ஒருக்கால் திருவள்ளுவர் மதுரைக்காரரோ

4 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 15, 2019, 4:27:16 AM11/15/19
to thiruppuvanam, Kalai Email
திருக்குறளில் “கால்” 

திருவள்ளுவர் சிலை.jpg

முதுமக்கள்தாழி போன்றதொரு சட்டியைப் பச்சேரியில் ‘ஒருக்கா’ பார்த்த ஞாபகம்.  ‘ஒருக்கால் மழைகாரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தால், நாம் கீழடிக்குச் சென்று வருவோம்’, கீழடிக்குச் செல்லும் போது பச்சேரிக்கும் சென்றுவருவோம் என்றார் மதுரை நண்பர் ஒருவர்.
ஒருக்கா என்றால் ‘ஒருமுறை’ அல்லது ‘ஒருதரம்’ என்ற பொருள். ஒருகால் என்றால் ‘ஒருவேளை’ என்ற பொருள்.  மதுரையில் பேச்சுத் தமிழில் ‘ஒருக்கா, ஒருகால்’ என்ற சொற்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.  
இதில் என்ன வியப்பபு என்றால், திருவள்ளுவரும் காலத்தைக் குறிப்பதற்காகவே “கால்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். காலத்தைக் குறிக்கக் கால் என்ற சொல்லை 18 குறள்களில் பயன்படுத்தியுள்ளார்.  

திருக்குறளில் கால் என்ற சொல் பயன்படுத்தியுள்ள முறையைக் கருத்திற்கொண்டு பார்த்தால், ஒருகால் திருவள்ளுவர் மதுரைக்காரரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திருவள்ளுவர்  “கால்” என்ற சொல்லைக் கால்(உறுப்பு), காலம், சக்கரம், காம்பு, அடிப்பகுதி, முளை எனப் பல பொருட்களில் பயன்படுத்தியுள்ளார்.  கால் என்ற சொல்லுக்குக் காற்று என்ற பொருளும் உண்டு.    ஆனால் கால் என்ற சொல்லைக் காற்று என்ற பொருளில் திருவள்ளுவர் பயன்படுத்தவே யில்லை.

கால் என்னும் சொல் அடங்கிய திருக்குறட்பாக்களின் தொகுப்பு -
காலம் என்ற பொருளில் கால் என்ற சொல் மொத்தம் 18 குறள்களில் உள்ளது.
(குறள் எண் - 36, 127, 248, 362, 379, 503, 621, 710, 733, 830, 859, 1064, 1104, 1116, 1179, 1218, 1285, 1286)
கால்வல் நெடுந்தேர் என்ற சொல்லால் கால் என்ற சொல் தேரின் சக்கரத்தைக் குறிப்பதாக உள்ளது. (குறள் 496  )
கால் என்றால் கால் உறுப்பு 500 கால் ஆழ் களர், 840,
கால் என்றால் விகுதி (குறள் 489, 763, 1080, 1270)
கால் என்றால் முளை (குறள் 959)
கால் என்றால் அடிப்பகுதி (குறள் 1030)
கால் என்றால் காம்பு (குறள் 1115)

அன்பன்
கி. காளைராசன்
ஐப்பசி 29 (15.11.2019) வெள்ளிக்கிழமை

-- 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 15, 2019, 11:06:21 AM11/15/19
to subas p, thiruppuvanam, Kalai Email
வணக்கம் ஐயா
தங்களது அன்புநிறைந்த வாழ்த்திற்கு நன்றி ஐயா.
இந்தக் கட்டுரையில் “ஒருக்கால்” என்ற சொல்லின் பொருளும் அது திருக்குறளில் கையாளப்பட்டுள்ளதும் குறித்து என்பதால்,
ஒருக்கால் என்ற சொல் இடம் பெறும் வகையில் தலைப்பினை அமைத்தேன் ஐயா.
தாங்கள் சொல்வதுபோல் குறட்பாக்களை அனைவரும் படித்துப் பயன்பெறுவதே உண்மையான கற்றல் ஆகும்..
தங்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

On Fri, 15 Nov 2019 at 20:02, subas p <suba...@yahoo.co.in> wrote:
தங்கள் ஆய்வுக்கு வாழ்த்துக்கள். இப்போது அவர் எந்த ஊர் என்பதைக் காட்டிலும் அவர் சொன்ன குறட்பாக்களைப் படித்துப் பயன் பெற வழிகாட்ட வேண்டும்.
அன்புடன்
சுபாசு
டெக்டாஸ்
அமெரிக்கா


Sent from Yahoo Mail for iPhone
Reply all
Reply to author
Forward
0 new messages