கி. காளைராசன்
கற்றவை -பரிபாடல் - 8
செவ்வேள் - பாடியவர் : நல்லந்துவனார்
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,
மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,
பொருள் -
இந்த மண்ணுலகத்தில் - மலர்ந்த துளசி மாலையினையும், உயிர்களுக்கு அளிக்கும் செல்வத்தினையும்,
மேலே கருடப்பறவை வரையப்பெற்ற கொடியினையும் உடைய திருமாலும், காளையின் மேல் ஏறிவரும் சிவபெருமானும்,
தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரமனும், அந்தப் பிரமனிடத்திலிருந்து தோன்றி
உலகின் இருளை அகற்றிய சூரியர் பன்னிருவரும்,
தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும்,
-----------------------------
மலர் என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு .
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்தம் - குறள்:60 5/1
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது - குறள்:65 10/1
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் - குறள்:112 2/1
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின் - குறள்:112 9/1
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - குறள்:115 2/1
நறு மலர் நாணின கண் - குறள்:124 1/2
நறு மலர் தண் கோதாய் நட்டார்க்கு நட்டார் - நாலடி:21 9/1
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் - நாலடி:27 6/1
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் - நாலடி:40 3/2
புது மலர் ஒக்கும் நிறம் - நான்மணி 0/4
மையால் தளிர்க்கும் மலர் கண்கள் மால் இருள் - நான்மணி 35/1
நாற்றம் உரைக்கும் மலர் உண்மை கூறிய - நான்மணி 45/1
நறிய மலர் பெரிது நாறாமை இன்னா - இன்னா40 37/1
கருவிளை கண் மலர் போல் பூத்தன கார்க்கு ஏற்று - கார்40 9/1
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற - ஐந்70:4 46/3
முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி - ஐந்50:1 6/1
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து - ஐந்50:2 15/1
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள் - திணை150:2 60/3
கழுநீர் மலர் கண்ணாய் கெளவையோ நிற்க - திணை50:2 11/1
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும் - திணை50:4 35/1
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் - திணை50:4 40/3
தே மலர் நீலம் பிணையல் செறி மலர் தாமரை தன்னையர் பூ - திணை50:4 40/3,4
மணி எழில் மேனி மலர் பசப்பு ஊர - திணை50:5 47/2
நீர் சால் கரகம் நிறைய மலர் அணிந்து - ஆசாரக் 46/3
நீர் வரையவாம் நீர் மலர் - பழ 381/4
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே - சிறுபஞ் 97/3
நாக நறு மலர் நாள் வேங்கை பூ விரவி - கைந்:1 12/1
குருதி மலர் தோன்றி கூர் முகை ஈன - கைந்:3 26/1
தட மலர் கோதையாய் தங்கார் வருவர் - கைந்:3 36/3
மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய் - கைந்:5 51/1
-------------------------------------------
மிசை என்ற சொல் இடம் பெற்றுள்ள பாடல்வரிகளின் தொகுப்பு.
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் - குறள்:1 3/1
நில மிசை நீடு வாழ்வார் - குறள்:1 3/2
மலை மிசை தோன்றும் மதியம் போல் யானை - நாலடி:3 1/1
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை - நாலடி:3 1/2
தலை மிசை கொண்ட குடையர் நில மிசை/ துஞ்சினார் என்று எடுத்து தூற்றப்பட்டார் அல்லால் - நாலடி:3 1/2,3
நிலவார் நில மிசை மேல் - நாலடி:3 2/4
கல் ஏர் புறவில் கவினி புதல் மிசை / முல்லை தளவொடு போது அவிழ எல்லி - ஐந்70:2 24/1,2
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி - ஐந்50:1 10/3
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் - திணை150:1 3/2
நில்லார் தாம் கட்டில் மிசை - ஆசாரக் 87/3
நிலைமையான் நேர் செய்திருத்தல் மலை மிசை / காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் - பழ 349/2,3
மிசை கொல்லார் வேளாண்மை கொல்லார் இசை கொல்லார் - சிறுபஞ் 46/2
-------------------------------------------------------
நன்றி
1) தொடரடைவுகள்
http://tamilconcordance.in2) பாடல்கள்
sangacholai.in