ஐயா ‘இ’னா அவர்களுக்கு வணக்கம்.
விசனம் தருவது மட்டுமல்ல; பயங்கரமான செய்தி.
இ
ஆமாம் ஐயா.
இது போன்று இராமேசுரத்தில் நடக்கும்.
இப்போது திருப்பூவணத்திலும் மடப்புரத்திலும் நடக்கிறது😢
திருப்பூவணத்தில் இவ்வாறு கோயில் வாளாகம் அருகே அனாதையாகத் திரியும் முதியவர்களைக் காப்பாற்றி ஆதரவு அளிக்க இலவச முதியோர் இல்லம் ஒன்றை நண்பர் ஒருவர் துவக்கினார்.
ஆனால் அதில் பல சட்டச் சிக்கல்கள் தோன்றின.
தினமும் முதியவர்களின் உடல்நலனைப் பார்த்துக் கொள்ள ஒரு மருத்துவரை நியமனம் செய்ய வேண்டுமாம்.
தீயணைப்புத்துறையினரின் அனுமதி பெற வேண்டுமாம்.
கட்டிடப் பொறியாளரின் அனுமதி பெற வேண்டுமாம்.
காவல்துறையினரின் அனுமதி பெற வேண்டுமாம்.
இவ்வளவையும் எளிதாகச் செய்ய இயலாமல் போனது.
அம்மையார் செயலழிதா அவர்களது ஆட்சியில் கோயில்களில் தினசரி அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இது போன்று, திருப்பூவணம் முதலான முத்திதரும் கோயில்களில் முதியோர் காப்பகங்களைத் தமிழக அரசு துவக்கி நடத்திடலாம்.
அன்பன்
கி.காளைரசான்