமானாகி
யெழுந்திடக்காட்சியானுமிருகணாற்பார்ப்பார்பார்ப்பார்
80
எழுதிலாவெழுத்தென்னும்பேரியன்மறையாகமங்க
டழுவியபுராணமென்னச்சாற்றுமுந்நூலுந்தேர்ந்தோர்
வழுவிலாவிவரேயென்றுவையமோர்ந்துணரவன்றோ
பழுதிலாமுந்நூன்மார்பிற்பரித்தனர்முத்தீச்செல்வர்
81
பொதுமையுஞ்சிறப்புமென்னப்புராதனன்புகன்றவாய்மை
முதுமறையாகமங்கண்முழுதுமோர்ந்தென்றும்பூசை
பதியுமான்மார்த்தத்தோடுபரார்த்தத்தும்புரீஇத்தலைக்கோர்
மதிபெறுமாதிசைவர்வாழ்க்கையுமோர்பாலோங்கும்
82
தடையொரீஇநியமம்பூண்டசரியையர்மடமுமோர்பாற்
கெடலருமுண்மைவாய்ந்தகிரியையர்மடமுமோர்பா
லுடலிளைப்பயற்சிநோக்காயோகியர்மடமுமோர்பா
னடலையென்றுலகைக்கண்டஞானியர்மடமுமோர்பால்
83
பூரணபுராணப்புத்தேள்புரம்பொடிபடுக்கக்கண்ட
வாரணவுடையுடுத்தவையமாம்வையந்தன்னை
யேரணயாத்திடப்பட்டீர்த்தெழுபரிமாநான்குந்
தாரணநடைபயின்றுதங்குசாலையுந்துலங்கும்
84
முதலைவாய்மதலைதந்தமுதிர்சுவையமுதுங்கல்லை
மதலையாப்புரிந்தபாலுமயிலையில்வெள்ளையென்பைத்
திதலையார்குயமின்னாக்குதேறலுமூங்கையின்வாய்க்
குதலைநல்விடைசெய்கண்டுங்கூட்டியூட்டிடமுமோங்கும்
85
இயந்தருமெழுத்தேசொல்லேயிருவகைப்பொருளேயாப்பே
நயந்தருமணியேயென்னநவின்றவைந்திலக்கணங்க
ளியன்றமாணவர்கட்கோதியிலக்கியப்பன்னூல்போதித்
துயர்ந்திடுமிருமொழிக்கல்லூரியும்பலவாயோங்கும்
86
தளவரும்பனையமூரறமனியமன்னசூபம்
வளமுறுகருனைவர்க்கமதுததிமுப்பழம்பால்
குளம்விராவியசிற்றுண்டிகுறைவறவெவர்க்குமென்று
மளவிருநேயத்தோடுமருத்துசத்திரங்கண்மன்னும்
87
சிற்பரம்பொருளாமெம்மான்றிதழ்தரக்கூடற்பாங்கர்ப்
பொற்பவந்நாளமைத்தபுனற்சாலையொன்றானாலு
மற்புறுமெவர்க்குமாகாதாஞ்சிலர்க்கதுபோலாது
பற்பலதண்ணீர்ப்பந்தர்பலருக்கும் பயந்தந்தோங்கும்
வேறு
88
ஒருபடித்துறைசெம்மணியொளிர்வயிடூய
மொருபடித்துறையுயர்ந்தவெண்ணிலாவிரிவயிர
மொருபடித்துறைபைங்கதிருமிழ்மரகதங்க
ளொருபடித்துறையுறப்புனைதிருக்குளம்பலவாம்
89
வீடெலாமிளஞ்சேய்க்குழாமிளிர்பொலன்மறுகின்
மாடெலாம்பெரும்விழவுலாவியன்மணிமன்றத்
தூடெலாமதிர்முழவெழிலுறுவெளிமுன்றிற்
பாடெலாமுரசொலிகெழுமங்கலம்பல்கும்
90
இல்லையில்லையென்றிரந்திடுமாதுலர்வேட்ட
தில்லையென்றசொன்மெய்த்துனிபுரியுநோயிடையூ
றில்லைவன்கடுமொழிகளவிழிதொழில்பொய்மை
யில்லைலையென்னின்மற்றெடுத்துரைத்திடுவதென்னினியே
91
உவணகேதனனாதியவும்பரார்துவன்றி
யிவணவண்டெரிவரியதாய்மிளிர்ந்துபல்லிரவி
சிவணநாப்பணன்ணியதுகாளீசனார்சேய்கள்
சுவணவல்லியுஞ்சூழவுற்றுறைந்தருள்கோயில்
92
தூயதாகியசோதிமாவனத்தகானப்பேர்
மேயபொற்றளிமகாணியாஞ்சூழ்ந்துறைவிண்ணோர்க்
காயவாலயம்புரங்குயிற்றரதனகுலமா
நாயகப்பெருமாமணிநம்பனார்மானம்
93
துதிகொளிப்பதிவந்துகாளீசனார்துளவோன்
விதியினாலறியாவடிப்பூசையான்விண்பொற்
பதியுளாரடைபாக்கியநோக்கவுற்றாங்கு
மதின்மிசைப்பலவிடைக்கணமன்னிமேல்வயங்கும்
94
இமைத்தலில்லவாயெழிலுருவத்திளைப்பிலவாய்ச்
சமைத்தவூணயிலாதவாய்த்தமனியத்தாற்செய்
தமைத்ததேவர்தமுருப்பலதாங்கலானரன்கைச்
சுமைத்தனுப்பலபோன்றனகோபுரத்தொகுதி
95
பத்துநூறுகான்மண்டபமாளிகைப்பத்தி
மத்திநூறுகான்மண்டபஞ்சூளிகைமன்றஞ்
சுத்தவேள்விசெய்மண்டபஞ்சூழ்பரிவார
நத்துதேவராலயங்களுநனிசிறந்தோங்கும்
96
கிரணவொண்மணிமேடைமேற்கிளர்பெருங்கண்டை
சரணரைத்தினங்காளையார்தளிப்பணியாற்றக்
கரணமுற்றுணர்புலரிமுற்காலங்கடோறும்
பிரணவத்தொனியேயெனப்பேரொலியெழுப்பும்
97
பல்லியங்களின்முழக்கமும்பழமறைவாழ்த்தும்
வல்லமூவர்பாசுரங்களும்வாசகப்பாவு
நல்லவிண்ணரமகளிர்கணடந்தருசதியும்
புல்லியாறுபோழ்தினுந்திருச்சந்நதிபொலியும்
98
அமரராதியரடைந்தியற்றருச்சனையழகுந்
தமமிலாதமெய்த்தவமுனிவரர்துதியழகு
நமவெனப்பணிநராதிபர்செய்பணியழகு
மமைதரப்பொலிசந்நதியழகுமேலழகே
99
தூலலிங்கமென்றுரைத்திடுசுடரொளிமானத்
தேலவார்மதுநறியநீராட்டிவண்டிசையாஞ்
சீலமந்திரத்தொடுமலர்தூயருச்சித்துச்
சாலுமன்பரையொத்துநின்றோங்கு[1]மந்தாரம்
100
இன்னதாயபன்னல்லெழிலியைந்தபூங்கோயி
றன்னுளார்ந்தெலாந்தழைப்புறநமதுகாளீசன்
சொன்னவல்லிசமேதனாய்மைந்தர்கள்சூழ
மன்னிவீற்றிருந்தரசுசெய்தென்றுமேவாழும்.
நகரப்படல முற்றிற்று
நைமிசப்படலம் தொடரும்.....
1
பற்பலமுடிகடாங்கிப்பகருமூழிகடோறோங்கிக்
கற்பகத்தருக்கணாளுங்கனிகனிதருஞ்சீர்மல்கி
யற்புறுகருடர்சித்தரமரர்காரணரியக்கர்
சொற்பதமறைகள்வாழ்த்தித்துதிப்பதுகைலைக்குன்றம்
2
அத்திருமலையின்மேலோராயிரங்கான்மாடத்தின்
மத்தியில்வலனங்கத்தாமணியொன்பான்குயிற்றப்பட்டெட்
டத்தியின்மருப்புநட்டாங்கணிபெறவமைந்தகால்கள்
பத்தினோடாறு தாங்கும்பளிக்குமண்டபமொன்றுண்டால்
3
அவ்வரங்கத்துண்மேயவரிப்பிடராதனத்திற்
றெவ்வரங்கஞ்சும்வேற்கைச்சிகண்டியூர்குமரவேளு
மெவ்வரங்களையுநல்குமிபமுகத்தேவுஞ்சூழ
வெவ்வரங்கதுவும்வாட்கண்விமலையும்வாமமேவ
4
மதியிளங்கொழுந்துவீசவரநதிதிவலைசிந்தப்
பொதிசடைமுடிமேற்றேவர்பொன்மலர்மாரிபெய்ய
விதிமுதலரிவலாரிவிதிமுறைபணிந்துநிற்பக்
கதிரவன்மதிதீயாமுக்கண்ணன்வீற்றிருந்தகாலை
5
காசிபன்கபிலன்சத்திகாத்தியாயனன்பரத்து
வாசன்முற்கலன்ககோளன்வாமதேவன்வசிட்டன்
கோசிகன்பிருகுவீதிகோத்திரன்காவலன்றூர்
வாசன்சீவற்சன்சம்புமவுற்கலனாபத்தம்பன்
6
சவுனகனெழுவாயானதவமுனிவரர்களீண்டித்
தவனனிற்சுடருமெய்யிற்றரித்தபுண்டரத்தான்மூன்று
புவனமுமுய்வுதேற்றிப்புகரிலாநியமம்பூண்டு
கவனமால்விடைகடாவுங்கண்ணுதறிருமுற்சார்ந்தார்
7
போந்தவர்புவனமியாவும்புரக்குநாயகனைச்சென்னி
யேந்தியகரத்தராகியீரைந்துநூறுநாம
மாந்தனிவேதசாரத்தாலருச்சனைகளாற்றிப்
பூந்துளவேனங்காணாப்புண்டரீகங்கடாழ்ந்தார்
8
வலைத்தலைப்படுமானென்னமயங்கியவுள்ளநைவிற்
றலைத்தலைத்துரும்புமானவலைந்துழல்கின்றவெம்மைக்
கலைத்தலைமதிபுனைந்தகடவுணீகாத்தியென்னா
வுலைத்தலைமெழுகேயென்னவுருகிவேண்டுநரானாரால்
9
பைத்தலையரவணிந்தபரமநீயுறைதலத்து
ளெத்தலமிக்குயர்ந்தேயேற்றமாம்விளக்கமுற்ற
தத்தலமான்மியத்தையருளினோதுகவெமக்குக்
கைத்தலத்தமர்ந்தநெல்லிக்கனியெனக்காணுமாறே
10
என்றவரிசைத்துத்தன்றாளிணைமலரிறைஞ்சிநிற்பத்
துன்றியதிங்கண்மோலிதுளக்கியெம்பெருமானன்பின்
மன்றலங்கமலநின்றுமதுவங்கான்றென்னவாங்கே
யன்றவர்க்கிந்தவாய்மையருளுவதாயினானே
வேறு
11
இத்தரைவரைப்பிலியாமுவந்துறையுமிடம்பலவற்றுளுஞ்சிறந்த
துத்தரகாளிபுரமதிற்றூய்தாயுறைபவர்க்கெம்பதப்பேறுஞ்
சித்தியுமளிக்குந்தக்கணகாளிபுரமெனத்திகழ்மதிகடுக்கை
யத்திவெண் மனவு மணிசடைப்பெருமா னறைந்தனன் பின்னுமீ தருளும்
12
தக்கணகாளிபுரத்தின்மான்மியமுந்தனிச்சுடரிலிங்கமான்மியமுந்
தொக்கணவகம்போந்தீர்த்தமான்மியமுஞ்சூதன்பாற்றெரிகெனப்பூதிப்
பொக்கணந்தூங்குபுயத்தினற்புயங்கபூடணந்தூங்கியபுனித
முக்கணனுரைப்பச்சவுனகன்முதலாமுனிவரர்மூழ்கினருவகை
13
அளப்பருங்களிப்பின்முனிவரரியாருமத்தியிலாங்கடுவடைத்த
களப்பெருங்கருணைக்கடல்கழல்பணிந்துகைலையின்றென்குணக்கயனால்
வளைப்புறுபுற்சென்றுறைந்தநைமிசமாவனத்தினைநோக்கிவல்விரைவி
னிளைப்பறுதவத்துச்சூதமாமுனியையெய்துவான்வழிக்கொடுபடர்ந்தார்
14
எம்பிரான்பவளச்செஞ்சடைக்காட்டினிழிந்திமயாசலநுழைந்து
பம்பியவறுபானாயிரரென்பிற்படிந்தவர்பவர்க்கநீத்தேற
விம்பரினடைதந்தொழுகுறீஇமற்றையேவருந்தோய்ந்துமெய்கழுவ
வெம்பவங்கழுவுங்கங்கையின்கரையின்மேயதுநைமிகக்கானம்
15
ஆலகில்வேணுகடம்புபுன்னாகமரசுவெண்ணாவலார்குருந்து
மாலுரநிம்பம்பாகல்பூங்கொன்றைவன்னிபாடலங்களாசூதந்
தாலமந்தாரமாதிகளொவ்வோர்தலவிருக்கங்களென்றறைதற்
கேலுறுகாட்டாய்ப்பொலிவுறப்பெற்றதிருந்தவநைமிசக்கானம்
16
குலவுமான்கன்றும்புண்டரீகத்தின்குட்டியுங்கூடியோர்துறையிற்
கலவிநீருண்ணச்சிங்கவன்குருளைகரிப்பிடிமுலைப்பயமுணுமா
றிலகுமாதவஞ்செய்வார்மகப்புகைசென்றெழிலிவாகனமதாய்விண்ணோர்
குலபதியவியூண்கொளக்கொணர்தருஞ்சீர்கொண்டதுநைமிசக்கானம்
17
இத்தகுவளத்தவனத்தினையிந்தவிருடியர்கிடைத்தனரெய்திச்
சுத்தவெண்பூதிமெய்முழுதணிந்துதூயகண்மணியணிபுனைந்து
நித்தியசைவதியானமுற்றிருப்போனின்மலவியாதமாமுனிவ
னத்தியமாணவகனெனுஞ்சூதநற்றவவரனைநேர்கண்டார்
18
மறையிடைத்தொகுத்தபுராணங்களனைத்தும்வையகமுய்யவேயருளான்
முறைமையினோதும்வாக்கினில்வல்லமுனிவரர்தங்குலத்தேறே
கறைமிடற்றண்ணலாஞ்ஞையினின்னைக்கண்டனங்கதியினிக்கண்டாங்
குறைவிலையென்னாத்துதித்தனரிறைஞ்சிக்கூறுவராயினரொன்று
19
உரைத்திடுகாளிபுரமிரண்டவற்றென்றுத்தரத்துளதுமற்றென்று
கரைத்திடுதெற்கிலுளதுபின்னதுவேகணிப்பருமுயர்வுடைத்தெனவும்
வரைக்கொணாமுத்திவதியுயிர்க்கெல்லாம்வழங்கிடுமெனவுமப் பெருமை
விரைத்துணர்நின்பாற்றெரிகுகவென்னவேவினன்வேதவாம் பரியோன்
20
ஆதலினின்னையடுத்தனமியாங்களத்தலமான்மியமுற்றுங்
காதலினெமக்கிங்கோதுகவெனலுங்சாளிமாபுரத்தினையானை
யேதமின்மடுவைச்சுவணவல்லியைக்காளீசனைச்சுந்தராம்பிகையைச்
சோதியாஞ்சோமேசனைக்கயற்கணியைச்சுந்தரேசப்பெயர்த்தேவை.
21
எயில்வளைவாளின்மேனடந்தாளையெண்ணியோர்முகுர்த்தமெய்ப்புளருற்
றுயிரனவேதவியாகனாங்குரவனொண்மலர்த்தாளிணையுள்ளி
யியறிசைவணங்கிச்சவுனகாதியரையிருசெவிப்பருகுமினீவிர்
செயிர்தபவென்னச்சூதமாமுனிவன்செப்புவான்றொடங்கினன்மன்னொ
22
அடுத்தவர்தமக்குமாபலந்தருவதாகிநித்தியசுயம்புவுமாய்க்
கடுத்தலொன்றிலதாயிமையவரென்னும்கவின்மலர்நிறைதரப் பொலிந்து
தெடுத்தவிர்சுவணவல்லியாங்கொடியாற்சுற்றுறப்பெற்றதாய் வியங்கித்
தடுத்தலின்றுயர்காளீசகற்பகநுந்தாபநீக்குகவெனவாழ்த்தி
23
மெய்த்தவத்தீர்காளீசனார்காதைவிரும்பினிர்நீவிரேமுத்தர்
மொய்த்துளத்தன்பிற்கேட்குநர்தமக்குமூசியபவமெலாம்போக்கி
யெய்த்தலில்லாதவறம்பொருளின்பமீந்துபின்முத்தியுமளிக்கு
மத்தகுகாளிபுரத்துமான்மியந்தானாதியில்வரல்வழிகேண்மின்
24
முன்னொருகாலத்தெழின்மிகுமாகிண்மதியெனுமுதுநகரத்து
மன்னவன்சைவபத்திமைபூசைமாகதாசிரவணத்தாசை
துன்னியமனத்தான்சதாநிகனென்பான்றூயதாந்தீர்த்தயாத்திரைசென்
றுன்னிமாதலங்களின்புகழ்தெரிக்குமுதங்கமாமுனிவனமடைந்தான்
25
எக்கலைமுடிபுந்துணிந்திடுபரநம்மீசனாஞ்சிவபிரானென்றே
மெய்க்கதியுணர்ந்ததவமுனிவரன்றாண்மிளிர்முடித்தலைபுனைந்தரசன்
றக்கணகாளிபுரத்துமான்மியத்தைத்தகவிரித்துரைத்தருளென்றா
னக்கணத்துதங்கமாதவன்றானுமன்பினால்வகுக்கலுற்றனனால்
26
உத்தரகாளிபுரமெனவொன்றாங்குளதுகோதாவிரிதீரத்
தத்தலத்தினுமிக்குயர்ந்ததாய்நினைக்கினருங்கதிச்சித்தியுஞ்சுத்த
புத்தியுமீயுந்தக்கணகாளிபுரமதுகுணகடற்குடக்கி
னத்தியமூன்றுயோசனைவையைநதிக்கொருயோசனையுதக்கில்
27
கூடலம்பதிக்குயோசனைநான்குகுலவுமீசானவாசையிற்றே
னேடவிழ்கமலசீதளிப்புத்தூர்க்கிரண்டரையோசனைதெற்கி
னாடுமொன்றரையோசனைகொள்வித்தாரநண்ணியேபாண்டிநாட்டுளது
பீடுறுமந்தத்தலத்துநாமங்கள்பேசிடிலநந்தமாமவைதாம்
28
வளமலிகாளிபுரங்கிளர்சோதிவனமொண்மந்தாரமாவனமே
லுளதெனுமோக்கப்பிரதநற்றூயவுத்தமசைவகேத்திரமுட்
களவொழிகாந்தாரந்தவசித்திகரந்தேவதாருமாவனஞ்சீ
ரளவிலாதுளபூலோககைலாயமாதியவோதினும்பவம்போம்
29
இத்தலப்பெருமைநீயவாவியதற்கேதுநின்றவப்பயன்றே
வுத்தமகிருதார்த்தத்தனாகின்றாயோதுதுங்கேளெனவேந்த
னெத்தலத்தினுமிக்கித்தலமுயர்ந்ததெவ்வணமெனமுனஞ்சுமந்து
மெய்த்தவன்றேவவருமனுக்குரைத்தவிதம்பகர்வுற்றனனுதங்கன்
30
பண்டையிலொருநாட்கயிலையிற்பரனைப்பரசிவைநீயுறைதலங்கள்
கண்டிடிற்பவம்போந்தூயதீர்த்தங்கள்கடையினுங்கெடாவிலிங்கங்கள்
மண்டியவவற்றுளுத்தமம்யாவைவகுத்தருளெனவினாவுறநம்
மொண்டிருத்தானம்பற்பலவற்றுமுத்தமமாயிரத்தெட்டே
31
உத்தமமவற்றுளைந்துநூறவற்றுளுத்தமமூன்றுநூறவந்று
ளுத்தமநூறுமவற்றறுபானான்குத்தமமவற்றுண்மூப்பானான்
குத்தமமவற்றுளெண்ணிரண்டவற்றுளுத்தமமெட்டவற்றுளுநான்
குத்தமமவற்றுளிரண்டுமாதலங்களுத்தமமென்றனனவில்வான்
32
பொக்கமிலவைதாமுத்தரகாளிபுரமெனப்பெயரியதொன்று
தக்கணகாளிபுரமெனவொன்றுசாற்றவற்றுத்தமோத்தமமாய்த்
தக்கமாண்புளதுபின்னையதலமெச்சகத்தினுமதுலமாயுயர்ந்து
மிக்கசீராலவாயினுஞ்சிறந்துமேதகுமான்மியமுளதால்
33
சொல்லுமத்தலத்துச்சோதிலிங்கத்திற்றுவாதசாந்தத்தயாங்கயற்கண்
மெல்லியலாயநின்னுடனென்றுமேவிவாழ்கின்றனமதனை
யொல்லுமிப்போழ்துநோக்கலாமுத்தமோத்தமமெனற்கறிகுறியாம்
புல்லுறுபிரளயத்தினும்பொன்றல்பொருந்துறாதொளிர்தருமதுவே
34
மண்ணுலகத்தின்மூன்றரைக்கோடிமலிபிரமாண்டத்தின்மேலா
லண்ணியவறுபான்கோடிதீர்த்தங்களமர்ந்தனவவற்றினிற்றென்பா
னண்ணியகாளிபுரத்தினின்மன்னுநளிர்சிவகங்கைமூழ்கிடினப்
புண்ணியதீர்த்தமனைத்தினுமாடும்புண்ணியமனைத்தையும்பயக்கும்
35
உரைபெறுமூன்றுமான்மியங்களுஞ்சேர்ந்தொன்றியததுவலான் மற்றுத்
தரையிடையின்றாலப்பெயர்தானேசான்றுகாவென்றதாற்பவம்போம்
பொருவுளீயென்றதாற்சித்தசுத்திபுவ்வென்றதாற்பரஞானம்
வரைரமவென்றதாலபவர்க்கம்வந்திடுங்காரணத்தானே
36
இன்னவாறிறைவனிமயமாமகளுக்கிசைத்திடுகாலவன்மடிமேற்
றுன்னியகுமரகுருபரனதனைச்சூழ்ந்துணர்ந்தகத்தியற்குரைப்ப
வன்னதையெனக்கம்முனிவரன்சொற்றானதனைநிற்கோதினனென்ன
மன்னவனின்னும்விரித்தருளென்னவழங்கலுற்றனன்றவத்தங்கன்
37
இன்னணங்காளிபுரக்கதைவியாதனிசைத்திடுபுராணமூவாறுட்
டுன்னியவுலகைச்சூழ்ந்தொளிபரப்புஞ்சூரியனார்க்குரித்தாகி
யுன்னதமேயபிரமகைவர்த்தத்துளததைப்பன்னுதுநீவிர்
கன்னமாம்[1]புடத்தாற்பருகுமினென்னக்கழறுவான்சூதமாமுனிவன்
நைமிசப் படலாம் முற்றிற்று.
ஆகச் செய்யுள் 254
அகத்தியர் ஞானோபதேசம் பெற்ற படலம்
அகத்தியர் ஞானோபதேசம் பெற்றபடலம்
1
வம்புலாந்தருமல்கியநைமிசப்
பம்புசீரைப்பகர்ந்தனம்வந்துமுன்
கும்பமாமுனிகூர்ந்துதவஞ்செய
நம்பன்ஞானநவில்கதைகூறுதும்
வேறு
2
முந்தொருஞான்றுகும்பமுனிசிவலிங்கபூசைத்
தந்திரமிரண்டுமீசன்றத்துவவுருவுந்தோன்றச்
சிந்தையனதுதேர்வான்பஃறேத்துஞ்சஞ்சரித்துத்தேவர்
வந்தனைமலிந்தசோதிவனத்தினையடைந்தானூழால்
3
அவ்வனத்தடர்மந்தாரமலர்மதுப்பொழியவண்டர்
துவ்விமிக்கினியகானச்சுவைமதுப்பொழியத்தேமா
செவ்வியகனிச்சாறூற்றச்செறிபிகந்தொனிச்சாறூற்றத்
திவ்வியவொகரமாலுஞ்சீர்கண்டான்முந்நீருண்டான்
4
ஐவண்ணவன்னியெல்லாமைவண்ணமுச்சரித்து
மைவண்ணவியமற்காய்ந்தாய்மதனெரிபடவிழித்தாய்
பொய்வண்ணத்தக்கன்வேள்விபொன்றுவித்தாயென்றோதி
மெய்வண்ணந்துதித்தல்கண்டுவியந்துநாற்புறமுநோக்கா
5
இந்தமாவனம்வலாரியெழில்வளநந்தனங்கொல்
சந்தமாமிருநிதிக்கோன்சயித்திரரதங்கொலென்னாச்
சிந்தையிலயிர்ப்புற்றப்பாற்செல்லுழித்தூய்ந்தாய்ச்சான்றோர்
புந்தியிற்றெளிந்தநீரார்பூந்தடமொன்றுகண்டான்
6
காண்டலுமதினீராடக்கருதினனாகக்காயத்
தாண்டசரீரிவாக்கோவகத்தியகேளித்தீர்த்த
நீண்டபுண்ணியத்ததாடினினைத்தனநினைத்தாங்கெய்தும்
பூண்டதுசிவகங்கைப்பேர்போந்திதில்விதியான்மூழ்கி
7
கரையிடத்திருந்துநோற்கிற்கருதொணாச்சிவஞானநதான்
விரைவினிலுதயமாகும்வேட்டவ்வாறாற்றுகென்ன
வுரையதுகேட்டுவாரியுண்டவன்வியந்தப்போழ்தே
வரைவிற்சங்கற்பம்பேசிமறைவழிமூழ்கினானால்
8
பூதிசாதனங்கண்மெய்யிற்பூண்டுகீழ்க்கரைக்கணோர்தேங்
கோதிலாதாய்ந்தாங்காக்கிக்கொண்டுறைந்தைந்தடக்கி
யோதியலுணவொழித்துயோகபீடத்திருந்து
மாதவத்தொடக்கங்கொண்டான்மால்வரையடக்கங்கண்டான்
9
இளவேனிற்காலந்தன்னிலிருகையுமுயர்த்திமண்ணி
லளவாதந்தரத்துநண்ணியண்ணியமுதிர்வேனிற்கண்
பிளவாகுமெழுநாவைந்தைப்பெட்டுக்கார்ப்பருவநீர்சால்
குளமேவிமேற்கிடந்துகூதிரில்விசும்பிலுற்று
10
முன்பினாம்பனிப்போதென்னமொழியிருபருவந்தம்மில்
வன்பினாகாயமன்னிவரைபடாப்பொருளையுன்னி
யன்புசானிட்டைகூடியாண்டுபத்தைக்கடந்தான்
பின்பவனெதிரிற்சோதிப்பிழம்பொன்றுதோன்றிற்றம்மா
11
கட்புலன்கதுவலின்றிக்காயமண்ணெங்கும்போர்த்து
விட்புலத்துலவுங்கோடிமித்திரரெனவிளங்கிப்
புட்பகமானத்தேவர்புகழொலிபூண்டகண்ட
வோட்பமாஞ்சோதிகாணூஉவுந்தெழீ இவிரைஇப்பணிந்தான்
12
எண்ணிலாவண்டகோடியெதனொளியால்விளங்கு
மெண்ணிலாவுலகையென்றூழெதனொளியால்விளக்கு
மெண்ணிலாமடமைக்கங்குலெதனொளியால்வீந்தோடு
மெண்ணிலாக்கதிர்சாலந்தவேகமாஞ்சோதிபோற்று
13
எதனொளிதன்னிற்கோடியினிலொருகூறுகொண்டு
புத்னெனும்புதல்வற்பெற்றோன்புவனமுற்றும்விளக்கி
யிதரசனீகரப்பேரெய்தினனுலவுகின்றா
னெதுகரையிலாததந்தவேகமாஞ்சோதிபோற்றி
14
எவ்வொளிதன்னோர்கூறேற்றெரியுலகெலாம்விளக்கு
மெவ்வொளியின்கூறென்றாலெப்பொருளுந்தகிக்கு
மெவ்வொளியரதனங்களின்பிரவைக்குமூல
மெவ்வொளிநிறைந்ததந்துவேகமாஞ்சோதிபோற்றி
15
அருமறைமுடியுந்தேறாவகண்டமாம்வடிவேபோற்றி
நிருவிகாரத்ததாகுநிட்களப்பொருளேபோற்றி
யொருவிலாதெவையுமாக்கியொடுக்குதற்பரமேபோற்றி
யிருமைசால்வினைகள்சாராவேகமாஞ்சோதிபோற்றி
16
என்றெதிர்துதித்துப்பல்காலிறைஞ்சிமுத்தமிழ்முனிக்கோன்
றுன்றியவன்பினிற்பச்சோதிமண்டலத்துநாப்ப
ணின்றிருஞ்சடையிற்கங்கைநிலாமதிவிளங்கழுக்கண்
மன்றிதும்படிகமேனிவாய்ந்துமையிடத்திலங்க
17
கருதினர்கற்பமென்னுங்கருணைமாகடலாமெம்மான்
பிரமதகணங்கள்பல்லபின்முற்சூழ்தரவெள்ளேற்றின்
மருவினனாகித்தோன்றிவந்துமாமுனியைநோக்கித்
திருமுகமலர்ந்தோர்வாய்மைசெய்யவாய்மலருமாதோ
18
மலயமாமுனிவநீசெய்மாதவயோகுமுற்று
நிலவயாமகிழ்ந்துகொண்டாநிற்குவேண்டுவவெண்டென்னக்
கலயநின்றெழுந்ததூயோன்காயமெய்ம்மயிர்ச்சிலிர்ப்புற்
றலகிலாக்கருணைவாரியடிகளேசரணமென்னா
19
நினறிருவருளினாலேநின்சுவரூபந்தன்னை
நின்றிருப்பூசையாற்றைநீர்மையினுணரவேட்டே
னன்றிவைதெரியும்வண்ணநவின்றருளென்றான்யோகி
நன்றிதுநன்றென்றேபுன்னகையொளூஉவருளும்பெம்மான்
20
இன்னவாறெனவெந்தன்மையாவர்க்குமுணரவொண்ணா
தன்னதைநின்பால்வைத்தவருளினாலுரைத்துங்கேண்மோ
மன்னியமண்ணீர்தீகால்வான்மதியிரவியெச்ச
னென்னுமோரெட்டுமெம்மெய்யெமையலாதொன்றுமின்றே
21
அனைத்துமேயெம்மிடத்திலடங்கியுள்ளனவெண்ணில்லா
வனைத்தினும்யாமேநண்ணியநுப்பிரவேசமாகி
யனைத்தினுஞ்சிறியதாயவணுவினுமணுமகத்தா
மனைத்தினுமகத்தாயென்றுமண்ணியேதிகழுகின்றேம்
22
சச்சிதாநந்தமாகித்தனித்தநிற்குணமதாகி
யிச்சையென்பனயாவற்றுமின்றியேநின்றவெம்மை
நச்சிநால்வேதமின்னுநாடியுற்றறிந்தவில்லை
யச்சனகாதியர்க்குமரியதேயுணருந்தன்மை
23
இப்பொழுதெங்கும்வியாபித்தெழுந்துன்னானோக்கப்பட்ட
திப்பியச்சோதியேயெந்திரிபிலாவடிவமாகு
மிப்பெருமறையெவர்க்குமெய்தரிததுவாய்நீயெஞ்
செப்பமாங்கருணைதன்னாற்றிகழுகவென்றுபின்னும்
வேறு
24
மன்னுமாமன்றவாக்கின்பொருளெலா
நன்னகத்தினினைத்தலுந்தோன்றுக
தென்னனாட்டவர்தேறவிலக்கணம்
பன்னுசூத்திரம்பண்ணுரனாகுக
25
அங்கமாறுடனாந்தமிருதிக
டுங்கவாசகமத்தொல்பொருடோன்றுக
புங்கமாயபுராணங்களுட்பொருள்
சங்கையின்றித்தகவின்விளங்குக
26
நன்னர்பூசைநமக்குஞற்றும்விதி
துன்னுவேதத்துச்சொல்லியவாறொன்றா
முன்னுமாகமத்தோதும்வழியொன்றா
மன்னிரண்டுமனத்தினுதிக்குக
27
இந்துவென்றூழிரண்டுந்தடைப்பட
விந்தமென்றொருவெற்புப்பின்னாளெழுந்
துந்துமாசெருக்குற்றிடுமன்னதை
யந்திலங்கையினானீயமிழ்த்துக
28
பின்னைநாளிற்பெருகும்புனற்கட
றன்னைமாதவசாரொருகாரணத்
துன்னியள்ளிநீயுள்ளங்கையாலுழுந்
தன்னதாக்கியுள்ளாசமனஞ்செய்க
29
இந்திரன்முதலாயவிமையவர்
தந்துயர்க்கலிதாவுறநின்னுழை
வந்துபாசனைசெய்குகவானளாஞ்
சந்துசூழ்மலயாசலதாபத
30
இத்தலத்திலிருந்துபல்லாண்டுநீ
மெய்த்தவத்தினைமேதகவாற்றினை
யத்திறத்தினகத்தியகேத்திர
மித்தரைக்கணிதுவெனவாகுக
31
இன்னவண்ணமெழில்விடைச்சோதிதான்
சின்னயத்தருள்செய்தலுந்தாழ்ந்தெழீஇ
யுன்னுமாதவனுய்ந்தனனுயந்தன
னென்னவாழ்த்தியிறும்பூதடைந்தனன்
32
பின்னரம்முனிபெம்மான்றிருத்தளி
துன்னிநன்னீர்துகளின்மலர்கொடு
முன்னதாகியமூலலிங்கத்தினைச்
சென்னிபாட்டிச்சிறந்தருச்சித்தனன்
33
அங்கமெட்டொடுமைந்தொடுமூன்றொடும்
பங்கமோவப்பணிந்துவலங்கொடு
மங்கைபாகன்வரத்துவிடைபெறீஇத்
தங்குதன்[1]னுடசத்தினுக்கேகினான்
அகத்தியர் ஞானோபதேசம் பெற்றபடலம் முற்றிற்று
ஆகச் செய்யுள்
287
காளி திருவவதாரப் படலம் தொடரும்.........
காளிதிருவவதாரப்படலம்
1
ஆசவித்தவகத்தியன்ஞானோப
தேசமுற்றசிறப்பினைச்சாற்றினா
மீசனுய்க்கமகேசைகான்காளியாய்
வாசமுற்றவளக்கதைகூறுவாம்.
வேறு
2
பரமபதிகுடமுனிக்குவரமளித்தபின்னரந்தப்படிவமாற்றிக்
கரவியலாப்படிகவுருக்காட்டியுமையொடுகணங்கள்கஞன்றுசூழ
விரவியவவ்வனத்துளுலாய்வருமமையத்தெம்மன்னைவிமலற்போற்றி
யுரமிகுமாயாதீதநிற்கெற்றிற்கிவ்வுருவென்றுசாவினாளால்
3
சிருட்டிதிதிசங்காரதிரோபவத்தோடருளலெனுஞ்செயல்களைந்தின்
பொருட்டதிதுவெமகண்கடிறந்துள்ளபோழ்துலகம்பொலிந்துதோன்றுந்
தெருட்டுமவைமூடிடுகாலவையழியும்பல்வகைத்தாய்த்திகழென்னாட
லருட்டிறமேயனைத்தும்வழங்கற்கேதுவெனத்திருவாக்கரும்பினானால்
4
இலகிமயம்பூத்தகொடியதுசெவியுற்றிறும்பூதுள்ளேய்ந்தெண்ணில்லா
வுலகமெலாமாதலுக்கும்போதலுக்குங்காரணமேறூரும்பெம்மான்
றுலமொருவுவிழிதிறப்புமூடலெனினவைகாண்குஞ்சோதித்தென்னா
மலர்தளவப்புன்மூரல்சிறிதரும்பித்திருவுளத்துமதித்தாளன்றே
5
இரவிதனக்கலராமன்மதியினுக்குக்குவியாமலேழ்நாவிற்கு
மருவுருவுங்குழையாமலறம்வளர்க்குமிருகரத்தாமரைகளாலப்
பரமர்சுடர்த்திருக்கண்கள்பின்பானின்றேபுதைத்தாள்[1]பண்ணையென்னப்
பொருவின்மரகதவல்லியுலகமொருமூன்றுமிருள்புதைத்த தன்றே
6
வையமுறைசீவரெலாம்பிரளயமேயெனமயங்கிமாழ்கிச்சாலப்
பையுளுறீஇப்பதைபதைத்துவேறொன்றுந்தோற்றாதுபாணிதுற்றி
நையுமனத்தினராகியாகாவென்றேகூவிநடுக்குற்றாரெம்
பொய்யில்பரம்பரன்றிருக்கைமையில்பரம்பரைதிருக்கைபுதைத்தஞான்றே
7
அந்தவஞருயிர்க்குயிராயுறைந்தபிரான்றிருவுளத்துளாய்ந்துவெற்பில்
வந்தவளைச்சினந்திடலுமவள்வெருவிப்புதைத்திடுகைம்மலர்விடுத்தாண்
முந்தைமறைவழியெம்மாணையினொழுகுமந்தணர்கண்முதலானார்தந்
நந்தலிலாக்கருமமெலாங்காலவரைதெரிவின்றிநசித்தவன்றே
8
எமைக்குறித்துச்செயும்பற்பன்மகத்தொழில்களொழிந்தனநாளிருமுப்போழ்தி
லெமைக்குறித்துப்புரிந்திடுபூசனைவினைகளொழிந்தனமூவிரண்டாதாரத்
தெமைக்குறித்துநினைந்திடுயோகியர்தவமுமொழிந்தனவின்னிசையளாவி
யெமைக்குறித்துப்புகழ்ந்திடுதோத்திரங்களொழிந்தனதக்கனீன்றபாவாய்
9
அவ்வவர்தாம்புரிந்தவறவினைக்கின்புசுவர்க்கம்புக்கருந்தித்தீர்வும்
வெவ்வியதீவினையிழைத்தார்பவர்க்கத்தாழ்ந்திடர்துய்த்துமீளுந்தீர்வுஞ்
செவ்விதினோர்தருகாலவவதிதெரிகிலதாகித்தெருமந்தந்தோ
முவ்வுலகத்துள்ளாருமிருசுடரினொளியின்றிமுருங்கினாரால்
10
இன்னபெரும்பாதகமெம்முளக்குறிப்பிலாதுலகுக்கிழைத்ததானீ
யின்னொடியேதமோகுணத்தினிருணிறமாயெவரும்வெருண்டேங்குமாறு
கொன்னியல்வெங்கோரவுருக்கொடுகாளியாகென்னாக்குரூரசாபந்
தன்னைவிதித்தனனேகவொளியாகியெங்குநிறைதருமமூர்த்தி
11
விடைக்கொடியானிடுசாபமொழிகேட்டவிடைக்கொடியாள்வெருக்கொண்டெல்லாம்
படைத்தழிப்பானடிக்கமலந்தலைக்கணிந்துபராபரநின்பாகநீத்தோர்
கடைக்கணமேனுந்தரியேனெய்யாமைப்பிழைபொறுத்தல்கடமைநிற்கென்
னிடைக்கருணையாலதற்குக்கழுவாய்தந்தருளென்னாவிதந்துநின்றாள்
12
அருட்கடலாநம்பனுமைமுகநோக்கியுரைதருவானகிலத்தியார்க்கு
மருட்கவலைபுரியசுரர்தமையழிப்பானிச்சோதிவனத்துட்சின்னா
ளிருப்புறினச்சாபவிமோசனமாமன்னதிலையமின்றென்றோதி
யுருப்பலவாயொன்றாகித்தோன்றியசோதியுண்மறைவுற்றொளித்தான்மன்னோ
13
அத்துடியேயரன்பாகம்பிரிந்தறியாளுந்துற்கையாயக்கானி
னுத்தரபூருவதிசையோசனையொன்றிலுளமருதத்துருமத்தின்கீ
ணித்தியனாற்றருசாபமோசனமாநாளெண்ணிநியதிபூண்டு
தத்துவமெய்ப்பொருளையுளத்துன்னிமுயன்றிருந்தனண்மாதவத்தின்மாதோ
14
இன்ணைமிக்கதைநிற்கமகபதிதான்சதகோடியேதியால்வெற்
பன்னபுயவலனெழுவாயாமவுணர்ச்செகுத்தசெயலதுகேட்டன்னா
ரன்னைதிதியிடருழந்துகாசியனாங்கொழுநன்பாலடைந்துதாள்வீழ்ந்
தென்னையுமோர்வந்தியெனவிந்திரனாக்கினனென்னவேங்கிநின்றே
15
வென்னிடலின்மைந்தமைந்தமைந்தர்தமைத்தருகென்னவேண்டினாள்கேட்
டன்னமுனியதற்கியைதந்தவள்வயின்மிக்கடல்கொளிரண்டவுணச்சேய்கண்
முன்னருதிப்பித்துப்பின்னாறுமகார்த்தோற்றுவித்துமுனையும்போரிற்
றுன்னிவயம்படைபடைபல்லனவுமுடனாக்குவித்தான்றொடக்கவித்தான்
16
சாற்றுவயதினுமன்றிவன்மையினுமுன்னவனாஞ்சண்டனோடு
கூற்றுறழ்தாரகன்கும்பனுத்தண்டன்வீமாக்கன்கொடியாரீட்டம்
போற்றுவயிரவசுவனன்மகோதரன்வீரனுமெனுமப்புத்திரப்பே
றேற்றதிதிமுன்னாளினிந்நாளேநன்னாளென்றிருமைபூண்டாள்
17
சேட்டசுதனாயின்முகநோக்கியரன்பானோன்புசிறப்பினாற்றி
வேட்டவரவரங்களெலாங்கொண்டுலகமொருமூன்றுமவேறாதிங்கு
மீட்டுவரேன்யானென்னாவவளுளத்திற்களிதூங்கவிளம்பிச்சென்றாங்
கேட்டுமலர்த்தடம்புடைசூழ்கோகன்னமாதலத்தையெய்தினானால்
18
ஆங்குறைந்தோராயிரமாண்டரியகொடுந்தவமிழைத்தானாகப்பூவி
லோங்கியபுண்ணியதலமாங்கோகரண்வெற்பமர்ந்தவும்பந்நாதன்
றாங்குவிடைமீதிலுமைசேயுடன்றோன்றினனர்தச்சண்டனோக்கி
நீங்கலிலாமெய்யன்பிற்றாழ்ந்தெழுந்துதுதிக்கலுற்றானீர்கண்சோர
19
விண்டுமலருந்தியுறைவிதியொருநால்வாக்கானும்விண்டுமுற்றுங்
கண்டுகொளாநின்புகழைச்சிறியேன்யானெவ்வண்ணங்கழறுகிற்பேன்
றண்டுளிதூவுறுகங்கைதவழ்சடையாயிடப்பாலோர்தையல்வைத்தா
யண்டியநற்கருணைநிறைகடைக்கண்மலராலேதிலளியேற்காவாய்
20
அடியவர்தங்கற்பகமாமமரகணமுடிமணிகளழுந்துந்தாளாய்
கொடியமதன்படவிழித்தாய்நிதிச்சிலையைச்சிலையாக்கிக்கூவளந்த
நெடியகழல்விண்டுவினைவண்டாக்கிப்பூணாரநீணாணாக்கிப்
பொடிபடமுப்புரம்படுத்தாய்கருணைநிறைகடைக்கண்ணாற்புல்லேற்காவாய்
21
உன்னாணைமறைவிதியைத்திறம்பினர்தம்மிருண்மனத்தினுணர்வுக்கெட்டா
வுன்னாமகுணங்களையேசெவிப்புடங்களாற்பருகவுன்னாநின்றே
னுன்னாசிலடிமலரின்மலர்சூட்டுங்கல்வியிலேனுலகத்தெல்லா
முன்னாலாம்பசுபதியேகருணைநிறைகடைக்கண்ணாலுலந்தேற்காவாய்
வேறு
22
இன்னவாறுதனையேத்துவிண்ணவர்களிரிபுவாகியசண்டாசுரன்
றன்னைநோக்கியருள்வள்ளலாகியதயாபரன்கருணைகூர்ந்துநின்
னுன்னம்யாததனையோதுகென்னலுமுவந்துதானவனுமிரவிகண்
மன்னுகோடியெனவயங்குகோகரணவரதனைப்பரவிவேண்டுவான்
23
இந்திரன்றகரியக்குகின்றகனலியமன்வன்னிருதிவருணனேர்
வந்தியக்கனீசானனாதியவவ்வானவக்குழுவுபிரமன்மா
றந்திறத்துநின்னிடத்தினுங்கவலை[2] சார்வுமேவுறாவண்ணமு
முந்துமேவலாரென்னொடேற்கிலெனதுருவுதோற்றுறாவண்ணமும்
24
அன்னர்மெய்யையான்காணுவண்ணமுமதான்றெனாதுவேலாலவார்
சென்னிதூளதாய்வீயும்வண்ணமுந்தேவர்மானிடர்விலங்கினான்
மன்னியானிறவாதவண்ணமும்வழங்குவாயெனவேண்டினா
னன்னவாறுநீவேண்டுமவ்வெலாமாகுகென்றரன்மறைந்தனன்
25
இன்னவாம்வரம்பெற்றதானவனெழுந்துளத்திறுமாப்புறீஇ
நன்னர்சால்வலிமிக்கடைந்தனனமக்குநேரிலையென்னரு
மென்னுமாணவத்தோடுமங்குநின்றேகியாசுரசிற்பியான்
மன்னுசெல்வமாயாபுரம்மெனவழங்கவோர்நகர்கண்டனன்
26
அங்குசோதரக்களெழுவர்சூழ்தரவமர்ந்துதானைபுடைசுற்றுறப்
பொங்குவாழ்விடுனாடுமினிதிருந்தனனப்போழ்துசில்பகல்கழிந்தபின்னே
றங்குதேவருலகாதிமூவுலகுதாவியேற்றமர்புரிந்துடன்
றெங்குமேவிகயநாட்டிமீள்வலெனவெண்ணினானடல்கொள்சண்ட
27
வடபொலன்றிகிரிதிகிரிபல்லகொடுவந்தெனத்திரிபல்வையமு
மிடைவிடாதுபெயலூற்றுமாமுகில்களெனமதம்பொழிபல்வேழமு
மடருகாந்தபிரசண்டமாருதமடுத்துலாவுபலபரிகளு
மிடல்கெழும்பலபதாதியும்புடையில்விரிகடற்குநிகர்சூழவே
28
தூரியத்தெழுபெருங்கலிப்புமிகுதுரகதங்கனைகலிப்புநீண்
மாரியொத்தகடகுஞ்சரம்பிளிறுமாகலிப்பும்விறல்வீரர்வாய்
வாரியொத்தெழுகலிப்பும்விம்மிநெடுவான்கிழித்திடவெழுந்துபோய்ப்
பாரினைத்திரணமாநினைத்தமரர்பதியையெய்தினன்வளைந்தனன்
29
கண்டனின்னணந்தன்னொடும்பெருஞ்சமர்குறித்துவந்துறுசெய
லண்டர்நாயகன்றேர்ந்துமாசினமடைந்துதானைகள்போர்த்திடப்
பண்டுபாற்கடற்றோன்றுமாவின்மேற்பரியவச்சிரமேந்திவெண்
விண்டுமீதுமின்விண்டிவர்ந்தெனமேவிமொய்ப்புறங்குறுகினான்
30
இருதிறத்துமுளதானையொன்றொடொன்றிரண்டுவார்கடலெதிர்ந்தெனப்
பொருதுகின்றபொழுதமரர்சூல்பரசுபுகரினாஞ்சில்வாள்கப்பணங்
குருநிறத்திகிரிதண்டுநீள்சுரிகைகொண்டெறிந்தசுரர்தங்களை
யுருவினின்றுகுருதிப்பெருக்கெழவுடன்றுநின்றெதிரடர்த்தனர்
31
அண்டர்வேலின்மொத்துண்டதாலுளத்தடக்கருஞ்சினமீக்கொளா
மண்டுமாயையில்வல்லதானவர்வலிந்துவில்வளைத்தநேகவன்
வண்டுவெற்பின்மேன்மழைபொழிந்தெனவானவப்படைமீச்சொரிந்
தெண்டிசாமுகஞ்செவிடுபட்டிடவெய்யெனக்குழீஇயார்த்தனர்
32
தேவவீரர்மேலவுணர்தாம்பினுந்தீயவேதியின்மோதலுந்
தாவிலாவலிகுன்றிவீழ்ந்தனர்சாம்பிநோதலும்விண்ணவர்
காவலன்சினங்கொண்டொராயிரங்கண்களுஞ்சிவந்துடன்றுகை
மேவுவச்சிரத்தசுரர்சென்னியைவெற்பெனப்புடைத்திட்டனன்
33
குலைந்நிதிரிந்திடுந்தானையைத்தகுவர்கோன்விரைந்துகண்ணோக்கியுள்
ளுலைந்துவெஞ்சினத்தால்விழிப்பொறிகளுதிரவல்லெயிறதுக்கியே
கலைந்திடாவலித்தம்பிமாரையெதிர்கண்டுநீவிர்போய்ப்போகியை
மலைந்தவன்றலையுருட்டியிம்மெனுமுன்வம்மினென்றுசொற்றேவினான்
34
அன்னதானவர்களெழுவருங்குழீஇயுகாந்தகாலமழைமுகிலெனத்
துன்னிவெஞ்சிலைகுனித்துவானவர்கடோன்றன்மெய்யிலகுகண்களில்
மன்னவெண்ணரியகணைகடூற்றியவன்வாரணப்புழையகையறுத்
தின்னலாரும்வகைதலைபிளந்தனரிரிந்திடைந்ததுகலங்கியே
35
நூறுமாமகனுடன்கனன்றுவிண்ணோன்மைமிக்குறத்தாவியே
நூறுவெங்கணுக்கொண்டவாளினானொடியினிற்கரஞ்சுற்றிவெவ்
வேறுவீரர்கள்பிரிந்திரிந்திடவெகுண்டடித்தனனுய்ந்திடு
மாறுதேருறாமதிமயங்கினராகிவீழ்ந்துமெய்மாழ்கினார்
36
கண்டுமிக்கடல்கொண்டசண்டனுங்காய்ந்துதீயெனக்கொதித்தெழீஇ
விண்டுவொத்ததேரிவர்ந்துபோகியைவிருந்திரன்னெனத்துரத்தியே
பண்டரன்புடைப்பெறுவரத்தினாற்பறந்தலைத்தலையேவருங்
கண்டிடாவணமறைந்திருந்துபல்கணைசொரிந்துவிண்புதைத்தனன்
37
அன்னகாலையாகண்டலன்றெரிந்தரியதெய்வதப்பரிகள்பூண்
டுன்னதப்பொலன்மதலைநாட்டியொள்ளொளிசெயத்திகழ்சயந்தனந்
தன்னைமாதலிகடவவேறினன்சமர்க்களம்புகாவில்வளைத்
துன்னிவையகம்வெதிரடைந்திடவுரத்துநாணொளிபுரிந்தனன்
38
மாயைவெல்லவலபாகசாதனன்வடிகொள்வாளிபலதூவியத்
தீய்சண்டன்விடுமாயவேக்களாற்செறிதருந்திமிரமோட்டிமொய்
மேயவன்னவனைநேடினானவன்விழிப்புலப்படுதலின்றியே
சாயகந்தனதுமெய்துளைப்பதைத்தான்றெரிந்ததனையோருவான்
39
எங்கொளித்துநின்றேவிடுக்குனனென்கணேர்படானென்னெனா
வங்குளத்தஞருழந்துமாயைவல்லான்விருத்திராசுரன்வலன்
பொங்குசம்பனாதியரையென்கைவாள்பொன்றுமாபுரிந்திலதுகொ
லிங்கிவன்றிறல்பெரியதாயுளதென்செய்வாமெனச்சூழுவான்
40
என்கணாயிரத்திற்குநேர்படானெதிரினின்றமர்புரிந்திடி
னென்கண்வென்றியன்னான்கண்வென்றியென்றெண்ணலாகுமஃதன்
புன்கணெய்துமாறொளித்துவஞ்சகப்போர்செய்கின்றனனென்றுசூழ்
தன்கணார்படைதன்னைநோக்குறீஇச்சாற்றுவானிதுவலாரியே
41
நீவிர்பாகவன்கூற்றரக்கனொண்ணீரவன்வளியியக்கர்கோ
னாவிலேறுமீசானனாதியோரத்திரங்களையொருங்குசூழ்ந்
தேவுமின்வலிச்சண்டனைக்குறித்தியானுமென்படைதுரப்பல்யா
மோவலின்றியெல்லோருமொன்றுசேர்ந்துடன்றுவெல்சூதுமென்றனன்
42
அன்னவாறவரத்திரங்களையடர்க்கும்வில்வளைத்தெய்தனர்
துன்னுமற்றவற்றைக்கொடுந்திறற்றுட்பதர்னவர்க்கதிபனுந்
தன்னதத்திரத்தாற்றகித்துவெண்சாம்பராக்கிமோகனக்கணை
தன்னையேவினன்மதிமயங்கினர்சமரில்வெந்கொடுத்தோடினர்
43
பின்னர்வானவர்போகிதன்னுடன்பிரமனூர்வழிப்போயினா
ரன்னசண்டன்விண்ணுலகுதன்வயத்தாக்கியைந்தருநீழல்வாய்த்
துன்னுமாதனத்தினிதுநல்லெழ்ற்சுரமடந்தையர்நடஞ்செய
மன்னிவீற்றிருந்தரசளித்தனன்மாயைசால்விறற்சண்டனே
காளிதிருவவதாரப்படல முற்றிற்று
ஆகச் செய்யுள் 330
________________________________
[1] பண்ணை = மகளிர்விளையாட்டு
[2] கவலை = அச்சம்
காளையார்கோயில் புராணம்
காளிபட்டாபிடேகப் படலம்
1
ஆளியேறி யடன்மிக வூர்தருங்
காளிதோற்றங் கழறின மன்னவெண்
டோளிபத்திர பீடத்திற் றுன்னிநன்
னாளின்மோலி புனைகதை நாட்டுதும்
வேறு
2
தானவர்சமர்க்குடைந்துசதுமுகனிருக்கைபுக்க
வானவர்கோமான்வாணிமணமகன்மலர்த்தாட்கண்வீழ்ந்
தீனமுற்றேனைக்காக்கவென்றுகூவலுமன்னானிற்
கூனமதுற்றதென்னையுணர்த்தெனவுரைக்கலுற்றான்
3
ஐயமுப்புவனத்தியாவுமளித்தருடந்தையாய
செய்யனீயுணராதுண்டோதிதிமகன்சண்டனென்பான்
வெய்யதாம்வரத்தாலெம்மைவென்றுவிண்கைக்கொண்டோட்டி
யொய்யெனவெங்கும்வியாபித்துறுதுயருறுத்தாநின்றான்
4
ஆக்கலிற்பிதாமகப்பேரடைந்தனையேவர்மாட்டு
நீக்கமிலன்புவைத்தனீதியாயினுநினக்குப்
போக்கறுசுரோத்தமப்பேர்பொருந்தலாலெமையேயின்று
காக்கனின்கடமைத்தென்னாக்கரைந்தனன்கரைந்தானுள்ளம்
5
சதமகனிகழ்ந்தவண்ணஞ்சாற்றலும்பூவின்மேலான்
கதமுறீஇச்சண்டனென்னுங்கைதவனியாவனன்னா
னிதமுறையுறையுளெங்குநீள்வரமனித்தார்யாவர்
புதுமையீதென்றோரான்போற்புகலெனக்கடாவினானால்
6
உன்னுரைபுதுமைத்தாகியுள்ளதேயன்றிவேறின்
றென்னெனைப்பரிகசித்தலென்றுரையாடும்வேலை
துன்னியபேரியோதைதுணுக்கெனக்கேள்விப்பட்ட
தென்னெனப்புறம்போய்ச்சண்டனிரும்படைசூழக்கண்டார்
7
நோக்கியவெண்கணாளனோன்மைசான்மராளமேறித்
தூக்குசீர்த்தேவசேனைசூழ்தரப்போர்க்கெழுந்தான்
றாக்குமாவலிகொள்சண்டன்றாணையோடெதிர்ந்துவிற்கொண்
டாக்கிநேயாத்திரம்பெய்தனைத்தையுமெரிக்கலுற்றான்
8
அக்கணமுனிவர்யாருமசுரனைச்சவித்தாரன்ன
தக்கொடியவற்கூறொன்றுமாற்றிலதன்னோரே[1]நா
மிக்குநராயினாரால்வேதனும்வெகுண்டுசீறித்
தக்கதன்னத்திரத்தைச்சண்டன்மேல்விடுத்தானன்றே
9
அத்திரமவனைநோக்கியமரிடைவிரைந்துநேடி
மத்தநீர்சுமந்தான்றந்தவரத்தினான்மறைந்துநின்ற
குத்திரன்றனைக்காணாதுகுறிசெய்துதன்னையேவு
மத்திசைமுகனையேமீண்டச்சுறத்துரத்திற்றன்றே
10
அம்புயாதனன்வெருக்கொண்டமர்துறந்தோட்டங்கொள்ளா
வும்பர்கோனாதிவானோருடன்படர்ந்தும்பல்கூவக்
கம்பமதொழித்தவாழிக்கையனதுலகம்புக்குத்
தம்பநின்றுதித்துப்பொன்னற்சாய்த்தவசரணமென்னா
11
எம்பகையவுணர்க்காய்வானீரைந்துதோற்றமுன்னா
ளிம்பரினெடுத்தளித்தாயிந்நாணீசண்டற்கொன்று
கம்பமுற்றடைந்தவெம்மைக்காத்தருளெனத்துதித்தா
ரைம்படையத்தத்தண்ணலருளினாலியம்புமன்னோ
12
அஞ்சன்மினீரொன்றற்குமத்தையித்தியன்கோடீரப்
பிஞ்சுவெண்மதியோன்றன்பாற்பெருவரம்பெற்றுளானந்
நஞ்சமன்னவனிங்கண்ணுநாடுவனென்றனுலுந்
துஞ்சிடான்யாமெல்லோருந்தொக்கமர்புரிவுமென்றான்
13
நன்னரவ்வாய்மைகேட்டநான்முகன்முதலவானோர்
பொன்னுறைமார்பன்பாதாம்புயந்தொழுதுவப்பினிற்க
வந்நொடியோரொற்றன்புக்கச்சுறீஇப்பனித்துநின்று
துன்னினனிங்குஞ்சண்டாசுரனெனக்குழறினானால்
14
விண்டுவுமதுகேட்டொல்லைவிநதைநல்கூர்தியூர்ந்து
தண்டுநாந்தகஞ்சங்காழிதனுவைந்துங்கரத்திற்றாங்கி
மண்டமர்க்கெழுந்தானாகவானிடையுகாந்தகாலக்
கொண்டல்போன்முழங்கிச்சூழ்ந்தகொடுந்தொழிலசுரசேனை
15
சிண்டமாருதங்கடுத்தசண்டன்வெஞ்சிலைகுனித்துத்
தண்டுழாய்மருமத்தண்ணறனைக்குறித்துருமேறன்ன
வண்டுபல்லனத்தொட்டார்த்தான்மாயனுந்தனுநாணேற்றி
மண்டியவாளியேவிமற்றவைதுகள்படுத்தான்
16
தானவனுணர்ந்துபின்னர்த்தபனன்வெம்படைவிடுத்தான்
வானவருவக்கமாலோன்வருணவாளியினவித்தா
னானபின்கொடியோன்றாமதாத்திரந்தொடுத்துவிட்டான்
றேனவாந்துளவோனென்றூழ்த்தேவனேவெய்தொழித்தான்
17
இன்னணமாறிமாறியிருவருஞ்சமர்புரிந்தார்
பின்னரச்சண்டன்சீறிப்பிறங்குநாராசவாளி
பன்னகாசனன்முகத்திற்பக்கங்களிரண்டிற்கண்ணிற்
சென்னியில்வாலிற்பல்லதிறன்படவுரப்பிவிட்டான்
18
கலுழனீள்சிறைகுலுக்கக்கணையெலாமுதிர்ந்தமீட்டும்
வலனுறுபுயத்தைந்நான்குவாளிகளெய்தான்றீயோ
னலனுறவவற்றையம்பானாரணன்றொலைக்கவன்னான்
றுலமிலான்கைச்சாரங்கந்துணித்தனனிரண்டுவண்டால்
19
பின்னருமாயோன்மார்பிற்பெருந்திறற்கணைகளைந்து
நன்னுதற்கண்மூன்றம்புநாட்டினன்மறைந்தான்சண்டன்
மன்னதிற்சோரித்தாரைவாந்திடச்சினவியண்ண
லென்னிகராழியேவவெரித்ததுதகுவத்தாரை
20
ஆழிதார்மட்டுஞ்சாய்த்ததன்றிமெய்கரந்துநின்ற
காழியில்புயத்துச்சண்டற்கண்டடர்த்திலதாகப்பின்
னூழினிற்றண்டைவாளையோச்சவுமன்னவாகி
யாழுறத்தன்னாராயணாத்திரந்தொடுத்தான்மாயோன்
21
அப்படையெழலுமும்மையகிலமுமோகத்தாழ்ந்த
துப்புடையதுவெஞ்சண்டற்றுருவியெங்கணுங்காணாது
வெப்பொடுமீளும்வேலைவெய்யவன்மறையைப்பல்காற்
செப்பிவிட்டிடுமாகேசாத்திரத்தினாற்றுணிபட்டன்றே
22
மாதவன்படைக்குந்தீங்குவந்தமையுணர்ந்துதேவர்
நோதகச்சிவன்வரத்தானோன்மைமிக்குற்றசண்டன்
மாதிடன்முரசார்த்துத்தன்வயத்தவாமாலூர்விண்ணூர்
போதனூர்கொண்டுமாயாபுரமடைந்திருந்தானிப்பால்
23
தோற்றவத்தேவர்யாருந்தொக்கொருசூழல்வைகிப்
போற்றுறுபொன்னனோடுபுன்றொழிற்சண்டன்றன்னை
யேற்றமர்வெல்லுஞ்சூழ்ச்சியாதெனத்தேருங்காலைத்
தேற்றியவாய்ந்தோர்வாய்மைசீதரன்செப்பலுற்றான்
24
கொடியினையிரவில்வெல்லுங்கூகைதானதனையந்தக்
கொடியதுபகலில்வெல்லுங்கொள்கையிற்காலந்தேர்ந்தக்
கொடியனைவேறுமென்னக்குகைகளிற்றுன்னியன்னக்
கொடியனைமுதலவானோர்குழீஇக்கரந்துறைந்தாரன்றே
25
இன்னணம்பன்னாட்செல்லவிருந்துபின்னயன்முன்விண்ணோர்
பொன்னவனுடன்சென்றாலபோனகனுலகமீன்ற
வன்னையுட்களிப்பநாளுமமர்ந்துறைகயிலைக்குன்றந்
தன்னையுற்றரன்றாள்வீழ்ந்தார்தாழ்ந்திவைநெடியோன்கூறும்
26
உயிரினுக்குயிரேயெங்களுணர்வினுக்குணர்வேயென்று
மயர்வறவுலகமெல்லாம்வகுத்தளித்தழிக்குந்தூய
செயலுறுகருணைபூத்தசெழுமலர்க்கடைக்கணோக்கி
யயர்வறவெம்மைநாளுமாண்டருள்சிவமேபோற்றி
27
போற்றியென்றடியில்வீழ்ந்துபுன்கணீர்வாரநின்று
நாற்றிசைமுழுதும்வென்றுநலிதரவாற்றுந்தீய
வேற்றிறற்சண்டனெங்கள்விய்னுலகனைத்தும்வெளவி
வீற்றிருப்பிடமொன்றின்றிவிடுத்தனன்வெருட்டியன்றே
28
ஆதலினெம்மைநீயேயளித்திடவேண்டுமல்லாற்
போதருகதிவேறில்லையெனப்புகல்பூமிகேள்வன்
பேதுறுவதனநோக்கிப்பேரருள்புரிந்துமென்பூந்
தாதுகுகொன்றைவேணித்தாதைபுன்னகையிற்சாற்றும்
29
செம்மலர்க்கமலம்பூத்ததிருவளர்மார்பகேட்டி
பம்மறலியைநேர்சண்டனன்றுசெய்தலுத்தினாலே
நம்மிருவர்க்குமஞ்சாநல்வரம்வேட்டானென்னா
லம்மவஃதளிக்கப்பெற்றேயகமகிழ்வுற்றுச்சென்றான்
30
அக்கொடியவனைச்செற்றங்கனைத்தையுநுமதாக்கொள்ளத்
தக்கதோர்சூட்சிகேண்மோசாற்றுநாவலந்தீவத்தின்
மிக்கதாம்பரதகண்டவியப்புறுதமிழ்த்தேயத்துட்
டொக்கசீர்ப்பாண்டிநாட்டிற்சோதிமாவனமொன்றுண்டால்
31
அத்தகுவனத்துள்யாமுமருட்குறிவடிவாயன்பர்
கைத்தலக்கனிபோற்காணக்கனிந்துவீற்றிருப்பநம்பாற்
சத்திமுன்னொருகானம்மாற்சபித்திடப்பட்டுவல்ல
பத்திரகாளியாகிப்பரிவொடுவதிதலுற்றாள்
32
சற்றவணிணைக்கிற்சண்டன்சண்டனூர்புகுதறிண்ணந்
தெற்றெனநீவிர்கொண்டசிந்தனையனைத்துமந்தக்
கொற்றவைதன்பாற்சென்றுகூறுமினென்னத்தேவ
ருற்றனருவகைமேன்மேலொழிந்தனர்தகுவரென்றே
33
துன்றியகளியராகித்தொழுதுவெண்கயிலைநீங்கித்
தென்றிசைநோக்கிச்சென்றுதெவ்வராற்கவர்ந்ததங்கள்
பொன்றிணிநகரினோங்கிப்பொலிதருபணைநீள்சோதி
நன்றவிர்வனத்தைக்கண்டார்நலிகடற்கரையைக்காண்பார்
34
புகுந்தனர்சோதிக்கானம்புலர்ந்தனர்தகுவரின்னே
தகுந்திறல்பெற்றீரென்றுதண்மலர்பொழிவபோன்று
நகுந்துணருதிர்க்குங்கோட்டுநகந்தொறுந்துருவியங்கோர்
மிகுந்திருமருதநீழல்விமலைவீற்றிருக்கக்கண்டார்
35
கண்டனர்சிரங்கைகூப்பிக்கண்பனிதுளிப்பவுள்ளங்
கொண்டனருவகையாங்குக்கூடினராடிப்பல்ல
வண்டமுஞ்சராசரங்களனைத்துமீன்றளிக்குந்தாயை
விண்டபேரன்பினோடுவேண்டினர்துதிக்கலுற்றார்
36
மூன்றுருவாகிச்சீர்சான்மூன்றுமண்டலத்தாதார
மூன்றிரண்டிடத்துமேலானமுளைத்தருடழைத்தசோதி
மூன்றுகண்படைத்தோய்தோன்றுமூன்றுபத்துடனிரண்டு
மூன்றுதத்துவங்கடந்தோய்முறைகெழுமறைகடந்தோய்
37
கேடகந்தண்டஞ்சூலங்கிளர்வலிகெழுநாராசம்
வாடயங்குறுமலர்க்கைவாயந்துமுன்மகிடற்செற்றோய்
தேடிநின்சரணம்புக்கசிறியோங்கடமையுங்காக்க
நாடியிங்குறையுமன்னாய்நன்கருளென்னப்போற்றி
38
முறையிடுமிமையோர்தங்கள்முன்பிரசன்னமாகிக்
குறையெவனேர்ந்ததும்பாற்கூறுமினென்னத்தீய
கறையுடற்சண்டன்செய்தகடுந்துயர்க்கொடுமையுந்தந்
நிறையுலகனைத்தும்வவ்வுநீர்மையும்புகன்றுமற்றும்
39
உறைவிடமின்றியெம்மையோட்டினன்யாங்களோடிப்
பொறைமுழைகளிற்பன்னாளும்புகுந்தொளித்திருந்தோம்பின்னர்
நறைகமழ்கொன்றைவேணிநாதனற்பாதம்போற்றி
யறைதரவன்னோனெங்களயர்வினையருட்கணோக்கி
40
நின்னுழைவிடுக்கவந்தோநீயலாற்கதிவேறில்லை
யன்னுழைசண்டனாதியவுணரையடக்கிக்கொன்று
பொன்னுழையிருக்கையாங்கள்புகவருள்புரிதியென்ன
மின்னுழைகமலப்பொற்றாள்வீழ்ந்துளங்கரைந்துநின்றார்
வேறு
41
தஞ்சமென்றுதொழுமவர்தம்மைநீ
ரஞ்சலஞ்சலெனப்புகன்றாற்றியே
சஞ்சலம்புரிசண்டனைக்கொன்றுநும்
விஞ்சுவெம்பகைவீட்டுவனென்றரோ
42
நீனிறத்தவுணற்பொரநீவிருஞ்
சேனையாகிமுன்சேர்மினெனப்பெருங்
கானவாழ்வுடைக்காளிபுகன்றிட
வானவாணருநன்றெனவாழ்த்தியே
43
கண்ணுதற்பெருமான்கடுஞ்சீற்றத்தி
னெண்ணவந்திடுசாமுண்டியென்னுஞ்சூர்ப்
பெண்ணுந்தன்னுருக்கொண்டுபெயர்ந்திவ
ணன்ணுமாகேச்சுரியெனுமன்னையும்
44
ஆயமாதரிருவருமாங்கவ
னேயசொற்படிவெய்துவந்தெய்துவா
நேயநின்னெதிரெங்களுணேமியா
னாயிரங்கணனாரணன்சேய்முனோன்
45
நேரில்வைணவிநீடுமாகேந்திரி
பேரியற்றும்பிராமிகௌமாரிவான்
வாரியெற்றும்வராகியென்றைவராய்ச்
சீரினெய்துவரென்றவர்செப்பினார்
46
கூறியாங்குருக்கொண்டுகுழீஇனார்
வேறுளாரும்வியன்பெரும்பூதமுஞ்
சாறுவேட்குமிடாகினிசாகினி
யாறுபட்டபிசாசமுமாயினார்
47
செங்கணாரழற்செம்மயிற்பங்கியர்
தொங்குபூருவர்சூழ்பெருந்திங்களைப்
பங்குசெய்துபதித்தவெயிற்றின
ரெங்கணும்புதைபட்டிடவெய்தினார்
48
இன்னதானையெலாந்தனைச்சூழ்தரச்
சென்னிமேனிமிர்செங்குழற்காட்டொடும்
வன்னியென்னவயங்குறுகண்ணொடு
மின்னும்விண்ணின்விளங்கினள்காளியே
49
வானவெண்பிறைவைத்தவெயிற்றொடும்
பீனமுற்றபெருந்தனக்குன்றொடு
மானமந்தரமானுமகட்டொடுங்
கானகத்திற்கிளர்ந்தனள்காளியே
50
சங்குசக்கரந்தண்டொடுதூணிவிற்
றங்குதீக்கலங்கேடகந்தாங்குவா
ளங்கையேந்தியபயவரதமும்
பொங்கநின்றனள்போர்வலகாளியே
51
இன்னதன்மையளாகியிலங்கிய
துன்னலர்க்கிடியேறனதுர்க்கையைப்
பன்னிவாழ்த்திப்பணிந்துமயன்றனான்
மன்னுசாலமொன்றாக்கினர்வானவர்
52
நாடுமவ்வரணாப்பணொர்பத்திர
பீடமிட்டுப்பெருந்திறற்காளியை
மாடுபற்பலவாச்சியமார்த்திட
நீடுவாழ்த்திநிலவவிருத்தினார்
53
பொங்குபுண்ணியப்பூம்புனலாட்டினார்
தொங்குறூசுசுடர்மணிசூட்டினார்
துங்கதீபமுந்தூபமுங்கோட்டினார்
அங்கருச்சித்தருந்துதிநாட்டினார்
54
அன்னதுர்க்கையருளிற்சாமுண்டியைத்
தன்னைச்சூழ்தருதானைக்கிறைவியாய்
மன்னுகென்னவளப்புனலாட்டினர்
துன்னலற்பொரல்சூழ்ந்தங்கிருந்தனர்
55
தேவியைக்கண்டதேங்கண்டதேவியத்
தேவிவீற்றுறத்தேவர்செய்சாலந்தான்
தேவிகோட்டையப்பீடத்துச்சேர்ந்துறை
தேவியேபத்திரகாளியென்பவே
காளிபட்டாபிடேகப்படலம் முற்றிற்று
ஆகச் செய்யுள் 385
சண்டாசுரன் வதைப்படலம்
1
அன்னைதுர்க்கையபிடேகங்கொண்டருண்
மன்னிவீற்றுறைமாக்கதைகூறினா
மின்னலாற்றியெழுந்தசண்டாசுரன்
றன்னைவென்றதனிக்கதைசாற்றுதும்
2
கொற்றவையின்னணந்தேவிசாலபுரத்துறைவேலைகுளிர்வெண்டிங்கள்
துற்றசடைப்பெருமானைக்கைலைவரையடைந்தன்பிற்றொழுதுதூய
நற்றவரேரதமுனிதென்கைலையெனுஞ்சோதிவனநண்ணியாங்குப்
புற்றருமென்கலையுடைநங்காளீசப்பெருமானைப்போற்றற்கெண்ணி
3
வருநெறியிற்றிண்டிறற்சண்டாசுரன்கண்டருமுனிவமாயோனாதி
சுரர்களையான்றுரத்தவவர்வெருண்டோடிக்கயிலைவரைச்சூழல்புக்கார்
வெருவுமவரெங்குளரென்றிடக்கேட்டுநாரதனவ்விண்டுமுன்னோர்
தருவளர்வான்சோதிவனத்துளதேவிசாலபுரந்தன்னைமேவி
4
ஆங்குளபத்திரகாளிதனைச்சரணமெனவடுத்தாரவளுநின்னோ
டோங்குசமர்புரிந்துனைக்கோறற்குநினைந்திருக்கின்றாளுணர்தியென்னத்
தாங்குமலர்ப்பிரமாதிகளைநொடியிற்றுறுரத்திவிட்டதகுவன்யானிவ
வாங்குமிடையாடனக்குமஞ்சுவனஞ்சிடிற்கலுழன்மசகத்திற்கே
5
மற்றசளென்கால்விரற்றூட்காற்றுவளோவவளொடும்போர்வளைப்பதாயி
னுற்றிடுவதிழிவன்றோவதுநிற்கவொளித்திருந்திவ்வுறுதிதேடு
பொற்றலர்களெனுந்தேவகணங்களைவேரறுத்தவர்கீட்குதவிசெய்யுங்
கொற்றவைதன்னையுங்கணத்திற்கொல்வலெனமுனிவரனைக்குறிப்பிற்போக்கி
6
எண்ணரியகடுஞ்சினத்துச்சண்டனும்போராள்வினையோடிருந்தா னிப்பாற்
புண்ணியநாரதன்றேவிசாலபுரந்தனையடைந்துபுடைசூழாய
நண்ணிவளரெழிற்காளிமுன்னனுகிவிறற்றகுவனவின்றவாறுந்
திண்ணமொடுசமர்குறித்தசெயலுமுரைத்திடவவடன்செவியிற் கேட்டாள்
7
கேட்டலுமூழிக்கனலிற்சினந்துவிழித்தீசிதறக்கிளர்சாமுண்டி
நாட்டுறுமாகேசசுரிபிராமிகவுமாரிவயிணவிமுன்னாய
வீட்டுதிறற்றானையொடுமெழிற்றேவிசாலபுரியிகந்துவான்போய்க்
கூட்டுமிடிமுழக்கமெனவார்த்துக்கோதாவரிவண்கூலமுற்றன்
8
அந்நதியின்புனலாடியத்தீரத்துளதலத்துளமர்ந்தவெம்மா
னன்னர்மலியருட்குறிகண்டன்பின்விதிமுறைபூசைநயப்பவாற்றிச்
சந்நதிநின்றேத்தலுநஞ்சிவபெருமான்மகிழ்ந்துபிரசன்னமாகி
நின்னினைவென்வேண்டுகவென்றலுங்காளிநேயமொடுநிகழ்த்தலுற்றாள்
9
மாயனயன்முதற்றேவர்தமைத்துரத்திக்கொடுமைபுரிவலியசண்டன்
வீயவுமித்தலமின்றுதொடுத்தென்றுமென்பெயரால்விளங்கவுந்தந்
தேயவருள்புரிதியெனவவ்வண்ணமளித்திறைவனினிதுபின்னுந்
தூயதிறற்சூலமிரண்டருளியொன்றிற்சண்டனைநீசூழ்ந்துகொல்வாய்
10
மற்றெருசூலங்கொடுசாமுண்டியடற்றாரகனைவதைக்கவென்று
தெற்றெனத்தன்னருட்குறியுட்சிவபெருமான்புகுந்தொளிக்கத்தெரிந்துகாளி
வெற்றிதருதன்கரத்திலொன்றேந்திவேறொன்றைவிறற்சாமுண்டி
பெற்றிடநல்கினளன்றுதொடங்கிச்சூலினியென்னும்பெயர்பெற்றாளால்
11
அன்றியுமுத்தரகாளிபுரமாயிற்றத்தலமுமவள்பூசித்த
கொன்றைமுடிப்பெருமானும்புகழ்தருகாளீச்சுரப்பேர்கொண்டானாக
நன்றுவரம்பெறுமகிழ்ச்சியாற்காளிகுதுகலித்துநலங்கொள்சேனை
துன்றவெழுந்துதீசியெனுந்திசைநோக்கியார்ப்பரித்துச்சூழ்ந்துசென்றாள்
12
வலனுறுசூர்க்கணங்களொடுகாளியுமாயாபுரத்தைவளைந்தாளொற்றர்
சிலர்விரைவினோடிவிறற்சண்டனொடுமஃதுரைப்பச்செவியுட்கொள்ளா
மலமறுமாமுனிபுகன்றமொழியுமுளத்துணர்ந்தனன்மேல்வருவதோரான்
கலகலெனநகைத்துமதித்திலனிருந்தான்காலனையுங்கறுக்குங்கோளான்
13
அன்னவனாருயிர்பருகற்காவலுறுங்கொடுங்காளியரியசேனை
துன்னுதிறற்சாகினிடாகினிமுதலாம்பூதகணஞ்சூழ்ந்துசாலப்
பன்னுமிடிமுழக்கமெனவார்த்தவுணருறைநகருட்பாய்ந்துசின்ன
பின்னமுறக்கரங்கொடுசிற்சிலதகுவர்தமைப்பிடித்துப்பிசைந்திட்டாரால்
வேறு
14
அந்தவேலைவிறலவுணவீரர்பலரரியதேர்கசதுரங்கமோ
டுந்துசேனைதளுடன்றொடங்குசமரூடுபூதகணமீதவண்
முந்திவார்சிலைகுனித்துநாண்விசைமுடிக்கிநின்றுசரமாரிபோற்
சிந்தவீ றுகொள்கணங்களும்பொருதுசீறியந்நிலையெதிர்த்தனர்
15
விட்டவெம்பகழிதொட்டெறிந்தவுணர்வெய்யகையினிலெடுத்தவேல்
பட்டமும்பறிபடக்கவர்ந்தவர்பதைத்திடக்கொடிறுடைத்துடல்
வெட்டியங்கெழுமிரத்தமுண்டுவகைமேவினாரவுணர்வெள்கியே
முட்டிவெம்பியசினத்தொடுங்கணமெலாம்வெருண்டிடமுடுக்கினார்
16
இருதிறத்தவருளமர்விளைந்தசெயலினையுணர்ந்துவெகுள்சண்டனும்
வருதிறத்திளையகும்பனாதியரைவரவழைத்திகல்செய்காளியைப்
பொருதுவென்றுயிர்தொலைத்துவம்மினிதுபொழுதெனச்சொலிவிடுத்தனன்
விருதுபெற்றபலபடைபடைத்தடல்விரும்பிவெங்களத்தெய்தினார்
17
நின்றுவெஞ்சமரிலஞ்சுதானவரைநின்மினெனறவருடன்குழீஇத்
துன்றுதோமரநெடுங்கைவேலினொடுசூலமுற்கொடுதொடர்ந்தெதிர்ந்
தின்றுநுங்களையமன்றிசைக்கிடுவமென்றுபூதகணமஞ்சியே
பின்றுமாறுடறடிந்திடக்குருதிபெருகவோடினகணங்களே
18
அன்னகாலையதறிந்தகாளியவளாணைகொண்டவெழுமாதருட்
டுன்னுமூவிருவர்தண்டமோடுதிகழ்சூலமுங்கொடுதொடர்ந்தவர்
முன்னிலாதுளநடுங்குமாறுமுனைமோதிநைத்துவருவேலையிற்
பின்னுலாவியபிராமியார்ப்பொடுபெயர்ந்துகும்பனைநெருக்கினாள்
19
தண்டுகொண்டுதலைசிதறிடப்பெரிதுதாக்கினாளுதிரம்வெள்ளமாய்
மண்டிடத்தரையுருண்டுசாய்ந்தனன்மகேச்சுரிப்பெயரணங்குகைக்
கொண்டசூலமதையுந்திமுந்தியடர்கோபமீறியுத்தண்டனை
விண்டுநேர்தருமுரம்பிளந்தனள்விழுந்தனன்குருதிகக்கியே
20
மலிதிறத்தகவுமாரிவேலின்வீமாக்கனைப்பொருதுசாய்த்தனள்
வலிபடைத்தவயிணவியும்வைரவசுவனனையாழிகொடுவாட்டினள்
பலியிடப்பெறுவராகியங்குசப்படையினிற்றிறன்மகோதர
னலிபடப்புடைத்துலவுகூளிகணகைத்திடும்படிக்கிடத்தினள்
21
ஆரமேவியமகேந்திரிப்பெயரணங்குசீறியொளிர்வச்சிரப்
பேருலாவுபடையேவிவீரனைப்பிணமெனத்தரையுருட்டினா
ணேரில்பூதகணமார்த்துவன்றகுவர்நெடியதானையைமுறித்தனர்
சோரிவாரியினின்மூழ்கியாடினதுளைந்துலாவுபலகூளியே
தொடரும்....
வேறு
22
இன்னணஞ்சமரிற்காளிசேனையாலிளையகும்பன்
முன்னவர்மாழாந்துட்கிமுறிந்தனரென்றசெய்தி
துன்னினருரைப்பக்கேட்டுத்துடுக்கெனச்சீற்றம்பொங்கி
யென்னவமானமீதென்றெழுந்தனன்றிணிதோட்சண்டன்
23
தருமனுமஞ்சுங்காலதண்டமொன்றங்கையேந்தி
வெருவருமீரைஞ்ஞூறுவேசரிபூண்டதேரில்
வருபெருந்தம்பியோடுவாவிவாள்சூலமாதிப்
பொருபடைத்தொகுதிமன்னப்பொலிந்தனனுருமினார்த்தான்
24
ஆயிரங்கோடிதேர்களாயிரங்கோடியானை
யாயிரங்கோடிபாய்மாவாயிரங்கோடிகாலா
ளாயிரங்கோடியாயவரியகூர்ம்படைகைக்கொண்ட
வாயிரங்கோடிசேனைத்தலைவருமடர்ந்துசூழ்ந்தார்
25
தானையினாப்பணார்பொற்சயந்தனமீதுகார்நேர்
நீனிறவுருவத்தோடுநிலவவேறியவிச்சண்டன்
பேனமார்தரங்கமாலைப்பெருங்கடனடுவிற்றோன்று
பானுவின்மார்பத்தேறிப்பயிலுமச்சண்டனொத்தான்
26
இன்னணஞ்சேனைசூழவெழுந்துதாரகனந்தம்பி
தன்னொடுங்கொற்றவேற்கைச்சண்டன்மாயாபுரப்பேர்
நன்னகர்நீங்கிவிண்ணுநடுங்கப்போர்க்களத்துட்புக்கான்
றுன்னியசங்கபேரித்துழனிதெண்டிரையினார்ப்ப
27
அவ்வொலிமுழக்கங்கேட்டங்கமர்பொரவிரும்புங்காளி
கொவ்வையங்கனிவாய்ச்சத்தமாதர்தங்குழுவினோடும்
வெவ்வியகணங்களோடும்விறன்மிகுதண்டமுன்னாக்
கவ்வியபடைகளோடுங்களம்புகுந்தார்ப்பரித்தாள்
28
அவ்வவரூர்திமேற்கொண்டடல்கெழுசிலைகுனித்தங்
கெவ்வமில்பகழிபல்லவேவினரவுணர்மீது
தவ்விமேலெழுந்துபாய்ந்துதகுவருந்தொடுத்தார்வாளி
யிவ்விருதிறத்தோரும்பின்னிடாதமர்புரியுங்காலை
29
கரைகெழுசூலம்வன்னிக்கபாலந்தண்டிவைகைக்கொண்டு
முறைகெழுதிறற்சாமுண்டிமுழங்குதிண்சிங்கமேறிப்
பறைகெழுமுழங்கினோடும்பாய்ந்துவிண்ணிடைச்சுழன்று
பிறைகெழுமெயிற்றன்னார்மேற்பெய்தனளப்புமாரி
30
பின்னருங்கொடியசூலம்பிறங்கிடவங்கைவாங்கி
மன்னியதாரகன்றன்மார்பினைக்குறித்துவிட்டா
ளன்னவனதனைத்தாங்கியருஞ்சிலைகுனித்துவாங்கிக்
கன்னிமேலோரைஞ்ஞூறுகணைபொழிந்தார்த்துநின்றான்
31
அக்கணத்தவற்றையெல்லாமரியகேடகத்தாற்றட்ப
மிக்கவெஞ்சினங்கொண்டன்னான்மீட்டுந்தீக்கணைதொட்டேவப்
புக்கதுவிண்ணுமண்ணும்பொறியெழக்குறுகுமுன்னர்க்
கைக்கதுவுறுதீக்காலுங்கபாலத்திற்றடுத்துப்பின்னும்
32
கறுகட்சாமுண்டியங்கைத்தண்டினாற்றாரகன்கட்
குறுகிச்சென்னியிற்புடைக்கக்குருதிவெள்ளத்தினூடு
மறுகிப்புண்பட்டுச்சாய்ந்தான்மயங்கினன்றெளிந்துவெற்றி
பெறுசத்தியொன்றெடுத்துப்பெருஞ்சத்திமீதுவிட்டான்
33
மற்றதைக்கதைகொண்டோச்சிவகுத்தொருமூன்றுதுண்டா
வெற்றினண்மீட்டுமஞ்சானெரிதெறும்பகழிமாரி
கொற்றவையூர்திமீதிற்கொட்டினனவற்றையேற்றுத்
தெற்றெனவண்டமெல்லாந்திடுக்கிடவார்த்ததன்றே
34
கண்டுசாமுண்டியாங்குக்கண்கடீப்பொறிகள்காலத்
தண்டுகொண்டெற்றியந்தத்தாரகனூர்திவீட்டித்
திண்டிறற்சூலமேந்தித்தேர்வலவனையுமாய்த்தங்
கண்டுதாரகனைமார்பிலழுந்திடக்குத்தியார்த்தாள்
35
சாய்ந்தனன்மதிமயங்கித்தாரகன்பின்னர்க்காளி
பாய்ந்துவன்றகுவர்மீதுபற்பலபகழிமாரி
யோய்ந்திடாதுகுத்திட்டூழித்தீயெனவுடன்றுமேலுங்
காய்ந்துவன்மோகனப்பேர்க்கணையினான்மயக்கிநின்றாள்
36
மோகனக்கணைகளாலேமூடலுந்தகுவர்சேனை
யேகுதற்கிடமொன்றின்றியெங்கணுங்காளியாக
வேகமுற்றறவெகுண்டுவெய்யகாளியைநோக்கித்தன்
வாகுகள்கொட்டிச்சண்டன்வாய்திறந்திசைக்கலுற்றான்
37
செல்லற்கநிற்கநின்னைச்செகுப்பலித்தண்டினென்று
சொல்லிப்போருஞற்றக்காளிசூலங்கைக்கொண்டுவீசி
வெல்லப்பேர்ந்தரியவேகவேதாளவூர்தியேறிச்
செல்லொக்கத்திரிந்தாள்சேணிற்சீறிவன்றகுவனார்த்தான்
38
ஆர்த்துவன்சிலைகுனித்தானாசுரக்கணைதொடுத்துப்
போர்த்தனனெங்குஞ்சண்டனுருவெனப்பொருவில்காளி
தீர்த்தனன்றுதவப்பெற்றசூலத்திற்சிதைத்தாளாகப்
பார்த்ததாரகனுஞ்சண்டன்பக்கலிற்சார்ந்துநின்றான்
39
அன்னதுநோக்கிக்காளியருகிற்சாமுண்டிவந்தாள்
துன்னியசண்டனோடுதுணைவனுமுடங்குகூடி
யன்னிலைதாமதத்தோடயிந்திரமாக்கிநேய
மென்னுமுப்பகழிமாரியெடுத்தனர்விடுத்தாரன்றே
40
இத்தகைக்கணைகள்யாவுஞ்சாமுண்டிகாளியென்னுஞ்
சத்திகளிருவர்தங்கடடக்கையிற்சூலங்கொண்டு
மொத்திநுண்கொழிதூளாக்கிமுழங்கினர்கணங்களோடும்
வித்தகமிதுநன்றென்றுவெருவினரவுணவேந்தர்
தொடரும்...
41
தனித்துறுசண்டன்றக்கதம்பியைநோக்கிக்கூறும்
பனித்துளநடுங்கச்செய்யிப்பாவையர்கொடுமையென்னே
நனித்தெனநினைந்தோரம்பாற்பெருமையைநாமேநக்கக்
கனைத்துளசேனையெல்லாங்கண்டனங்கழியவின்றே
42
ஆதலின்மடவாரென்றுமாடவரென்றுநோக்கா
தேதமிக்குஞற்றியேனுமினியதுபெறுகவென்னு
மேதகுபெரியர்வாய்மைவிரும்பிலமாவதாக
காதமர்புரிவதேநங்கடனெனத்துணிவுற்றானால்
43
துணிந்துதாரகனுஞ்சண்டாசுரனுமென்றிருவருந்தங்
குணந்திகழ்துரோணங்கோட்டிக்கொடுஞ்சரமாரிபெய்து
கணங்களைக்கண்டமாக்கிக்கண்டனன்மறைந்துநினறான்
யணங்கினுக்கரசியானாளதனையங்காய்ந்துகண்டாள்
44
தொகுசரமாரிநம்மேற்றூற்றுவசீறிப்போந்து
புகுவனகண்டோந்தானைபுரள்வனகண்டோமந்தத்
தகுவனைக்கண்ணிற்காணோஞ்சாமுண்டியிதென்கொலென்று
செகுதிறற்சண்டனின்றதிசைகுறித்தம்புபெய்தாள்
45
கொற்றவைவிடுத்தவாளிகொடியவன்படையைவாரி
யெற்றலுங்காளிவன்மையெண்ணியங்கவளைச்சாய்த்து
வெற்றிபெற்றிடவொல்லாதுவெருவியசண்டன்பாந்தள்
புற்றொளித்தென்னமாயாபுரத்தினுட்புகுந்தானன்றே
46
இவ்வண்ணந்தகுவரோடியொளித்தமையெய்த்துக்காளி
செவ்வண்ணநுதற்கட்பெம்மான்செப்பியவாறுசூலத்
தவ்வண்ணச்சண்டன்கோறற்ககப்படாமையினாமற்றிங்
கெவ்வண்ணம்வெல்லுமாறென்றிருந்திதுசூழ்ந்தரண்மன்னோ
47
கொடியமாயையினாலந்தக்கொடியவன்றனைமறைக்குங்
கடியவன்கவசந்தன்னைக்கட்டறுத்தனையான்சென்னி
படியிடைவிளவின்வீழ்ந்தபழமெனமத்தமாபோ
லுடைபடப்புடைப்பலென்றோர்சூழ்ச்சியையுளத்துளுன்னா
48
சுடரொளிநுதற்கட்பெம்மான்சோதிமாவனத்தின்கீழ்பா
னெடியவிண்ணிடைத்தடித்துநீனிறக்கொண்டுமூநிற்கும்
படியெனமன்னித்தன்னுட்பரமனையுன்னியங்கை
முடிமிசைநீட்டிநின்றுமுயன்றனடவத்தைமன்னோ
49
திங்களீராறிவ்வாறுதேவிமாதவத்தினிற்க
வெங்களத்திவட்காற்றாதுவெள்கிமுன்றானையோடு
தங்குமாயாபுரத்தைச்சார்ந்ததொளித்திருந்தவந்தப்
பங்கயன்மான்முன்னோரைப்பயந்தொளித்திடச்செய்சண்டன்
50
எங்கணும்யாவரேனுமெனக்கிணையில்லையென்னாப்
பொங்கியபெருமையுற்றேன்பொருகளத்தொருத்திகாளி
யங்கனாசேனையோடுமடர்த்தெனையவமதித்தா
ளிங்கிதன்மாயமென்னென்றின்னலங்கடலுளாழ்ந்தான்
51
புலம்புறுமுள்ளம்யார்க்கும்புலப்படாதடக்கியின்று
வலம்பெறுகாளியாவிவாங்குவலென்றுகூறிக்
கும்பெறுமொற்றர்தம்மைக்கூயவரணுகநோக்கி
நலம்பெறநகுவேற்சண்டாசுரனிவைநவிலலுற்றான்
52
தூதர்காள்காளியென்னுஞ்சூரணங்கொருத்திமுன்னாண்
மாதராஞ்சேனைசூழவந்துநம்மவரிற்சில்ல
பேதமைச்சிறுவரோடுபெருகுமூப்பினரைப்போரி
லேதமிக்குறச்சாய்த்தச்சமெய்தினளோடுற்றளால்
53
அன்னவஞ்சகியைத்தேடியறிந்தவணிலைமையாவும்
பன்னுமினம்பாலென்னப்பரிந்தவர்விரைவினேடி
முன்னருந்தவமேற்கொண்டமுதல்வியைக்கண்டுமீண்டு
மன்னனைக்கிடைத்துத்தாழ்ந்துவணங்கியீதுரைப்பதானார்
54
ஐயகேள்குணக்கதாயவார்கலிக்கருகிலுள்ள
மையறுநறியநீத்தமாசுணநதிக்கூலத்திற்
பொய்யின்மான்மியவிருத்தபுரிக்குவாருணதிக்கின்க
ணய்யரைக்காவதத்தினவிர்தருஞ்சோதிக்கானம்
55
அத்தகுவனத்தின்கீழ்பாலணங்கினுக்கரசியான
சத்திமெய்த்தவஞ்செய்கின்றதன்மைகண்டங்குளார்பா
லித்திறத்தினள்யாரென்னவிவள்பெயர்காளியென்னுஞ்
சத்திவன்சண்டற்கொல்வான்றனித்துநோற்கின்றாளென்றார்
56
என்றனரன்றுதூதரியம்பியகேட்டுச்சண்டன்
றுன்றியகோபமூண்டுசுடர்ப்பொறிகண்கள்காலத்
தன்றிறற்சேனையோடுந்தலைவரைப்படைகடாங்கி
யின்ழெறமின்களந்தக்காளியைவேறற்கென்றான்
57
தனபலபடைகளேந்தித்தனிவரையனையமார்பின்
மின்பணிகவசம்வேய்ந்துவிரைஇப்புறம்போதுங்காலை
யன்புறுதுணையுரூபவதியென்பாளன்னமென்ன
முன்புவந்தடிபணிந்துசிற்சிலமொழியலுற்றாள்
58
எவ்வுழியெய்துதற்கின்றெழுந்தனைசீற்றமென்னை
யவ்வகையடியேன்சற்றிங்கறிதரப்புகலொணாதோ
செவ்விசாலன்பவென்னத்திறல்கெழுசண்டன்கூறு
நவ்வியொண்விழியாய்யாருநகைத்திடத்திரிவளோர்பெண்
59
காளியென்றிடுநாமத்தாள்காலனைக்குறுகுங்கால
மாளியென்றெனையெண்ணாமலவள்வலியென்பாற்காட்டக்
கூளிகள்சூழவந்தென்குழுவினர்சிலரைச்செற்றாள்
வாளியினவளையின்றுவதைத்துளமகிழ்தற்கெண்ணா
60
எழுந்தனன்விரைவிலென்றானின்பொடுகேட்டன்னான்றா
டொழுங்கொடிபுகலுங்கேள்வசூழ்ந்தெவைசெயினுமென்று
மழிம்புறாமுன்னாட்சாவாவளப்பரும்வரங்கள்பெற்றாய்
61
ஆனதாலவளேகாளியாகிநிற்பகைத்தாளென்னா
யானினைத்தனன்மேனாளுமிலக்கறுவரங்களேற்ற
தானவர்மகிடன்முன்னோர்தமையுமிலளிதையாகி
யூனினைவாட்டினாளவ்வுறுதிகொண்டுரைக்கலானேன்
62
நங்குலத்தலைவனாகிநலமுறுபாதலத்துத்
தங்குமாவலியோடியாமுஞ்சலிப்பறவாழ்தனன்றென்
றிங்கிவையில்லாள்கூறவியைவனோசண்டன்கேட்டு
மங்கையர்மதியாலீதுமானமற்றுரைத்தாயின்னே
63
சென்றவட்செற்றாலன்றித்திரும்புவதில்லைநீசென்
றொன்றியபாதலத்துற்றுயிர்பிழைத்திடுகவென்று
கன்றியவெகுளிமூண்டுகடும்பரித்தேரிலேறித்
துன்றியசேனைசூழச்சோதிமாவனமுற்றானால்
வேறு
64
சாற்றுமதனுட்டேவிசாலபுரம்புக்கங்
கேற்றுவருதம்பியரொடிம்மெனவெழுந்து
கூற்றெனவெதிர்த்தவெழுகோற்றெடிக்ளோடுந்
தூற்றுசரமாரியிற்றொடுத்தமர்விளைத்தான்
65
அத்தகையபோரிலெதிர்த்தாற்றலர்களாகிச்
சத்தமடமாதர்விதனத்தொடுகலங்கி
யெத்திசையுமோடினரிடுக்கணுறவெய்தாத்
தத்துகடற்றானையொடுசண்டனுநடந்தான்
66
சோதிவனத்தோர்புடைதொடர்ந்ததவத்துற்ற
மேதியைமிதித்தகழல்விந்தைதனைக்கண்டா
னேதியிலளித்தருணமேதருணமென்னா
வோதிமுனிவாங்கிமுனிவோடுகணைதூர்த்தான்
67
தக்கணமெழுந்துவிறற்சண்டனிளையோருந்
தொக்கபெருந்தானையோடுதொட்டனர்துரோண
மிக்கனல்வாளிமுதல்வெய்யபலவாளி
யொக்கவீசிதண்டமுமுரப்பிவிடுத்தார்த்தார்
68
அந்நிலையுணர்த்தமரியங்குறுசமாதி
நன்னிலைதணந்தவுணர்நாற்றிசையுஞ்சூழ்ந்து
செந்நிலையவாளிமழைசிந்தியதுமன்னுந்
தன்னுடலையத்தழறகித்தமையுங்கண்டாள்
69
ஆயிடையித்தன்மைமுழுதாய்ந்திவுருவாய்ந்தித்
தீயிடையிற்செய்தவமுற்றாதெனவுட்டேர்ந்து
பாயவனத்தென்பாலிற்பாய்ந்தரியயோக
மாயையினினவ்வுருவமாய்த்தருவமானாள்
70
சீர்பரவுமேனியோடுதேவியவ்வனத்திற்
சேர்புதவமாற்றலிற்றெளிந்தபெரியோராற்
பேர்பெரியநாயகியெனப்பெருமெய்வாட்டுஞ்
சார்பினுருவாட்டியெனச்சாற்றுபவத்தலத்தை
71
சத்தியுருவந்தனைத்தணந்தருவமாகிப்
பத்தியொடுமெய்த்தவம்பரிந்துபுரிகாலை
கத்துகடற்றானவர்கள்காளியைக்காணாரா
யெத்திசையுந்தேடினரிருந்துகவலுற்றார்
72
மாயமிகச்செய்யவலவன்கணுறுசண்ட
னாயவொருபக்கலிலரூபமொடுகாளி
மேயதனைக்கண்டனனிவ்வெய்யவள்வஞ்சத்தால்
வீயவிதுவேறியற்றுவேமெனவெகுண்டான்
73
தண்டமொடுசூலமிவடன்னுருவிலேறா
மண்டுபடைசூழமர்வளைப்பதினிவீணென்
றண்டமிசைச்சூறையுருவாகியழலார
மொண்டுகொடுகாளியைமுழக்கமொடுசூழ்ந்தான்
74
சுற்றியுடன்முற்றுகனற்சூறைபொறாளாகிப்
பற்றுமுளமன்பொடுபராவுமவர்க்கென்று
முற்றருள்பரம்பொருளையுன்னியுமைமானிவ்
வற்றமருள்கென்றலுமனைத்துலகுங்காப்போன்
75
விண்ணிலசரீரிமொழிமேவிநிறைநீரா
னண்ணியதடாகமிதுநாடெனவுரைத்தங்
கெண்ணரியசூறையினெடுத்தமரிதன்னை
யண்ணியவழுத்தினனவோடையினுளன்றே
76
ஒடையினுண்மூழ்கலுமுருபபமதொழிந்து
பீடுபெறுகாளியருள்பேசரியபெம்மான்
தாடொழுதுநிச்சலுமச்சண்டன்வருத்தாத
நீடியசடந்தருகநின்மலவென்றேற்றாள்
77
காதமர்வளைக்குழையன்காளிதனைநோக்கி
பூதவடிவந்தனையெடுத்தியெனப்போனா
னாதனருள்வண்ணமுருநண்ணியெமதம்மை
சோதிவனமேற்றிசையிற்சூழ்ந்துதவஞ்செய்தாள்
78
சொல்லருமரூபமொடுதோன்றுதவத்தாளை
நல்லரியநாயகியெனப்புகல்வரத்தென்
னெல்லையினைத்தாளவனமென்பரவள்மூழ்கு
பல்லவளமுற்றகுளம்பாற்குளமென்பாரால்
79
பூதவுருப்பெற்றவிடம்பூதபுரமென்பார்
காதுதிறற்சண்டனுங்கனிட்டரொடுசூழ்ந்து
மோதுபலதீக்கணையின்மூடுபுமுடுக்க
மேதகுநங்காளியுடன்மேவரிதின்மீண்ட
80
அக்கணைகண்மீண்டமையினாங்குவிறற்காளி
யுக்குமடிந்தாளெனவுணர்ந்தவுணர்யாரும்
புக்கனர்தமெல்லையினிற்போர்த்தொழில்விடுத்தார்
தக்கதிறற்காளியுநற்றவம்புரிதலுற்றாள்
81
தாக்கமரினோக்கரியசார்பிலருரூக்காண்
பாக்குநினைந்தேத்தினள்பரஞ்சுடரையன்னான்
காக்குமருட்கண்கொடெதிர்கண்டுனதுமாற்றார்
போக்குமுடனின்கணிற்புலப்படுகவென்றான்
82
பூணுமெழிற்காளியெதிர்பொருந்தலர்மெய்கண்ணிற்
காணவரமுற்றமையிற்கண்ணுடையளென்னு
மேணலமமர்ந்தபெயரெய்தியவணின்று
சேணுயர்வனத்தின்வடதிக்கினிலிருந்தாள்
83
இருந்துமனத்தெண்ணுமெனதீசனருளாலே
பொருந்தலர்வெலற்கரியபூதவுருவுங்கா
ணரும்பகைவர்தம்முருவறிந்திடவுமுற்றேன்
றிருந்தவினிச்சண்டனையுஞ்செகுத்திடுதறிண்ணம்
84
என்றிவைநினைந்தனளிலங்குமெழிற்காளி
சென்றுதிசைமுட்டவொருசிங்கவொலிசெய்தா
ளன்றுதகுவர்க்குடைபிராமிமுதலானோர்
துன்றொலிசெவிப்படலுஞ்சூழ்ந்தனர்பணிந்தார்
85
தன்படையைநோக்கியுறுதவம்புரியுங்காலை
வன்படையொடுந்தகுவர்வந்தவணிற்செய்த
துன்பமுமரன்கழறொடர்ந்துவரம்பெற்ற
வின்பமுமுரைத்தவணிருந்தனளெனம்மை
வேறு
86
அன்னகாலையிலம்மைவாய்த்தரக்கொலிகேட்டோர்
தன்னமானுயிர்சோர்தரத்தாங்கியின்னருளி
னின்னறீர்த்ததைவளர்த்தனளின்புறவதனான்
மன்னுசாரங்கநாயகியெனும்பெயர்வாய்ந்தாள்
87
அம்மையிங்ஙனமுறைதரவவுணர்கோனமரில்
விம்முகொற்றவைதன்னையும்வென்றனன்விறல்சேர்
மும்மையாகியவுலகருந்தேவருமுறிந்தா
ரெம்மைநேர்பவர்யாரெனத்தருக்குறீஇயிருந்தான்
88
நாரதப்பெயர்முனிவனன்னெறிப்படநாடி
வீரவென்றனைவெல்வதுவிழைந்தவவ்விந்தை
வேரொடுங்கெடவீட்டினனென்றனனகைத்து
நேரவுள்ளவர்தம்மைவீந்தனரெனனெறியோ
89
முற்றவோர்ந்திலைமொழிந்தனையென்றனன்முனிவன்
நற்றவன்மொழியென்னிதுதாரகநாம்போய்
வெற்றிபெற்றதும்பொய்மையோவென்னுமவ்வேலை
யொற்றரோடிவந்தவ்வுழித்தாழ்ந்தனருரைப்பார்
90
மன்னகாளிதன்சேனைசூழ்வரமறிகடல்போன்
மின்னிவீற்றிருந்தனளெனவெகுண்டுளம்புழுங்கித்
துன்னுதன்னிடக்கண்கடோடுடிப்பதுந்துணைவி
தொடரும் ....
91
தீயுகக்கணிற்பற்களைத்தெறிபடக்கடித்து
வாயுலர்ந்திதழ்துடித்திடமனங்கொதிப்பேற
மீயுயர்ந்ததேரேறினன்விறற்படையேந்தி
மேயதாரகனாதியரெழுவரும்விரைந்து
92
தத்தமக்குறுவையமுற்றடற்கலந்தாங்கி
மத்தமாபரிமாமுதற்படையொடுஞ்சூழச்
சத்தமேகமுமார்த்தெனப்பேரிகைதழங்க
வெத்தலங்களுநடுங்கிடவெழுந்தனரிப்பால்
93
தானவக்குழாந்தருக்கொடுசமர்க்கெழுமுழக்கங்
கானகத்துறைகாளிதன்செவிப்படக்கனன்று
வானகத்தவர்வாழ்வுறச்சூலமும்வேன்முன்
னானபற்பலபடைகளுமங்கையிற்றாங்கி
94
வேகமுற்றவேதாளத்திலேறினள்விரைந்து
மோகமுற்றசாமுண்டிபிரேதவாகனமே
லாகியுற்றருகமர்ந்தனள்பிராமியுமன்ன
வாகனத்தினிலேறினள்தண்டுகைவாங்கி
95
அடன்மழுப்படைசூலமுமங்கையிற்றாங்கி
விடையிலேறிமாகேச்சுரிவிளங்கினள்விரைந்து
சுடரும்வச்சிரஞ்சத்தியுந்தொடிக்கையிலேற்றுக்
கடுநடைக்கலபத்திவர்ந்தனள்கவுமாரி
96
சங்குசக்கரந்தடக்கையிற்றாங்கிவைணவிதான்
பொங்குவன்றிறற்கலுழன்மேற்பொலிந்தனள்வராகி
சிங்கமேறினளங்குசமாதிசைச்சேர்த்தி
யங்கைவச்சிரத்தொடுமகேந்திரிகரியமர்ந்தாள்
97
இன்னதன்மையவெழுவரோடேனையகணமுந்
துன்னவந்தரியெழுந்தனளண்டமுந்துளங்க
வுன்னுவாரிதியொன்றுடனொன்றெதிர்த்திட்ட
தென்னவெங்களமிடைந்தனவிருதிறப்படையும்
98
ஆனகாலைசண்டாசுரன்கேதனமீது
சேனம்வீழ்ந்ததும்பரிகணீர்பெய்ததுஞ்செந்நீர்
வானமாமழைபொழிந்ததுமதித்திலன்றேவி
தானையூடுபுக்குழக்கினன்சயிலங்கணடுங்க
99
தண்டுவாண்முசலங்களாற்றகர்த்துநெட்டாவ
மொண்டுவெங்கணைதூற்றியுமுடுக்குவர்தகுவர்
மண்டுசீற்றமோடுரங்கிழித்தெழுபுணீர்மாந்திக்
கண்டுளைத்துணுநகங்களாற்சாகினிகணங்கள்
100
இன்னவாறிருபடைகளும்படைகளாலேறுண்
டன்னசெங்களமழன்களாற்புதைந்திடவதுகண்
டுன்னியக்கணங்கும்பன்வெங்கணைகளையுகுத்து
மன்னுமாதர்தங்கணங்களையஞ்சுறவளைத்தான்
101
கண்டமாதுபிராமிவெங்கனலெழக்கனன்று
தண்டமொன்றுகொண்டருங்கணைமாரியைத்தடுத்தங்
கண்டமீதுறச்சுழன்றெழுந்தவன்சிரத்தடித்தாள்
துண்டமாயிரமாயினவாருயிர்துறந்தான்
102
ஒங்குகும்பன்மாண்டதணையுத்தண்டனங்குணர்ந்து
வாங்கிவிட்டபல்கணைதடுத்துடன்மகேச்சுவரி
தாங்குசெங்கையிற்சூலத்தினாலவன்றருக்கற்
றாங்குமாண்டிடமார்பிடைக்குத்தினளழிந்தான்
103
மேயவன்கணம்வெருண்டிடப்பொருதவீமாக்கன்
வீயவீட்டினள்சத்தியால்வியன்கவுமாரி
மாயவெங்கணைதொடுத்தடர்வைரவசுவனன்
சாயவாருயிர்செகுத்தனள்வைணவிதருக்கி
104
வந்துசாகினிகணங்களைப்பொருமகோதரனை
முந்திநின்றுவராகியங்குசத்தினான்முடித்தா
ளுந்திவீரன்வந்தெதிர்த்திடவுயர்மகேந்திரிமொய்
சிந்திவீந்துறவச்சிரப்படையினிற்சிதைத்தாள்
105
அறுவருந்துறக்கத்தரம்பையர்நலனார
முறுகுவெஞ்சினத்தாரகன்முந்துறுமாதர்
தறுகண்வெம்படைசிதறிடத்தாக்கினகணையான்
மறுகிவீழ்ந்தனர்மற்றவர்சாமுண்டிநேர்ந்தாள்
106
கத்திகேடகமுலக்கைவன்சூலமுங்கைக்கொண்
டெத்திசைக்கிரிகளுஞ்சுழன்றிடவெழுகடலுந்
தத்துறச்சுழன்றவுணர்தம்படையறச்சாடிக்
கத்துசிங்கநாதஞ்செய்துபாய்ந்தனள்கடிது
107
கண்டுதாரகனாயிரமாயிரங்கணைகள்
கொண்டுவீசினனவையெலாங்கொடியசூலத்தாற்
றுண்டுபட்டிடப்புரிந்தவன்கைச்சிலைதுணித்துத்
திண்டிறற்பெருந்தேர்வலவன்றலையுடைத்தாள்
108
பின்னருஞ்சயந்தனப்பரிதனைப்பெருமுலக்கை
தன்னின்வீட்டினடாரகன்வையநின்றெழுந்தங்
குன்னிவானிடையாயிரம்பாரமன்னுலக்கை
மின்னவீசினன்சாமுண்டியூர்தியைவெகுண்டான்
109
வெகுண்டதாரகன்வீசியவுலக்கையைத்தன்கைத்
தகுந்தசூலத்திற்றாக்கினண்முறிந்ததுபின்னு
நகுந்திறற்றடிகொண்டுநஞ்சாமுண்டிநலியப்
புகுந்தடித்தனன்சத்தியிற்பொடித்தனளதையும்
110
செங்கையேந்தியபடையெலாஞ்சிதறிடத்திகைத்துப்
பொங்குமாயையின்வான்புவிபோற்பதோர்பெரிய
வங்கமாய்ச்சிறுகுழவியாயிரண்டுருவாகித்
தங்குவன்றடிகொண்டுசாமுண்டிமுற்சார்ந்தான்
111
தானுந்தன்னுருப்பெரியதாய்ச்சிறியதாய்த்தரித்து
மானிடப்பெருமானருள்சூலத்தின்மற்றொன்
றானசூலமுமாக்கியவ்விரண்டினாலந்தத்
தானவன்புரங்களையொரேசமயத்திற்பிளந்தாள்
112
திரைகவிழ்த்தனசெய்யபுண்ணீர்குடித்தார்த்தாள்
கரையிலாக்களிப்பொடுகணங்களுங்குதூகலித்த
விரவுதானவர்திசைதிசையோடினர்வெருண்டு
பரவுவிண்ணவர்மலர்மழைபொழிந்தனர்பரிந்து
உ
சிவமயம்.
திருக்கானப்பேர் ஊரென்று வழங்குகின்ற
காளையார்கோயில் புராணம்.
பாயிரம் (சீர் பிரித்தது)
விநாயகர் துதி
1
சீர்பூத்த மணிமார்பன், வியன்படையும் அயன்படையும் தேவர்கோமான்,
வார்பூத்த வயப்படையும், வியப்படையும், நுதித் தந்த வரைகோல் கொண்டு
பார்பூத்த புகழ்த்தாதை, கைச்சிலை சித்திரித்து ஆங்குப் பாரதம் தீட்டு
ஏர்பூத்த கானப்பேர்ச் சிங்காரகணபதி தாள் இறைஞ்சி வாழ்வாம்.
காளி ஈசர்
2
மாமேவு மலர் அ(ன்)னம்[1] காணாமுடி கண்டாம் என, உ(வ)ணம்[2]
தேன் மேவு நறுங் கொன்றை முகம் மலரக், கங்கை அலை திரண்டு பொங்க,
மீ[3] மேவு வெண் பிறையும் மெய் வளர்ந்து பூரிப்ப[4], வேணி[5] தாங்கும்,
கா[6] மேவு கானப்பேர்க் காளீசன் கால்மலரைக் கருத்துள் வைப்பாம்.
சுவர்னவல்லி[7] அம்மை
3
கலைவல்லி[8], கடவுளர்கள் அமுதவல்லிக்கு
அரணிகொடு கடைந்து பண்டு கண்ட தீம்பால்,
அலைவல்லி[9], உடற்கண்ணான்[10] இல் வாழ்வல்லி[11],
ஆதிய வல்லிகள் எல்லாம் அண்மி[12]ப் போற்றும்
தலைவல்லி, நகையெனும் தன் போதோடு[13] அங்கை[14]
தனம் மூக்கு என்றே அனைய முப்போதும் பூத்த
மலைவல்லி, சோதிவனச்[15] சுவணவல்லி,
மணவல்லி, மலர்த்தாள் உள்மலருள் வைப்பாம்.
சோம ஈசர்
4
இம்பரின்[16] முன்னமைச் சரண்புக்கு
அருச்சித்த பனவச் சேயினைக்[17] கறுத்த
வெம்பகடு[18] ஊர்தியைக், கழலில் தேய்த்திட்டாம்,
இன்னும் நலம் வேண்டிப்பூசை
நம்பி உயற்றிடும் அடியார்க்கு, எவ்விகன்
நேரினும் துமி[19]ப்பான், நாள் பேரு என்னாத்
தும்பை[20] அணிந்து அருள் மவுலி[21]ச் சோமேசன்
துணை மலர்த்தாள் தொழுது வாழ்வாம்.
சவுந்தர நாயகி அம்மை
5
கரு வளரும் மூலத்து தருண[22] ரவி[23] நேர்வித்தில் கலைமான் ஆகி
இரு(ள்) வளரும் இதயத்து இந்திரகோபம்[24] நேர்வித்து இன் இடைச்சீ ஆகித்
தரு வளரும் ஆஞ்ஞை[25]யின் இன் மதியினை நேர்வித்திற் சிற் சத்தி ஆகிய
திரு வளரும் கானப்பேர் சவுந்தரிய நாயகி தாள் சென்னி சேர்ப்பாம்.
சுந்தர ஈசர்.
6
துன்னிய மெய் இடப்பாலில்
ஒருபெண்ணை மணந்ததுவும்[26], தூய திங்கள்
பொன்னின் ஒளிர் வேணி[27] மிசை
ஒருபெண்ணை மணந்ததுவும்[28], போதா என்னாக்
கன், நவில் தோள் ஒருமாறன்
பெண்ணை[29] முன் மணந்தமையால், கானப்பேரில்
பின்னும் ஒரு தென்னவனின் பெண்[30]
மணந்த சுந்தரனைப் பேணி வாழ்வாம்.
மீனாட்சி அம்மை
7
புயல்[31] கண் நாயகி, நறைகமழ் பூங்குழல்[32] பூவை,
அயர்க்[33] கண் நாயகி, ஈசன் ஆருயிர் நாள் அன்பர்
உயர்க் கண் நாயகி, இலங்கண் முற்றளித்து அருள் ஊட்டும்
கயல் கண் நாயகி[34], கழல் புணை கொடும் பாவங் கடப்பாம்[35].
சபா நாயகர்
8
உலகெலாம் என உதித்தது ஓர் ஓசையான் உலகத்து
அலகில்லாதவராம்[36] திருத்தொண்டர் தம் அருமை
இலகும் மாக்கதை தோற்றுவித்த குணம் இன்றிச்
சுலவு[37] சீர்ச்சிதா காயத்தின்[38] நடிப்பவர்த் தொழுவாம்.
சிவகாமி அம்மை.
9
ஒரு மாமரை[39] யில் இரு குவளை ஒளி சூழ்ந்தென்ன உயர் மன்றத்து,
அரு மா மறை[40]யின் உபநிடமும்[41], அயனும், மாலும், நேர் அரிய
பெருமான் நடன குஞ்சிதத்[42] தாள், பெட்பால்[43], துணைக் கண் நோக்கி, நலம்
வருமாறு நிற்கும் சிவகாமவல்லி துணைத் தாள்மலர் போற்றி
தட்சணா மூர்த்தி
10
வாலியர் சார் மாணாக்கர்[44] வார்த்திகர் குரவராதன்,
மால் இயல், ஐயம் தீர்த்தல், வாய்திறந்து உரைத்தல், என்னும்
பால் இயல் அதற்கு மாறப் பண்டு மூப்பு அடைந்த நால்வர்க்கு[45]
ஆல்[46] இயல் அடிக்கீழ் மோனத்தால்[47] பொருள் ஒளி[48]த்தார்த் தாழ்வாம்.
வயிரவர்
11
குரைத்தலை மேவும் வேதக் குக்கன்[49] ஆங்கு அயலில் சூழ
விரைத்தலை எழப் பல் வானோர் மெய்யினின்று இழி நெய்த்தோரார்
தரைத்தலை ஓட்டினுக்கும் அரையளவு என்ன ஏற்கும்
அரைத்தலை மா வாழ் சோதிவன வயிரவன் தாள் போற்றி.
வாள்மேள் நடந்த அம்மை
12
தோள் மேல் அடல் சூடிய தென்னவனோடு[50]
ஏண்[51] மேல் எதிரேற்ற புலிக் கொடியோன்[52]
கோண்[53] மேல் உயர் கோட்டை எனப்புரியும்
வாள்மேல்நடந்தாளை வணங்குவமால்.
செல்வ விநாயகர்
13
வில்வம் அறுகு[54] அருக்கு[55] இதழி[56] முதலாய விரைமலர் தூய்[57]
மேனாள்[58] ஆற்று
நல்வினை ஆற்றனைப், பூசை புரிபவர்க்கு, ஐந்தரு நிழலும்
நளின[59] வீடும்
பல்வகைய பொறி[60] விரவு பாப்பு[61] அணையும்[62] ஆதியவா[63]ப் பகரா[64] நிற்கும்
செல்வம் எல்லாம் தந்து அருளும் செல்வவிநாயகன் அடியைச் சிந்தை செய்வாம்.
சுப்பிரமணியர்
14
பாமி[65] நாதன் பதியென வாழ்பவன்
தோம்[66] இனாத தொடர் தரக் குட்டியே
‘ஓம்‘இன்[67] நாத உரைக்கு உரை ஓதிய[68]
சாமினாதன் சரண் சரணாகுமே.
திருநந்திதேவர்
15
பண்டு அரன் வடிவில் பட்ட பாண்டியன் பிரம்பின் மொத்து[69]க்
கண்டு இடில் பொதுவே ஆகக் கயிலையுள் கோயில்சாரும்
அண்டர் மெய் தொறும் சிறப்பாம் அடிதரும் வேத்திரம்[70] கைக்
கொண்டு உலா நந்திதேவன் குளிர் மலர்த் தாள்கள் போற்றி.
சம்பந்தமூர்த்தி சுவாமிகள்
16
முன்பு கோதமன்[71] மொய்வரச் சார்பினால்,
பின்பு கல்லினைப் பெண் என ஆக்கியோன்[72],
அன்பு காணுற மாது என அஃது இலாது
என்பை[73] யாக்கு சம்பந்தரை ஏத்துவாம்.
திருநாவுக்கரசு சுவாமிகள்
17
வேணி ஏறு அந்த வெள்ளத்து உமை ஒடு ஏர்
தோணி ஏறி தன் சொல் துணையால் கழு[74]
நாணி ஏறுநர்[75] வீழ்த்த நரலை[76] கல்
தோணி ஏறிக் கடந்தார்த் தொழுவமால்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
18
பண்டு தான் தடுத்து ஆண்ட பரிசு என,
மண்டு[77] சோதிவனத்து[78] இறை காளையாய்த்[79],
தண்டி[80] ஈர்ப்பத் தமிழ்ப் பதிகம் சொல், வன்
தொண்டர்[81], தொண்டர்க்குத் தொண்டு செய்வாமரோ.
மாணிக்கவாசக சுவாமிகள்
19
வேதம் ஆதியுள் விட்டுணு என்றபேர்
மாதுபாதியர்க்கே[82] என வையம் ஓர்ந்து
ஓத, மாறர்[83] கொண்டு ஊங்கு[84] அடிப்பித்த நம்
வாதவூரர்[85] மலரடி வாழ்த்துவாம்.
சண்டேசர்
20
திண்ணனார் மென்று தின்று உள்ள இச்சில்[86] உண்டு
அண்ணி[87] எய்த வரும் கதி உய்த்தவன்
உண்ண எஞ்சிய உண்டு மற்றொன்று உண்ணாத்
திண்ணம் மேவு சண்டீசரைச் சேவிப்பாம்.
அறுபத்து மூவர்
21
தம் பிரானார் தனித்தோழர், சாற்று தொண்டத் தொகைக்கு[88] அரும்பி,
நம்பியாண்டார்நம்பி, அன்பால் நவில் அந்தாதி வயிற்போதா,
எம் பிரான் சேக்கிழார் பெருமான் இசைத்த புராணத்து இடை மலர்ந்து,
பம்பி நீள் சீர்ப்பத்த அறுபத்துமூவர் பதம் பணிவாம்.
கலைமகள்
22
வலக்கையில் படிகமாலை, வாமக்கை[89] மலரின் ஞானம்
இலக்கு[90] புத்தகம் ஒன்று ஏந்தி, இயல் வரம் அபயம் காட்டி,
நலத்த தண்[91] மதி[92] நேர் தன்மெய்ந் நகைக்கு கூம்பா[93] வெண் கஞ்ச[94]
மலர்க்கண் வாழ் கலைமானுக்கு என் மனக் கமலமும் புக்கு
இல்லாம்.
தமிழாசிரியர்
23
சுத்த மெய், அறிவு ஆனந்த, சுந்தரக் கடவுள் கூடல்[95]
நத்திய[96], சங்கத்தாரும்[97] நக்கீரனாரை நோக்கி,
இத்தரை நம்மை ஒப்பான் என்ன வாய் மலரப்பெற்று,
முத்தமிழ்க் குரவு[98] பூண்ட முனிவன் தாள் முடிமேல் கொள்வாம்
வாழ்த்து
24
மாமறைக் கீதம் வாழ்க, வளர் மகவிசேடம்[99] வாழ்க,
தூமழை பொழிந்து வாழ்க, துன்னிய[100] பயிர்கள் வாழ்க,
பூ[101] மலி உயிர்கள் வாழ்க, பூதி[102] சாதனங்கள் வாழ்க,
மீ[103] மிசை[104] சைவம் வாழ்க, வேந்தர் மெய்ச் செங்கோல் வாழ்க.
நூற்பயன்
25
கானப்பேர் மான்மியத்தைக்[105] கனிந்த நல் அன்பில் கேட்போர்,
மீனப் பேர் உவரி[106] சூழ் பூ[107] மீது பன்னாள் வாழ் உம்பர்[108],
மானப் பேச அழியாச் செல்வ மன்னி, நன் மகார்ப்[109] பெற்றுப், பின்
பூ[110] நற்ப் பேறுடன் மீட்டு எய்தா உயர் சிவகதியைச் சார்வார்.
•••••
அவையடக்கம்
26
வனச[111] மாமலர்ப் பொகுட்டு வாழ்பவன்[112] முதல வானோர்
மன[113]வணுக்கொடு தேர்ந்து ஓத மாட்டாமை வெள்கி[114] நிற்ப
எனது வெள்ளறிவு[115] யார்க்கும் எளிமையில் தெரியும் வண்ணம்
இனிது நீ கானப்பேருர் ஈசன் மாக்கதை[116] சொல்கென்னா
27
சங்கொடு கமல ரூபம்[117] தனநிதி தம்பால் என்றும்
தங்கலால், ஈகையத்தால், தகு சிவ தருமம் அதால்,
துங்கமார் போகம் அதால், தூய நீடு இன்பம் மேவி
இங்கு வாழ் பெரியோர் கூற, இசைந்தனன் சிறியேன்[118] கூற.
28
என் கவி[119]யினையும், பற்பல இனிய நூல் கண்ட மேலோர்,
பன் கவியாகக் கொள்வார், எப்பான்மையின் என்னின், அன்னார்
நன்கவி புனைதி[120] என்றியா நாட்டிய சொல் மறாமே,
என் கவியேனும் செப்ப எழுந்தனன் என்னும் அன்பால்.
29
திங்களின் ஒளியைக் கான்று திகழும் இப்பி[121]யின் முத்தோடு[122],
தங்கு பைங்கழை[123]யின் முத்தும், தரளமாக் கணித்தல்[124]போலப்,
பொங்கு பேரறிவான் மிக்கோர் புகன்ற நல்ல பாக்களோடு,
புங்கம் இல்லாத தேன் சொற்ற[125] புன் சொல்லும் கணிப்பன் தூயோர்
30
நன்கு சால் கரும்பின் சாறு நச்சினார் பருவங்[126]கோட்டம்
அன்கழி கோது[127] நாடார் அஃதென வழுவிர் ஆய
என் கவிப் புன்மை[128] உன்னாது ஏற்பர் கானப்பேரீசன்
தன் கதைச் சுவை அளாய தன்மையால் நன்மை சான்றோர்.
சிறப்புப்பாயிரம்
31
நால் திசைப் பரவும் தஞ்சை நகரில் வாழ் அந்தணாளன்(???)
போற்று உறு சதா அவதானப்[129] புலமையில் தலைமை பூண்டோன்
தோற்றல்[130] இல்லா கலைகள் கற்றோன் சுப்பிரமணிய சனமன்
சாற்றினன்[131] கானப்பேரூர்த்[132] தலத்து மான்மியத்தை மாதோ.
பாயிரம் முற்றிற்று.
[1] அன்னம் = பிரமன்
[2] உவணம் = கருடன்.
White-headed kite.
சிறையுவண மூர்ந்தாய் (திவ். இயற். 1,22).
[3] மீ = ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149). Sky, heavens;
[4] சந்திரன் தேயும் சாபம் நீங்கப்பெற்று, வளர்பிறையாக அருள்பெற்ற திருத்தலம்
[5] வேணி = பின்னிய மயிர். (பிங்.) Plaited lock of hair;
[6] கா = காடு
[7] சுவணவல்லி
[8] கலைவல்லி = சரசுவதி
[9] அலைவல்லி = மகாலெட்சுமி
[10] உடற்கண்ணான் = இந்திரன்
[11] இந்திராணி
[12] அண்மி = நெருங்கி
[13] போது = மலரும்பருவத்தரும்பு. காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி (குறள்,1227). Flower bud ready to open;
[14] அங்கை = உள்ளங்கை. (தொல். எழுத். 315. உரை) Palm of hand;
[15] சோதிவனம் = காளையார்கோயில்
[16] இம்பர் = இவ்வுலகம். உம்பரு மிம்பரு முய்ய (திருவாச.9. 17).; இவ்விடத்து. இம்பரிவ் வுலக மொப்பாய்க்கு (சீவக.1737).; பின். நெட்டெழுத்திம்பர் (தொல்.எழுத்.41). This world; 1. Here, in this place; 2. Next, after;
[17] பவனம் = பூமி, (பவனச் சேய் = சந்திரன்)
[18] பகடு = எருது = காளைமாடு
[19] துமி = வெட்டுண்ணுதல். அரவினருந்தலை துமிய (புறநா. 211). To be cut off, severed;
[20] தும்பை = தும்பைப் பூ, White
dead nettle, Leucas;
செடிவகை.
[21] மவுலி = முடி. (சூடா.) குண்டலங்களு மவுலியும் (கம்பரா. கும்பகர். 251, பி-ம்.). Crown;
[22] தருணம் = (1) இளமை. கருண வஞ்சிக் கொம்பு (கம்பரா. தைலமாட்டு. 15). Prime of life, youthfulness;(2) . ஏற்ற சமயம். வெஞ்சமர் தொடர்ந்ததத்தருணமாம். (சங். அக.) Right time, proper season;
[23] ரவி = இரவி = ஞாயிறு, Sun.
ரவியுமதியமு முடன்வலம் வருமலை (தக்கயாகப். 43).
[24] இந்திரகோபம் = தம்பலப் பூச்சி. இந்திரகோபங் கௌவி யிறகுளர்கின்ற மஞ்ஞை (சீவக.1819). Cochineal insect, Coccus cacti;
[25] ஆஞ்ஞை = கட்டளை. Order, command direction;
[26] உமையை இடப் பாகமாகக் கொண்ட சிவபெருமான்
[27] வேணி = திருமுடி
[28] கங்கையை அணிந்து கொண்டவன்
[29] மாறன் பெண் = சுகந்தகேசி
[30] தென்னவன் பெண் = வரகுண பாண்டியனின் மகள் சுகந்தகேசி
[31] புயல் = மேகம். விண்டுமுன்னிய புயல் (பதிற்றுப். 84, 22).
[32] குழல் = மயிர்க்குழற்சி. குழலுடைச் சிகழிகை (சீவக. 1092). Curling hair;
[33] அயர் = (1) அயர்ச்சி = சோர்வு, மனக்கவற்சி. அயர்விலர் (புறநா. 182).
(2) அயர்தல் = விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும் (கலித். 82).
[34] கயல் கண் நாயகி = மீன் போன்ற கண்களை யுடைய மதுரை மீனாட்சியம்மன்
1) புணைகொடும்+பாவம்+கடப்பாம்= கழலைப் புணையாக் கொடு, எங்களது பாவங்களைக் கடப்போம் என்றும்,
2) புணை+கொடும்பாவம்+கடப்பாம் = கழலைப்புணையாகப்பற்றினால், எங்களது கொடும்பாவங்களைக் கடப்போம் என்றும்
பொருள் கொள்ளலாம்.
[36] 1) அலகு + இல்லாதவர் = அளவிட முடியாதவர்
2) அலகில் + ஆதவர் = அளவில் ஆவதன் போன்றவர்
[37] சுலவு = சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத.அன்னத்.45) To revolve, move round, hover about;
[38][38] காயம் = ஆகாயம், உடல்
[39] மா மரை = தாமரை
[40] மறை = வேதம்
[41] உபநிடதம் = (1). Virtue; தருமம். (2). Secret; இரகசியம்.
[42] குஞ்சித = வளைந்த
[43] பெட்பு = பெருமை, விருப்பம், அன்பு
[44] மாணக்கர் = சனகர், சனந்தரர், சனாதரர், சனற்குமாரர் என்ற நான்கு முனிவர்.
[45] நால்வர் = நான்கு சனகாதி முனிவர்க்கு
[46] ஆல் = ஆலமரம்
[47] மோனம் = மௌனம்
[48] (பொருள்) ஒளி = (பொருள்) விளக்கம்
[49] குக்கன் = நாய்
[50] தென்னவன் = வரகுண பாண்டியன்
[51] ஏண் = எல்லை, வலிமை, திண்ணம், உயர்ச்சி
[52] புலிக்கொடியோன் = சோழன் = விக்கிரமசோழன்
[53] கோண் = மாறுபாடு, செருக்குப் பேச்சு, பெருமைப் பேச்சு, கொடுங்கோண்மை,
[54] அறுகு = அறுகம்புல். அறுகாற் பீடுயர் முடியார் (திருவிளை. பாயி. 30) Harialli grass,
[55] அருக்கு =. எருக்கு. Madar (இராசவைத். 79.)
[56] இதழி = கொன்றைமலர்
[57] தூய் = தூவி
[58] மேனாள் = முன்னாள். மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ (கலித். 93). Former day;
[59] நளினம் = தாமரை
[60] பொறி = (1) இரேகை. (பிங்.) Line on the palm;
(2) புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3).
Spot, as on an elephant's forehead; dot, point, speck
[61] பாப்பு = பாம்பு (வலித்தல் விகாரம்)
[62] விநாயகரின் இரண்டு பக்கங்களிலும் உள்ள நாகங்கள்
[63] ஆதியவா = ஆதியானவனே
[64] பகரா = (1) சொல்லுதற்கு அரிய. மற்றைய ராவார் பகர்வர் (நாலடி, 256).
(2) கொடுப்பதற்கு அரிய. வேழம் வெண்பூப் பகருந் தண்டுறையூரன் (ஜங்குறு. 13).
(3) உணர்த்தற்கு அரிய. பகர் குழல் பாண்டி லியம்ப (பரிபா. 15, 42).
(4) பெயர்க்க முடியாத, can’t shift, can’t move;
[65] பாமி = coldly adv. கடுங்குளிருடன், உணர்ச்சியற்ற தன்மையில், பாமின்றி,
[66] தோம் = குற்றம், தீமை, துன்பம்
[67] ஓம் என்ற
[68] ஓம் என்ற மந்திரத்திற்குப் பொருள் சொன்ன
[69] மொத்து = அடித்தல்
[70] வேத்திரம் = பிரம்பு
[71] கோதமன் = கௌதமன். கோதமன் காதலன் கூறன் மேயினான் (கம்பரா. கார்முக.11).
[72] கல்லைப் (அகலிகையை) பெண்ணாக்கிய காகுத்தன் ராமன்
[73] என்பு = எலும்பு ('மட்டிட்ட புன்னை' என்னும் பதிகம்பாடி எலும்பைப் பூம்பாவையாக மாற்றியவன்)
[74] கழு = கழுமரம்
[75] சமணர்
[76] நரலை = கடல். (திவா.) நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப (திருவாலவா. 9,3).
[77] மண்டு = (1) நெருங்குதல். விரிசடை மண்டி யலைந்திட (கோயிற்பு பதஞ்சலி. 40).
(2) விரைந்து செல்லுதல். கடற்படை குளிப்ப மண்டி (புறநா. 6)
(3) மூடன் Fool
[78] சோதிவனம் = காளையார்கோயில்
[79] காளீசர் காளைவடிவில் தோன்றி
[80] தண்டி = (1) எட்டடியுள்ள இசைப்பாட்டுவகை
(2) சண்டேசுரர். அண்ணலந் தண்டிதனடிகள் போற்றுவாம் (தணிகைப்பு.கடவுள்வா.9).
[81] வண்தொண்டர் = சுந்தரமூர்த்தி நாயனார்
[82] மாது பாதியர் = அர்த்தநாரி
[83] மாறர் = பாண்டியர்
[84] ஊங்கு = சிறந்தது, மிகுதி, முன், உவ்விடம்
[85] வாதவூரர் = திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர்
[86] இச்சில் = எச்சில்
[87] அண்ணி = தித்தித்தல். அண்ணிக்கு மமுதூறுமென்னா வுக்கே (திவ். கண்ணிநுண்.1).
[88] திருத்தொண்டத்தொகை
[89] வாமக் கை = இடக் கை
[90] இலங்கு = பிரகாசித்தல். (பிங்.)
[91] தண் = குளிர்ச்சி
[92] மதி = சந்திரன், திங்கள்
[93] கூம்பா = கூம்பாத = விரிந்த
[94] வெண் கஞ்சம் = வெள்ளைத் தாமரை. (திவா.)
[95] கூடல் = நான்மாடக்கூடல் = மதுரை
[96] நத்திய = விருப்பிய. நான் நத்தாக (திருப்புகழ்த். 84)
[97] சங்கத்தார் = மதுரை தமிழ்ச்சங்கப் புலவர்கள்
[98] குரவு = ஆசிரியத்தன்மை. அருந்தமிழ்க் குரவுபூண்ட (காஞ்சிப்பு. கடாவுள்வா. 9).
[99] மகவிசேடம் = மாசி மகத்தில் நடைபெறும் திருவிழா
[100] துன்னிய = உழுது பயிரிட்ட . (செந் .iv,213)
[101] பூ = பூமி
[102] பூதி = (1) விபூதி, (2) செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21).
[103] மீ = (1) உயரம், (2) ஆகாயம். (பிங்.) மீப்பாவிய விமையோர் குலம் (கம்பரா. நிகும்பலை. 149).
[104] மிசை = (1) உயர்ச்சி. (சூடா.), (2) மேலிடம். (பிங்.) களிற்று மிசையோனே (புறநா. 13).
[105] மான்மியம் = தலமகிமையைக் கூறும் நூல், புராணம்
[106] உவரி = கடல். உலகுசூ ழுவரி (கம்பரா. ஊர்தே. 15).
[107] பூ = பூமி
[108] உம்பர் = தேவர். ஒலிகடல்சூ ழுலகாளமும்பர்தாமே (திவ். பெரியதி, 7, 8, 10).
[109] மகார் = மக்கள், குழந்தைகள்
[110] பூ = (1) பூமி, (2) பிறப்பு.
[111] வனசம் = தாமரை. வனச நீர்நிலை நின்று (ஞானா. 46, 19).
[112] பிரமன்
[113] மன = மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).-- Exceedingly;
[114] வெள்கி = வெட்கி
[115] வெள்ளறிவு = அறிவு குன்றிய = அவிவேகம். விலங்கன்ன வெள்ளறிவினார் (நாலடி, 375). Want of judgement; silliness, senselessness;
[116] மாக்கதை = புராணக்கதை
[117] ரூபம் = உருவம்
[118] சிறியேன் = நூல் ஆசிரியர் தஞ்சாவூர் பிர்மமஸ்ரீ சுப்பிரமணிய ஐயர்
[119] கவி = பாடல்கள்
[120] புனைதி = இயற்று
[121] இப்பி = சிப்பி = கடற்சிப்பி
[122] முத்தோடு = முத்துவோடு
[123] பைங்கழை = பசுமையான முங்கிற்குழாய். கழைபெய் தீந்தயிர் (மலைபடு. 523).
[124] கணித்தல் = கணக்கிடல்
[125] புங்கமிலாதேன்சொற்ற=புங்கம் இலா தேன் சொற்ற
என்றும், புங்கமில் ஆதேன் சொன்ன என்றும்(???)
[126] பருவம் = கணு
[127] கோது = (1) மயிர்ச் சிக்கெடுத்தல். கோதிச் சிக்கின்றி முடிக்கின்ற . . . குழலி (பெருந்தொ. 1323).
(2) குற்றம். கோதியல் காமம் (சீவக. 233).
[128] புன்மை = இழிவு. பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் (கலித்.118).
[129] அவதானம் = ஒரேசமயத்திற் பலபொருள்களைக் கவனிக்கை.
[130] தோற்றல் = தோல்வி
[131] சாற்றுதல் = விரித்துச் சொல்லுதல். கலந்தார்க் குயலுண்மை சாற்றுவேன் மன் (குறள், 1212).
[132] கானப்பேரூர் = காளையார்கோயில்
வணக்கம் .
காளையார்கோயில் புராணம் மூலம் வாசிக்கக் கிடைக்கிறது .
http://www.tamilvu.org/library/nationalized/scholars/pdf/poetry/kaalaiyararkooyir_puraanam.pdf
--
இணைப்பு முகவரியை வழங்கி உதவிய மதுரை மருத்துவர் ஐயா ச. பழனிசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி .
...