கண்ணனை “வடநாட்டவன்” என்று பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர். சிலர் கருமைநிறக் கண்ணனைச் செம்பவள நிறத்தில் சித்திரமாக வரைந்தும் வைக்கின்றனர்.
மதுரா அல்லது வடமதுரை நகரமானது உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவில் உள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன. மதுராவைத் தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருஷ்ணனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கம்சனின் தங்கையை வசுதேவராசன் திருமணம் செய்து கொண்டான். வசுதேவனின் மகனாகக் கண்ணன் பிறந்து, தாய்மாமன் கம்சனைக் கொன்று ஆட்சிக்கு வந்தான் என்கின்றன புராணங்கள். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின் அடிப்படையில் கண்ணன் வடநாட்டை ஆண்ட காரணத்தினால் கண்ணனை வடநாட்டவன் என்ற பலரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால் கண்ணனைப் “பாண்டி நாட்டான்” என்கிறது பண்டைய ஒலைச் சுவடி ஒன்று(பார்வை -1). கண்ணனின் தந்தையான வசுதேவராசன் “மதி குலத்தில் (சந்திர வம்சத்தில்) தோன்றியவன் என்கிறது மற்றொரு சுவடி(பார்வை -2).
பாண்டியர்களை “மதி மரபினர்(சந்திர வம்சத்தினர்)” என்கிறது திருவிளையாடல் புராணம்(பார்வை --3).
கண்ணன் வடக்கேயுள்ள மதுராவை ஆண்டுவந்தாலும், வசுதேவராசனும் கண்ணனும் பாண்டியநாட்டவர்கள் என்பதையே புராணங்களும் தமிழ்ஓலைச் சுவடிகளும் உறுதி சொல்லுகின்றன.
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் தமிழர்கள் ஏன் ஆண்டாண்டு காலமாகப் போற்றி வருகின்றனர் என்றால், அது ஆரிய அடிமைத்தனத்தால் அல்ல, இவை இரண்டும் தமிழருடைய கதைகள். இராமனும் கண்ணனும் தமிழகர்கள். அதனால்தான் இவர்களது வீரத்தையும் விவேகத்தையும் வெற்றியையும் கூறும் இந்த இரண்டு கதைகளையும் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாய்ப் போற்றிப் புகழ்ந்து பாடிப்பரவிப் பாதுகாத்து வருகின்றனர்.
இராமன் போல், கண்ணன் போல், பாரதத்தைத் தமிழர் ஆள வேண்டும்.
அன்பன்
கி. காளைராசன்
பார்வை (1) ஓலைச்சுவடி ஏடு எண் 25
மலைமகள் சகோதரனே, ஆதிமகாமூலம், மகுள பாண்டி நாட்டானே,
உலகளந்த மாலே, விண்ணுலகை ஆளும் உம்பர் வணங்கும் பொருளே,
அஞ்சல் என்றோரைக் காத்தோன், அருமறைக்கும் எட்டா அச்சுதானந்த முகில்,
கஞ்சனுயிர் கொல்ல வந்த கரிய முகில்மேனிக் கதையின் வரலாறு சொல்வேன்.
கண்டகனாம் கஞ்சன் என்போன் வடமதுரை நாட்டைக் கதிறரசு செய்யும் நாள்
வண்டர்களை ஆதரித்து யோகிஸ்பரரை வறுமைப்பட வதைத்தான்.
பார்வை (2) ஓலைச்சுவடி ஏடு எண் 26 (பின்பக்கம்)
மதிகுலத்தில் வந்துதித்தோன் சத்தியம் வழுவாத வசுதேவ ராசனுக்கும்
பதிவிரதா தேவகிக்கும் வைகுந்தநாதன் பாலன் எனவே பிறந்து
கஞ்சனைக் கொன்று உங்கள் கவலைதனைத் தீர்ப்பார், காயாம்பு, மேக வண்ணர்,
அஞ்சாமல் நீங்கள் எல்லாம் வத்தாத செல்வமதாய் அவனிதனில் ஏகும் என்று,
நிலமங்கைபாரம் அது இன்னும் சிலநாளில் நீங்குமென விண் அகன்றார்,
வலிமை பெற்ற அண்டர் எல்லாம் ரம்பைகளோடே வந்து அமைந்தார் பாடி நகர்.
பார்வை (3) திருவிளையாடல் புராணம் பாடல் எண் 891.
“எழுகட லழைத்தவா றியம்பி னாமினிச்
செழு
மதி மரபினோன் சேணி ழிந்துதன்
பழுதில்கற் பில்லொடும் பரவை தோய்ந்தரன்
அழகிய திருவுரு வடைந்த தோதுவாம்”
--