சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?

16 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 13, 2019, 1:10:56 AM10/13/19
to thiruppuvanam, Kalai Email
சங்கத் தமிழரின் தென்மதுரை, மதுரை, ஆலவாய், கூடல் நகரங்கள் எங்கே உள்ளன?

(குறிப்பு - தமிழ்ச்சங்கப்பாடல்கள், திருவிளையாடற்புராணப் பாடல்கள் மற்றும் கூகுள் புவிப்படங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது புரிதலின் அடிப்படையிலான கட்டுரை இது.  இது அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்த கருத்து அல்ல. எனவே இதைப் புராணத்தின் அடிப்படையிலான புளுகுக் கட்டுரை எனக் கொள்க.)

zip tamil sangam 1 Madurai .jpg
தென் மதுரை  - பாண்டியர்களின் தலைநகரம் மதுரை.  முதலாம் ஊழிக்காலத்தில் உண்டான கடல்கோளால் இந்நகரம் அழிந்துவிட்டது. மிகமிக, மிகமிகத் தொன்மையான இந்த மதுரையை இன்றைய மதுரையிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகத் ‘தென்மதுரை’ எனக் கருதலாம்.
தென்மதுரை (1) = கவாடபரம் அல்லது கபாடபுரம்.  இதன் இருப்பிடம் இன்றைய மொரிசியசு தீவு அல்லது டிகோகார்சிகா தீவு, அல்லது இரண்டும்.   ஆப்பிரிக்காவில் மடகாசுக்கர் தீவிற்கு அருகில் உள்ள இந்தத் தென்மதுரையே, ஆதிமனிதன் தோன்றிய இடமாக இருக்க வேண்டும்.  முதலாம் கடல்கோளால் அழிந்துபோன இந்தத் தென்மதுரை பற்றிய தெளிவான இலக்கியச் சான்றுகள் ஏதும் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை.

a copy பஃறுளி குமரிக்கோடு.jpg
மதுரை  -  கடல்கொண்ட தென்மதுரையிலிருந்த தமிழர் புலம்பெயர்ந்து இன்றைய மதுரை இருக்கும் இடத்தில் குடியேறி உள்ளனர்.   இதுவே பழைமையான  மதுரை ஆகும்.  1) இன்றை மதுரை இருக்கும் இடத்தில் இந்தப் பழைமையான மதுரை(1) இருந்துள்ளது.  இந்த முதலாம் மதுரை மிகவும் தொன்மையானது.   இதுவும் கடல்கோளால் அழிந்தது.  இரண்டாம் கடல்கோளால் அழிந்துபோன இந்த மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் உண்டானது.
முதலாம் மதுரை  = ஆலவாய்.

71753657_3198143026925140_4012530487133208576_o.jpg
2) கடல்கோளுக்குப் பின்னர் புதிதாக மதுரை(2) நகரைப் பாண்டியர்கள் உண்டாக்கி அரசாண்டுள்ளனர்.  இந்த மதுரையின் பெயர் கூடல். இந்தக் கூடல் மாநகரைத்தான் கீழடி அருகே தொல்லியலாளர் தோண்டிக் கண்டறிந்துள்ளனர்.  
இரண்டாம் மதுரை = கூடல்
(குறிப்பு - கீழடி வேறு, கீழடி யருகே புதையுண்டுள்ள கூடல் நகரம் வேறு. கீழடி அருகே உள்ள மணலூர் வேறு.  மணலூரின் தொன்மையான பெயர் மணவூர்.  மணலூரும் மணவூரும் ஒன்றுதான். மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ளன.)

43328158_301618267095280_3906294900563378176_n.jpg

3) கூடலைத் தலைநகராகக் கொண்டு அரசாளும் போது பண்டைய ‘முதலாம் மதுரை இருந்த இடம்’ கண்டறியப்படுகிறது. உடனே அந்த இடத்தில்  புதிதாக நகர் ஒன்றை உண்டாக்கிக் கூடலில் வாழ்ந்த மக்கள் குடியேறுகின்றனர்.  இந்த நகரமே இன்றைய மதுரை ஆகும்.  முதலாம் மதுரை இருந்த அதே இடத்தில் மூன்றாவது மதுரை  உருவாக்கப்பட்டுள்ளது.
 மூன்றாவது மதுரை = இன்றைய மதுரை.

4) மூன்றாவது மதுரைவரை மீண்டும் ஒரு கடல்கோள்.  இந்த மூன்றாவது  கடல்கோளால் கைவிடப்பெற்ற கூடல்நகரம் (இரண்டாவது மதுரை) அழிந்து போகிறது.  திருஞானசம்பந்தர் கடல்கோளால் அழிந்த முதலாம்மதுரையையும், கூடல் என்ற இரண்டாவது மதுரையையும் இணைத்துக்  ”கூடல் ஆலவாய்” என்று பாடியுள்ளார்.
  மதுரை(1)யும், கூடல் என்ற மதுரை(2)யும் = கூடல் ஆலவாய்.
கூடலை அழிந்த மூன்றாவது கடல்கோளால் இன்றைய மதுரை அழியவில்லை.

5) இந்நாளில், கடல்கொண்ட கூடல் என்ற இரண்டாவது மதுரையைத் தொல்லியலாளர்கள் கீழடி அருகே கண்டறிந்து ஆய்வுகள் செய்துவருகின்றனர்.
மதுரை(3)யின் அடியிலே மதுரை(1) புதையுண்டுள்ளது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புரட்டாசி 26 (13.10.2019) ஞாயிறு கிழமை.
-- 
Reply all
Reply to author
Forward
0 new messages