நல்லதொரு நண்பரைச் சந்திக்க வேண்டி அவரது கடைக்குச் சென்றிருந்தேன்.
என்னைக் கண்டதும், சங்கிகளால் நாடே பற்றி எரிகிறது ? என்றார்.
ஆர்ப்பாட்டம் செய்யும் கல்லூரி பல்கலைக்கழக மாணவர்களை அடக்குமுறையால் ஒடுக்கப் பார்க்கின்றனர் என்றார்.
படிக்கும் மாணவர்களைக் காவல்துறையினர் அடக்குவது சரியில்லையே! என்று என்னிடம் கேட்டார்.
என்னிடம் கேட்டால் ?
நண்பரே, நான் சாமியார் அல்ல, ஆசாமிதான். சனதாகட்சி அல்ல, Rice Cristian போன்று நான் சோத்துக் கட்சிதான் என்றேன்.
நண்பர் என்னை விடுவதாக இல்லை. மாணவர்களைக் காவல்துறையினர் அடக்குவது சரியில்லை அல்லவா? இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று மீண்டும் என்னிடம் கேட்டார்.
என்னிடம் கேட்டால் ?
உங்களது கடைக்கு வருபவர்கள் கடையில் உட்கார்ந்து அரசியல் பேசக் கூடாது என்று அறிவிப்பு வைத்துள்ளீர்களே என்றேன்.
ஆமாம், கடை வியாபாரம் செய்வதற்கானது, அரசியல் பேசுவதற்கான இடமல்ல என்றார். மிகவும் சரியாகச் சொன்னீர்கள். கல்லூரிகளும் கல்வி கற்பதற்காகவே உருவாக்கப் பெற்றவை, அரசியல் பேசுவதற்கோ ஆர்பாட்டம் செய்வதற்கோ அது சட்டப்படியான இடமல்ல.
எனவே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது, அரசியல் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது.
கல்லூரிகள் கற்பதற்கான இடம், அரசியல் செய்வதற்கான இடமல்ல. ஆசிரியர்கள் கற்பிப்பதற்கானவர்கள், அரசியலில் கொள்கை ரீதியான எதிர்ப்பு உள்ளதா ? கல்லூரிகளை விட்டு வெளியேறி வந்து நான்றாகப் போராடலாம் என்றேன்.
எனது நண்பருக்கு எனது இந்தப் பதிலில் திருப்தியில்லை.
நண்பர்களே உங்களுக்காவது எனது பதில் சரியென்று தோன்றுகிறதா?
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்.
மார்கழி 4 (20.12.2019)
வெள்ளிக் கிழமை
(நன்றி - படம் இணைத்தில் கிடைத்தது)